வியாழன், 2 ஜூலை, 2009

2009-07-02



More than a Blog Aggregator

by kavithamuralidharan
A


More than a Blog Aggregator

by kavithamuralidharan
A
நேற்று காலை 6.30 மணிக்கு கத்தார் கடல் பகுதியில் 35 பேருடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒண்று தோஹா கால்வாய் அருகே கவிழ்ந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 16 பேரும் பலியானார்கள். உடனடியாக முடுக்கிவிடப்பட்ட மீட்பு பணியில் 5 பேர் உயிருடன் மீட்க்க்கப்பட்டனர்.. இதில் பாலகிருஷ்னன், ஜெய்சன், அப்புராவ் ஆகிய 3 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

மற்ற இருவரில் ஒருவர் இந்தோநேசியாவையும் மற்றவர் பிலிப்பைன்ஸையும் சேர்ந்தவர். கடற்படை உள்ளிட்ட பல்வேறு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.மீட்கப்பட்ட 5 பேரை தவிர அனைவரும் உயிரிலந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

விபத்து குறித்து இந்தியத் தூதர் தீபா கோபாலன் வாத்வா கூறுகையில், மொத்தம் 19 இந்தியர்கள் கப்பலில் இருந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 16 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றார்.

நண்றி : Gulf-Times, Thatstamil.
சிங்கப்பூரை சேர்ந்த பதிவர் செங்கோணங்களும் (அட எம்முட்டு நாள் தான் வட்டமா இருப்பாங்க) தமிழ்வெளி இணைய திரட்டியும் சேர்ந்து புதுசா ஒரு போட்டி வெச்சி இருக்காங்க.. அதுல நீங்க கருத்தாய்வு (அது என்ன ஏதுன்னு அங்கேயே கேட்டு தெரிஞ்சிகோங்க) செய்து அதுல நீங்க வெற்றி பெற்றால் உங்களை சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போறாங்களாம்பா.. இதுக்கு மேல விவரம் தெரிய இங்கன கொட்டுங்க சே சுட்டுங்க..வழக்கம் போல சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு சொல்லிட்டு சங்கத்தை கலைப்பது..

சந்தோஷங்களுடன்
உங்க சந்தோஷ்..


இன்றைய ஆனந்த விகடன் 50ம் பக்கம் வந்த கதை நன்றாக இருப்பதாக ஒருவர் என்னை அலைபேசியில் அழைத்துச் சொன்னவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. அவர் அப்படிச் சொல்லக்கூடியவர் அல்ல. மணிரத்தினமே இவரைப் பார்த்து தான் வசனங்கள் எழுதுகிறாரோ என்று நினைக்க வைக்கும் அளவிற்குத்தான் பேசுவார். நான்கு எழுத்தில் கூட சொல்லக்கூடாது. 'பே' தான். அவ்வளவு சுருக்கமாக பேசுவார்.அவரே அழைத்து சொன்னது மிகவும் மகிழ்வாக இருந்தது. அவர் யார்? சொல்கிறேன்..

சிறுகதைப் போட்டி.. இந்தக் கவிதையை ஆதாரமாகக் கொண்டு...

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்
இடமும், பணமும் என

எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போனதன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி.

ச.முத்துவேலின் இந்தக் கவிதை வரிகள் ஒரு மிகச்சிறந்த கதையை உள்ளடக்கியது என்று நினைத்த உயிரோடை வலைத்தளம் இதை ஏன் ஒரு சிறுகதை போட்டியாக அறிவிக்கக் கூடாது என்று நினைத்ததே இந்தப் போட்டிக்கான காரணம்.

உரையாடல் போட்டிக்கு அனல் பறக்கும் கதைகளை எழுதி, பதிவுலகம் படைப்புலகம் என காட்டியாகிவிட்டது. இதோ இன்னுமொரு தளம்.

மேலதிக விபரங்கள் இந்தச் சுட்டியில்...

கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 10ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

எழுதுங்கள்..அனுப்புங்கள்..வாழ்த்துக்கள்.

முதல் வரிகளில் சொன்ன அந்த தொலைபேசி நபர்... என் தந்தை.

..



இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை, 'சிறிலங்கா நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் ' எனும் கூறிக்கொண்டு உலக நாடுகள் யாவும் பாரத்துக் கொண்டிருந்தன எனும் கருத்தை, உலகளாவிய 'கொலுசியம்' என வர்ணித்து கருத்தப்படம் வரைந்துள்ளது Creative Truth எனும் இணையத்தளம்.

தொடர்ந்து வாசிக்க

கருத்துகள் இல்லை: