செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

பிங்கிரிய, தல்கஹபிட்டியப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சாராருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது, 5 பேர் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இம் மோதல் சீன நாட்டவர் சிலருக்கும், கிராம மக்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு வேலை செய்ய வந்துள்ள சீன நாட்டவர்கள் தங்கிய வீட்டிற்கு, குடி போதையில் வந்த இளைஞனை அவர்கள் பிடித்து வைத்ததையடுத்து இம் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரும், அக்கிராமத்தைச் சேர்ந்த நால்வரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீன நாட்டைச் சேர்ந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காலில் விழுந்து மன்றாடியும் எந்தவொரு பாடசாலையிலும் மகனை சேர்க்க முடியவில்லை; தந்தை மனமுடைந்து தற்கொலை

"எனது மகனை எந்தவொரு பாடசாலையிலும் சேர்க்க மறுத்துவிட்டனர். முன்னர் பிரபாகரன் இருந்ததால் அவர் குண்டு வைத்துவிடுவார் என்ற பயத்தில் உங்கள் பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக் கொண்டிருப்போம். இப்போ பிரபாகரன் உயிருடன் இல்லாததால் உங்கள் பிள்ளையை சேர்க்க முடியாதெனக் கூறிவிட்டனர். எனது கணவர் அவர்களின் காலில் விழுந்து மன்றாடினார். முடியவில்லை. அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார்'.

தனது மகனை பாடசாலையில் சேர்க்க முடியாத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வரக்காப்பொல கிராம வீதியைச் சேர்ந்த பீ.பெருமாள் குமார் (40 வயது) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியளித்த போதே அவரது மனைவியான சகுந்தலா இவ்வாறு தெரிவித்தார்.

கேகாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ரொகான் பி. நிஸங்க முன்னிலையில் நடந்த மரண விசாரணையில் சாட்சியமளித்த மனைவி மேலும் கூறியதாவது;

எனது கணவர் கூலிவேலை செய்பவர். இதனால் எமது மகன் பாடசாலைக்குச் சென்றால் தலையில் குட்டுகின்றனர், கேலி செய்கின்றனர், திட்டுகின்றனர். இதனால் அவர் அங்கு தொடர்ந்து கல்வி கற்க மறுப்புத் தெரிவித்து வந்தார்.

இதனால் அப்பாடசாலையிலிருந்து மகனை விலக்கி வேறு பாடசாலையில் சேர்க்க முற்பட்ட போது எந்தவொரு பாடசாலையிலும் எமது மகனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக சில பாடசாலை அதிபர்கள் முன்னர் எனது பிள்ளை கல்வி கற்ற பாடசாலையின் அதிபரிடம் மன்னிப்புக் கடிதம் கோரினர். மன்னிப்புக் கடிதம் இல்லாவிட்டால் பாடசாலையில் சேர்க்க முடியாது என்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், குண்டு வைப்பார் என்ற அச்சம் காரணமாக உங்களது பிள்ளையினை பாடசாலையில் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது பிரபாகரனும் உயிருடனில்லை. இந்நிலையில், எக்காரணம் கொண்டும் எந்தவொரு பாடசாலையிலும் சேர்க்க அனுமதிக்க மாட்டோமென அழுத்தமாகக் கூறினர். இதனால் மிகுந்த கவலை கொண்டு எனது கணவர் மகனை கட்டித்தழுவி உச்சி முகர்ந்த பின்னர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

வறக்காபொல தம்பலதெனிய பாடசாலையில் எனது மகன் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்றான். அங்கு அவனுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 2 மாதமாக பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். வகுப்பாசிரியர் தும்புத்தடியால் அடிப்பார், தலையில் குட்டுவார், தடியால் அடிப்பார், கீழ்த்தரமான வார்த்தையால் திட்டுவார். இதனால் எனது மகன் பாடசாலைக்குச் செல்ல மறுத்தார்.

இதன் காரணமாக அப்பாடசாலையிலிருந்து எனது பிள்ளையை விலக்கி, அம்பேபுஸ்ஸ வித்தியாலயம், வறக்காபொல காமினி வித்தியாலயம், அல்லியத்த வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் அனுமதி கேட்டும் உரிய பயன் கிடைக்கவில்லை, சில பாடசாலை அதிபர்களின் காலடியில் வீழ்ந்து மன்றாடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவர் தெரிவித்தார்.

சாட்சியத்தைப் பதிவு செய்த மரண விசாரணை அதிகாரி நஞ்சரிந்தியதால் உடலில் விஷம் பாய்ந்து உயிரிழந்ததாகத் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஹேரத் பீ.குலரட்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனைத் தவிர கேகாலை வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.ஏ.ஹேமாவத்தி தலைமையில் மற்றொரு விசாரணையும் இடம்பெறுகின்றது.




More than a Blog Aggregator

by கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI
பிறந்த ஊரும்
வளர்ந்த நாடும்
வாழ்பவர்களுக்கு
பூர்வீகம் என்று
பூரிப்பு

புறப்பட்ட இடத்தை
புரிந்துணர பலருக்கு
புரியாத புதிர்

புகலை தான்னென்று
புகழ்ச்சிக் கொள்வதால்
பூரணம் நமக்கு
புதையல்
உலகறிவு உரியவருக்கு
பொருள் கொடுக்கும்
ஆன்மறிவு அனைவருக்கும்
அமைதிக் கொடுக்கும்

பூர்வீகத் தேட்டம்
நம்மிடம்
புரட்சி செய்தால்
புத்தி பூகம் விலக்கும்

பின்நோக்கி
புலன்
பின் தொடர்ந்தால்
முன்நோக்கி
பூர்வீகம்
முக்தித் தரும்

தாயின் கருவரையில்
உருவானோம்
தந்தையின் உதிரத்தில்
அருவானோம்
உணவுப்பொருட்களில்
கருவானோம்
பஞ்சபூதங்களில்
கலவையானோம்
சூத்திரத்தின்
சூக்குமம்மானோம்
சூக்குமத்தில்
சூனியமானோம்


இவைகள்
அனைத்தையும்
மறக்களானோம்
வாழ்க்கையில்
மயக்கமானோம்...!


More than a Blog Aggregator

by கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI
வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கு அழகு
இது வெறும்பேச்சல்ல
மனசுக்கு மருந்திடும்
வார்த்தை

வெற்றிப் பெறுவதற்கு
வாட்கையில்
வட்டமிடுகிறோம்
சிலர்

வாட்டம் பார்க்கிறோம்
கொண்டக் கொள்கையில்
கொடித்தண்டாய்
கோணம்ப் பார்க்கிறோம்

தோள் கொடுத்தவர்களுக்கு
தேளாய் கொட்டிவிட்டு
தெம்மாங்குப் பாடுகின்றோம்

வெட்டுவதில் வெற்றி
கட்டுவதில் வெற்றி
குத்துதலில் வெற்றி
கூத்தாடுதலில் வெற்றி
பொருள் தேடலில் வெற்றி
பதவி பறிப்பதில் வெற்றி
வெற்றியென
வேதைப்படும்
பேதைமனிதர்கள்

இவர்களுக்கு
வெற்றி இதுவென்றால்
தேவைக்கும் மேல்
தேடியப் பிறகும்
ஆசைக்கும் மேல்
அனுபவித்தப் பிறகும்
தெளிய வேண்டிய மனம்
தொல்லைப் படுவதேன்
தொடக்கம் தேடுவதேன்...?

மனிதனாக வாழ்வதில்
பொருமையாளனாக பூப்பதில்
பூரணத்தோடு கலப்பதில்
மட்டுமே
வெற்றியென்பது
வெற்றிடமில்லாமல்
வேறுன்றியிருப்பதை
எப்போது
நினைவுப்படுத்தி
வெற்றிக்கொள்ளப்போகிறோம்...!


More than a Blog Aggregator

by கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI
வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கு அழகு
இது வெறும்பேச்சல்ல
மனசுக்கு மருந்திடும்
வார்த்தை

வெற்றிப் பெறுவதற்கு
வாட்கையில்
வட்டமிடுகிறோம்
சிலர்

வாட்டம் பார்க்கிறோம்
கொண்டக் கொள்கையில்
கொடித்தண்டாய்
கோணம்ப் பார்க்கிறோம்

தோள் கொடுத்தவர்களுக்கு
தேளாய் கொட்டிவிட்டு
தெம்மாங்குப் பாடுகின்றோம்

வெட்டுவதில் வெற்றி
கட்டுவதில் வெற்றி
குத்துதலில் வெற்றி
கூத்தாடுதலில் வெற்றி
பொருள் தேடலில் வெற்றி
பதவி பறிப்பதில் வெற்றி
வெற்றியென
வேதைப்படும்
பேதைமனிதர்கள்

இவர்களுக்கு
வெற்றி இதுவென்றால்
தேவைக்கும் மேல்
தேடியப் பிறகும்
ஆசைக்கும் மேல்
அனுபவித்தப் பிறகும்
தெளிய வேண்டிய மனம்
தொல்லைப் படுவதேன்
தொடக்கம் தேடுவதேன்...?

மனிதனாக வாழ்வதில்
பொருமையாளனாக பூப்பதில்
பூரணத்தோடு கலப்பதில்
மட்டுமே
வெற்றியென்பது
வெற்றிடமில்லாமல்
வேறுன்றியிருப்பதை
எப்போது
நினைவுப்படுத்தி
வெற்றிக்கொள்ளப்போகிறோம்...!
இதன் முந்தைய கவிதையைப் படித்த பிறகே இந்தக் கவிதையைப் படிக்கவும்.

அன்று சுனாமி வந்த பொழுது கடலுக்கு ஆதரவாகப் பேசியவன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பாடாமல் இல்லை. உண்மையில் இதுதான் முதலில் எழுதிய கவிதை. அதன் பிறகு தான் கடலுக்காக எழுதினேன்.

கரைமீது விளையாடி கடலோடு
        கவிபாடி களித்திருந்தோம் இன்றந்தக்
கரைதன்னை மறைத்தெங்கும் நீர்நிறைந்து
        நீர்மறைத்து மிதப்பதெங்கும் பிணங்களாக
நிறைகின்ற நீரொடுகண் ணீர்நிறைந்தே
        அழுகுரலின் ஒலியுமிங்கு நிறைகிறது
குறையின்றிப் பிழைத்துவிட்டோம் என்றெண்ணி
        ஒருகூட்டம் நிம்மதியில் சிரிக்கிறது

சிறுக சிறுக சேர்த்து வைத்த
        செல்வ மெல்லாம்
பெருகி வந்த வெள்ளத் தோடு
        போன தாலே
இருந்த இடத்தை விட்டுப் போகவும்
        வழியவர்க் கில்லை
இருக்கும் இடத்தில் வாழ இனியவர்க்
        குணவும் இல்லை

பெற்ற பிள்ளை கடலில் சாகும்
        கொடுமை தன்னைக் கண்டார்
சுற்றம் என்று சொல்லிக் கொள்ள
        இனியவர்க் கெவரும் உண்டோ?
நிற்கவும் இடமிலை பிணத்தின் நாற்றம்
        எங்கும் வீச; அதிலும்
பெற்ற தாயின் உடலைத் தேடும்
        மரண வேதனை கொண்டார்

நினைத்தாலும் உள்ளம் கொதிக்கிறது - கடல்
நீரெங்கும் பிணங்கள் மிதக்கிறது
பிணக்காடாய் ஊரே ஆனது - உடலை
வாங்கவும் ஆளின்றிப் போனது

எவரும் எதிர்பாரா தருணம் - நில
நடுக்கத்தால் எத்தனை மரணம் - மகிழ்ச்சி
மீண்டும் என்று மலரும்? - அந்த
நாளும் விரைவில் வரணும்


-இராஜகுரு
(02 / ஜனவரி / 2005)

(குறிப்பு: "தருணம்" என்பது தமிழ்ச் சொல் அல்ல. 'அதை மாற்றினால் அங்கு அமைந்த ஓசை மாறக்கூடும். அதனால் அதை மாற்ற வேண்டாம்' என்ற நண்பர் ஒருவரின் கருத்துக்காக அதை மாற்றவில்லை)

கருத்துகள் இல்லை: