வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03

நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் வெண்பா முயற்சி. வழக்கம்போல நண்பர் திரு.அகரம்.அமுதாவின் உதவியுடன். ஈற்றடிகளை அவர் கொடுக்க, பாக்களை நான் இயற்ற (சரி.. சரி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்) சிலவற்றிற்கு அவர் தளை தட்டும் இடங்களை சரி செய்து கொடுக்க, அவற்றை நான் இங்கு படைக்க, அவற்றை நீங்கள் படிக்க..... அவரது/உங்களது பொறுமைக்கும், நன்றிகள் பல.

உலகம் சூடாகுதல்

மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்

கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்

கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட

வெப்பம் உயரும் உலகு !

கூட்டணி

கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்

சேருவோர் யாரெனக் கேட்டேன் - பெருமைமிகு

நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உன்றன்

கூட்டணி யாருடனோ கூறு !

ஊருக்கு உழைத்தல்

கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்

துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்

(ச்)சேரிலே இருந்தபடி நாட்டாமை செய்வதினும்

ஊருக்(கு) உழைத்தல் உயர்வு.

டாஸ்மாக்கும் படிப்பும்

டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு

ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு

வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு

தேங்கியே போனதே படிப்பு.

சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?

என்னோட முதல் முயற்சி உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம்... மறுபடி இங்க ஒரு தடவை ஞாபகப்படுத்திடறேன்.

Vijay

சமீபத்தில் மதுரை பதிவர் திருமண விழா சென்றிருந்தபோது பார்த்தேன். சுவரெல்லாம் நடிகர் விஜயின் சுவரொட்டிகள்.

நடிகர் அரசியலில் இறங்கப்போவது உறுதிதான். மதுரை நகர சுவரொட்டிகளில்"சங்கத்து கொடி தந்தாய்" என்ற விதத்தில் வாசகங்கள்! சரி! எல்லா நடிகர்களும் அரசியலுக்குவந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன்.

என்னவோ பொங்க! "ஆத்துற போற தண்ணி!! அய்யா குடி! அம்மா குடி!! "ந்க்கிறது போல் ஆகிவிட்டது நம் அரசியல்!!

பெரும்பாலும் அரசியலில் இறங்குவோர் எம்.ஜி.ஆர் பாணீயில் பாடல்களையும் காட்சிகளையும் அமைப்பார்கள். கட்டாயம் அம்மா செண்டிமெண்ட் தூக்கலாகவும், அப்பாக்களை ஓரம் கட்டியும் கதைகளை அமைப்பார்கள். கிழவிகள் கொஞ்சப்படுவார்கள்...

பாடல்களிலோ பொது உடைமைத் தத்துவம் பொங்கும். கோடம்பாக்கக்கவிஞர்கள் பட்டுக்கோட்டையாரையும், கண்ணதாசனின் பாடல்களையும் விகிதங்களில் பிரதியெடுத்து, வெட்டி,ஒட்டி புதிய பாடல்களாக பொரித்தெடுப்பார்கள்.

இதோ வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்காக எழுதப்பட்ட பாடல்!!

"வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!"

யாரும் தடுக்கவில்லைதான்!! விஜயும் முயற்ச்சி செய்யப்போகிறார். தடுக்கிறாரா பார்ப்போம்!!

தமிழ்த்துளி தேவா.

Youtube: கல்விக்கு மட்டும் அதிக Upload வசதி. தற்போது அனைத்து வீடியோக்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. (நல்ல வீடியோக்களை Upload செய்வார்கள் என்ற நம்பிக்கையில்!) 1 GB to 2 GB யாக அதிகரிப்பு. நமது கேமிராவிலிருந்து நேரடியாக தளத்தில் ஏற்றலாம். 10 நிமிடம் வரை அனுமதி.
Microsoft Bing: தேடியந்திரம் சந்தையில் Google ன் இடத்தை நெருங்குவதாகத் தகவல். சந்தையில் மெதுவாக முன்னேறுகிறார்கள்.

TechMahindra (or Ex Satyam) : 44 சதவிகிதப் பங்குகளை கையில் வைத்திருக்கிறார்கள். July 8 ஆம் தேதி தனது முழுமையான பங்குக் கையிருப்பு குறித்து அறிவிப்பார்கள்.

HCL : வருடத்துக்கு 5,000 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் புதிய தலைவராக Roshni Nadar நியமிக்கப்படுகிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி வரும் செப்டம்பர் முதல் சீராகத் துவங்கும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. நம்பிக்கையோடு காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை: