இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. பல வருடங்களுக்கு வெளிவரப்போகும் கௌபாய் படம் என்பதோடு பிரபல நடிக-நடிகையர் பட்டாளமே அவரவர் பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர் என்கிறார் சிம்புதேவன். லாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா, லட்சுமிராய், எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மனோரமா மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாலக்காட்டில் சூட்டிங் தொடங்கி, அம்பாசமுத்திரத்தில் பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பு சேலத்தில் பிரமாண்ட செட்டில் வரும் ஏழாம் தேதி துவங்க இருக்கிறது. படப்பிடிப்பில் லாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா, லட்சுமிராய், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சிம்பு தேவனின் அடுத்த படம், தான் வரைந்த கார்ட்டூனை மையமாகக்கொண்டது என்று கூறுகிறார்.
முதல்வர் கருணாநிதியின் சரித்திர நாவல்களில் ஒன்று "பொன்னர் சங்கர்". இதை நடிகர் தியாகராஜனின் கடின முயற்சிக்குப்பின் திரைப்படமாக்க முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். இதில் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். தியாகராஜனின் பழைய படமான 'மலையூர் மம்பட்டியான்' பிரசாந்த் நடிக்க ரீமேக் ஆகிறது. மலையூர் மம்பட்டியான் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி கலைஞரின் "பொன்னர் சங்கர்" திரைப்படத் துவக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். முதல்வரின் சரித்திர நாவல்களில் திரைப்படமாகும் இரண்டாவது படம் "பொன்னர் சங்கர்". முதல்படம் உளியின் ஓசை கடந்த வருடம் வெளியானது என்பது நினைவிருக்கலாம். பொன்னர் சங்கர் திரைப்படத்தில் பிரசாந்துக்கு இரு வேடங்கள். அதற்காக உடம்பை மிகவும் 'ஸ்லிம்' ஆக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக