வியாழன், 2 ஜூலை, 2009

2009-07-02

ஜவுளித்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், முக்கிய தொழில் நகரங்களில் மத்திய ஜவுளித்துறை நிறுவனம் ஜவுளி பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜவுளி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 40 முக்கிய நகரங்களில் இத்தகைய பூங்காக்களை உருவாக்க, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கரூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. இப்பணி முடியும் நிலையில் உள்ளது. இதற்கான செலவு தொகையாக 40 கோடி ரூபாய் அளவுக்கு நிர்ணயம் செய்துள்ளது. கரூரில் அமையும் பூங்காவில் 60 உறுப்பினர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை ரோட்டில் அமையும் இப்பூங்கா கரூர் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு 110 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் 350க்கும் அதிகமான தறிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வசதிகளும் கொண்டுள்ளதால், மிக சுலபமாக தொழில்துறையினர் பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இதன்மூலம் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தேவையான மின்வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கொண்டுள்ளதால், கரூர் பகுதியில் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்வத்துடன் ஜவுளி பூங்காவில் தொழில் துவங்க உள்ளனர். இப்பகுதிக்கு அருகிலேயே தொழிலாளர் தங்குவதற்கு வசதியாக பல தனியார் நிறுவனங்கள் குடியிருப்புகள் அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளன. மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளதால், ஜவுளி பூங்கா அமைவதன் மூலம் குட்டி நகரமாக விரைவில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதேபோல், பல நகரப்பகுதிகளில் இத்தகைய பூங்காக்களை அமைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசும், ஜவுளித்துறை நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட அளவு நிலம் கிடைக்காததால், ஜவுளி பூங்காக்கள் அமைக்க தாமதம் ஏற்படுவதாக ஜவுளித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்
மாப்ளே….நானும் பைக் வாங்கிட்டேன்னு சொல்றதில்லையா?

மாப்ளே …நானும் கார் வாங்கிட்டேன்னு சொல்றதில்லையா?

மாப்ளே…எனக்கும் கல்யாணமாயிடுச்சிடுடா ன்னு சொல்றதில்லையா?

அந்த மாதிரிதான் ….. நானும் கவிதெ எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்..( நன்றி – இராகவன் ,நைஜீரியா)

சரி வாங்க……..கழுத….ச்சீ கவிதெ படிக்கலாம். …


திண்ணை
-----------------------

எத்துனை பேரைச் சுமந்தாலும்
நித்திரை கலையாத திண்ணை.!



ஆடுபுலி ஆட்டம்
-----------------------

எப்படித் துரத்தினாலும்
கட்டங்களுக்குள் மட்டும்
ஓடி மறையும் ஆடு….!


முரண்
---------

மழை
விவசாயிக்கு வரம்….
வீடில்லாதவனுக்கு சாபம்.

வறட்சி
கந்துவட்டிக்காரனுக்கு வரம்
விவசாயிக்கு சாபம்



கணினி
---------

விளையாட்டுக்களைக் கூட
வீட்டிலுக்குள்ளேயே கொண்டுவந்த
குழந்தைப் பருவத்தின் எமன்.



புகைப்படம்
------------


வயதே ஏறாத
வாலிபன் நான்….!



ஈழம்
-----------


கண்ணீர்த்துளியாய் இலங்கை….அதில்
ஈழப்பாகம் மட்டும் இரத்ததுளியாய்…!


சின்னத்திரை
-------------

எண்ணச்சிதறல்களை
வண்ணச்சிதறல் கொண்டு
வரவேற்பரையிலேயே முடித்துவைத்த
வாராது வந்த மாமணி…!

சினிமாவில் தமிழ்: சிவக்குமார் பேச்சு

siva-kumar-speech.jpg

நடிகர் சிவக்குமாரின் பேச்சை கேட்டால் காது குளிர்கிறது. மனம் மலர்கிறது. மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. தமிழ் மணக்கிறது.

2007இல், ஈரோட்டில் நடந்த புத்தகக்காட்சியில் சிவக்குமாரை பேசச் சொன்னார்கள். தலைப்பு ‘சினிமாவில் தமிழ்’.  ‘அப்பல்லாம் தமிழ் பேசினார்கள். இப்போ ஓசை மட்டும்தான் வருகிறது’ என்று தொடங்குகிறார் சிவக்குமார். அதன்பின்னர் சுமார் 1 மணி 20 நிமிடங்களுக்கு தமிழைப் பற்றி அவருடையத் தமிழ் பேசுகிறது.

சிவாஜி, கலைஞர் கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார், வசனகர்த்தா ஏகே வேலு, இயக்குநர் ஸ்ரீதர் என்று பிளந்து கட்டுகிறார் சிவக்குமார். குறிப்பாக அவருடையக் குரலில் பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை கேட்கையில் சிவக்குமார் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என்பது தெரிகிறது.

கடைசியாக அவர் 70ஆம் வருடத்திற்கு முன்பாவே தமிழ், தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறிவிட்டது என்று வருத்தம் அடைகிறார்.  கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் அவருடைய ஆதங்கம் புரியும்.

Click + symbol to hear <a href=”http://www.valorteam.com/audio/siva%20kumar%20speech.mp3″ title=””><em>Download</em></a>



More than a Blog Aggregator

by இராவணன்
திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளுக்கான அநீதி : லாலு பிரசாத் கண்டனம் புதுடெல்லி, பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கக்கூடிய செயல், இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று முன்னாள் இரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சமீபத்திய அரசு அறிவிப்பின்படி பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று அவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: