செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16











கவிதைகள் பார்த்துட்டீங்க!

ஒரு மொக்கை கவுஜ படிச்சுட்டு போங்க...!


அன்போடு நான்;

அறிவோடு நீ;

அரிவாளோடு உன் அண்ணன்!


(காலேஜ் டெக்னிக்கல் டிராயிங்க் ரூம்ல யாரோ ஒரு கவுஜர் வரைந்த கவுஜ!)


டிஸ்கி:- கமெண்ட் பாக்ஸ் இந்த பதிவுக்கு மூடப்படுகிறது. வரும் நண்பர்கள் ஆஹா ஒஹோவென்று கூறுவதை கேட்குமளவுக்கு மனவலிமையினை எல்லாம் வல்ல இறைவன் அருளும் போது நிச்சயம் இதே போன்றதொரு பதிவில் உங்களுக்காய் திறந்திருக்கும்!

அன்புடன்,
ஆயில்யன்.


ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டாராம். "ஆதி" சங்கர்தான் உடனே நினைவிற்கு வருகிறார். பண்ணாரிக் கோயிலில் இவர் தீ மிதிக்கப் போய் தீ மிதிப்பது "காட்டுமிராண்டித்தனம்" என்ற கலைஞர் என்ன சொல்வார் என்று பார்ப்போம். பெரியார் தனி மனித வழிப்பாட்டை / கடவுள் எதிர்த்தே புரட்சி செய்ய முயற்சித்தார். ஓரளவு வென்றும் காட்டினார்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இரு விதங்களில் இந்நிகழ்வை அணுகலாம்.

ஒரு கோணம்

ஸ்டாலினின் நேர்மை – ஊருக்காக ஒரு வேடத்தை போட்டுக்கொண்டிருக்காமல் தன் நிலையை பட்டென்று உடைத்துப் போட்டது.

இன்னொன்று

பெரியாருக்குப் பின் அவரது சீடர்களும் , தோழர்களும் பகுத்தறிவென்பதை கேலிக் கூத்தாக்கி விட்டார்கள். பெரியாரின் நிழலில் வந்த கலைஞரோடு இந்தப் பாரம்பரியம் முடிவுறுமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

ஆக தற்போதைக்கு விமர்சகர்களுக்கு நன்றாக மெல்லக் கிடைத்த அவல். அவரவர்கள் தத்தமது நிலைக்கேற்ப வெவ்வேறு கோணங்களில் மென்று கொள்ளலாம்.!!


****


அடுத்தது , தேமுதிகவால் தான் நாங்கள் தோற்றோம் என்று தோழர் நல்லகண்ணு சொல்லியிரூக்கிறார். நேற்று வந்த தேமுதிக தமது தலைமை கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடிகிறது.

ஆனால் கம்யூனிஸ்டுகள் ஏதாவது ஒருதிராவிடக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஒருசில எம்பி , எம்.எல்.ஏ சீட்டுக்களுக்காக கொள்கைகளை அடகு வைத்ததைத் தவிர மக்களுக்கு என்ன நம்பிக்கை தந்தார்கள்?

அடுத்தவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு தோழர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும் என்பதே நமது அவா.



****


சுற்றுலாவிற்கு சிறந்த இடம் இலங்கை என்று இந்தியா பிரச்சாரம் பண்ணப் போகிறதாம்.

ஆமாம் உலகத்திலேயே சர்வதேசமும் கூட்டுச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட முள்ளி வாய்க்கால் போன்ற கடற்கரை எங்குதான் காணக்கிடைக்கும்?

நடத்துங்கள்……….

அப்படியே அங்கங்கே மிச்சமிருக்கும் தமிழனின் இரத்தம் கலந்த நந்திக்கடலில் படகுப் போக்குவரத்தும் ஏற்படுத்துங்கள். உங்கள் ஆதிக்க வெறியின் மிச்சத்தை ஒவ்வொரு படகும் சொல்லிக்கொண்டிருக்கட்டும்.


****


பாஜக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி ராஜினாமாவாம். ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் இப்போது பாஜகவில் வெடிக்கத் துவங்கியிருக்கிறது.

ஜஸ்வந்த் சிங் , முரளி மனோகர் ஜோஷி , ஷெகாவத் , யஷ்வந்த் சின்கா என்று பட்டியல் நீளுகிறது. பாரதிய ஜனதாவும் இன்னொரு ஜனதா தளம் ஆகப் போகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. நூறு ஆண்டுகள் ஆனாலும் அங்கங்கே அவ்வப்போது பிரிவுகள் நடந்தாலும் இன்னமும் உயிரோடிருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய பிரமிப்புதான் மிஞ்சுகிறது.

அத்வானி மக்களால் மட்டுமல்ல , கட்சிக்காரர்களாலும் கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாஜ்பாய் போன்ற இன்னொரு தலைவரை கட்சி சீக்கிரம் கண்டுகொள்ள வில்லையென்றால் இன்னொரு ஜனதா தளமாக அங்கங்கே பிரிந்து சிறு சிறு பிராந்தியக் கட்சிகளாக மாறி விடும் அபாயமிருக்கிறது.

அது நாட்டுக்கும் நல்லதல்ல , அக்கட்சிக்கும் நல்லதல்ல. ஒரு கட்சியே பெரிய கட்சி , வலுவான எதிர்க்கட்சி இல்லையென்றால் ஆரோக்கிய சனநாயகத்துக்கு வழியிருக்காது.

ஏற்கெனவே ஆரோக்கிய சனநாயகம் இருந்து கிழிச்சதா என்று நீங்க கேட்கும் கேள்வி என் காதில் விழவில்லை என்பதால் மீ த எஸ்கேப்பு.




ஜூன் 14ம் திகதி ஞாயிறு மெக்ஸிக்கோவில் அல்மோலொயா டில் ரியோ நகரில் 60.1 மீற்றர் நீளமான மிக நீண்ட காற்சட்டை (pants) காட்சிப் படுத்தப்பட்டது. 30 மாடிக் கட்டடம் ஒன்றின் உயரத்திற்கு நிகராக தயாரிக்கப்பட்ட இந்த காற்சட்டை முன்னர் தயாரிக்கப்பட்ட 50 மீற்றர் உயரமான காற்சட்டையின் சாதனையை முறியடித்து கின்னஸ்ஸில் இடம்பிடித்துள்ளது.

மேலும் வாசிக்க...
லங்கை யாழ்ப்பாணத்தில் வைத்து 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி சிறிலங்கா அரச படையினரால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மன் நினைவாக


ஊடகப்பணியில்


சிறந்த ஊடகவியலாளர் சான்றிதழ் பெறும்போது


கயவர்களால் சுடப்பட்டு வீழ்ந்த போது


இறுதிவணக்க நிகழ்வு அன்னையின் ஆறாத்துயரில்


எம்மைவிட்டு பிரியும்போது



உலகிலேயே ஊடகவியலாளர்கள் அபாயகரமான பகுதியெனவும் அதிலும் முதன்மைப்பட்டியலில் இருப்பதாகவும் இலங்கை யாழ்ப்பாணத்தை எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்து வருகின்றது.

இவற்றையெல்லாம் தாண்டி இளம்ஊடகவியாளர்களின் துணிச்சல் மிக்க பணியை வோரோடு சாய்க்க முற்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு பலியான ஊடகவியலாளன் தான் ரஜிவர்மன்!

அன்பான நண்பர்களே இது புனை கதையுமல்ல சோடிக்கப்பட்டதுமல்ல திறந்ந வெளிச்சிறைச்சாலையாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தமிழ் ஊடகவியலாளர்களின் நிலை!


உங்களுக்கு தேவைபடாதது இன்னொருவருக்கு பொக்கிஷியமாகவும் இருக்கலாம்

நீங்கள் இருப்பிடம் அல்லது அலுவலகம் மாற்றும் போதும் உங்களூக்கு தேவையில்லாத பொருட்களை ( furniture, kitchenware, toys, cods, stationary, appliances, tv's, fridges, speakers, desks, tables, chairs, big items, all kind of clothing etc) எடுத்து செல்ல இந்த கைபேசியை அழைக்கவும். 050 197 4045

THE SURPLUS COLLECTOR என்ற அமைப்பு இவற்றை குறைந்த ஊழிய வேலை ஆட்களுக்கு (LOW INCOME LABOURS) வழங்குகிறது.

ஊங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.

இந்த வலைதலத்தையும் ஒரு முறை பார்த்துடுங்க - THE SURPLUS COLLECTOR

நன்றி வணக்கம்.



உங்களுக்கு தேவைபடாதது இன்னொருவருக்கு பொக்கிஷியமாகவும் இருக்கலாம்

நீங்கள் இருப்பிடம் அல்லது அலுவலகம் மாற்றும் போதும் உங்களூக்கு தேவையில்லாத பொருட்களை ( furniture, kitchenware, toys, cods, stationary, appliances, tv's, fridges, speakers, desks, tables, chairs, big items, all kind of clothing etc) எடுத்து செல்ல இந்த கைபேசியை அழைக்கவும். 050 197 4045

THE SURPLUS COLLECTOR என்ற அமைப்பு இவற்றை குறைந்த ஊழிய வேலை ஆட்களுக்கு (LOW INCOME LABOURS) வழங்குகிறது.

ஊங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.

இந்த வலைதலத்தையும் ஒரு முறை பார்த்துடுங்க - THE SURPLUS COLLECTOR

நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை: