காலேஜில் எக்ஸாமும் கல்ச்சுரல்ஸ்ஸூம் ஒன்றாக வந்தது போல், சென்ற வாரம் முழுக்க அலுவலக வேலையும் நட்சத்திர வாரமும் ஒன்றாக வந்து திணரடித்துவிட்டன! மூன்று இரவுகள் விழித்திருக்கும்படியான வேலைக்கு நடுவில் பதிவுகள் இடுவதும் பின்னூட்டங்கள் வாசிப்பதும் நல்ல இளைப்பறல்களாக இருந்தது. ஆனாலும், நட்சத்திர வாரத்தில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்த அனைத்தையும் எழுத முடியாமற் போனது எனக்கு வருத்தம் தான்.இரண்டு
கங்கைகொண்டசோழபுரம் கோயிலை பார்க்கும்போது, கருங்கற் பூக்கள் விளைந்த ஒரு சோலை போலத்தான் இருக்கும். ஏனோ தெரியவில்லை, இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலைவிட, அவரின் மகன் இராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோயிலை மிகவும் பிடித்துவிட்டது!
இந்த புகைப்படங்களை எடுக்கச்சென்றபோது மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்ததால் சாரம் கட்டி மறைத்திருந்தார்கள். அந்த பிரம்மாண்டம் நீங்கலாக மற்றவை...








இக்கோயில் பற்றி மேலும் சில தகவல்கள்.
இந்த புகைப்படங்களை எடுக்கச்சென்றபோது மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்ததால் சாரம் கட்டி மறைத்திருந்தார்கள். அந்த பிரம்மாண்டம் நீங்கலாக மற்றவை...








இக்கோயில் பற்றி மேலும் சில தகவல்கள்.
'சாப்டாச்சு''இது அருள் மொபைல்''ச்சார்ஜ் இல்ல''தோசை''2''மூவி''2''மாதவன். சுந்தர் c படம்''ரீமா சென்''ரோகினில''கோயம்பேடு''ம். ஆரம்பிச்சிடுச்சி''பரவால்ல. சொல்லு''நீ சாப்டியா''சரி''சரி''GN''TC''சரி''GN''அருள் வீட்டுக்கு''சரி''GN'ரொம்ப நாட்களுக்கப்புறம் சென்னை வந்திருந்த என் நண்பன் ஆனந்த், தன் காதல் மனைவிக்கு, என் கை பேசியிலிருந்து அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் தான் மேலே நீங்கள் படித்தவை!நாங்கள்
காலேஜ்ல நடிக்கறதுக்கு, கவிதை படிக்கறதுக்கெல்லாம் கெடச்ச மேடை பாட மட்டும் கெடைக்கவே இல்லை. இது ரொம்ப நாளா ஒரு ஏக்கமாவே இருந்திச்சி. எப்பவாச்சும் டி.வி ல மோகன், முரளி எல்லாம் மேடைல படறத பாத்தா இந்த ஏக்கம் திரும்பவும் அப்பப்ப தலைதூக்கும்.நம்ம சர்வேசனோட பாட்டுக்குப் பாட்டு அறிவிப்பு பாத்ததும், ஆஹா... நமக்கும் கெடச்சுதுடா ஒரு எடம்னு பூந்து பாடி வெச்சிட்டேன்... நம்ம மொட்ட பாட்டுல எனக்கு ரொம்ப ரொம்ப
போக்கிரி திரைப்படத்தில், IPS அதிகாரியான விஜய், தாதாக்களை ஒழிக்க தானே ஒரு தாதாவாக உருவெடுக்கிறார். பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் ஒரு இமேஜை தனக்கு உருவாக்கிக்கொண்டு, தாதாக்கள் கூட இருந்தே அவர்களுக்குக் குழிபறிக்கும் பாத்திரம் அவருக்கு. அந்த போக்கிரி தாதா கேரக்டருக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கும் பெயர் "தமிழ்"! அவரே போலீஸ் அதிகாரியாக வரும்போது அவரின் பெயர் வெறு. தாதா இமேஜ்
மூன்று பாலினங்களிலும் இருக்கும் பொதுவான பல விஷயங்களுக்கு ஆணினம் மட்டுமே பொறுப்பேற்கும் நிலை, இன்னமும் நாம் ஆணாதிக்க சமூகத்தில் இருக்கிறோம் என்பதால் கூட இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பாலியல் வக்கிரங்கள் என்றாலே அது ஆண்களால் நிகழ்த்தப்படுவது என்ற கருத்துதான் பொதுவில் இருக்கிறது.பொதுவாக ஆண்கள் இத்தகைய பிரச்சனைகளில் ஈடுபட்டால் ஏற்படும் எதிர்வினைகள், இதில் ஈடுபடும் பெண்களுக்கு நேர்வதில்லை. இன்னும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக