குப்புறச் சாய்ந்த 13 அடுக்குக் கட்டடம்!
சீன நகரமான ஷாங்காயில் புதிதாகக் கட்டப்பட்ட 13 அடுக்குக் கட்டடம் அப்படியே சரிந்தது. நல்லவேளை, இத்தனை பெரிய விபத்தில் ஒருவர் உயிர் மட்டுமே பறிக்கப்பட்டது.
சீனாவின் புகழ்பெற்ற நகரம் ஷாங்காய். இந்நகரின் உள்பகுதியில், டியான்பூ ஆற்றை ஒட்டி நவீன கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. மிகவேகமாக வளர்ந்து வரும் பகுதி இது. 13 அடுக்குகள் கொண்ட மூன்று கட்டடங்கள் இப்பகுதியில் கட்டப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட கட்டடப்பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவிற்கு நாள் குறிக்கும் கட்டத்தில், இதில் ஒரு கட்டடம் திடீரென அப்படியே சாய்ந்து விட்டது.
மாரடைப்பு வந்து ஒரு கீறல் கூட இல்லாமல் மனிதன் சாவது போல், மேலிருந்து கீழ்வரை ஒரு கீறல் கூட மண்ணில் சாய்ந்தது இந்தக் கட்டடம்.
இந்தக் கட்டடம் இப்படி குப்புறச் சாய்ந்ததற்கு அது கட்டப்பட்ட நெகிழ்ந்த பகுதிதான் காரணம் எனப்படுகிறது. சீன நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால் மட்டமான பொருட்களை கொண்டு வேகமாக கட்டப்படுவதும் இதுபோன்ற கட்டட சரிவுக்குக் காரணம் எனப்படுகிறது.
ஆனால், குறிப்பிட்ட கட்டடம் சரிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

உலகின் பெரிய முட்டை இட்ட சூப்பர் கோழி!
அசாதாரண கோழி ஒன்று உலகில் மிகப்பெரிய முட்டையை இட்டிருக்கிறது. அதுவும் இது சீனக் கோழி.
வெகு விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கும் இந்த முட்டை குறித்து கோழியின் முதலாளி ஷாங் இண்டே கூறுகையில், 8221;என் கோழி இட்ட முட்டை 201 கிராம் இருக்கிறது. சாதனை முட்டையை விட இது 25 கிராம் எடை அதிகமிருக்கிறது. 6.3 சென்டிமீட்டர் அகலத்தில், 9.2 சென்டிமீட்டர் நீளமுள்ள இம்முட்டைக்கு ஒப்பீடுகையில், சாதாரண முட்டை இதில் மூன்றில் ஒரு பங்கே இருக்கிறது8221; என்கிறார்.
முட்டையின் பெருமையைப் பற்றி குறிப்பிட்ட இவர், இப்போது முட்டையிட்ட கோழியின் பெருமைகளைச் சிலாகிக்கிறார்.
8221;இது ஒரு சூப்பர் கோழிங்க. இதுபோன்ற பெரிய முட்டை (மூன்று) களை இது ஏற்கனவே இட்டிருக்கிறது. ஒருமுறை ஒரே நாளில் நான்கு முட்டைகளை(!) இது தொடர்ந்து இட்டு ஆச்சரியப்படுத்தியது8221; என்றவர்,
8221;அவளுக்கு (கோழிக்குத்தான்) என்னுடைய நாய் வீட்டை சுற்றி வருவது என்றால் மிகவும் விருப்பமானது. ஒருவேளை நாய்க்கான உணவை தின்றிருப்பாள் எனச் சந்தேகப்படுகிறேன்8221; என்கிறார்.
கின்னஸ் சாதனை நிறுவனம் வந்து, சோதனையிட்டு, மிகப்பெரிய முட்டை என அறிவிக்கப்படும் வரை ஷாங் இண்டேவின் குளிர்பதன பெட்டிக்குள் சிலுசிலுவென அமர்ந்திருக்கப் போகிறது இம்மாம் பெரிய முட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக