செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

சாமியார்கள் எத்தனை ரகமான கூத்து பண்ணி னாலும் சலிக்காமல் ரசிக்கிற வாசக மகா ஜனங்களுக்கு லேட்டஸ்ட் அறிமுகம் & பண்ணாரி சாமியார்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து ராசி புரம் செல்லும் வழியில் வையப்பமலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரம் போனால் வரும் கிராமம் பெரியமணலி. இங்குதான் பிரமாண்ட ஆசிரமம் கட்டி Ôஅருள்Õ பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியார்.
பல வருடங்களாக முடி வெட்டாமலும் எண்ணெய் வைக்காததாலும் சிடுக்கு பிடித்த நீண்ட ஜடா££... முடி! உடம்பு முழுக்க அழுத்த்த்தமான விபூதிப் பட்டை... கழுத்தை மறைத்து ருத்ராட்சக் கொட்டை... இடுப்பில் காவி வேட்டி... அதில் முடியப்பட்ட செல்போன்... இதுதான் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியாரின் திருக்கோலம்.

நாம் அவரது ஆசிரமத்துக்குச் சென்றி ருந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த பக்தர் ஒருவருக்கு அருள் வாக்கு சொல்லிக்கொண்டிருந்தார் சாமியார். ''அடுத்தவனைப் பார்த்துப் பார்த்தே உம் பொழப்பு நாசமாப் போயிட்டிருக்கு. அடுத்தவனைப் பார்க்குறதை நிறுத்திட்டு நீ பொழைக்கிற வழியைப் பாருடா. உனக்கு அடிக் கடி மூட்டு வலி வருமே, ரைட்டா? அதுக்கு ஒரு மருந்து தர்றேன். தெனமும் மூணுவேளை மூணு நாளைக்கு சாப்பிடு. அப்புறம் எந்த வலியும் உனக்கு வராது'' என்று பொள்ளாச்சி பார்ட்டிக்கு அருள்வாக்கு பிளஸ் மூட்டுவலி மருந்துக்கு ஃபீஸ் ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டார்.

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ''உங்க பத்திரிகை எவ்வளவு
விற்கும்..? எந்த ஊருக்கெல்லாம் போகுது..?'' என்று சர்வே ரேஞ்சுக்கு விவரம் கேட்டுக்கொண்ட பிறகே திருவாய் திறந்தார் பண்ணாரி.

''மல்லசமுத்திரம் பக்கம் இருக்கிற சின்னகாளிப்பட்டிதான் என் சொந்த ஊர். வீட்டுல வச்ச பேரு நல்லதம்பி...ÕÕ என்று ஆரம்பித்து தன் பூர்வ கதை சொல்லிவிட்டு, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி உலகத்துல இருக்குற மக்கள் எல்லாம் நல்லா இருக்கணும்னு பனை மரத்து மேல ஏறி உட்கார்ந்து நூத்திப் பதினோரு நாள் தவமிருந்தேன். அந்த சமயத்துல என் சாப்பாடு கடலைக் கொட்டை மட்டும் தான். அதுவும் என்னோட பக்தர்கள் கீழே இருந்து கயித்துல கட்டிவிடுவாங்க. நான் மேலே இருந்து இழுத் துக்குவேன். பூமியை தோண்டி அதுக்குள்ளயும் உட்கார்ந்து தவமிருந் துட்டேன். என்னோட தவத்தாலதான் இன்னைக்கு உலகத்துல பெரிய அளவுல சண்டை சச்சரவு இல்லாம அமைதியா மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க என்று இன்றைய பராக்கிரமÕங்களை உதிர்த்தார். [அள்ளி விடறாரு]

''நான் பள்ளிக் கூடத்துப் பக்கம் எட்டிக்கூடப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னைக்கு பல பேருடையை நோயை குணப்படுத்துறேன். டாக்டருங்களே முடியாதுன்னு சொன்ன பலபேரை காப்பாத்திருக்கேன்ÕÕ என்றவர், ÔÔஎய்ட்ஸ்க்கு மருந்து இல்லன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா நான் கண்டுபிடிச்சிட்டேன். சில மூலிகைகளை ஒண்ணா அரைச்சு (அதைச் சொல்வாரா என்ன?) ஒரு தைலம் ரெடி பண்ணியிருக்கேன். அதை தெனமும் மூணு உருண்டை தின்னாப் போதும் எய்ட்ஸ் பறந்துபோயிடும். அதேமாதிரி சில பேருக்கு சீக்கிரமே விந்து வெளியேறிடும். நான் அதுக்கும் மருந்து வச்சிருக்கேன். ஒரு வேளைக்கு பதினைஞ்சு ரூபா ஆகுது. ஒருவாரம் தொடர்ந்து தின்னா போதும். எவ்வளவு நேரமானாலும் தாங்கும்! என்றார் Ôசிட்டுக்குருவிÕ வைத்தியர் ரேஞ்சுக்கு! இந்த பண்ணாரி சாமிக்கும் பக்த வாடிக்கையாளர்கள் அடிக்கடி வந்து போவதில், ஜோராகத்தான் கதை ஓடிக்கொண்டிருக்கிறது! [சாமி இதுக்கே கண்ணக்கட்டுதே]

ஏமாற ஆளிருந்தால்... இதுபோல நன்னாரிகளுக்கா நாட்டில் பஞ்சம்?!
Vikatan.com


More than a Blog Aggregator

by சிறில் அலெக்ஸ்

nach
Originally uploaded by cvalex
Test
உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.
பதிவர்கள் விலகுவதும் விலகியவர்கள் உள்ளே வருவதும் சகஜமாயிருக்கும் இந்த நாட்களில் நானும் ஒரு அறிவிப்போடு இங்க எழுதுறத நிறுத்தப் போறேன். இதுக்கு மேல பில்ட் அப் குடுக்க விரும்பல தனிக்குடித்தனமா போயி cyrilalex.com தளத்துல எழுதலாம்னு இருக்கேன். உங்க ஆசியோட!
எல்லாரும் புதுவீடு புகுவிழாவுக்கு வந்திடுங்க.

என்னுடைய பதிவுகள் சிலவற்றை ஒன்றாக ஒரே தளத்தில் காணும் வசதியை விரைவில் ஏற்படுத்தவிருக்கிறேன்.

பதிவுகளுக்கான புதிய செய்தியோடை : http://cyrilalex.com/?feed=rss2
பின்னூட்டங்களுக்கான புதிய செய்தொயோடை : http://cyrilalex.com/?feed=comments-rss2

அடுத்த பதிவு எப்ப போடுவேன்னு தெரியாது. ஆணியப் புடுங்க சொன்னா பரவாயில்ல இங்க ஆபீஸ்ல சுத்தியலையே புடுங்க சொல்றாங்கப்பா.

தள வடிவமைப்பு சிந்தாநதியும், ரவுசங்கரும் சற்றுமுன்னுக்கு செய்ததிலிருந்து சிறிய முன்னேற்றங்களுடன் நான் ஆக்கியது. தேன், அலைகள் பாறைகள் மணல்மேடுகளுக்கான லோகோ நானே செய்தது. இதுக்கெல்லாம் வீட்ல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிட்டேன்.

மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க.
உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.
என் மகனுக்கு தமிழ் சொல்லித் தரலாம் என ஒரு புத்தகம் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தேன். அதுல என்னண்ணா...படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

ட - டயர்
வ - வல்கனைசிங்

ஐ - ஐஸ்கிரீம்
ப - பலூடா

ஏ - ஏரோபிளேன்
ஓ - ஓம்னி பஸ்
கலர் கிளி
கறுப்பு வெள்ளை காகம்
வான்கோழி பிரியாணி சாப்பிட்டதில்லையா இவரு?
உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.
சற்றுமுன் செய்தித் தளம் புதுப் பொலிவுடன் satrumun.com எனும் தனி வலைப்பதிவுத் தளமாக இன்றுமுதல் இயங்குகிறது. புதிய தளத்தில் உங்களுக்கென பயனர் கணக்கை துவங்கிய பின்னர் பின்னூட்டமிடும் வசதிகள் உள்ளன.

தமிழ்மணம் புதிய தளத்தை திரட்டுவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணப் பயனர்கள் நேரடியாக satrumun.com சென்று செய்திகளைப் பெறலாம்.
உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.
ஷண்முகசுப்பையாவின் கவிதை ஒன்று.

அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை

துவர்க்கும் நெல்லிக்காயின் அடிவாரத்தில் சுவைக்கப்படும் .00001 மில்லிகிராம் இனிப்புதான் வாழ்க்கை.


லிப்சன் கெய்சர் என்பவர் ஒரு மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர். உலகெங்கும் சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதையே தொழிலாகக் கொண்டவர்.

ஒருமுறை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இவர் பயிற்சி வகுப்பு நடத்தியபோது, ஐநூறு வெள்ளி கட்டிவிட்டுப் பயிற்சி வகுப்பு மேற்கொண்டவர்களை நோக்கி அதிர்ச்சி தரும்படி பேசினார்.
கெய்சர் இப்படி ஆரம்பித்தார்.

நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்களைச் சவப்பெட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். மேல் பலகை மீது இன்னும் ஆணிகள் அறையப்படவில்லை. உங்களைச் சுற்றிப் பலரும் சூழ்ந்து நிற்கிறார்கள். சிலர் வாய்பொத்தி அழுகிறார்கள். சிலரோ கதறுகிறார்கள். வேறு சிலர் உங்கள் கால்கள் அருகே மண்டியிடுகிறார்கள். பலர் மலர்வளையம் வைக்கிறார்கள் என்றார்.
நான் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நேர்ந்திருந்தால், அடப்பாவி மனுஷா! நாலு நல்ல விஷயம் சொல்வாய் என்று பார்த்தால், சாகவே அடித்துவிட்டாயா? என்று எண்ணியிருப்பேன். ஆனால் இதில் கலந்துகொண்டவர்களோ, எங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்ட பயிற்சி வகுப்பு இது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
கெய்சர் தொடர்கிறார். இப்போது எவரோ ஒருவர் உங்களை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறார்.

நல்ல மனுஷன்! பாவம்! அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்துட்டாரு.
இதைக் கேட்டதும், உங்கள் காதுகள் உயிர்ப்பெறுகின்றன. ஒலியை மட்டும் வாங்கிக்கொள்ளும் மூளையின் பகுதி வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆகையால் காதுகளைத் தீட்டிக்கொண்டு உங்களைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் கூர்ந்து கவனியுங்கள்.

இப்போது பேசுகிறார்களே, இவைதான் உங்களைப் பற்றிய கலப்படமற்ற உண்மையான விமர்சனங்கள்.

ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சரி, அவனுக்கான அஞ்சலி கூட ஒரே நிமிடம்தான். இந்த நேரத்திற்குள் அவன் நினைக்கப்பட்டு இருந்தாலும் மறுநிமிடமே மறக்கப்பட்டுவிடுகிறான்.

இந்த ஒரு நிமிட விமர்சனம் அல்லது ஒரு நிமிடச் சிந்தனை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது. இதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்த விமர்சனம்தான் இனி மேற்கொள்ள இருக்கும் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப்போகிறது.

நல்ல மனுஷன்தான். ஆனா புள்ளைகளுக்கு ஒண்ணும் வழி பண்ணாமப் போய்ட்டாரே. பெரிசாப் பேசினாரு. ஆனா தன்னோட உடம்பைப் பாதுகாக்காம விட்டுட்டாரு. என்றோ, இனிமே இந்தக் குடும்பம் நல்லா முன்னுக்கு வந்துடும் என்று ஆரம்பித்து ஏகமாய் விமர்சனம் செய்ய அனுமதித்து விடக்கூடாது.
நாம் எப்படியெல்லாம் பாராட்டப்படவேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை அடைவதற்கு என்ன வழி என்று இந்த நிமிடமே நாம் தீர்மானித்துவிட்டால்கூட இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நம்மால் ஈடுகட்டிவிட முடியும்.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருப்பினும், அது துடைத்து எடுக்கப்பட்ட வாழ்க்கையாக நம் புதுவாழ்க்கை அமைய இந்த நிமிடத் தீர்மானம் உங்களுக்கு உதவப் போகிறது.
Kumudam

கருத்துகள் இல்லை: