"உனக்கெல்லாம் பரவாயில்லை. எங்களையெல்லாம் பாத்து கொஞ்சம் தெளிவாயிருப்ப! நாங்க தான், கண்ணக்கட்டி காத்துல விட்டமாதிரி மாட்டிகிட்டு தவிச்சோம்..." - என் நண்பர்கள் வட்டத்தில், முதல் சுற்றிலேயே திருமணம் செய்துகொண்ட ஒருவனின் வழக்கமான புலம்பல் இது! மிக உண்மையும் கூட.இதில் ஆண், பெண்னென்ற பேதமில்லை. "எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சிக்காத அருள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கோ அவ்வளவு பிரச்சனை இருக்கு மேரேஜ் லைஃப்ல
நாங்க B.Sc படிச்சப்போ எப்போ பாத்தாலும் கலை இலக்கியம்னு சுத்திகிட்டு இருந்தோம். ஆனா MCA வந்தப்புறம் ஒரே கலாட்டா, கூத்துதான். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கொஞ்சம் ஸ்டிரிக்ட். அதுலயும் physics, computer science டிப்பாட்மென்ட்னா கேக்கவே வேணாம். internel marks க்கு பயந்தே வாழ்கைய ஓட்டணும். ஆனா, எங்க கலை, இலக்கிய தாகத்துக்கு அங்க கிடைச்ச தீனி வேற எதப்பத்தியும்(படிப்பயும் சேத்துதான்!) எங்கள யோசிக்க
இரவு நேரங்களில் வெளியில் செல்லும்போது, நமது ATM card -ஐ உபயோகித்து பணம் எடுத்துத்தரச் சொல்லி கத்தி முனையில் மிரட்டும் கும்பல்கள் பற்றி கொஞ்ச நாளுக்கு முன் பொன்ஸ் ஒரு பதிவிட்டிருந்தார்.இன்றைக்கு மின்மடலில் வந்த செய்தி ஒன்று இவற்றைத் தடுக்க மிக உபயோகமானதாய் இருக்கும் எனப்படுகிறது. இப்படி யாரும் நம்மை மிரட்டினால், நாம் ATM -ல் நமது card-ஐ போட்டு, நமது PIN நம்பரை தலைகீழாய்க் கொடுத்தால் அந்த இயந்திரமே
அரசியல் என்றில்லை. எல்லாத் துறையிலுமே தொண்டனைக் கொண்டுதான் தலைவனின் போக்கு அமைகிறது. அல்லது தன் போக்குக்குத் தொல்லைதராத விதத்தில் தொண்டனை வைத்திருக்கத் தெரிந்த தலைவன், தான் போன போக்கில் கவலையின்றிப் போகிறான்.தலைவன் எது செய்தாலும், குறைந்தபட்சம் ஒரு பரிசீலனை கூட இல்லாமல், ஏற்பவனே தொண்டன் என்று யார் கற்றுக்கொடுத்தார்கள் எனத்தெரியவில்லை. தொண்டர்கள் இப்படி ஏற்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களின்
குதிரையின் மீது நிர்வானமாய் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்னிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் ஒரு இளவரசி. தன் நாட்டின் நலனுக்காக இப்படிச் சொய்யவேண்டிய சூழல் அவளுக்கு. எங்கள் AVC கல்லூரியின் கலையரங்கத்தின் முன் இந்த சிலை முன்பு இருந்தது. ஒத்திகைகளின் இடையிலோ அல்லது தனிமை தேவைப்படும்போதோ, இந்த சிலைக்கு எதிரில் இருந்த மைதானத்தை ஒட்டிய பெஞ்சில் அமர்வது என் வழக்கம். இவளின் கதை உண்மையா பொய்யா என்பது
பொதுவாகவே நம் அனைவரின் மனதிலும் நம்மைப்பற்றியே ஒரு பிம்பம் இருக்கும். பெரும்பாலும் இந்த பிம்பம் நம் நல்ல குணங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இளங்கலை இறுதியாண்டுவரை எனக்குள் என்னைப்பற்றி இருந்த பிம்பமும் அப்படித்தான்.அருள் ரொம்ப சாஃப்ட். ரொம்ப கேர் எடுத்துப்பான். கோவமே வராது. எல்லாருக்கும் ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்... இப்படி மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களைக் கொண்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக