செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07















காதலைக் காதலிக்கிற யாவருக்கும் காதல்நாள் வாழ்த்துகள்!
கடந்த வருடம் இதே நாள்

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.



More than a Blog Aggregator

by அருட்பெருங்கோ
இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
'நீ பிரியாமல் இருந்தால்…' எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.



More than a Blog Aggregator

by அருட்பெருங்கோ

"யாருன்னே தெரியல இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்துட்டே இருக்குடா"

"ஒரு ரூபா காயின்ஸ் இருக்கா?"

"இருக்கு"

"எடுத்துட்டு வா!"

***

"ஹலோ யார் பேசறது?"

"நான் பாரதியார் பேசறேன்"

"யாரு?"

"பாரதியார் தெரியாதா? சரி அங்க திருவள்ளுவர் இருக்காரா?"

"திருவள்ளுவரா?"

"திருவள்ளுவர் இல்லையா? இந்த நம்பர் கொடுத்து கால் பண்ண சொன்னதே அவர்தாங்க…"

"அப்படிலாம் யாரும் இங்க இல்ல…"

"ஹலோ ஹலோ"

கொஞ்ச நேரம் கழித்து…

"ஹலோ யாரு?"

"நான் திருவள்ளுவர் பேசறேன்"

"என்னது?"

"திருவள்ளுவர தெரியலையா? சரி விடுங்க… என்னக் கேட்டு கொஞ்ச நேரம் முன்னாடி பாரதியார் கால் பண்ணாரா?"

"ஹலோ உங்களுக்கு இப்போ என்ன வேணும்?"

"என்ன மீட் பண்ணனும்னு பாரதியார் சொன்னார். நாந்தான் உங்க நம்பர் கொடுத்தேன். மறுபடியும் கால் பண்ணாருன்னா என்ன கி.மு 23 வது வருசத்துல வந்து மீட் பண்ண சொல்றீங்களா? ஹலோ ஹலோ…"

கொஞ்ச நேரம் கழித்து…

"ஹலோ"

"நான் பாரதியார் பேசறேன்…"

"இங்க பாரதியாரும் இல்ல திருவள்ளுவரும் இல்ல போன வைக்கிறியா இல்லையா?"

"ஹலோ… ப்ளீஸ்…ப்ளீஸ்…"

(தொடரும்)


பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.

பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.

விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.

அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த
ஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்
என்வேகத்தில் என்னருகிலேயே பயணித்திருக்கிறது.

நெருங்கிய உறவின் மரணமொன்றில்
சுடுகாட்டிலிருந்து திரும்பும்வழியிலேயே
எங்களைக் குளிக்க வைத்திருக்கிறது.

அப்பொழுதெல்லாம் சபித்துவிட்டு
வீட்டின் அறைக்குள்
நாற்காலியில் சாய்ந்துகொண்டு,
சூடான தேநீரைப் பருகியபடி
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
அதன் பொழிவை!

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.

எவருக்கும் அனுமதியற்ற
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.

ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.
இன்னும் பலவற்றில் இன்னும் பல மாதிரி.
என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்
தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

உன்னிடமிருந்து தப்பிக்கும் முடிவுடன்
எல்லாப் படங்களையும் மூட்டைகட்டி
கொல்லைப்புற ஆழத்தில் புதைத்துவிட்டு திரும்புகிறேன்.

புகைப்படங்கள் இருந்த இடத்திலெல்லாம்
உன்னை இன்னுமதிகமாய் நினைவூட்டியபடி
இப்பொழுது தொங்கிக்கொண்டிருக்கிறது
அவற்றை மூட்டைகட்டிய கணம், கனமாய்!

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.

'காலைவணக்கம்' சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.

குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்...
பள்ளிக்கூடம்...
தமிழய்யா...
தமிழ்...
என்றும்,

தமிழை நினைத்ததும்
கவிதை...
இலக்கியம்...
திரைப்படம்...
இசை...
என்றும்,

இசையை நினைத்ததும்
இளையராஜா...
எஸ்பிபி...
எஸ்பிபி சரண்...
சென்னை 28...
என்றும்,

சென்னையை நினைத்ததும்
வெயில்...
கடல்...
கடற்கரை...
காதல்...
என்றும்,

எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.

கருத்துகள் இல்லை: