செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

சாகின்றாய்.. தமிழா சாகின்றாய்....
உன்னை சாகச் செய்வானை சாகச் செய்யாமல்
சாகின்றாய்...!
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு (shoe) வீசியதன் மூலம் செருப்புக்கு மாபெரும் அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளார் ஈராக்-கின் பத்திரிகையாளர் முன்டேதர் ஸைதி.


செருப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமரியாதையால் உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





இட ஒதுக்கீட்டையும், சமூக நீதிக்காவலர் வி.பி,சிங் அவர்களையும் கொச்சைப்படுத்திய பார்ப்பன ஊடகமான "இந்தியா டுடே"யைக் கண்டித்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியாடுடே அலுவலகத்தின் முன்பு
திராவிடர் கழக இளைஞரணி சார்பில்
"இந்தியா டுடே" க்கு செருப்படி தந்து எரியூட்டப்பட்டது.
சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரைக் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் படங்களுக்கு: http://picasaweb.google.com/princenrsama/DemonstrationAgainstINDIATODAY#

சமூக நீதிக் காவலரும்,
"ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எனது பதவியை இழக்கிறேன் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை"
என்று சிங்கமென முழங்கிய
இந்திய வரலாற்றின் ஈடிணையற்ற மதிக்கத்தகுந்த ஒரே
பிரதமர் வி.பி.சிங்(விஸ்வநாத் பிரதாப் சிங்)
அவர்கள் இன்று மறைவுற்றார்.
அவருக்கு நமது செலுத்துவதோடு
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்
என்று உறுதியேற்போம்.

"
தலைவர்
புரட்சி
விடுதலை
போராளி
தமிழடையாளம்
வீரர்
"
முடியவில்லை
வேறு வார்த்தைகளால்...

சரி....ஒரே வார்த்தையில்...

தமிழகராதியில் அத்தனை பொருளுக்கும்
கிடைத்த ஒரு வார்த்தை
'பிரபாகரன்'
(தமிழின் தனிப்பெரும் வார்த்தை)
21.09.2006
(Orkut - இல் பிரபாகரனை ஒரு வார்த்தையில் வரையறுக்கச் சொன்னபோது எழுதியது)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட்டு வந்து பேசுங்க:ள் என்றெல்லாம் நீட்டி முழக்கினர் அதன் பொத்க்குழுவினர். ஆமால் அதையெல்லாம் மீறி இயக்குநர் பாரதிராஜா அவர்களை விமர்சித்தார் நடிகர் ராதாரவி.
அதையெல்லாம் விடக் கொடுமை... குழப்பத்தின் உச்சம்....
"இலங்கைத் தமிழர்களை, இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும்; அப்படி அழைத்தால் இந்தியா உதவும்" என்று ஏதோ ஒரு கூமுட்டை கூறியதை வழிமொழிந்து உணர்ச்சிகரமாக அந்தக் கருத்தை ஆதரித்து. ராதாரவி பேசிக் கொண்டிருந்தார் அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரங்கத்தில் நுழைந்துகொண்டிருந்தார். ராதாரவி பேசியதும், அடுத்து திருமா அவர்களை வருங்கால நடிகர்சங்க உறுப்பினர் என்று வரவேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்த்திப்பேச அழைத்தார்கள். வந்தார்... "உங்கள் கட்டுப்பாட்டை மதிக்கிறேன் அதே நேரத்தில், ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்றழைத்தால் தான் இந்திய அரசு உதவும் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
நடிகர்கள் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: