ஞாயிறு, 5 ஜூலை, 2009

2009-07-05



More than a Blog Aggregator

by கே.பழனிசாமி, அன்னூர்

தமிழ் நாட்டில் சில பழக்கம் மக்களிடையே பரவி வருகிறது. அதில் முக்கியமானது கண்களை பறிக்கும் அளவுக்கு வீட்டிற்கு கலர் அடிப்பது. சாலையில் செல்லும்பொழுது திடீரென அந்த வீடுகளை பார்த்தால் கண் பறிபோகும். 

ஆரஞ்சு,பச்சை, மஞ்சள் என ஃப்ளோரசெண்ட் கலரில் வீட்டுக்கு வர்ணம் பூசுகிறார்கள். இங்கிலீஷ் கலர் என பெயரில் பிரிட்டன் மக்களின் நாகரீகம் என்ற பெயரில் பூசினாலும், பிட்டனில் மக்க்ள் இவ்வளவு மோசமான வண்ண கலவையை தேர்ந்தெடுப்ப்பர்களா என சந்தேகம். வீட்டின் வெளிப்பகுதியில் ஒன்றுக்கு மேட்பட்ட வண்ணம் பூசும்பொழுது கண்களுக்கு ஒருவித தடுமாற்றமும், வயிற்றை பிசையும் ஒரு உணர்வும் ஏற்படுகிறது.

இந்த ந(ச)வநாகரீகத்தை பற்றி விசாரித்தால் அது 'வாஸ்து' குறைக்காக பூசுவதாக சொன்னார்கள். வாஸ்து குறையால் வீட்டை இடிக்க தயங்கும் சிலர் வாஸ்து தோஷம் போக்க இவ்வாறு பூசுகிறார்களாம். பிறரின் திருஷ்டி படாமல் இது தடுக்குமாம். ஐயா உங்களால் பிறருக்கு திருஷ்டியே இருக்காதே?

நம் நாட்டில் சுண்ணாமை அதிகமாக வண்ணம் பூச பயன்படுத்தினார்கள். வெண் நிறத்திற்கும், சுண்ணாம்பு காற்றில் வேதி வினை நிகழ்த்துவதாலும் அதில் வாழ்பவருக்கு நன்மை ஏற்படும். காரணம் வெண் நிறத்தில் எல்லா நிறமும் உண்டு. அங்கே யார் வாழ்ந்தாலும் அவருக்கு உண்டான நிறம் அதில் இருப்பதால் அனைவருக்கும் நன்மை ஏற்படும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இவர்களுக்கு வாஸ்துவில் மட்டும் குறை இருப்பதாக தெரியவில்லை..!

எனது பெயரோ, பிறர் பெயரோ, ஊரோ சம்பவத்துக்கு சம்பந்தமில்லை. பத்தாம் வகுப்பு நினைவுகளைப் பகிர்கிறேன். அதன்பின் எத்தனையோ சம்பவங்களைக் கடந்துவிட்டாலும், இதுமட்டும் என் நினைவில்......


படிப்பிலும், விளையாட்டிலும் நான் சராசரி. அழகில், சராசரிக்கும் சற்று குறைவு. விளையாட்டில் அதிக ஈடுபாடும், கல்வி பொழுதுபோக்காகவும் இருந்த தருணங்கள். நான் நானாகத்தான் இருந்தேனா என்று தெரியாத நாட்கள்.

ஒன்பதாம் வகுப்புவரை இருக்கும் சுதந்திரம் பத்தாம் வகுப்பில்  இல்லாத காலம். விநோதமான நேரங்களில் எழுந்து படிக்க வற்புறுத்தப்பட்ட  காலம். கேளிக்கைகள் தடைசெய்யப்பட்ட காலம். காட்சிப்பொருளாக வாழ்ந்த காலம்.  பார்ப்பவரெல்லாம் ஒழுங்காய்ப் படி என்ற காலம். (அறிவுரைத்தவர்கள் எத்தனை மதிப்பெண் எனத் தெரியாத காலம்.) பெற்றோர்கள் எங்கு துவங்கினாலும் படிப்பில் முடித்த காலம்.

இத்தனை இன்னல்களிலும் அவள் நட்பு மட்டுமே ஆறுதல். எங்கள் வகுப்பிலேயே அழகான பெண். அவளைப் பற்றிப் பேசுவது அல்லது அவளோடு பேசுவது இவ்வவளவுதான் எங்கள் வகுப்பு. பேசுவதற்காகக் காலையில்  சீக்கிரம் வருவோம் பள்ளிக்கு. பேச்சு பொதுவாக வருங்காலத்தில்  தொடங்கி யாரோ வராங்க என நிகழ்காலத்தில் நிறைவடையும்.

அவள் நட்பு எனது ரகசிய கர்வம். ஆசிரியர்களையே மதிக்காத நான் மாணவர்களை எப்படி மதிப்பேன்? ஆண் நண்பர்கள் குறைந்ததற்கும் அவளே காரணம். என்னை எனக்கு உணர வைத்தாள். காலாண்டுத் தேர்வில் கணிதத்தில் பாஸாகாத நான், அரையாண்டில் அதிக மதிப்பெண்.

பொதுத்தேர்வின் கடைசிப் பரீட்சை. மீண்டும் சந்திப்போமா ? தெரியாது.

நண்பர்களின் ஊக்கத்தில் அவளிடம் சொல்லிவிடலாம் என்ற மூடநம்பிக்கையோடு அவளைப் பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கச் செய்தேன். காரணம் தெரியாமல் அவளும்...

" உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்"

"சொல்லு"

"எப்படி சொலறதுன்னு..."

"எதுவாயிருந்தாலும் இப்பவே சொல்லு"

"நான் உன்ன"

"உன்ன"

"I Love You"

"நான் உன்னவிட ஒருநாள் முன்னாடி மூத்தவ".

இன்னும் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!









கருத்துகள் இல்லை: