இவர் பெயர் நிக் வுஜிஸிக்(Nic vujicic) மற்றவர்கள் போல அல்ல பிறவியிலேயே இரண்டு கையும், காலும் இல்லாதவர்.அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த சிலவற்றை கூறுகையில்..
என் பெற்றோர்கள் கிருஸ்தவர்கள், எனது தந்தை கிருஸ்தவமதத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர். அன்று டிசம்பர் 4ம் தேதி 1982 மெல்போனில்(ஆஸ்த்ரேலியா )உள்ள ஒரு மருத்துவமனையில் எனது தந்தை கடவுளை பிராத்தனை செய்தபடி தங்களுக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தையை காண ஆவலாக காத்திருந்தார்.
எனது பெற்றோர்க்கு முதல் மகனான நான் பிறந்தேன் இரண்டு கையும், காலும் இல்லாத ஒரு அதிசய பிறவியாக. அவர்களால் இந்த அதிச்சியை ஜீரனிக்க முடியவில்லை. (இவருக்கு பின் பிறந்த ஒரு சகோதரனனும், சகோதரியும் உள்ளனர் அவர்கள் மற்றவர்கள் போல ஆரோக்கியமாகவே பிறந்துள்ளனர் ) மருத்துவர்களும் இன்றுவரை எனது இந்த குறைபாட்டிற்கான காரணத்தை கண்டரியமுடியவில்லை.
மற்றவர்கள் எனது இந்த அதிசய பிறப்பை பற்றி எனது தந்தையிடம் கேட்டனர் " கடவுள் அன்புடையவர் என்றால் பிறகு ஏன் குறைபாடுள்ள குழந்தையை உங்களை போன்ற அதிக ஈடுபாடும் , பக்தியும் உள்ளவர்களுக்கு கொடுக்கவேண்டும்?'' இது எனது பெற்றோர்க்கு மேலும் மனவேதனையை கொடுத்தது.
நான் நீண்ட நாள் உயிருடன் இருக்கபோவதில்லை என்றே எனது தந்தை நினைத்தார் . ஆனால் எனக்கு இரண்டு கையும், காலும் இல்லையே தவிர மற்றபடி எனது உடலில் எந்த குறையும் இல்லை என்றே மருத்துவ பறிசோதனையில் தெரியவந்தது இந்த குறைபாடுடன் நான் எப்படி இந்த உலகில் வாழ முடியும் என்ற கவலையும், பயமுன் எனது பெற்றோற்க்கு மிக அதிகமாக இருந்தது. நான் பள்ளிக்கு செல்லும் வயதை அடைந்தேன். ஆஸ்திரெலியா உள்ள பிரபளமான மேய்ன் ஸ்ரீம் (main-Stream school) பள்ளியில் ஒரு விதிமுறை அங்கு உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது. எனது பெற்றோரின் முயற்ச்சியாலும் , கடவுளின் கருனையாலும் அந்த சட்டத்தை உடைத்து முதல் முறையாக ஒரு ஊனமுற்றவன் அந்த பள்ளியில் மாணவனாக சேர்ந்தேன். எல்லோரும் போலவே பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற எனது ஆசைக்கு எனது உடல் குறைபாடு அனுமதிக்கவில்லை.
பள்ளியில் என்னை ஒரு அதிசய பிறவியாக மற்றவர்கள் பார்த்தனர். சில நேரம் வெருப்பாகவும்,கோபமாகவும் இருந்தது , என்ன செய்ய அவர்கள் மீது எந்த தவறும் இல்லையே.எனது நிலமை எனக்கு நன்றாகவே தெரியும்.எனது உடல்தான் வித்தியாசமானதே தவிர எனது மனது எல்லோறும் போல ஆசை,பாசம்,அன்பு,விருப்பம், கோபம் நிறைந்த ஒரு சராசரி மனிதனே.
சில நேரங்கள் நான் பள்ளிக்கு செல்வதே இல்லை, அந்த நேரங்களில் எனது பெற்றோர்கள் எனக்கு ஆறுதல் தந்து ஊக்கபடுத்தினர். விரைவில் நான் பள்ளியில் புதிய நண்பர்களுடன் நட்பை ஏற்படுத்தினேன். இப்போது என்னை அவர்களைபோன்ற சாதாரன மனிதனாக நினைக்கதொடங்கினர்.
ஆனால் சில நேரம் கோபமும், இயலாமையும் என்னை வாட்டியது. நான் மட்டும் ஏன் இப்படி? நான் என்ன தவறு செய்தேன், கடவுள் என்னைமட்டும் ஏன் இப்படி படைக்கவேண்டும்? இந்த எண்ணங்களை காலபோக்கில் உதறிதள்ளீனேன்,அதற்க்கு எனது பெற்றோர்கள் கொடுக்கத ஊக்கமே காரணம், மீண்டும் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நான் இன்று 21 வயது நிரம்மிய இளைஞன், வணிகவியளில் பட்டம் பெற்றுள்ளேன்.எனது 25 வது வயதில் எனது சொந்த சம்பாத்தியதில் எனது வாழ்க்கையை தொடங்கவேண்டும் என ஆசைபடுகிறேன். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய உள்ளேன், எனது உடல் குறைக்கு ஏற்றவாரு நான் தனியாக இயக்ககூடிய கார் ஒன்றை எனது சொந்த செலவில் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது .
பேச்சாளராக பல இடங்களில் உறையாற்றியுள்ளேன். இன்றைய இளைஞர்கள் சத்திக்கும் பிரச்சனைகள் பற்றிய எனது உறை பெரும்பாளானவர்களால் புகழப்பட்டது.
எனக்கு பல கனவுகளும், லட்சியமும் உள்ளது, அவற்றை என் வாழ்நாளுக்குள் அடையவேண்டும் என கடவுளை பிராத்தனை செய்துவருகிறேன். விருப்பங்களும், இலக்குகளும் நல்லதாக இருந்தால் அது நிச்சயமாக சரியான நேரத்தில் கடவுளாள் நிறைவேற்றிதரபடும் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்றை எழுதிவருகிறேன் விரைவில் வெளியிடவுள்ளேன்,
எனது வாழ்வை சுருக்கமாக சொல்வதானால்..
----கைகள் இல்லை , கால்கள் இல்லை....கவலையும் இல்லை---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக