யோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில்,
சமீபத்தில் திருநங்கைகள்(அரவாணிகள்) சம்பந்தப்பட்ட ஆவணப்படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு, நண்பர் பாலபாரதி புண்ணியத்தில் கிடைத்தது. அன்றுவரை அவர்களைப்பற்றி பெரிதாக நான் அக்கரை கொண்டதில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்களை இந்தச் சமூகம் ஒரு கேலிக்குறிய விஷயமாகவே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் திரைப்படங்களின் பங்கு முக முக்கியம். மேலும் நான் கண்ட திருநங்கைகளில் பெரும்பாண்மையானோர் கடைகளிள்
நிலவு நண்பனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த இயலாதவர்கள் ஒரு வாழ்த்து அட்டையின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்றிருக்கிறோம். ப்ரியன் நமது சார்பாக திருமணத்தன்று அதனை ஞானியார் வசம் சேர்ப்பார் (தயவுசெய்து அதற்கு முன் இதனை ஞானியாருக்கு யாரும் தெரியப்படுத்தவேண்டாம். ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே!). இதுவரை வந்த வாழ்த்துக்கள் இங்கே...
இயக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!உணர்வின் பதிவுகள் தான் நான் முதலில் ஆரம்பித்த பதிவென்றாலும், நட்சத்திர வாரத்தில் இங்கே எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.நட்சத்திர அறிமுகமாய் சிலவரிகள்
கவிஞர் ஆதவன் தீட்சண்யா குறித்த சரியான அறிமுகங்கள் எனக்கு இல்லாததால், புத்தக நிலையங்களில் பலமுறை இவரின் புத்தகங்களை ஆர்வமில்லாமல் ஒதுக்கிச் சென்றிருக்கிறேன். ஆனால், செல்வநாயகி அவர்களின் 'ரோடும் ரோடு சார்ந்ததும்...' என்ற பதிவில் சேமிக்கப்பட்டிருந்த ஆதவன் தீட்சண்யாவின் பேட்டி, அவரின் புத்தகங்களைத் தேடிப்படிக்க வைத்துவிட்டது.சென்றமாதம் தி. நகர் சென்றிருந்தபோது new book lands-ல் இவரின் புத்தகங்களைத்
ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரு கேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன். என்ன கேள்வி இது? என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை? என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், தயவுசெய்து எனது எண்ணங்களை பரிசீலனை செய்யும் மனநிலையில் மேற்கொண்டு தொடரவும். எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமா? எல்லா விஷயங்களைப்போலவே சாதியிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக