வியாழன், 2 ஜூலை, 2009

2009-07-02

 

 

மும்பையின் மைய வணிகப் பகுதியை நகரின் பொதுமக்கள் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியுடன் இணைக்கும் வகையில் அரபிக் கடலின் குறுக்காக 4.7 கிலோ மீட்டர் நீளமான பாலம் ஒன்றை மும்பை நகர நிர்வாகம் திறந்துள்ளது.

8 வழி விரைவுப் பாதையை கொண்ட இந்த பாலம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பயணிகளின் பயண நேரத்தையும் குறைக்கும்.

அரச நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், மற்றும் உள்ளூர் வாசிகள் மீதான இதன் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கரிசனை ஆகியவை காரணமாக எழுந்த எதிர்ப்புக்களால், திட்டமிடப்பட்டதை விட கால தாமதமாக இந்த 300 மில்லிய டாலர்கள் பெறுமதியான பாலத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது.

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை இந்த பாலம் காண்பிப்பதாக அதனை வடிவமைத்தவர்கள் விபரிக்கின்றனர்.

ஆனால், முக்கியமான புதிய உட்கட்டமைப்பை விநியோககிப்பதில் எந்த அளவுக்கு அரசாங்க பணியாளர்கள் செயற்திறனற்று காணப்படுகிறார்கள் என்பதையே இதன் தாமதம் காண்பிப்பதாக, அதன் விமர்சகரகள் கூறுகிறார்கள்.

 

உறவினர்களைப் பார்க்க இலங்கை ராணுவம் அனுமதிக்காததால் முள் வேலியைத் தாண்டிச் சென்று பார்ப்பதற்காக பாதை அமைக்க முயன்ற இரு தமிழர்களை ராணுவத்தினர் மிருகத்தனமாக சுட்டுக் கொன்று விட்டனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இதனால் போர் முடிந்த பிறகும் கூட ஊர்களுக்குத் திரும்பி அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலை போலவே உள்ளது இந்த முகாம்கள். முள் வேலிகளால் இந்த முகாம்கள் சூழப்பட்டுள்ளன. ராணுவத்தினர் பாதுகாப்புக்கு மத்தியில் அடிமைகளைப் போல கிடக்கிறார்கள் தமிழ் மக்கள்.

குடும்பம் குடும்பமாக தங்க வைக்கப்படாமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் தமிழ் மக்கள்.

இந்த நிலையில் உறவினர்களைப் பார்க்க முடியாததால், முள் வேலியைத் தாண்டிச் செல்ல பாதை அமைத்ததற்காக 2 தமிழர்களை குருவி சுடுவது போல கொடூரமாகக் கொன்று குவித்துள்ளது ராணுவம்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதன் முகாமுக்கும், அனந்தக்குமாரசாமி முகாமுக்கும் இடையில் முள் வேலி வைத்து பிரித்துள்ளனர்,.

இரண்டு முகாம்களிலும் இருப்பவர்கள் மற்றைய முகாமில் உள்ள தமது குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்காக இந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைத்துப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இதைப் பார்த்த ராணுவம் முகாம்களில் உள்ளவர்களை எச்சரித்து பாதையையும் மூடி விட்டனர். ஆனால் அப்படியும் தமிழ் மக்கள் பாதையை திறந்து போய் வந்ததால், சிமென்ட் தூண்களை வைத்து இறுக்கமாக அதை அடைத்து விட்டனர்.

ஆனால் அதையும் தகர்த்து பாதை அமைத்து தமிழ் மக்கள் சென்று வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பாதை வழியாக செல்ல முயன்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அநியாயமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை ராணுவம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டது.

உறவினர்களைப் பார்ப்பதற்காக பாதையைப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு அப்பாவிகளை ராணுவம் இப்படி மிருகத்தனமாக கொன்று விட்டதால் இரு முகாம்களிலும் தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர்.

வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம். கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்?

தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு.

ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம்.

இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

நெஞ்சுக்குள் பெய்திடும் பேய் மழை?
பைட் மாஸ்டரிடம் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருந்த ராகவாலாரன்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடன அசைவுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்திருக்கிறார். நடன அசைவுகளிலும், பொதுவாகவே அவரது மேனரிசங்களில் ரஜினியின் ஸ்டைல்இருந்திருக்கிறது.

இதைக்கவனித்துவிட்ட ரஜினி ஷூட்டிங் முடிந்து காரில் கிளம்பும்போது லாரன்ஸிடம் நாளைக்கு வீட்டில் வந்து என்னைப்பாரு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
வீட்டுக்குப்போய் பார்த்ததும் உனக்கு திறமை இருக்கு..நல்ல எதிர்காலம் இருக்கு. அதை வீணடித்துக்கொள்ளாதே என்று நடனஇயக்குநரிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்.அதிலிருந்து அவர் நடன இயக்குநராகி, நடிகரும் ஆகிவிட்டார்.
எடுபிடியாக இருந்த தன்னை புகழ் ஏணியில் ஏத்திவிட்ட ரஜினியிடம் சொல்லிவிட்டுத்தான் இன்றைக்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்துவருகிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் லாரன்ஸ் தம்பி காதல்விவகாரம் ஏடாகூடாமாக இருக்க, கல்யாணமும் ஏடாகூடமாக ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறதாம். தனது ஒவ்வொரு அசைவையும் அக்கறையுடன் கவனித்து வரும் ரஜினியிடம் சொல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்று ரஜினிக்கு போன் போட்டாராம் லாரன்ஸ்.
ரஜினியிடம் தம்பியின் காதல், ரகசிய கல்யாணத்தை சொன்னதுமே அதனாலென்ன நான் வருகிறேன் எப்போ..எங்கே..என்று கேட்டாராம் ரஜினி. ஆனால் லாரன்ஸோ, ஸார்..நீங்க இந்த கல்யாணத்திற்கு வரனுமென்று உங்ககிட்ட சொல்லல..அதே நேரத்துல உங்ககிட்ட சொல்லாம இருக்கவும் முடியல. அதனாலதான் சொன்னேன்.
இது ரகசிய கல்யாணம்..கொஞ்சம் விவகாரமான காதல் கல்யாணம். அதனால் நீங்க வரவேண்டாம். உங்க இமேஜ் பாதிக்கும் என்று சொன்னாராம் லாரன்ஸ்.
'இட்ஸ் ஓகே' என்று ரஜினியும் போனை வைத்துவிட்டாராம்.
விஜய் தனது பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் பேட்டியின் மூலம் அதை உறுதிப்படுத்தினார்.


ஆனால், விஜய் தனது பிறந்த நாளன்று இலவச மருத்துவ முகாம், இலவச கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு விழா என்று ஏகப்பட்ட கண் துடைப்புகளுக்கு பிறகு மைக் பிடித்தார். அப்போது, ''எனது ரசிகர்கள் எல்லோரும் நான் கட்சி ஆரம்பிப்பதைவிரும்புகிறார்கள். அவர்கள் இப்போதே தொண்டர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் விருப்பத்தை நானும் ஏற்கிறேன்.
இப்போதைக்கு எனது ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக செயல்பட துவங்கும். நான் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவேன்(?), என்றெல்லாம் அள்ளிவிட்டவர், கடைசியில் ரஜினி பாணிக்கு வந்தார்.
எப்படி வருவேன் என்று தெரியும் ஆனால் எப்ப வருவேன் என்று தெரியாது என்பது மாதிரி.......அரசியல் கட்சி தொடங்குவேன். ஆனால் எப்போது என்று சொல்ல முடியாது என்று பேசினார்.
வருவேன் ஆனா வரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினிக்கு போட்டியாக வந்துட்டாரய்யா விஜய் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் தோ.. நானும் வந்துட்டேன் என்கிறார் அஜீத்.

என் வேளையை நான் பார்க்கிறேன்..உங்க வேளையை நீங்க பாருங்க...எதற்கு வந்து என்னைப் பார்க்கனுமென்று நிற்கிறீங்க என்று ரசிகர்களிடம் எரிந்துவிழும் அஜீத், தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்துவிட்டார். தல..உங்களுக்கு மட்டும் என்ன குறைச்சல். நாமளும் கட்சி ஆரம்பிக்கனும் என்று அடம்பிடிக்கிறார்களாம், இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே தங்களைரணமாக்கிக்கொள்ளும் ரசிகர்கள்.
அஜீத்தே இனி ரசிகர் மன்றத்தினரை நேரில் பார்த்து ஆலோசனை செய்யப்போகிறாராம். அதுமட்டுமல்ல, iyyakkam1971@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு ரசிகர்கள் மின்னஞ்சல் அனுப்பலாம். அதில் தங்களது விருப்பங்கள், கேள்விகள், கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தலாம்.
என் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த இயக்கத்தின் மூலம் அன்றாடம் உங்களுடன் பேசிக்கொண்டிருப்பேன் மின்னஞ்சல் மூலம் என்று அஜீத் சொல்லியிருக்கிறாராம்.
ரஜினி பாணியில் விஜய்யும், அஜீத்தும் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள மக்கள் மன்றம்- இயக்கம் என்று கிளம்பிவிட்டார்கள் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

கருத்துகள் இல்லை: