திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

  ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெற்ற பின்னரே இனப்பிரச்சினைக்கு இறுதி அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   சஷ்டி அடிப்படையில் தீர்வொன்று முன்வைக்கப்படுமெனக் கூறப்படும் கருத்துக்களை மறுத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல்லின சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக இருப்பதாகவும் கூறினார். நலன்புரி நிலையங்களில் குறைப்பாடுகள் உண்டு என்பது எமக்குத் தெரியும். மிகவும் மெதுவான வேகத்தில் அவற்றை நாம் நிவர்த்திசெய்து வருகின்றோம். சில முகாம்களில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை" என ஜனாதிபதி  இந்தியாவின் [...]
  13வது திருத்தம் அமுல்படுத்தப்படாது எனவும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறினார். "அவ்வாறான உறுதிமொழி வழங்கப்பட்டிருக்காவிட்டால் தமது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துகொண்டிருக்காது" என விமல் வீரவன்ச ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதே சமாதானத்துக்குத் தேவையானதாக இருந்த நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயலெனக் கூறினார். "தற்பொழுது [...]
நேற்று லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் 2009 இறுதி ஆட்டத்தின் விறுவிறுப்பு - இதனை பார்க்கத் தவறியவர்கள் நிச்சயம் ஒரு நல்ல விளையாட்டுப் போட்டியைத் தவறவிட்டவர்கள்.

ரோஜர் ஃபெடரர் சாம்பிராஸின் சாதனையை முறியடித்து வெற்றி பெற்றார். எதிர்த்து ஆடிய ஆண்டி ரோடிக்கின் ஆட்டமும் சூப்பர். ரோடிக்கைவிட ஃபெடரர் அதிகம் ஏஸ் அடித்திருந்தாலும் சர்வீஸ் என்னமோ ரோடிக் தான் சிறப்பாக செய்ததாகப் பட்டது. அதுபோல் சர்வீஸை எதிர்கொண்டதும் ரோடிக்கே நன்றாக விளையாடினார். அதுவும் கடைசி செட்டில் பலமுறை ஃபெடரர் வாய்ப்பை தவற விட்டார் என்றே சொல்லவேண்டும். ரோடிக் போட்ட சர்வீஸை ஃபெடரரால் தொடக்கூட மூடியவில்லை.

Photo Courtesy: The Hindu

எனினும், 4+ மணிநேரங்களுக்கும் தன்னிலை இழக்காமல் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர்.

முன்பெல்லாம் சர்வீஸ் போடும்போது ஹும் ஹூம் என மூச்சு வாங்கும் சப்தங்கள் வரும். ஆனால் ஃபெடரர், ரோடிக் இருவரும் நல்ல உடல் தளர்ச்சி இல்லாமல் போட்டி போட்டனர். கடைசி செட் 6-6க்குப் பிறகு 14- 12 வரை நீண்டு கொண்டே போக அரங்கத்தில் அமர்ந்திருந்த பீட் சாம்ப்ராஸ் முகத்தில் புன்முறுவல்.

மொத்தத்தில் மிகச்சிறந்த ஆட்டம்..! நேரமிருந்தால் ஹைலைட்ஸையோ, மீள் ஒளிபரப்பையோ பார்த்துவிடுங்கள். அதுவும் இது மாதிரி ஆட்டங்களை மழைக்கால மாலையில் (இரவில்) சூடான பஜ்ஜியுடன் பார்த்தால் அடடா !

ஃபெடரருக்கு வாழ்த்துக்கள்..!

*** *** *** *** *** *** *** ***

காவிரியின் தொடக்கமாம் குடகு மலைப்பகுதியில் நல்ல மழை தொடங்கிவிட்டது. விரைவில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, கர்நாடகத்திற்கும், பெங்களூருக்கும், தமிழநாட்டிற்கும் நீர்வளமும் மின் உற்பத்தியும் தங்கு தடையின்றி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.

சுமார் 2 வாரமாக பொய்த்த பருவமழை மீண்டும் சூல் கொண்டு பெய்வது நாட்டுக்கு நல்லது. எல்லா அணைகளிலும் நீர் சேகரித்து, வீணாக்காமல் நல்லபடியாக எல்லோரும் உபயோகப்படுத்த விழைவோம்.

பட்ஜெட்டில் பிரணாப்தா (Pranab da ) FBTஐ ஒழித்ததை வரவேற்போம். CTT எனப்படும் Commodity Transaction TaXஸையும் ஒழித்துள்ளார்.

துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.82 ; அரிசி ஒரு கிலோ ரூ.43 :-)

- அலெக்ஸ் பாண்டியன்
06 ஜூலை 2009

என்ன தான் கலாச்சாரம் மிக்க நாடு அப்படி இப்படின்னு எல்லாம் சொன்னாலும் நம்ம நாட்டுல தவறு நடக்காமல் இல்லை. நாம நம்ம கொழந்தைகளை பொத்தி பொத்தி வளத்தாலும் தவறுகள் நடந்தது கிட்டே தான் இருக்கு. சரி, நம்ம வூட்டு புள்ளைக்கு தப்பு எதுவும் நடக்கலை அவ்வளவு தானா. பக்கத்து வூட்டு புள்ளைக்கு எது நடந்தாலும் பரவா இல்லையா. இது போல எதிர் கேள்விகள் வந்திட்டே தான் இருக்கு.

இப்போ என்ன நடந்திச்சுன்னு இப்படி குதிக்கறே.

2005'இல் இருந்து 2007 வரை ஒரு ஆய்வு செய்யப்பட்டு, 'குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை' வெளியுட்டுள்ள 207 பக்க ஒரு அறிக்கையின் முடிவுகளை இங்கே தருகிறேன். நம்ம மக்களுக்கு ஒரு பக்க நல்ல பதிவை படிக்கவே கண்ணு கட்டும் இதுல நல்ல விடயத்தை பத்தியோ 207 பக்க அறிக்கைய படிங்கன்னு சொன்னா ஹி ஹி ஹி தான்.

கீழ வரும் செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த அறிக்கையில் இருந்து பெறப்பட்ட முடிவுகளும், அதனுடைய சாராம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.

இந்த ஆய்வுக்கான களத்தை பற்றிய பின்னனி. இது இந்தியாவில் 13 மாநிலங்களில் 12447 குழந்தைகள் மற்றும் 17220 ஏனையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுதப்பட்ட அறிக்கை. அனைத்து விதமான மத, இன, மொழி வாரியான குழந்தைகளும் பங்கு பெற்று உள்ளார்கள். ஆதலால் இதனுடைய முடிவை நாம் ஒரு நல்ல கணிப்பாக ஏற்க முடியும்.

1. Physical abuse (தமிழ்ச்சொல் தெரியவில்லை, அதுநாள் ஆங்கிலத்தில்)

அ. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதற்க்கு ஆளாகி உள்ளார்கள்.
ஆ. பிசிகல்லி abuse செய்யப்பட்ட 69 சதவிகித குழந்தைகளில் 54.68% ஆண் குழந்தைகள்.
இ. 50% மேலான குழந்தைகள் ஒன்று அல்லது மற்றொரு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஈ. குடும்ப சூழலில் பாதிக்க பட்ட குழந்தைகளில், 88.6% பெற்றோரால் பாதிக்க பட்டு உள்ளார்கள்.
உ. ௬௨% தண்டனைகள் அரசு பள்ளிகளை தரப்பட்டு உள்ளன.
ஊ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

2. Sexual abuse.

அ. 53.22% இந்த வகையில் பாதிக்க பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.
ஆ. தெருக்களில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை தொழிலில் ஈடு படும் மற்றும் காப்பங்களில் வளரும் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள்..
இ. 50% மேலான தவறுகள் மிகவும் நம்பகமான ஆட்களால் செய்யப்பட்டு உள்ளது.
ஈ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

3. Emotional abuse and Girl child neglect

அ. 83% பெற்றோரால் செய்யப்பட்டு உள்ளது.
ஆ. 48.4% பெண் குழந்தைகள் ஆண்களாக பிறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த அறிக்கையில் இதில் இருந்து மீள்வதற்கான ஒரு முக்கிய குறிப்பாக அவர்கள் கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரிடமும்.

இதில் கூறப்பட்டு உள்ள பல விடயங்களை படிக்கும் பொழுது, நெஞ்சு பதபதைக்கவே செய்கிறது. இது போல் ஒன்று இருப்பதாக இந்தியா இது வரை மறுத்தே வந்து உள்ளது. இதுவே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு.

நன்றி :
குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை.
'Save the children' அமைப்பு.
'PRAYAS' அமைப்பு
'UNICEF'

இந்த அறிக்கையை முழுவதும் படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே தரவிரக்கம் செய்யலாம். இதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு எதாவது தோன்றினால் இங்கே கூறவும்.

பயம் கலந்த நம்பிக்கையுடன்.
எஸ். கே.

கருத்துகள் இல்லை: