ஞாயிறு, 5 ஜூலை, 2009

2009-07-05

தனிப்பட்ட உபயோகங்கள், வர்த்தக தேவைகள் என்று கணினியை உபயோகிக்கும் போது அதன் பாதுகாப்பு முக்கியமாகிறது. வைரஸ், டிரோஜன், ஸ்பைவேர் என்று கணினியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. இயங்குதளங்களுக்கு (Operating System) இருக்கும் தேவைகளை போலவே ஆண்டிவைரஸ் மென்பொருள்களுக்கும் நல்ல தேவை உள்ளது. Symantec, Kaspersky, McAfee என்று பல நிறுவனங்களும் இத்துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.மைக்ரோசாப்ட்டும் வணிக ரீதியில் Windows Live Onecare எனும் ஆண்டிவைரஸ் மென்பொருளை விற்று வருகிறது.

விரைவில் விண்டோஸ் கணினிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் பொறுத்து புதிய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து உள்ளது. அதற்கு மொர்ரோ (Morro) என்று பெயரிட்டு உள்ளது.

தற்போது விற்று வரும் Windows Live Onecare விற்பனையை நிறுத்த முடிவு செய்து உள்ளார்கள். புதிய மொர்ரோ ஆண்டிவைரஸ் விண்டோஸ் எக்ஸ்பி , விஸ்டா, விண்டோஸ் 7 போன்றவற்றில் இயங்கும்படி உருவாக்கப்பட்டு உள்ளது. வைரஸ், டிரோஜன், ரூட்கிட், ஸ்பைவேர் உள்ளிட்ட அனைத்து வில்லங்க மென்பொருள்களை நீக்கும் வண்ணம் இது இருக்கும் என்கிறார்கள். இதன் பீட்டா பதிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

தற்போது ஆண்டிவைரஸ் மென்பொருள்களை விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், அதனை இலவசமாக அளித்தால் தன் நிறுவனத்தின் இயங்குதளங்கள் (OS) விற்பனையை கூட்டலாம் என்று மைக்ரோசாப்ட் கணக்கு போடுகிறது. அது நடக்கலாம். எப்படியோ பயனர்களுக்கு நல்ல இலவச ஆண்டிவைரஸ் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

பில்கேட்ஸ் சார், அப்படியே வணிகரீதியில் செயல்படாத இல்ல
பயனர்களுக்கு (Home Users) உங்க இயங்குதளத்தை (Operating System) இலவசமா தந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

இணையத்தில் தகவல் தொடர்புக்கு ஈமெயில் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு சாட்டிங் வசதிகளும் முக்கியம் பெறுகிறது. உடனுக்குடன் பதில் அளித்து கதை பேசுவது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. யாகூ, லைவ் போன்றவை இருந்தாலும் ஜிடாக் உபயோகிப்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள்..

சாட்டிங் செய்யும் போது அதற்கென்றே சில அசவுகரியங்கள் உண்டு. ஒருவருடன் சாட் செய்து கொண்டு இருக்கும் போது அடுத்தவர் ஹலோ என்று தலையை நீட்டுவார். ஒருவர் வாய்ஸ் சாட் போட்டு கூப்பிடுவார். இதனை சமாளிப்பதற்கு சாட் விண்டோக்களை மூட / திறக்க நமது கை கீபோர்டுக்கும், மவுசுக்கும் மாறி மாறி தாவிக்கொண்டிருக்கும். சாட்டிங்கை பொறுத்தவரை நாம் பெரும்பாலும் கீபோர்டு உபயோகித்து கொண்டு இருப்போம்.

எனவே சாட்டிங்கை கையாள சில குறுக்குவழி விசைகள் (Shortcut Keys) தெரிந்து இருந்தால் வசதியாக இருக்கும். அவற்றை பார்ப்போம்.

F9 - நீங்கள் சாட் செய்து கொண்டிருக்கும் நபருக்கு ஈமெயில் அனுப்ப ஜிமெயிலை திறக்க.
Esc - தற்போது சாட் செய்து கொண்டிருக்கும் விண்டோவை மூட.
Alt + Esc - திறந்து இருக்கும் அனைத்து சாட் விண்டோக்களையும் மூட.
F11 - வாய்ஸ் சாட் ஆரம்பிக்க
F12 - வாய்ஸ் சாட் மூட
Tab - அடுத்தடுத்த சாட் விண்டோக்களுக்கு மாற

உபயோகப்படுத்துவதற்கு துவக்கத்தில் கடினமாக தோன்றினாலும், குறுக்குவழி விசைகள் பழகி விட்டால் மிகவும் எளிமையாகி விடும். மவுசை அடிக்கடி நாடும் தொந்தரவும் இருக்காது.

பொதுவாகவே அழகுபடுத்துவது என்பது ஒவ்வொருவருடைய ரசனையை பொறுத்து மாறுபடும். ஒருவருக்கு அழகாக தெரிவது மற்றவருக்கு அழகற்றதாக இருக்கலாம். கணினி துறையை பொறுத்தவரை விண்டோஸ் தீம் (Theme) , இணையதளங்களில் வெவ்வேறு விதமான வடிவமைப்புகள், பிளாக்குகளை பொறுத்தவரை டெம்ப்ளேட்டுகள் என்று டிசைன்நுக்கென்று தனிக்கவனம் செலுத்து கின்றனர். நம்க்கு விருப்பமான டிசைனை தேர்ந்தெடுக்கும் போது அதன் பின்னணியில் வேலை பார்ப்பது மகிழ்வை தரும்.

இணையத்தை பொறுத்தவரை நாம் அதிகம் உபயோகப்படுத்துவது இணைய உலாவிகளைத்தான். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் , குரோம் என்று ஒவ்வொன்றும் அதற்குரிய பிரத்தியேக டிசைன்களில் வருகிறது. பயர்பாக்சை பொறுத்தவரை அதற்குரிய வடிவமைப்புகளை (Themes) மாற்றி கொள்ள முடியும்.

புதிய வடிவமைப்புகளை பெற இந்த லின்க்கில் சென்று இலவசமாக பெற்று கொள்ளவும். பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் Personas எனும் தளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார். அதனையும் உபயோகித்து பாருங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் புதிய பதிப்பாக வைத்துள்ள IE8 உடைய டிசைன் கவரும் வகையில் அமைந்துள்ளது. அதே வடிவமைப்பை உங்கள் பயபாக்சிற்கு கொடுக்க நீங்கள் விரும்பினால் இந்த லின்க்கில் சென்று Ie8Fox
தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் நிறுவி உள்ள பயர்பாக்ஸ் தீம்களை (Themes) Tools மெனுவில் Add-ons --> Themes சென்று நீக்கி / மாற்றி கொள்ளுங்கள்.

பலர்
பின்னூட்டங்களில் வாழ்த்துக்கள், தகவல்கள், சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பி உள்ளீர்கள். நன்றி. நேரமின்மை காரணமாக அவற்றிற்கு உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை :( . ஒரு வாரத்தில் என்னால் முடிந்த அளவு அவற்றிற்கு பதில் அளிக்க முயலுகிறேன்.

கருத்துகள் இல்லை: