செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07



More than a Blog Aggregator

by இது நம்ம ஆளு
நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும்

பட்ஜெட் மிகவும் அதிருப்தி: ஜெயலலிதா

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:  உலகளாவிய பொருளாதார தேக்கநிலை காரணமாக, இந்திய பொருளாதாரம் மிகவும் கடினமான காலகட்டத்தில் உள்ளது. இதற்கு, கடுமையான முடிவுகள் அவசியம். இந்த சிக்கலான காலகட்டத்தில், இந்தியாவுக்கு தேவை வித்தியாசமான சிந்தனையும், வலுவான, செயல்படுத்தத்தக்க திட்டமும் கொண்ட மத்திய நிதி அமைச்சர் தான்.ஆனால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மிகவும் நலிந்த, எதிர்கால நோக்கம் இல்லாதவராக வெளிப்பட்டுள்ளார். தற்போதைய பொருளாதார தேக்கநிலையில் இருந்து இந்தியாவை வெளிக் கொண்டு வர, இந்த நிலைமை கண்டிப்பாக இருக்கக் கூடாது.லோக்சபாவுக்கு அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வரி ரத்து, போலீஸ் நவீனமயமாக்கலுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, எல்லைகளில் வேலி அமைத்தல், பாதுகாப்புத் துறைக்கு அதிகநிதி, அதிகளவு ஐ.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு போன்ற அம்சங்களால் பிரணாப் முகர்ஜி ஈர்க்கப் பட்டு, அதை பட்ஜெட்டில் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய்க்கு மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும், இதற்கு தெளிவான நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை. தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு வெறும் 120 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, ஒட்டுமொத்த பணியையே கேலி செய்வது போல் உள்ளது. இதுதவிர, இந்த பட்ஜெட் மிகவும் அதிருப்தியளிக்கிறது. சம்பளம் பெறும் பிரிவினருக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அ.தி.மு.க.,வின் கோரிக்கை. குறைந்தபட்சம், வருமான வரி உச்சவரம்பை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்க வேண்டும். பொருளாதார சீர்குலைவால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு இது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட், எவ்வித நோக்கமும் இல்லாத கிளார்க் வேலையாகத் தான் உள்ளது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நானும் நம்ம முல்லைலருந்து யாராச்சும் இந்தப் பாட்ட வெச்சு ஒரு போஸ்ட் போடுவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன், ஒருத்தரும் கண்டுக்கறமாதிரி காணோம்.

இதை நான் ரொம்ப தம்தூண்டா இருக்கறச்சே(எல்லார்க்கும் இருக்காப்டி, மாதுங்கா சித்தி எங்களுக்கும் உண்டுல்ல), கேட்டது. அது கொஞ்சம் வித்தியாசமா, திருவிழா கச்சேரி கணக்கா, கொஞ்சம் பிசிறடிச்சி இருந்தது. ஆனாலும், பாட்டென்னவோ டக்கரா இருந்துச்சி. ஏதோ ஆல்பம் அப்டின்னெல்லாம் பேசிக்கிட்டாங்க, பாடுன ஆள் பேரு மட்டும் மனசுல ஓட்டல. அப்போதான் ஒரு பாட்டை ஒருதரம் கேட்டாலே மனப்பாடமாகிடுமே நமக்கு. இன்னும் ஹிந்தின்னா கேக்கனுமா, காக்ரே பூக்ரேன்னு நாமளே ஒளறவேண்டியதுதான.

அப்பாலைக்கு கொஞ்ச நாள்ல எல்லாம் பிசிறடிக்காம அதே பாட்டு இன்னும் டக்கரா ரேடியோல வந்துச்சி, அடடா நெறைய பேர் சொல்லி, அண்ணன் இன்னும் தெளிவா பாடி அனுப்பிருக்காருன்னு ஒரு சிந்தனையப் போட்டுட்டு வழக்கம்போல தப்புதப்பா கூட சேர்ந்து கத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நாள்ல ஊரே இந்தப் பாட்டை முணுமுணுக்குது. ரூப் தேரா, ஜிம்மி ஜிம்மி, யம்மா யம்மா, ஏக் தோ தீன் வர்சைல இன்னொரு பாட்டு கெடச்சிடுச்சுன்னு மதிமயங்கிக் கெடந்தோம்.

அப்றம்தான் நான் மொதல்ல கேட்டதுதான் ஒரிஜினல், ஹசன் ஜஹாங்கிரோடது. அதை வழக்கம்போல நம்ம மூசிக் அண்ணாத்தேக்கள் சுட்டாச்சுன்னு தெரிஞ்சிது.

ஆனா, இப்போ எவ்ளோ தேடுனாலும் சுட்ட பழம் கெடைக்கல, ஒரிஜினல்தான் கெடைக்குது. காப்பி அடிச்சு காப்பி போட்டவனும், தவளயக் கொன்னு தவுலு செஞ்சவனும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைங்கறத மறுக்கா உறுதிப்படுத்திச்சி இந்த மேட்டர்.
(பாட்டுக்கு ஆடுறவரை ஞாபகம் இருக்கா, தூர்தர்ஷன் சீரியல்கள் மட்டுமில்லாம, சுசித்ரா சேகர்கபூரோட தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல நடிச்சாரே)
இப்போவரைக்கும், கேசட்ல பாட்டு ரிக்கார்ட் பண்ற கடைங்க எதாவது சந்துல மிஞ்சிருந்தா, இந்தப் பாட்டு கண்டிப்பா இருக்கும் அவங்கக்கிட்ட.

நான் படிச்சது, கத்தோலிக்கப் பள்ளி. அங்க எதுன்னாலும் சிறப்பு விருந்தினர் கண்டிப்பா, ஒரு பிஷப், ஒரு பாதர் இப்டி யாராச்சும் இருப்பாங்க. இவர்களில் பந்தா பரமாத்மாக்களும், தூய பரமாத்மாக்களும் சரிவிகிதத்தில் உண்டு. ஆனா, இவங்கள்ளயே பொறுமையின் சிகரம்னா, கசிமீர் ஞானாதிக்கம் அவர்கள்தான். யப்பா, அவரு மாதிரி ஒருத்தர பாக்குறதுக்கு சான்சே இல்லை. பொதுவா, அவர் பதவில இருக்கவுங்க கொஞ்சம் பெரிய லெவல் விழான்னாதான் வருவாங்க. ஆனா, இவர் திருச்சபய சேர்ந்த சின்ன பள்ளி, சின்ன விழா எல்லாத்துக்கும் பாரபட்சமே பாக்காம கண்டிப்பா வருவார்.

ஆனா, இதால அவரு அடைஞ்ச டார்ச்சர்களில் ஒன்னு, அங்க நடக்கிற கலைநிகழ்ச்சிகள். ஒருதரம், சர்ப்ரைசா(அதிர்ச்சியடைய வேண்டாம், எங்க ஸ்கூல் பத்தி அப்பாலைக்கு வெளக்குறேன்), இந்த ஹவா ஹவா பாட்டை அவர் முன்னாடி போட்டு ஆடிட்டு, அவர் ரியாக்ஷனப் பாக்கனுமே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

இதோட ரீச் தமிழ்நாட்ல எந்தளவுக்கு இருந்திச்சுங்கறத்துக்கு, ஒரு உதாரணம்.




இந்தப் பாட்டை, தமிழ்ல கூட கேட்டதா ஞாபகம். அப்போதான், ஏக் தோ தீன்லருந்து நெறயப் பாட்டை இப்டி டப்புவாங்களே.

ஓகே ரைட், இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம்பிக்கலை ரேஞ்ச் பின்னூட்டங்களப் போட்டுத் தாக்கலாம் வாங்க.




மாநிலத்தையே கலக்கற மிகப்பெரிய அரசியல்வாதி அந்த ஆளு. அவர் ஒருமுறை நம்ம சாமியாரைப்பற்றி கேள்விப்பட்டு அடடே இப்படி ஒரு ஆளா.. உடனே அந்தாள பாக்கணுமே..

''டேய் தம்பீ இந்தா வா!..''

''இன்னாண்ணா... , யார்டா அந்த சாமீ .. பயங்கர டெரராமே அந்தாள பாக்கணும் ஏற்பாடு பண்ணுங்கோ.. ''

ஒரு நல்ல முகூர்த்த நாளில் சாமீயாரை சந்திக்க வந்தான் அந்த மிகப்பெரிய ரவுடி.

சாமியார் எப்போதும் போல புலித்தோலில் அமர்ந்து கொண்டு வரும் கஸ்டமர்களுக்கு... சாரிப்பா...... பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்.

அரசியல்வாதியின் வரிசை வந்தது. அ.வா உள்ளே நுழைய அவரோடு வந்திருந்த குண்டு குண்டு அடியாட்களை பார்த்து குருவுக்கு லைட்டாக உதறலாய் இருந்தது.

சிஷ்யனைப் பார்த்தார் . அவன் நினைப்பது அவரது ஞானக்கண்ணுக்கு தெரிந்தது.

சிஷ்யன் '' இன்னைக்கு வாயக்குடுத்து நல்லா வாங்கிக்க போறயா நீ..! ஐ ஜாலி குரு இன்னிக்கி நாஸ்திடா '' என நமுட்டு சிரிப்பு சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.

சிஷ்யனைப்பார்த்து குருவும் பயத்தோடு தெனாவெட்டாய் ஒரு சிரிப்பு சிரித்தார்.

அரசியல்வாதி குருவைப்பார்த்தான். அவனுக்கு குபீர் என இருந்தது. குருவின் முகத்தில் தெரிந்த ஒளியில் தேஜஸில் மிரண்டு போனான். அதுவும் குருவின் ஸ்டைலும் அழகையும் பார்த்து ஒரு நிமிடம் சுளீர் என இருந்தது.

தன்னைப்பார்த்து அரசியல்வாதி டெரராகிரான் என்பதை உணர்ந்தவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

''சாமீ இதுவரிக்கும் எனக்கு யார பாத்தும் இப்படி டகுலானதில்ல.. ஒன்ன பாக்க சொல்ல அப்பிடியே அடி வயிறு கலக்குதுப்பா.. இன்னாபா மேட்டரு.. நீகண்டி அரசியலுக்கு வந்த ஒரு பய ஒன் முன்னால நிக்க முடியாது போலக்கீதுப்பா.. '' என்றான் பவ்யமாய்.


''ஹாஹாஹாஹா.. '' அழகாக சிரித்தார் நமது டகில் சாமியார்.

''தெய்வீக சிரிப்புய்யா ஒனக்கு.. இன்னா மேட்டர் இது ஏன் ஒன்ன பாத்து எனக்கு டகில் ஆச்சு.. ''

''நீ ஒரு பொடியன்பா.. கொஞ்சம் அப்படி ஓரமா குந்திகினு இரு.. சொல்றேன்..''

அரசியல்வாதிக்கு லைட்டா கோபம் வந்தாலும் சாமியார் பவர்புல்லா இருப்பாரோனு ஒரு பயத்துல பேசாம போய் குந்திக்கினான்... சாரி உக்காந்துகிட்டான்.

நிறைய பேர் அவரை பார்த்து ஆசி வாங்கிக்கிட்டே இருந்தாங்க. அரசியல்வாதிக்கு லைட்டா இருந்த கோபம் அதிகமாகிட்டே இருந்துச்சு. சிஷ்யனுக்கு அதைபாக்க ஜாலியா இருந்துச்சு.

ஒரு வழியாக சாயங்காலம் ஆறு மணிக்கு யாரும் பக்தர்கள் இல்லாததால் அரசியல்வாதியை கூப்பிட்டார்..

''தம்பீ இப்படி வா.. ''

இன்னாது தம்பியா டேய் நீ கண்டி வெளிய வா... மவனே வாயகீயல்லாம் உடசிறேன்.. என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளிய கிகி என சிரித்தபடி முகத்தை வைத்துக்கொண்டு கையைக்கட்டிக்கொண்டு அருகில் சென்றான்.

''இன்னாத்துக்கு வெயிட் பண்ணிகினுக்கீறே..! ''

''சாமி உங்களான்ட ஒரு கொஸ்டீன் கேட்டனே..''

''ஓஓ அதுவா.. சரி வா அப்படிக்கா வெளிய நட்ந்துக்கினே பேசலாம்... '' என அழைத்துக்கொண்டு வெளியே நடந்தார்.


அது ஒரு பௌர்ணமி நாள். முழுநிலவு பளீர் என பெரிய ஸைஸ் பெட்ரமாக்ஸ் லைட்டு போல் எரிந்தது.

''தம்பீ , அங்க பாத்தீயா இரண்டு மரம் இருக்கா.. இது நான் பொறந்ததுலர்ந்து இருக்கு.. ஒன்னு நெட்டை இன்னொன்னு குட்டை.. ஆனா என்னைக்குமே அந்த குட்டை மரம் நெட்டை மரத்தப் பாத்து மெர்சலாகி .. நெட்டை மரம் ஒன்ன கண்டாலே எனக்கு மெர்லாக்கீதுனு சொன்னதே இல்ல.. இதுவரைக்கும் ரெண்டும் அப்படி யோசிச்சதுகூட இல்ல.. ஏன் தெரியுமா.. ''

''ஏன்னா மரம்லாம் எப்படி சாமீ கம்பேர் பண்ணிக்கும்.. ''

''அடங்கொக்கமக்கா ஒனக்கே நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்கே.... ஒகே தம்பீ நாம இன்னொருக்கா சந்திப்போம்.. நான் அவசரமா இமயமலைக்குப் போறேன்.. ''


கதை அவ்ளோதான்.

****************

பிற்சேர்க்கை.

அரசியல்வாதி குழம்பிப்போய் பார்த்துக்கொண்டிருக்க.. ஓட்ட நடையாய் கிளம்பிய சாமீ ஆஸ்ரமத்தின் பின்வாசல் வழியாக தனது வேட்டியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

****************

நன்றி - ஜென்கதைகள்

கருத்துகள் இல்லை: