சனி, 4 ஜூலை, 2009

2009-07-04



More than a Blog Aggregator

by முனைவர்.இரா.குணசீலன்


'விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம் தற்படர்நதமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினள் என்ப நம் மாண் நலம் நயந்தே.'


குறுந்தொகை – 74.

தலைமக்கள் இருவரும் பிரிவில் வாடும் நிலையில் தோழி தலைவனின் குறையைத் தலைவி மறுக்காமல் ஏற்கும் வகையில் கூறுகிறாள்...

தலைவன் தலைவி மீது அருளின்றி இருந்தாலும் தோழி தலைவனைக் குறை கூறுவதைத் தலைவி விரும்புவதில்லை. அந்நிலையில் தலைவனின் சிறப்பினைத் தலைவி எடுத்துரைப்பாள்.

ஆனால் இங்கு தலைவனின் குறையைத் தோழி கூறுகிறாள். அதுவும் அதனைத் தலைவி மறுக்கமுடியாதவாறு கூறுகிறாள்..

சென்ற இடுகையில் மீனெறி தூண்டிலார் பற்றிப் பார்த்தோம். அதில் யானை வளைத்த மூங்கில், கவண்ஒலி கேட்டு யானை அஞ்சிக் கைவிட்டவுடன் நிமிரும். அது மீனெறி தூண்டில் போல இருக்கும் எனவும் உரைக்கப்பட்டது.

அது போலவே, இப்பாடலிலும்........

நெடுநாள் பிணித்த கட்டு அவிழ்த்துவிடப்பட்ட குதிரையானது துள்ளி எழும் எழுச்சியைப் போல வளைத்துப் பின் விட்டமையால் மூங்கில் மேலேழுந்து மேகத்தைத் தீண்டும். தன்மையுடைய மலைநாட்டின் தலைவன் என உரைக்கப்படுகிறது.


யாம் தன்னை நினைத்து மெலிதலை அறியாதவனாகவும், தானும் பசுவினால் விரும்பப்பட்ட ஏறு போல நமது அழகினை எண்ணி மெலிந்தனன் என்றாள் தோழி..

தலைமக்கள் இருவரும் ஒருவரை எண்ணி ஒருவர் என இருவரும் உடல் மெலிந்தனர். தலைவன் தலைவியை வரைந்து கொண்டு இந்நிலையை மாற்றலாம் என்பது தோழியின் எண்ணமாகும்.

மூங்கில் இரவில் தானே வளையும். பகலில் வளைத்தாலும் நிமிரும் அதுபோல தலைவன் இரவுக்குறியில் தடையின்றி சந்திக்கிறான். ஆனால் பகற்குறியில் கிடைத்தற்கு அரியனாகிறான்.


நெடுநாள் கட்டப்பட்ட குதிரை கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு விரைவாகச் செல்லுமோ, அதுபோல மூங்கிலின் நிமிர்தல் இருந்தது என்று மூங்கிலின் விசைத்து எழுதலுக்கு குதிரையின் துள்ளிச் செல்லுதல் உரைக்கப்பட்டது. இவ்வுவமை மிகவும் பொருத்தமாக அமைந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.

விட்ட குதிரை என்ற தொடரின் சிறப்பு கருதியே இப்பாடலைப் பாடிய புலவருக்கு " விட்ட குதிரையார் " எனப் பெயரிட்டனர்.

இப்பாடலில் விட்ட குதிரை என்பது தலைவனின் பண்புநலனையும் குறிப்பதாக அமைகிறது.
விட்ட – என்ற சொல் பொருளுக்கும் கூட்டி உரைக்கப்படுகிறது. இயல்பாகவே தலைவன் நிமிர்ந்து நிற்கும் தலைமைப் பண்பு உடையவன்.ள ஆயினும் நலம் நயந்து தலைவிக்காக வந்தனன் எனப் பொருளுடனும் இயைபுற வந்துள்ளது.


இப்பாடல் வழி தலைமக்களின் பிரிவால் இருவரும் உடல் மெலிந்தமையும், தலைவியை விரைந்து வரைந்து கொள்ளாதது தலைவனின் குறையென்றும் தோழியால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விட்ட குதிரை என்னும் உவமையால் இப்பாடலின் ஆசிரியர் பெயர் பெற்றமையும் அறியமுடிகிறது.
முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.
அண்டங்காக்கா தொண்டைக்காரிகளுக்கு மட்டுமல்ல, அண்டங்காக்கா தொண்டைக்காரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் டைரக்டர்கள்! ஒரு சைஸ்சா ஐஸ் வைக்கிற மெத்தர்டுதான் இது என்றாலும், விக்ரம் மாதிரி ஹீரோக்கள் காட்டில் ஒரே பாராட்டு மழை அடிக்கிறது. எல்லாம் கந்தசாமி படத்தின் கான மழையை பாராட்டிதான்! இப்போது போலவே இனிவரும் தனது படங்களில் ஒரு பாடலாவது பாடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சீயான்.

நேரில் பார்த்துக் கொண்டால் ஒரு ஹலோ சொல்வதோடு நிறுத்திக் கொள்வதும், அதிகபட்சமாக இரண்டு மூன்று வார்த்தைகள் பேசுவதுமாக ஆகிவிட்டது சீயான்-தல இடையிலான நட்பு. இருவரும் ஒரே படத்தில் நடித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் தலயை முந்திக் கொண்டு ஓட்டம் போட்டார் சீயான். அந்த கால கட்டங்களில் பல்லை கடிப்பதும், நகத்தை துப்புவதுமாக காணப்பட்டார் தல. இருந்த நூலிழை நட்பும் அறுந்து போனது. அதெல்லாம் சரியாகி இயல்பு நிலைக்கு தல திரும்பியது இப்போதுதான். அதுவும் மீண்டும் ஹிட் கொடுக்க துவங்கியதற்கு பிறகு. சரி, பழச கிண்டி பலகாரம் பொறிக்கறதை விட்டுட்டு மேட்டருக்கு வா என்கிறீர்களா? வந்திருவோம்.

கந்தசாமி படத்தில் விக்ரம் நான்கு பாடல்கள் பாடியதை தொடர்ந்து, அசல் படத்தில் அஜீத்தை பாட வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சரண். கேக்கறதோட சரி. முணுமுணுக்கிற வழக்கம் கூட இல்லாத அஜீத், எதுக்கு சார் வம்பு? என்கிறாராம். தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் சரண்.

எறும்பு ஊற கல்லு தேயுதா? அல்லது எறும்போட காலு தேயுதாங்கிறது போக போகதான் தெரியும்!


More than a Blog Aggregator

by சி.கருணாகரசு
துளிகலெல்லாம் ஒன்றாகி
நீரோட்டமாய் உருபெற்று
உலக வெப்பம் தணித்து
உழவர் ஏக்கம் போக்கி
பாதையெல்லாம் ஈரமாக்கி
பயிரையெல்லாம் இதமாக்கி
தாக‌ம் தீர்த்து,
த‌ர‌ணிச்செழிக்க‌... ... ...
வ‌ளைநது...
நெளிந்து...
ச‌ல‌ச‌ல‌த்து...
பாய்ந்து...
தேங்கி...
நிர‌ப்பி...
விழுந்து...
வ‌ழிந்து...
ந‌க‌ர்ந்து...
த‌ன் பாதை முழுதும்
வ‌ச‌ந்த‌த்தை
விதைத்து செல்லும‌தில்...
உன‌க்கும் பாட‌மிருக்கு
உற்றுக்கவனி மனிதா.
அந்த
மெல்லிய நீரோட்டத்தின்
மெய்சிலிர்க்கும் பயனணத்தை!
"தமிழ்த் தேசியம்" என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றை, எதிர்வரும் 12.07.09 (ஞாயிறு) அன்று திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  நடத்தவிருக்கிறது. தமிழீழத்தில் சிங்கள - இந்திய இராணுவங்கள் கூட்டாக நடத்திய தமிழ் இன அழிப்புப் போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு : சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் சுன‌னுந் ந‌ஸாயீ (பாக‌ம் ஒன்று) வெளியீட்டு விழா 04 ஜுலை 2009 ச‌னிக்கிழ‌மை மாலை 5 ம‌ணிக்கு ஃபைஸ் ம‌ஹாலில் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து. த‌லைசிற‌ந்த‌ மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளும், சான்றோர் பெரும‌க்க‌ளும் சிற‌ப்புரை ஆற்ற‌ இருக்கின்ற‌ன‌ர். இவ்விழாவில் அனைவ‌ரும் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளை குர்ஆன் -  ஹ‌தீஸ் த‌மிழாக்க‌ப் ப‌ணியில் ஒரு முன்னோடி நிறுவ‌ன‌மாகும். முதுவை ஹிதாயத்  

கருத்துகள் இல்லை: