வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினரை அழைக்காததால் அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழ்சாத்தமங்கலம், சிவராந்தகம் காலனி, மங்கலம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை, கழிப்பிடங்கள் மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதற்கு பஞ்சாயத்து தலைவர் நடராஜன் தலைமை தாங்க, ஆணையர் அனிச்சன் முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் மங்கலம் தொகுதி காங்கிரஸ் தலைவர் பலராமன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணிகளுக்கான துவக்க விழா நடத்தப்படும்போது அழைப்பு விடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற பிரச்னைகளுக்காக நடத்தப்பட்ட மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.
வில்லியனூர் தொகுதியில் நடைபெற்ற விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்காதது குறித்து பஞ்சாயத்து தலைவர் நடராஜன் கூறுகையில், வில்லியனூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்புகள் விடுத்திருந்த போதிலும் அவர் கலந்து கொள்வதில்லை என்பதால்தான் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவில்லையென்றார்.
புதுவையில் மீனவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக நலவாரியம் அமைத்து அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று நெய்தல் படைப்பாளி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நெய்தல் படைப்பாளி இயக்கம் மற்றும் விளிம்பு நிலை மக்கள் குரல் அமைப்பின் நிர்வாகிகள் மாலதி மைத்ரி, மெல்வின் ஆகியோர், வம்பாகீரபாளையத்தில் சமீபத்தில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை ஒரு குறிப்பிட்ட சம்பவமாக பார்க்காமல் இதற்கான சமூக அரசியல், பொருளாதார பின்னணி போன்ற காரணங்களை ஆராய்ந்து அவர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டுமென்றும், கோவில் நிர்வாக காரியங்களை முன்னிறுத்தி மீனவர் குழுக்களிடையே நிலவிடும் நிதி முறைகேடுகளையும், அதிகார போட்டிகளையும் தவிர்த்திட கோவில்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டுமென்றனர்.
புதுவையில் உள்ள மீன் மார்க்கெட்டினை நவீனப்படுத்தி மீனுக்கான குறைந்தபட்ச விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற நெய்தல் படைப்பாளி இயக்க நிர்வாகிகள், பெண்களின் மீன் தொழில் வாய்ப்பையும் தற்சார்பையும் உறுதி செய்யும் வகையில் ஆண்களின் தலையீடின்றி மீன் மார்க்கெட்டை நிர்வாகம் செய்ய சட்டவழிவகை ஏற்படுத்த வேண்டுமென்றும், புதுவை துறைமுகம் அருகில் வம்பாகீரபாளைய கிராமத்திற்கு புதிய விசாலமான சுனாமி குடியிருப்புகளை கட்டி தர வேண்டுமென்று வலியுறுத்தினர்.
அரசின் மீனவர் நலத்திட்டங்களின் தகவல்களை மீனவர்கள் அனைவரும் உரிய காலத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வித் தொகையுடன் சிறப்பு கல்வி ஊக்கத்தொகையினை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க வேண்டுமென்றனர்.
காவல் துறை மற்றும் பிற அரசு துறைகளில் மீனவர்களுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்திய நெய்தல் படைப்பாளிகள் இயக்கத்தினர், மீனவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக நல வாரியம் அமைத்து அதில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்றனர்.

புதுவையில் மணி நேர விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று கல்லூரி பேராசிரியர்கள் நலச்சங்க தலைவர் செல்வராஜன் வலியுறுத்தி உள்ளார்.
புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவைக, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் கடந்த 1998ம் ஆண்டு முதல் அடாக் முறையில் பணியாற்றி வந்த 121 பேராசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை பலகட்ட முயற்சிகளினால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேறியிருப்பதால், இதற்காக பாடுபட்ட புதுவை அரசுக்கு விழா நடத்த உள்ளோம் என்றார்.
பணி நிரந்தரம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்களையும் முன்தேதியிட்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்ற செல்வராஜன், விடுபட்டுபோன 12 பேராசிரியர்களுக்கும் பணி நிரந்தர ஆணை வழங்குவதுடன், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமல்படுத்த வேண்டுமென்றும், கல்லூரி பேராசிரியர்களை உயர்கல்வி துறை இயக்குனராக நியமிக்க வேண்டுமென்றார்.
பேராசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதுடன், மணிநேர விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றும், முதல்வர் விடுமுறையில் செல்லும்போது மூத்த பேராசிரியர்களுக்கு அந்த பொறுப்பினை வழங்க வேண்டுமென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக