திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க ஆஷஸ் (சாம்பர்) கிண்ணப்போட்டிகள் ஜுன் மாதம் 8 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றன. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இடம்பெறும் கிரிக்கெட் போர் என இது வர்ணிக்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்குமிடையே இடம்பெறும் ஒரு கௌரவ போட்டித்தொடராகவும் இது விளங்குகிறது. கிரிக்கெட்டின் தாயக நாடாக போற்றப்படுவது இங்கிலாந்தாகும். ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வந்தன. கிரிக்கெட் எனும் விளையாட்டை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற பெருமிதத்திலும் இறுமாப்பிலும் இருந்த இங்கிலாந்தை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடித்த அவுஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் கிண்ண வரலாற்றை ஆரம்பித்தனர். வரலாறு1882 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்தது அவுஸ்திரேலிய அணி. இதை தாங்க முடியாத இங்கிலாந்து ஊடகங்கள் மிகவும் கடுமையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை விமர்சித்தன. ஒரு படி மேலே சென்ற Sporting Times என்ற சஞ்சிகையின் இளம் பத்திரிகையாளர் ரெஜினோல்ட் ஷெர்லி புரூக்ஸ் (Reginald Shirley brooks) மரண அறிவித்தல் என்ற தலைப்பில் இப்படி செய்தியை எழுதினார்;
Obituary" in affectionate remembrance of English cricket which died at the oval, 29th August,1882.deeply lamented by a large circle of sorrowing friends and acquaintances, Rip.NB the body will be cremated and the Ashes taken to Australia.
இங்கிலாந்தின் கிரிக்கெட்டானது, ஓவல் மைதானத்தில் 1882 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் மரணித்து விட்டது.இதன் உடம்பு தகனஞ்செய்யப்பட்டதன் பின்னர் சாம்பர் அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துச்செல்லப்படும் .
இப்படி அமைந்தது அந்தச்செய்தி.அப்போட்டியில் உபயோகப்படுத்தப்பட்ட பேல்ஸ்கள் எரிக்கப்பட்டு அந்த சாம்பர் இடப்பட்டு உருவாக்கப்பட்டதே ஆஷஸ் கிண்ணம் என்றும் அவுஸ்திரேலிய மூதாதையர்களான அபோர்ஜினல் இன பழங்குடியினரின் பாரம்பரியமிக்க கிண்ணமே இது என்றும் பல்வேறு கதைகள் உலா வந்தாலும் நாளடைவில் கிண்ணம் பற்றிய கதை மறைந்து இரு நாடுகளுக்குமிடையே இடம்பெறும் போட்டிகள் தான் கதைக்கப்பட்டன. இது வரை இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் பற்றிய தகவல்களை மட்டும் நாம் சுருக்கமாகப்பார்ப்போம்.
இது வரை இரண்டு அணிகளும்
இதுவரை 316 போட்டிகள் இரண்டு அணிகளுக்கிடையிலும் இடம்பெற்றுள்ளன.இதில் 131 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது அவுஸ்திரேலிய அணி.இங்கிலாந்து 97 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 88 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்கள்7296 (டிக்ளேர்) 1930 அவுஸ்திரேலியா9037 (டிக்ளேர்) 1938 இங்கிலாந்து
அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்சேர் டொன் பிரட்மன்(அவுஸ்) (19281948) 5028 ஓட்டங்கள்ஜெக் ஹொப்ஸ்(இங்கி) (19081930) 3636 ஓட்டங்கள்
அதிக சதங்கள் பெற்ற வீரர்கள்சேர் டொன் பிரட்மன் (அவுஸ்) 37 போட்டிகளில் 19 சதங்கள்ஜெக் ஹொப்ஸ்(இங்கி) 41 போட்டிகளில் 12 சதங்கள்
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்ஷேன் வோர்ன் (அவுஸ்) 36 போட்டிகளில் 195 விக்கெட்டுகள்இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகளில் 148 விக்கெட்டுகள்
சிறந்த பந்து வீச்சு பெறுதி (ஒரு இன்னிங்ஸில்) ஜிம் லேக்கர் (அவுஸ்) 10/53 மெய்லி (இங்கி) 9/121
அதிக பிடியெடுப்புகள்கிரேக் செப்பல் (அவுஸ்) 35 போட்டிகள் 61 பிடிகள்இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகள் 57 பிடிகள்
அதிக ஆஷஸ் போட்டிகளில் விளையாடியோர்எஸ்.ஈ.கிரகரி(அவுஸ்) 18901912 52 போட்டிகள், 2193 ஓட்டங்கள், 24 பிடிகள்கொலின் கௌட்ரி (இங்கி) 1954197543 போட்டிகள்,2433 ஓட்டங்கள்,40 பிடிகள்

போட்டி விபரங்கள்1)முதல் டெஸ்ட் ஜுலை 8 புதன் சோபியா கார்டன்
2) 2 ஆவது டெஸ்ட் ஜுலை 16 வியாழன்லோர்ட்ஸ்
3) 3ஆவது டெஸ்ட்ஜுலை 30 வியாழன்எஜ்பஸ்டன்
4)4ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 7 வெள்ளிஹெடிங்லே
5) 5ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 20 வியாழன்ஓவல்
MBBS:40 லட்சம் (உயர்கல்விப் பிரிவுக்கு ஒரு கோடி வரை).
BE: 2 முதல் 12 லட்சம் வரை.
இதரக் கல்வி: 2 முதல் 5 லட்சம் வரை.

சொன்ன தொகை எழுதிக் கொண்டிருக்கும்போதே உயரலாம். (லஞ்சம் செலுத்த விரைவீர்!).

முட்டாள் பெற்றோர்களுக்கு: என்ன விலை கொடுத்தாவது பிள்ளையை மருத்துவனாகவோ, பொறியியல் புலியாகவோ ஆக்கியே தீரவேண்டுமா? பிறமாநிலப் பெற்றோர்களும் புத்தியில்லையா? கரன்ஸிகளுக்குப் பின்னாலுள்ள குற்றப்பின்னணி யாது?

மாணவர்களுக்கு: MBBS அல்லது BE உங்கள் ஆடையா? அடையாளமா? எதற்காக இப்படி ஒரு படிப்பு?  என்ன சாதிப்பதற்காக இவ்வளவு செலவு? ரூபாய்களைக் கொடுத்து டாலர்களில் ஈட்டிவிடலாம் என்ற கனவா? (சிலரது கனவு பலிக்கலாம்.) வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமில்லாத சூழலில் எதற்காக இந்த விளம்பரம்? 

அரசாங்கத்துக்கு: தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் உயர்கல்விக்கென்று தனித்தனி அமைச்சகங்கள்.  தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு சில கல்லூரிகளில் சோதனை நடத்தியுள்ளீர்கள். (உண்மையாய்த் தண்டிக்கும் துணிவுள்ளதா? தெரியாது!) கல்வி அமைச்சகம் மாண்புமிகுக்கள் சம்பாதிப்பதற்கா? அல்லது சமச்சீரான கல்வி மாநில மக்களுக்குக் கிடைப்பதற்கா?  ஏழைக்குக் கல்விஉரிமை கிடையாது என்ற அறிவிப்பு வெளிவருமா?

எந்தத் துறையிலும் வெல்லமுடியும். மாணவர்கள் தங்கள்மேல் நம்பிக்கை வைத்தால்! சரஸ்வதி  தோன்றினால் அவளை வைத்தும் சம்பாதி்ப்பீர்கள் என்ற அச்சத்தில்  இன்றுவரை தோன்றவில்லை!

Adivi Sesh photo gallery,Jade Tailor photo gallery,Sher Ali photo gallery,Telugu Movie Karma photo gallery, Telugu Movie Karma wallpapers, Telugu Movie Karma stills, Telugu Movie Karma pictures, Telugu Movie Karma posters,Telugu Movie Karma


More than a Blog Aggregator

by தர்ஷன் ' in ' DSHAN2009 TAMIL NETWORK
மேலே சொன்ன மாதிரி தலைப்பு வைத்திருக்கலாம். அப்புறமென்ன! தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று இயக்குனர் அறிவித்த நாளிலிருந்தே தொல்லைகள் ஆரம்பமாகிவிட்டன.

முதல் தொல்லை
இயக்குனர் தனது கொழுந்தியாளை மூன்றில் ஒன்றாக விஷாலுக்கு ஜோடி கட்ட பார்த்து பிரம்ம பிரயத்தனம் செய்தும் விஷாலிடம் நோ ரெஸ்பான்ஸ்.

2வது தொல்லை
தமன்னாவை புக் செய்தார்கள். அவரும் ஒப்புக்கொண்டு டேட்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் விதி வேறு ரூபத்தில் விளையாடியது. தமன்னா விஜய்யின் 50வது படமான உரிமைக்குரலில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் மூன்றில் ஒன்றாக அவர் நடிப்பதை விஜய் அண்டு டீம் விரும்பவில்லை. இதையறிந்த தமன்னா தீரா விளையாட்டுப் பிள்ளையிலிருந்து விலகிவிட்டார்.

3வது தொல்லை
கொழுந்தியாள் குமைந்திட, தமன்னா கம்புநீட்ட, இப்போதைக்கு நீது சந்திராவும் ஸ்ரேயாவும்தான் இயக்குனருக்கு தெம்பு கொடுத்து வருகிறார்களாம். இன்னொரு கதாநாயகிக்காய் தேடல் வேலையில் ஈடுபட்டுள்ளதாம் தீ.வி.பி. டீம். தமிழ்ப் படத்தில் கதைக்கு பஞ்சம் இருக்கும் சரி, இப்போது கதாநாயகிகளுக்குமா? தேவுடா தேவுடா...


Sivanag photo gallery ,Sara photo gallery, Telugu Movie Holidays photo gallery,Telugu Movie Holidays wallpapers,Telugu Movie Holidays stills,Telugu Movie Holidays pictures,Telugu Movie Holidays


More than a Blog Aggregator

by நர்சிம்
என்னுடைய பெயரை சொல்லி விடுகிறேன், அதற்கு முன் ஏன் இப்படி டி.வி வால்யூமை சத்தமாக வைத்திருக்கிறேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்கு பதிலாக ஒருவேளை இன்று வாடகை கொடுத்துவிட்ட மிதப்பாக இருக்குமோ, இப்படித்தான் கொஞ்ச நாட்களாக எந்த நிகழ்வானாலும் அதன் காரணங்களை ஆரயத் தொடங்கி விட்டேன். நேற்று இப்படித்தான் ஒருவன் தீப்பெட்டி கேட்டான் சிகரெட் பற்ற வைக்க, உடனே எனக்கு தோன்றிய மிகப் பெரிய ஐயம், ஏன் தீப்பெட்டி என்று சாதாரணமாக யாரும் கேட்காமல் கையை காற்றில் ஆட்டி, தீப்பெட்டியை ஆட்டுவது போல் ஒரு செய்கையை நடத்தியே கேட்கிறார்கள் என்று.. இப்படித்தான் இப்பொழுது புரிகிறதா என்னுடைய நிலமை.

இது எங்கிருந்து ஆரம்பித்தது என்பதையும் ஆராயத் தொடங்கி விட்டேன். போன மாதம் என் நண்பனை சாலையில் எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்ந்தது. இந்த இடத்தில் எதிர்பாராதவிதம் என்ற வார்த்தை மிக முக்கியமானது. ஏனென்றால் அவன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தால் அந்தப் பக்கம் போயிருக்கமாட்டேன். மிக நெருங்கிய நண்பன். அவன் வீட்டில்தான் சதா சர்வகாலமும் பாட்டு கேட்டுக் கொண்டிருப்போம். சும்மா சாதாரண டேப்பெல்லாம் இல்லை. ஆம்பிளைஃபயரை ஏதேதோ வயர்களைக் கொண்டு எங்கெங்கோ சொருகி அரையடிக்கு இரண்டு ஸ்பீக்கர்களை,அதை சட்டென்று பார்த்தால் பயமாக இருக்கும், அலற விட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருப்போம். அல்லது பாட்டு கேட்பதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்போம். அப்படிப் பட்ட நண்பனை ஏன் தவிர்க்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவனுடை தந்தை, மிகவும் ப்ரியத்துக்குறியவர். ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். அன்றிலிருந்து அந்த நண்பனின் தாயாரை பார்க்க மனமே வரவில்லை. சுமங்கலியாக வாய் நிறைய சிரிப்புடன் காஃபியோ டீ யோ ஏதாவது ஒன்றை கொடுத்துவிட்டு ஒவ்வொருமுறையும் சத்தம் கம்மி பண்ணுங்களேண்டாவை சொல்லிவிட்டு போவார். அவரை வேறோர் கோலத்தில் பார்ப்பதாவது? அதுபோலத்தான் நண்பனின் சந்தோஷமான முகத்தை பார்த்துவிட்டு அவனின் சோகத்தை தாங்க மனமில்லை.காரியங்களை முடித்த தினத்தோடு சரி. போவதே இல்லை.
அவன் தான் எதிர்பட்டான். வேறு வழியில்லாமல் எப்படி இருக்கிறான் என்பதை கேட்டு மெதுவாக தந்தையின் இழப்பைப் பற்றி பேச்சு எழுந்தபொழுது அவன் ஒரு நொடி வேதனைப் பட்டு பிறகு நல்ல வேளையாக அவனது தந்தை அரசு உத்யோகத்தில் இருக்கும் போதே இறந்ததாகவும் எப்படியோ ஃபார்மாலிட்டிகள் முடிந்து அவனுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டதாகவும் இப்பொழுது அவன் மனைவி மிகவும் சந்தோஷமாய் இருப்பதாகவும் தெரிவித்தான் சந்தோஷமாய். நானும் சந்தோஷம் என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டேன். அப்பா இறந்ததில் சந்தோஷம் எப்படி சொல்லலாம் என்று.ஆனால் அவன் போய்வருகிறேன் என்று சொல்லிச் சென்றான் சந்தோஷமாகவே. இதிலிருந்தும் ஆராய்ச்சிகள் தொடங்கியதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அன்று ஊரிலிருந்து கிளம்பி வரும் பொழுதும், புகைவண்டிநிலையத்தில் எல்லோருமே ஆராய்ச்சிக்கு உட்படவேண்டியவர்களாகவே தோன்றினார்கள். ஒருவன் போன் செய் என்று சொல்லிக் கொண்டே கையை காதில் வைத்து காண்பித்தான். ஏதோ அதற்கு முன் போனை அவன் நண்பன் செய்தே இருக்கமாட்டானோ என்ற எண்ணுமளவிற்கு. இன்னொருவன் தண்ணி வேண்டுமா என்று கேட்டுக் கொண்டே கடை விரலை வாய்கருகே கொண்டு செல்கிறான். குடித்துக் காட்டுகிறானாம். ஏன் இப்படி எதனால் என்று எண்ணிக் கொண்டே எதிரில் இருப்பவரைப் பார்த்தேன். அதுவரை என்னை பார்த்துக் கொண்டிருந்திருப்பவர் போல தோன்றியது,ஆனாலும் நான் திரும்பியதும் அவர் வெளியில் பார்க்கத் துவங்கி விட்டார். அடுத்த ஆராய்ச்சி தொடங்கி விட்டது எனக்கு.

ஆமாம் இதையெல்லாம் எதற்கு உங்களிடம் சொல்கிறேன் ? அதையும் ஆராய்ந்து விட்டு வருகிறேன். என் பெயரா? அது எதற்கு உங்களுக்கு என்பதையும் ஆராய்ச்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

..

கருத்துகள் இல்லை: