என்னருகே நீ இருந்தும் 4ம் பகுதி
இதைப் போன்ற கேள்விகள் எங்களைப் பார்க்கும் பலரிடமிருந்தும் வந்தன. நான் யோசிக்க ஆரம்பித்தேன் இதுவரை யோசித்திராத புது கோணத்தில். இந்நாட்களில் எக்ஸாம் ஆரம்பித்ததால் அவள் படிப்பில் பிஸி ஆகிவிட்டாள். நாங்கள் ஒன்றாய் கழிக்கும் நேரம் மிகக் குறைந்தது.அவளை பல வருடங்களாய்காணாத போது இருந்த வேதனையை விடக் கடும்வேதனையை உணர்ந்தேன்.இனியொரு முறை அவளைப் பிரிய நேரிட்டால், அது உயிர் பிரியும் வேதனையைத் தான் தரும் என்பது நிதர்சனமாய்த் தெரிந்தது
பல நாள் யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தேன்.
அம்முடிவை அவளிடம் வெளிப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என அனுமானிக்க முடியவில்லை..சொன்னால் கோபப்படுவாளோ.. ஏத்துக்குவாளோ..கோபப்பட்டால் எப்படி சமாளிப்பது..அவள் முகத்தில் எப்படி விழிப்பது?
எண்ண அலைகள் எப்போதும் என்னைச் சூழ்ந்தன.
அவள் தேர்வுகள் முடிந்த நாளும் வந்தது.அவள் வீடு நோக்கி விரைந்தேன்.அவளுக்கு முன் வீட்டில் இருந்தேன்.
அவள் அம்மா கதவைத் திறந்தாங்க.
ஆன்ட்டி எப்படி இருக்கீங்க?
ம்ம்.. நல்லா இருக்கேன். நீ எப்படி கண்ணு இருக்கே?வீட்டு பக்கமே ஆளக் காணோம்?
கொஞ்சம் வேலை ஆன்ட்டி.அதான் இப்போ வந்துட்டேனே.ஜனனி இன்னும் வரலியா?
இன்னும் இல்லை..பஸ் எல்லாம் ரொம்ப ரஷ் ஆ இருக்கு..லேட்டா கிளம்பி வர்றேன்னு இப்போதான் போன் பண்ணினா..
ஓ..அப்படியா..சரி ஆன்ட்டி.. நான் போய் அவளை கூட்டிட்டு வந்துடறேன்..எங்க இருக்கா?
அவ பிரண்ட் கவிதா வீட்ல.. லேட் ஆகுது.. நீ சாப்பிடு..அப்புறம் போலாம்..
இல்லை ஆன்ட்டி..அவளையும் போய் கூட்டிட்டு வந்துடறேன் ..சேர்ந்து சாப்டுக்கலாம்
நீங்க அவளுக்கு போன் பண்ணி காலேஜ் என்ட்ரன்ஸ்க்கு வரச் சொல்லிடுங்க
சரி..போய்ட்டு வா..
கிளம்பி போய் அவளை அழைத்து வந்து சாப்பிட்டு எவ்வளவோ கதைகள் பேசியும் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் தைரியம் இல்லாமலே வீட்டைவிட்டு கிளம்பினேன்.
கிளம்பும்போது..
ஏய்..மயிலு..இன்னிக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா?
ஏன் கேக்கறே?
சொல்லும்மா..ஃப்ரீயா..இல்லையா?
ஃப்ரீதான்..
சரி..அப்போ ஈவினிங் ரெடியா இரு..அம்மா பர்த்டேக்கு ஒரு சாரி வாங்கணும்.வந்து செலக்ட் பண்ணுவியாம்..
ஓ..அடுத்த வாரம் ..ஆன்ட்டி பர்த்டே வருதில்லே...மறந்திட்டேன்..சரி போலாம்..எப்போ வருவே?
Around 6...அதுக்குமேல லேட்டா போனா அங்கிள் கிட்ட உதைதான் விழும்...
ஒகே..I will be waiting for you
அப்போது தெரியவில்லை எனக்கு என் எண்ணத்தை வெளிப்படுத்தும் தைரியம் ஈவினிங் வரும் என்று
((இந்த பகுதி ஒரு மீள் பதிவு))
(தொடரும்)
.

90 களின் ஆரம்பம். நான் ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்ததாக ஞாபகம். எங்கள் வீட்டில் அப்போது டிவி கிடையாது. பக்கத்து வீட்டில்தான் போய் பார்க்க வேண்டும். ஒரு முறை ஆர்வமாக டிவி பார்க்க பக்கத்து வீட்டுக்கு போனால், நான் வருவதைப் பார்த்து அந்த அக்கா கதவை வேகமாக சாத்தி விட்டார். அம்மா அதைப் பார்த்து விட எனக்கு நல்ல திட்டு. டிவி பார்க்க முடியாத ஆத்திரம் ஒரு பக்கம், அம்மாவிடம் திட்டு வாங்கியது ஒரு பக்கம் என்று உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது ஆறுதலாக என் தோளின் மீது விழுந்தன பிஞ்சு விரல்கள். "அழாதண்ணே.. நாம அம்மாக்கிட்ட சொல்லி புது டிவி வாங்கிக்கலாம்..". ஐந்தே வயதான என் தங்கை கண்களில் நீரோடு என் அருகில் நின்று கொண்டிருந்தாள்.
எனக்குப் பின் ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் என் தங்கை. எங்கள் வீட்டின் ஒரே பெண் பிள்ளை என்பதால் பயங்கரச் செல்லம். எந்தப் பொருளை வாங்கினாலும் முதலில் எனக்கு வாங்கி விட்டுத்தான் அவளுக்கு வாங்கிக் கொள்ளுவாள். நான் அவளிடம் காட்டும் பாசத்தை விட பத்து மடங்கு என் மீது அன்பை பொழிபவள். பள்ளியில் சேரும்போது கூட அண்ணனோடுதான் போவேன் என்று எனது பள்ளியிலேதான் சேர்ந்தாள். கைகளைப் பிடித்து அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு போனது நேற்று நடந்தது போல இருக்கிறது. இன்றைக்கு.. அவளுக்கு கல்யாணம். காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது?
எத்தனையோ திருமணங்களுக்கு சென்று இருக்கிறேன். நண்பர்களின் திருமணத்தில் முதல் ஆளாய் நின்று வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால் என் வீட்டில் ஒரு விசேஷம் என்பது இதுதான் முதல் தடவை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறேன். மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த தருணத்தை என்னுடைய நண்பர்கள் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த ஆறு மாதங்களில் இணையத்தில் எனக்கு கிடைத்த நண்பர்கள்... நீங்களும் என் தங்கையை வந்து வாழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
நாள்: 24 - 06 - 09 புதன்கிழமை
முகூர்த்த நேரம்: காலை 9:45 முதல் 10:45 வரை
மணமக்கள்: நா.நாகராணி
இர.தமிழ்க்குமரன்
இடம்: அன்னை வேளாங்கண்ணி திருமண மாளிகை,
மேலப்பொன்னகரம் ஏழாவது தெரு,
மதுரை.
இல்லற வாழ்வை ஆரம்பிக்கும் என் தங்கைக்கு நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதம் கண்டிப்பாக வேண்டும். நீங்கள் அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
பிரியமுடன்,
மா.கார்த்திகைப் பாண்டியன்.

Missile Man of India , டாக்டர்.அப்துல் கலாமைச் சந்திக்க அருமையான வாய்ப்பு. Times Avenue வில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திரு,கலாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை குறித்து வழிகாட்ட இருக்கிறார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
Chinmaya Heritage Centre,
Harrington Road, Chetpet,
Chennai.
நாள் : 22.06.2009
பதிவு செய்துகொள்ள 58888 என்ற எண்ணுக்கு toich (your name) என SMS செய்யவும்.
அறிவே சக்தி என்பதை மையமாகக் கொண்ட திரு.கலாமின் உரை மாணவர்களுக்காக. 21 ஆம் நூற்றாண்டு மாணவர்கள் தங்களின் துறைகளில் சிறக்க வேண்டும் என்பதே அவர் கனவு. மேலும், தனது முதன்மைக் கனவான இந்தியா 2020 குறித்தும் உரை நிகழ்த்துவார்.
இன்னும் பல பிரபலங்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த உள்ளனர். நமக்குப் பிடித்த பகுதிகளில் கலந்து கொள்ளலாம். (நல்லவேளையாக அனைத்தையும் கேட்கவேண்டியதில்லை.) SMS அனுப்பிப் பதிவுசெய்வது அவசியம். முதலில் அனுப்புபவர்களுக்கே முன்னுரிமை. விரைந்து செயலாற்றுங்கள்.

முதலில் பாகிஸ்தான் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 2009 T20 கிரிக்கெட் சாம்பியன். தேசம் சிறிது சிறிதாய்ச் சிதறிக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இது மகத்தான தருணம். முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் , " பாகிஸ்தானைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். எந்த அணியையும் வெல்ல வல்லது" என்றார். அவர் வாக்கு அப்படியே பலித்திருக்கிறது.
இன்று நேற்றல்ல. அவர்கள் விளையாடத் துவங்கியதிலிருந்தே கணிக்க முடியாத அணி என்ற பெயர் பெற்றவர்கள். இன்றுவரை அப்படித்தான். நண்பர்கள் பலரும் இலங்கை வெல்லும் ( வெல்ல வேண்டும் ) என்றார்கள். முடிவு தலைகீழாக. அந்த நாட்டுக் காயங்களுக்கு சிறு மருந்தாக இந்த வெற்றி அமையலாம். வெற்றிக் கொண்டாட்டத்தில் தீவிரவாதத்தை வெல்வது பற்றியும் அவர்கள் யோசித்தல் அவசியம். மீண்டும் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக