செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

கதை,திரைக்கதை,வசனம்,டைரக் ஷ‌ன் ,பாடல்கள் சித்தூரான் "
இப்ப‌டி சினிமா டைட்டிலில் பெய‌ர் வ‌ர‌வேண்டுமென்று 1984 லிலேயே (வயது 17) க‌ன‌வு க‌ண்ட‌துண்டு. அந்த‌ க‌ன‌வு மெய்ப்ப‌டும் நாள் வெகு தொலைவில் உள்ள‌தாய் ஒரு உண‌ர்வு. இடையில் 1991 முத‌ல் 2007 வ‌ரை அதை நனவாக்கிக் கொள்ளும் பொருளாதார‌ வ‌ச‌தி இல்லை. த‌ற்போது ஏதோ வ‌ண்டி ஓடுகிற‌து. இதோ என் முய‌ற்சி துவ‌ங்கிவிட்ட‌து

இந்த தலைப்பில் கமல் கூட சமீபத்தில் வகுப்பெடுத்ததாக ஞா. ராமாயணம் படிக்காம பாயிண்டுக்கு வா நைனா என்பது கேட்கிறது. ராமாயணத்தை வச்சே திரைக்ககதைய எப்படி எழுதறதுனு சொல்லிர்ரன்.

ராமாயணம் எல்லாருக்கும் தெரிஞ்ச‌ கதை. இதை படமா எடுக்கனும்னா என்னவழி?

1.எங்கயோ வந்து போற ஒரு கேரக்டரோட வ்யூல சொல்லலாம். உதாரணம் கூனி. இவளை எல்லாரும் வில்லினு சொல்றாங்க. சப்போஸ் இவளே ராமனை ஒன் சைடா லவ் பண்ணா. அதை அவன் கண்டுக்காத அம்புல களிமண் கட்டி வச்சு அடிக்கரான். அதுக்கு பழி வாங்க தசரதன் கிட்டே வரம் கேட்கும் படி கைகேயிக்கு கீர் போடராள் இப்படி கொண்டு போகலாம்.
அல்லது கூனி மந்தாரை நாராயண பக்தை. அவளுக்கு ராமகாதை எப்படி போகும், அதனோட முக்கிய நோக்கம் ராவண வதம்னு தெரியும். ஆனால் ராமரோட வாழ்க்கைய பார்த்தா அது வெறுமனே வெள்ளை சாம்பாரா போய்க்கிட்டிருக்கு. அதை ஒடைச்சு திருப்ப அவப்பெயர் தாங்கி வரம் கேட்க வைக்கிறானு கொண்டு போகலாம்.

2.அல்லது ஓப்பனிங் ஷாட். சுக்ரீவன்,ஆஞ்சனேயர் & கோ வாலிக்கு பயந்து ஒதுங்கியிருக்காங்க. அப்போ தூரத்துல ராம லட்சுமணர் வராங்கனு வச்சுக்கிட்டா.. கதைல டெம்போ வரும். பழங்கதைய சில க்ளிப்பிங்ஸ்ல முடிச்சுரலாம்.

(தொடரும்)

தற்சமயத்துக்கு ஒரு திரைக்கதை அடியேன் எழுதியது

மின்சாரம் இல்லாத மலைகிராமத்துக்கும், அந்த கிராமத்து இளைஞன் ஒருவனுக்கும் பவர் வரும்போது எப்படி கெட்டழிகிறார்கள் என்பது நாட்.

கதை சுருக்கம்:

ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தலைவர்(பிழைக்க தெரியாத). ஒரு கோவில். ஒரு அம்மன். அம்மன் கழுத்தில் ஒரு வைர மாலை.(அதற்கு லாஜிக்கலான கிளைக்கதை) சப்பாணி மாதிரியான ஒரு நாயகன், வெள்ளந்தியான நாயகி. ஒரு லட்சியவாதி ஆசிரியர்.

பவர் இல்லாத காரணத்தால் படிப்பில் பின் தங்குவதாக கருதி ஆசிரியர் பவர் கேட்டு அலைகிறார். இறுதியில் ஸோலார் பவர் பெற திட்டம். அதற்கு காசு வேண்டும்.


விஜயகாந்த் மாதிரி புதிதாக அரசியலுக்கு வந்த நடிகரை தானம் கேட்டு மானம் போகிறது. ஊர் தலைவர் சப்பாணியை சூப்பர் ஸ்டார் ஆக்குவதாக சபதம். அம்மன் கழுத்து வைரமாலையை அடகு வைத்து லோ பட்ஜெட் படம் தயாரிக்கிறார்கள்.

கிராமம்,சப்பாணி இருவருக்கும் பவர் கிடைக்கிறது.

அத‌ன் விளைவுக‌ள் எதிரிடையாக‌ இருக்கிற‌து.

கிராம‌த்து பெரிய‌வ‌ர் சோலார் ப‌வ‌ர் யூனிட்டை வெடி வைத்து த‌க‌ர்க்கிறார்..டைட்டில்ஸ்
எனது மாண்டிசோரி ஆசிரியை தனது பள்ளியில்
நடந்த பல சுவாரசியமான விடயங்களை எங்களுடன்
அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

அவரை வாயடைக்க வைத்த ஒரு மாணவனைப்பற்றி:

மாண்டிசோரி முறையில் 11 முதல் சொல்லிக்கொடுக்க
teen board

உபயோகித்து சொல்லிக்கொடுப்போம்.

எல்லா மாணவர்களும் ஒழுங்காக பயிற்சி செய்ய
ஒரு மாணவன் மட்டும் "சும்மா" உட்கார்ந்திருதிருக்கிறான்.

"ஏன் நீ மட்டும் இந்தப் பயிற்சி செய்யவில்லை?"
என்று கேட்டிருக்கிறார் ஆசிரியை.

இதெல்லாம் கத்துக்க வேண்டியதே இல்லை. டைம் வேஸ்ட்!!!
என்று சொன்னவனை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே
11,12---100 கற்றுக்கொள்வது வேஸ்டா? எப்படி?!!"
என்று கேட்க.

"உங்க வீட்டுல கால்குலேட்டர், போன் எல்லாம் இல்லையா?
அதுல எத்தனை நம்பர் இருக்கு? 0 - 9 தானே எனக்கு 10 கூட
தெரியும் அதனால் அதுக்கு மேல கத்துகிட்டு டையத்தை
வேஸ்ட் செய்ய விரும்பலை. எவ்வளவு கத்துகிட்டாலும்
0-9 தெரிஞ்சா போதும்" அப்படின்னு அசால்டா சொல்லிட்டு
போய்விட்டானாம்.!!!









10குள்ளே உலகம் இருக்குன்னு அந்த குட்டிபையன்
சொல்லிட்டான்.

அந்த பையன் சொன்னதிலும் ஒரு லாஜிக் இருக்கு. அவன்
சொன்னது தவறுன்னு சொல்ல முடியாது. 3 வயது
குட்டி பயலுக்கு என்ன ஒரு யோசனை பாருங்கள்!!!
எனது மாண்டிசோரி ஆசிரியை தனது பள்ளியில்
நடந்த பல சுவாரசியமான விடயங்களை எங்களுடன்
அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

அவரை வாயடைக்க வைத்த ஒரு மாணவனைப்பற்றி:

மாண்டிசோரி முறையில் 11 முதல் சொல்லிக்கொடுக்க
teen board

உபயோகித்து சொல்லிக்கொடுப்போம்.

எல்லா மாணவர்களும் ஒழுங்காக பயிற்சி செய்ய
ஒரு மாணவன் மட்டும் "சும்மா" உட்கார்ந்திருதிருக்கிறான்.

"ஏன் நீ மட்டும் இந்தப் பயிற்சி செய்யவில்லை?"
என்று கேட்டிருக்கிறார் ஆசிரியை.

இதெல்லாம் கத்துக்க வேண்டியதே இல்லை. டைம் வேஸ்ட்!!!
என்று சொன்னவனை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே
11,12---100 கற்றுக்கொள்வது வேஸ்டா? எப்படி?!!"
என்று கேட்க.

"உங்க வீட்டுல கால்குலேட்டர், போன் எல்லாம் இல்லையா?
அதுல எத்தனை நம்பர் இருக்கு? 0 - 9 தானே எனக்கு 10 கூட
தெரியும் அதனால் அதுக்கு மேல கத்துகிட்டு டையத்தை
வேஸ்ட் செய்ய விரும்பலை. எவ்வளவு கத்துகிட்டாலும்
0-9 தெரிஞ்சா போதும்" அப்படின்னு அசால்டா சொல்லிட்டு
போய்விட்டானாம்.!!!









10குள்ளே உலகம் இருக்குன்னு அந்த குட்டிபையன்
சொல்லிட்டான்.

அந்த பையன் சொன்னதிலும் ஒரு லாஜிக் இருக்கு. அவன்
சொன்னது தவறுன்னு சொல்ல முடியாது. 3 வயது
குட்டி பயலுக்கு என்ன ஒரு யோசனை பாருங்கள்!!!

அடியேன் மீது மிகப் பிரியம் கொண்டவர்களில் ஒருவரான டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி சில தினங்களுக்கு முன் அனுப்பிவைத்த 100க்கும் அதிகமான புத்தகங்களில் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார் எழுதிய "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம் " என்னும் அருமையான நூலும் ஒன்று.
நப்பின்னையைப் பற்றி அவள் கண்ணனை மணந்த வரலாறு பற்றி அய்யங்கார் மதுரமாக எழுதியதற்கு "கம்பன்" ஒரு அற்புதமான முன்னுரை வழங்கி, பாடல்களுக்கு எளிமையான அர்த்தங் களும் அளித்துள்ளார். அவசியம் எல்லாரும் படிக்க வேண்டிய நூல் ஸ்க்ரைப்டுவில் மின் புத்தகமாக . பல நேரங்களில் மூல நூலைக் காட்டிலும் முன்னுரைகளே ஸ்வாரஸ்யமாக அமைவதுண்டு. இந்த முன்னுரை அதற்கு ஒரு உதாரணம்.

Nappinnai pirattiyar thirumanam
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
இலங்கை அகதி முகாமில் மூளை காய்ச்சலுக்கு 34 தமிழர்கள் பலி

http://www.primernews.com/upload/8354.JPG

கொழும்பு, ஜூலை.7-
 
இலங்கையில் போர் பகுதியில் இருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
 
ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. சுகாதார சீர்கேட்டால் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நூற்றுக்கணக்கானோருக்கு சின்னம்மை நோய் பரவி இருந்தது இதில் பலருக்கு வாந்தி பேதியும் ஏற்பட்டுள்ளது.
 
இப்போது மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதில் 64 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 34 பேர் உயிர் இழந்தனர். இதில் 24 பேர் இளைஞர்கள் இந்த தகவலை வவுனியா அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்தார்.
 
மூளை காய்ச்சல் கிருமி எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடிக்கும் வசதி வவுனியாவில் இல்லை. எனவே கட்டுப்படுத்த முடியாமல் நோய் பரவி வருகிறது.

http://www.maalaimalar.com/2009/07/07113751/CNI037070709.html




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_bbUZwG1kjT4JdOFBMYtRfbFnsixOIiVXecRrLi2SrfZhWfpAr_eEC-mWsYaXI2UZZwrIUFdke798MMiDBdkc-f7BSK3iABDWCMAfeHXBQ24aCYfYlt0OG4JMXQaiQDFGGyf-OvWHWcA/s400/wall4.jpghttp://www.neruppu.com/wp-content/uploads/2009/03/athan.bmp

கருத்துகள் இல்லை: