வியாழன், 2 ஜூலை, 2009

2009-07-02



More than a Blog Aggregator

by தருமி
*

*
இப்போதான் செமி பைனல்ஸ் - பெண்கள் முடிந்தது, முதல் செமி செரீனாவுக்கும் ரஷ்யப் பெண் டெமென்டிவாவுக்கும் நடுவில் நடந்தது. செரீனா வெல்லவேண்டுமென்று நினைத்தாலும் ஆடும் ஆட்டம் இருக்கே .. அட .. சாமி .. வென்றபோது கோபம்தான் வந்தது. இவ்வளவு மோசமாக செரீனா விளையாடி என்றும் பார்த்ததில்லை. முதல் செட் பார்க்கவில்லை. கடைசி இரு செட்களிலும் ஆடிய ஆட்டம் இருக்கிறதே .. நானே நாலைந்து 'சிக்ஸ்ர்' பார்த்தேன். மகா மட்டமான ஆட்டம். ஏதோ கடைசி மூன்று ஆட்டத்தில் ஆடிய இரண்டு மூன்று 'ஷாட்'கள் ஒப்பேத்தியது. 6-7;7-5;8-6 என்று வென்றாயிற்று. ஆனால் ஆடிய ஆட்டத்துக்கு இதுவே பெருசுதான்!

அடுத்து சாபினாவோடு வீனஸ் ஆடிய ஆட்டம். ஆகா .. என்ன அழகு! 6-1; 6-0 ஸ்கோர். வீனஸ் - வந்தார்; ஆடினார்; வென்றார். அவ்வளவே ... மிக அழகான ஆட்டம். சாபினாவைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாகவே இருந்தது.

அடுத்து இறுதி ஆட்டத்தில் அக்காவும் தங்கையும். செமியில் பார்த்த அளவில் அக்கா நிச்சயமாக 6=0; 6-0-ல் வெல்ல வேண்டும். போனால் போகுது 6-2; 6-3-ல் வீனஸ் வெல்லட்டும். வீனஸுக்கு வாழ்த்துக்களுடன் ... காத்திருப்போம்.

ஆண்கள் ஆட்டம். Haas-யை பெடரர் வென்று விடுவார். இறுதிப் போட்டிக்கு Andy Murray vs Andy Roddick. என் கணிப்பு & ஆசை - Roddick வெல்லணும். ஆனால், இறுதி பெடரருக்குத்தான். I miss you, Rafa! 15வது வெற்றிக் கோப்பை வெல்லும் முதல் வீரரைப் பார்ப்போம்.



*
ஒரு முறை பேச்சு வழக்கில், நான் 'கிழக்கு பதிப்பகம்' வெளியீடு புத்தகங்களை தான் அதிகம் படிப்பதாக என் மனைவி குற்றம் சுமத்தினாள். நான் 'இல்லை' என்று நிருப்பிக்க கேபிள் சங்கர் ஸ்டையில் கடந்த ஆறு மாதம் (ஜனவரி முதல் ஜூன் வரை) படித்த புத்தகங்களை பட்டியலிட்டேன்.

கிழக்கு பதிப்பகம்

1.அணு : அதிசயம் - அற்புதம் - அபாயம் - என்.ராமதுரை
2.ஆயில் ரேகை - பா.ராகவன்
3.ஸ்...! - முகில்
4.இந்திய பிரிவினை - மருதன்
5.கடல் புரத்தில் - வண்ணநிலவன்
6.அமெரிக்காவில் கிச்சா - 'கிரேஸி' மோகன்
7.சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - யுவ கிருஷ்ணா
8.சிரிப்பு டாக்டர் - முத்துராமன்
9.கேங்டாக்கில் வந்த கஷ்டம் - சத்யஜித் ரே
10ஓபாமா பராக் - ஆர்.முத்துகுமார்
11.1857: சிப்பாய் புரட்சி - உமா சம்பத்.
12.இரா.முருகன் கதைகள் - இரா.முருகன்
13. கிச்சு கிச்சு - ஜே.எஸ்.ராகவன்
14.அறிந்தும் அறியாமலும் – ஞாநி



Prodigy & Minimax

15.செவ்வாய் கிரகம் - என்.ராமதுரை
16.ஜப்பான் -எஸ்.சந்திரமௌலி
17.சீனப்புரட்சி - மருதன்
18.ஐன்ஸ்டைன் - பத்ரி சேஷாத்ரி
19.கன்ஃபூஷியஸ் - என்.ராஜேஷ்வர்
20.அம்பானிகள் பிரிந்த கதை - என்.சொக்கன்
21.தே.மு.தி.க - யுவ கிருஷ்ணா

National Book Trust

22.காயம் பட்ட காகத்தின் கதை - ரமேஷ் பேடி
23.கபீர் - பாரஸ்நாத் திவாரி
24.தண்ணீர்
25.கடற்புறத்து கிராமம் - அனிதா தேசாய்
26.பசித்தவர்கள் - தேவனூரு மாகதேவ்

உயிர்மை பதிப்பகம்

27.என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
28.நிழல் வெளிக்கதைகள் - ஜெயமோகன்

29. தீராக்காதலி - சாரு நிவேதிதா
30. தப்புத் தாளங்கள் - சாரு நிவேதிதா

தி.க வெளியீடு

31.சேது சமுத்திர திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர்
32.பா.ஜ.க.வும் இந்துவாவும் - கி.வீரமணி
33.வேலுபிரபாகரன் கதைகள் – வேலுபிரபாகரன்

மற்ற பதிப்பகங்கள்

34.கடல் புறா ( பாகம் 1,2 & 3) - சாண்டில்யன்
35.எனது சுயசரிதை - சிவாஜி கணேசன்
36.கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா

37.ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
38.இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி - ஜெகசுதா
39.வையத்தலைமை கொள் - சேவலயா முரளிரதன்
40.ரங்கூன் பெரியப்பா - தேவன்
41.கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
42.தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
43.கைதி - லியோ டால்ஸ்ராய்

44.தமிழுக்கு இல்லை தேய்மானம் (கவிதை)- இனியவன் G. ஸ்ரீதர்
45.இனிய கீதங்கள் (கவிதை) - கார்முகிலோன்
46.இயற்கை வாழ்வு - நளினி சிவகுமார்
47.Five Point Someone - Chetan Bhagat
48.White tiger - Aravind Adiga

"பாத்தியா ! கிழக்கு புத்தகம் தவிர மத்த பதிப்பகங்கள் வெளியீட்ட புத்தகமும் படித்திருக்கிறேன்" என்றேன்.

" இதே மாதிரி...! இந்த ஆறு மாசத்துல எனக்கு வாங்கி தந்தத சொல்லுங்க... பார்ப்போம் ? " என்றாள்.

பொல்ட்டில் இருப்பது இரவல் வாங்கி படித்த புத்தகங்கள். மற்ற எல்லாம் புத்தகங்களும் நான் காசு கொடுத்து வாங்கியது. புத்தகத்திற்காக இந்த வருடம் ஒதுக்கிய பட்ஜெட் தாண்டி புத்தகம் வாங்குவதால் இந்த கேள்வி என்னை கேட்டாள்.

"இது உனக்கு தேவையா" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

"இத தான் வாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ.."

வைத்தியர் சத்தியமூர்த்தி உட்பட சிலர், விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பெருமளவில் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளனர் என குற்றப்புலனாய்வு துறை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த வைத்தியசாலையில் இருந்து சுகாதார பணியாளர்களுடன், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று, விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் எனவும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் சிகிச்சை அளித்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இதனை செவிமடுத்த நீதவான், அந்நபர்களை பார்வையிட்டதுடன்,

தொடர்ந்து வாசிக்க...


More than a Blog Aggregator

by முனைவர் சே.கல்பனா


மதுரை பாத்திமாகல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஒய்வு பெற்று இந்திய தலைநகரான டெல்லியில் வசித்து வருபவர் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள். கடந்த சில மாதங்களாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப்பெற்றேன். அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்த குற்றமும் தண்டனையும் என்னும் நூலை இந்த ஆண்டு புத்தக்கணகாட்சியில் வாங்கியிருந்தேன். அந்தூலே அவர்களை அறிய காரணமாக இருந்தது. பிறகு அவர்களுடன் இணையத்தில் மட்டுமே உரையாடிக்கொண்டு இருந்தேன் . கடந்த மாதம் அவர்கள் நெறிகாட்டுதலில் முனைவர்பட்ட அய்வு மேற்கொண்டு ,முடித்த பெண்ணுக்கு வாய்மொழித் தேர்வுக்கு மதுரை வருவதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள்.

அவர்களை சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.அவர்கள் மதுரை வந்தவுடன்,சென்று சந்தித்தேன்.நான் வருகிறேன் என்று கூறிய நாளுக்கு முதல் நாளே சென்றேன்.அவர்கள் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு , என்னோடு நேரத்தை செலவிட்டார்கள்.பழகுவதற்று மிக எளிமையனவராக,இனிமையானவாராக இருந்தார்கள். அவர் அவர்களுடை குடும்ப நண்பர்கள் வீட்டில் தான் தங்கிஇருந்தார்.அவர்களோடு 30 ஆண்டுகால பழக்கமாம்.அவர்களும் மிக இனிமையானவர்களாக இருந்தார்கள்.

இலக்கியத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம். இன்றைய பெண்ணியம் பற்றி வினாவினேன் . இன்றைய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் ஏற்றக்கொள்ளும் படி இல்லை என்றார்.காரணம் அவர்கள் பெண்ணுரிமை ,பெண்ணியம் என்பதை தவறாக புரிந்துகொண்டு,இலைமறை காயாக இருக்கவேண்டிய செய்திகளை எல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றார்கள் எனச் சாடினார்.

அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது பல ஆண்டுக்ள அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் வந்தாள். அந்த பெண் டெல்லியில் சென்று அங்கு வேலை செய்துள்ளாள்,அந்த பெண்ணுக்கு வேண்டிய அனைத்தும் செய்துள்ளார்கள்,அந்த பெண்ணைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தராகவே நினைத்துள்ளனர்.ஆனால் அந்த பெண் வீட்டில் உள்ள ஆனைவர் மான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தியுள்ளாள்.ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டாள் இறந்துவிடுவேன் என்று மிரட்டியும் இருக்கின்றாள். அவர்கள் பயந்து போய் ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.இப்பொழுது ஏதாவது உதவிசெய்யுங்கள் என்று வந்து நிற்கின்றாள்.சுசீலாஅம்மாவும் முடிந்த உதவியைச் செய்கின்றேன் என்று அனுப்பி வைத்தார்கள்.

பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னும் நேரத்தைப் பொன்போல் மதித்து, தேனீ போல சுறுசுறுப்பாய் இயங்கி வருகின்றார்கள்.இணையத்திலும் எழுதிவருகிறார்கள்

கருத்துகள் இல்லை: