திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

மதியம் 12.30 மணிக்கு
டிவிக்குள்ளிலிருந்தவாறே புஜ்ஜியோடு டோரா
வீட்டிலிருக்கும் எல்லாக் குழந்தைகளையும் கைதட்டி அழைக்கிறாள்.
டோராவுக்கு
அவள் வீட்டிற்குப் போவதற்கே வழி தெரிவதில்லை.
'நான்தான் மேப்... மேப்' என்று பாடியவாறே வந்து
ஒரு மேப் வழி சொல்கிறது:
'அடர்க்காடு, தொங்குப்பாலம், டோராவோட வீடு
சொல்லுங்க
அடர்க்காடு, தொங்குப்பாலம், டோராவோட வீடு.'
வீட்டை எதுக்கு இதையெல்லாம் தாண்டிப் போய்
கட்டி வைத்தீர்களெனக் கேட்காமல்,
'நாம எங்க போறோம்... டோராவோட வீட்டுக்கு
நாம எங்க போறோம்.... டோராவோட வீட்டுக்கு' - கைதட்டி பாடி அடர்க்காட்டில் டோராவோடு குழந்தைகளும் பயணிக்கிறார்கள்.
கொஞ்சத் தூரத்தில் 'உங்க கண்ணுக்கு ஏதாவது தெரியுதா' என்கிறாள் டோரா. புஜ்ஜி உள்பட எல்லோரும் பயப்படுகிறார்கள்.
குள்ளநரி ஒண்ணு மறைந்து மறைந்து வருகிறது.
'குள்ளநரி திருடக் கூடாது...
குள்ளநரி திருடவே கூடாது' - எல்லோரும் கெஞ்சுகிறார்கள்.
'என்ன.... நான் திருடுறேன்னா' என்று ரோசக்கார நரி திரும்பி ஓடுகிறது.(தாமதிச்சா பையிலிருக்கும் எல்லாத்தையும் திருடித் தூக்கிப்போட்டுவிடும்.)காட்டைக் கடக்கிறார்கள்.
அடுத்து தொங்குப்பாலம்.
அதை எப்படிக் கடப்பதெனத் தெரியாமல் தவிக்கிறார்கள்.
டோரா யோசனை சொல்கிறாள்.
'இப்படிக் கயித்தைப் பிடிச்சுக்கிட்டு எல்லோரும் சொல்லுங்க
ஜம்ப்.. ஜம்ப்.. ஜம்ப்...ஜம்ப்..'
தாண்டி முடித்து வீடு சேரும்போது
எல்லோரையும் வரவேற்று டோரா அம்மா 'ஹாய்' சொல்ல
குழந்தைகளுக்கு நன்றி சொல்லி
'நாம ஜெயிச்சிட்டோம்... ஜெயிச்சிட்டோம்' என்று டோரா பாட
வீடுகளின் உள்ளறைகளிலிருந்து வரும் அம்மாக்கள்
குழந்தைகளைவிட வேகமாக கைதட்டி ஆடுகிறார்கள்
அரை மணி நேரம் எந்தத் தொந்தரவுமின்றி
துணி துவைக்க முடிந்ததற்காக... சமைக்க முடிந்ததற்காக.
நன்றி: உயிரோசை

[பாகம் -1 வாசிக்க சொடுக்கவும் ]

".........மேற்படி சொத்துக்கள் யாவும் என் சுய சம்பாத்தியம் ,இதில் ஒரு செப்புக் காசு கூட ,பூர்வீக சொத்து இல்லை என்பது என் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தெரியும்...."

முதல் வரிகளே உயிலின் வடிவத்தை கேட்பவர்களுக்கு மெல்லியதாக உணர்த்தும் படி இருந்தது .ரங்கசாமி தன் உயிலைக் குழந்தைகள் அதிர்ச்சியைத் தாங்க மெத்தையிட்டாற்போல் தொடங்கியிருந்தார்.

"....இதை மனதில் கொண்டு ,இந்த உயிலை என் பிரியப்படி எழுத எனக்கு பூர்ண உரிமை இருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்....மேலும் இந்த உயில் என் சொந்த விருப்பத்தின்படி சுய நினைவோடு எழுதப் பட்டது என்பதையும் உறுதியுடன் கூறிகொள்கிறேன்............."

வாசிப்பதை நிறுத்திவிட்டு ராமன் எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தார்.எல்லோர் முகத்திலும் கேள்விக்குறிகளும் ,ஏமாற்றத்துக்குத் தயாராகும் முயற்சியும் வட்டமடித்துக் கொண்டிருந்ததைக் கண்டபின் மேற்கொண்டு தொடர்ந்தார்.

"......என் மூன்று மகன்களையும் ,நல்ல முறையில் படிக்க வைத்து,சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் அமரும் வண்ணம் வழிகாட்டி அதற்கான பொருள் தந்து ஒரு நல்ல தகப்பனாய் என் கடமைகளைச் செய்திருக்கிறேன்........அதே போல் ,என் இரு பெண்மக்களையும் ,அவர்கள் விருப்பப் படி படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்து, வரதட்சணை சீர் என்று, பொருளும் பணமுமாகப் ,பல லட்சங்கள் அளித்து ,அவர்களுக்கு ஆற்ற வேண்டிய என் கடமையையும் செவ்வனே ஆற்றியிருக்கிறேன்.......

வாரிசுதாரர்களுக்கு ஓரளவு முடிவு தெரியத் தொடங்க அங்கே ஒரு அழுத்தமான அமைதி குடி கொள்ள ஆரம்பித்தது.

"....இண்ட்டர் மீடியட் மட்டுமே படித்திருந்த நான் , என் சொந்த உழைப்பில் சம்பாதித்ததை மட்டுமே கொண்டு மூன்று மகன்களையும் இரண்டு பெண்களையும் வளர்த்து ஆளாக்கி அவர்களை நல்ல ஒரு நிலையில் வைக்க முடிந்திருக்கிறது என்றால் , தற்பொழுது கம்ப்யூட்டர் துறையிலும் டாக்டர் தொழிலில் இருக்கும் என் மகன்களுக்குத் தத்தம் குடும்பங்களைப் பராமரிப்பது அத்தனை சிரமம் இருக்காது என்பதையும் .. .பெண்களுக்கும் கல்விச் செல்வத்தை நல்ல படியாகவே தந்திருப்பதால் அவர்களாலும் வாழ்க்கையில் மேலும் முன்னேற முடியும் என்பதையும் மனதில் கொண்டு....."

சகோதர சகோதரிகள் தாங்கள் எதிர் கொள்ள இருக்கும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராயினர்.

தொடரும

பாகம் -1

"........இங்கு கூறப்பட்டுள்ள என் சொத்துக்களுக்கு என் மகன்களோ மகள்களோ அவர்களது வாரிசுதாரர்களுக்கோ எந்த விதமான பாத்தியதையும் இல்லை என்பதை நான் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்... .."

மருமகன்களும் மருகக்கள்மார்களும் ,அதுவரை அங்கே தாங்கள் இருந்தது தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்பதை மிகவும் தாமதமாகப் புரிந்தவர்களாக விருட்டென்று வெளிநடப்பு செய்தனர்.

வக்கீல் தொடர்ந்தார்.".......என் ஏழ்மையில் என் கூட இருந்து என் உழைப்பில் தோள் கொடுத்து என்னை உச்சியில் ஏற்றி விட்டவள் என் மனைவி சீதாலட்சுமி..........நான் செழித்து நிற்கும் வேளையில், செல்வத்தின் பயனை அனுபவிக்காமல்,கான்சர் பிடியில் விழுந்து செல்வச் செழிப்பில் 10 சதவிகிதம் கூட அனுபவிக்காமல் என்னை விட்டுப் பிரிந்து போனார்.....அந்த நல்ல ஆத்மாவின் நினைவாக, கேன்சர் மருத்துவ மனையின் ஒரு பராமரிப்பு செலவுக்குகாக ,எஞ்சியுள்ள என் சொத்துக்கள் முழுவதையும் எழுதிவைக்கிறேன்.................வயதான காலத்தில் ஒருவொருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம் என்ற எண்ணத்தோடு கட்டப் பட்ட இந்த வீடும், கேன்சர் நோயாளிகளின் மறுவாழ்வு மையத்துக்காக சீதாலஷ்மி பெயரில் மனப் பூர்வமாக எழுதிவைக்கிறேன்.......
....... கடந்த 10 நாட்களுக்கா ஆகும் செலவுக்காக நான் ஒதுக்கி வைத்திருந்த தொகையை, அதை ஏற்றுக் கொண்டவர்களுக்குப் பிரித்துத் தரும்படி என் நண்பரும் வக்கீலுமான ராமனிடம் தெரிவித்திருக்கிறேன்..........."

மற்ற சட்ட திட்டங்கள் முன்னேற்பாடுகள் பற்றிய விவரங்களை வாசித்து முடித்துத் தலை நிமிர்ந்தார் வக்கீல் ராமன்.
அப்பாவின் உயில் தந்த ஆத்திரம் கோபம் ,அப்பாவை இழந்த சோகத்தை விட அதிகமாகவே கொப்பளிக்க ,அதை மறைக்க இயலாமல் வெளிப்படுத்தியபின் அனைவரும் சிலையானார்கள்.

வக்கீல் விடை பெற்ற பின் கூடமே காலியானது.

பல ஆண்டுகளுக்குப் பின்னே ஒன்றானார்கள் என்பதை,சுவரில் மாட்டப் பட்டிருந்த ரங்கசாமி சீதாலஷ்மி படங்களும் பளிச்செனக் காட்டின.

".....என்னங்க இப்படி எழுதி வச்சுட்டு வந்திருக்கீங்க?......."சன்னமாக ஒரு அசரீரி ரங்கசாமியின் ஆத்மாவுக்கு மட்டும் கேட்பதுபோல் ஒலித்தது.

"......என்னம்மா நீ...இங்கே வந்து இருபது வருஷமாச்சு இன்னுமா எது உண்மையான சொத்துன்னு உணராம இருக்கே...?

".....நான் ஆவிதாங்க ஆனாலும் அம்மாவாச்சே....."

"..கூடத்தில் இருக்கும் . நம் பிள்ளைகளைக் கொஞ்சம் பார்....."

அங்கே-

[தொடரலாமா]

இந்த குட்டி பையன் பேரு தியானேஷ் கிருஸ் சென்னையில் வசிக்கும் இவருக்கு இன்று முதல் பிறந்த நா ள்..

HAPPY BIRTHDAY Deyanesh Krish

Photobucket
இயற்றியது இளையகவி

இந்த குட்டி பையன் பேரு தியானேஷ் கிருஸ் சென்னையில் வசிக்கும் இவருக்கு இன்று முதல் பிறந்த நா ள்..

HAPPY BIRTHDAY Deyanesh Krish

Photobucket
இயற்றியது இளையகவி

கருத்துகள் இல்லை: