வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03



More than a Blog Aggregator

by தமிழரசி


என்னை விருந்தாய் உண்டா விழிகள் நலமா?
என்னோடு விளையாடாத விரல்கள் நலமா?

நான் விரும்பும் நாசி நலமா?
சில்மிஷம் செய்யும் செவ்விதழ் நலமா?

தேன் உண்ட தேகம் நலமா?
தினவெடுத்த தோள்கள் நலமா?

மது உண்ட வண்டே உன் வாலிபம் நலமா?
மன்னவனே என் மனம் கவர்ந்தவனே நலமா?
*******

பச்சை வண்ண பரிவட்டம் மறுத்தாய்
பாவையர் கூட்டத்தை வெறுத்தாய்

நான் பக்கம் வர இனித்தாய்
பார்த்து விட துடித்தாய்

தொட்ட போது வெடித்தாய்
நான் தோற்ற போது சிரித்தாய்....

******

மனங்களின்
மௌனம் காதல்....

காதலில்
மௌனம் கலவி...
***

நினைத்துப்பார்
என்னை

நெருங்குகிறேனா?
நெருடுகிறேனா?

*****

நீ
இருக்கும்

என் கண்களில்
நீ சுவாசிக்க காற்றை தவிர...

என் கண்ணீரை கூட
அனுமதிப்பது இல்லை......


***
நீ
கவிதை கேட்டதும்

நான் உள்ளத்தால்
ஊமை ஆனேனே ஏன்?

******

என்
விதியை எழுத வந்தவன்
ஏமாந்து போனான்...

என்னை
நீ எழுதி "பிரம்மா"
ஆனதால்.....

*******

பருவ காலங்கள் பரிந்துரைத்தும்
உன் பரிசுத்த மேனிக்கு பசியெடுத்தும்...

பாவை என்னை பாடாய் படுத்தாமல்
நீ படுத்துக் கொண்டே பகல்வது யாதடா?

*****

உன் சுகமான சுவாசத்தில்
சுகவாசி நான்...

சூடான அணைப்பிற்கு
சொந்தக்காரி நான்..

சுவையான முத்தத்திற்கு
முதலாளி நான்..

ஆணவப் பேச்சுக்கு
அடிமை நான்..

உன் ஆளுமைக்கு
ஆசைப் பட்ட அபிமானி நான்...

******


More than a Blog Aggregator

by தமிழரசி


என்னை விருந்தாய் உண்டா விழிகள் நலமா?
என்னோடு விளையாடாத விரல்கள் நலமா?

நான் விரும்பும் நாசி நலமா?
சில்மிஷம் செய்யும் செவ்விதழ் நலமா?

தேன் உண்ட தேகம் நலமா?
தினவெடுத்த தோள்கள் நலமா?

மது உண்ட வண்டே உன் வாலிபம் நலமா?
மன்னவனே என் மனம் கவர்ந்தவனே நலமா?
*******

பச்சை வண்ண பரிவட்டம் மறுத்தாய்
பாவையர் கூட்டத்தை வெறுத்தாய்

நான் பக்கம் வர இனித்தாய்
பார்த்து விட துடித்தாய்

தொட்ட போது வெடித்தாய்
நான் தோற்ற போது சிரித்தாய்....

******

மனங்களின்
மௌனம் காதல்....

காதலில்
மௌனம் கலவி...
***

நினைத்துப்பார்
என்னை

நெருங்குகிறேனா?
நெருடுகிறேனா?

*****

நீ
இருக்கும்

என் கண்களில்
நீ சுவாசிக்க காற்றை தவிர...

என் கண்ணீரை கூட
அனுமதிப்பது இல்லை......


***
நீ
கவிதை கேட்டதும்

நான் உள்ளத்தால்
ஊமை ஆனேனே ஏன்?

******

என்
விதியை எழுத வந்தவன்
ஏமாந்து போனான்...

என்னை
நீ எழுதி "பிரம்மா"
ஆனதால்.....

*******

பருவ காலங்கள் பரிந்துரைத்தும்
உன் பரிசுத்த மேனிக்கு பசியெடுத்தும்...

பாவை என்னை பாடாய் படுத்தாமல்
நீ படுத்துக் கொண்டே பகல்வது யாதடா?

*****

உன் சுகமான சுவாசத்தில்
சுகவாசி நான்...

சூடான அணைப்பிற்கு
சொந்தக்காரி நான்..

சுவையான முத்தத்திற்கு
முதலாளி நான்..

ஆணவப் பேச்சுக்கு
அடிமை நான்..

உன் ஆளுமைக்கு
ஆசைப் பட்ட அபிமானி நான்...

******


More than a Blog Aggregator

by தர்ஷன் ' in ' DSHAN2009 NETWORK
களத்துல இறங்குவதென முடிவெடுத்துவிட்ட விஜய் தனது படத்தின் பாடல்களிலும் அரசியல் 'பஞ்ச்' அடிக்க தொடங்கிவிட்டார்.
எம்.ஜி.ஆர். ஸ்டைலுக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார் விஜய். அதன் முதல் ஸ்டெப்தான் எம்.ஜி.ஆர் பட தலைப்புகளாக தேடிப்பிடிப்பது. 'வேட்டைக்காரன்' , 'உரிமைக்குரல்' என பட்டியல் நீளத் தொடங்கியிருக்கும் நிலையில் பாடல்களிலும் புரட்சித்தலைவர் பாணி இருக்க வேண்டுமென கவிஞர்களுக்கு அன்புகட்டளையிட்டுள்ளாராம்.

அரசியல், தத்துவம், புத்திமதி எல்லாம் கலந்து கதம்பம் கட்டிய பாடல் ஒன்றை விஜய்க்காக எழுதியுள்ளார் கபிலன். 'வேட்டைக்காரன்' படத்தில் அப்பாடலை பயன்படுத்துகிறார் விஜய்.

"வறட்டி தட்டும் சுவத்துல
வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டுப்போட்டு
கருத்துப்போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்மநாட்டு நடப்புல
யாரும் இதைத் தடுக்கல"

என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஸ்டைலிலேயே ஆடி நடிக்கிறாராம் இளையத்தளபதி.

புலி மாதிரி கோடு போட்டுக்கொண்டாலும் பூனை சவுண்டு 'மியாவ்'தான்!


More than a Blog Aggregator

by தர்ஷன் ' in ' DSHAN2009 NETWORK
களத்துல இறங்குவதென முடிவெடுத்துவிட்ட விஜய் தனது படத்தின் பாடல்களிலும் அரசியல் 'பஞ்ச்' அடிக்க தொடங்கிவிட்டார்.
எம்.ஜி.ஆர். ஸ்டைலுக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார் விஜய். அதன் முதல் ஸ்டெப்தான் எம்.ஜி.ஆர் பட தலைப்புகளாக தேடிப்பிடிப்பது. 'வேட்டைக்காரன்' , 'உரிமைக்குரல்' என பட்டியல் நீளத் தொடங்கியிருக்கும் நிலையில் பாடல்களிலும் புரட்சித்தலைவர் பாணி இருக்க வேண்டுமென கவிஞர்களுக்கு அன்புகட்டளையிட்டுள்ளாராம்.

அரசியல், தத்துவம், புத்திமதி எல்லாம் கலந்து கதம்பம் கட்டிய பாடல் ஒன்றை விஜய்க்காக எழுதியுள்ளார் கபிலன். 'வேட்டைக்காரன்' படத்தில் அப்பாடலை பயன்படுத்துகிறார் விஜய்.

"வறட்டி தட்டும் சுவத்துல
வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டுப்போட்டு
கருத்துப்போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்மநாட்டு நடப்புல
யாரும் இதைத் தடுக்கல"

என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஸ்டைலிலேயே ஆடி நடிக்கிறாராம் இளையத்தளபதி.

புலி மாதிரி கோடு போட்டுக்கொண்டாலும் பூனை சவுண்டு 'மியாவ்'தான்!
ஆம்! ஜெயா அறைக்குள் என்ன செய்கிறாள் என்பது யாருக்குமே தெரியாது.

ஹிந்தோள ராகத்தில் பஞ்சமத்தை சேர்த்தாற்போல் அபசுரமாக ஒலித்த அவள் வாழ்கையில் அவளாக இருந்த நேரங்கள் அவள் தன் அறையில் அழித்த காலங்கள்தான்.



முதுமை வரவர அதற்குத்தேவையான நோய்களும் அவளை அண்ட ஆரம்பித்தன. ஆஹா! இவைகளாவது தன்னிடம் வருகிறதே என்று அற்ப சந்தோஷமடைந்தாள் ஜெயா.



ஸ்ரீனிவாசன் அந்த குறையெல்லாம் வைக்கவில்லை. முறையான வைத்திய பரிசோதனைகள் நடத்தி, தேவையான மருந்துகள் வாங்கிக்கொடுத்து கவனித்துக்கொண்டான்.

ஆனால் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த அந்த இதயம் ஒரு நாள் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. குழந்தைகள் ராஜுவும் சித்ராவும் ஆடித்தான் போனார்கள். இழப்பிலேதானே அருமை தெரியும்!

எந்த உறுத்தலும் இல்லாமல் மகன் ராஜுவைக் கொண்டு அவள் கடைசி காரியங்களை செய்து முடித்தான்.

ஒரு வாரம் கழித்து ராஜுவையும் சித்ராவையும் அழைத்துக்கொண்டு ஜெயாவின் அறையைத் திறந்தான். படுசுத்தமாக நேர்த்தியாக அது அது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தது அவளது அறை.

பெரிய மேஜை, மேஜை விளக்கு, எழுதும் பாட், பேனாக்கள், கத்தை கத்தையாக எழுதாத பேப்பர்கள். மேஜை ட்ராயரைத்திறந்தார்கள்.....அங்கே அழகாக தொகுக்கப்பட்டு , ஐந்தாறு பைல்கள் இருந்தன.

தாயின் ரத்தமும் ஓடியதால் ராஜுவுக்கும் சித்ராவுக்கும் இயல்பிலேயே சங்கீத ஞானம் இழைந்து ஓடியது.

பைல்கள் ஒவ்வொன்றாக படித்துப் பார்த்தார்கள். வா...வ்!!! அத்தனையும் பொக்கிஷங்கள்!! பலவகையான ராகங்களைக் கலந்து எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை, அமிர்தவர்ஷிணி ராகத்துக்கு மழை பெய்யுமா? அது எப்படி? என்ற விளக்க உரை. சங்கீத மும்மூர்த்திகளையும் அவர்களது கீர்த்தனைகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை...இப்படி அள்ள அள்ள குறையாத அட்க்ஷய பாத்திரம் போல் வந்து கொண்டேயிருந்தது. பிள்ளைகள் மனமெல்லாம் பொங்கிப் பூரித்தது, அம்மாவின் திறமைகளை கண்கூடாக கண்டபோது. இறுதியாக ஒரு டைரி! தனது அவல வாழ்கையையும் அணுஅணுவாக ரசித்து எழுதியிருந்தாள்.

படித்துவிட்டு முகமும் கண்களும் சிவக்க தாயின் தெய்வீகத்தை தரிசிக்க விடாமல் மறைத்த தந்தையை ஏறிட்டார்கள். அவற்றின் உஷ்ணம் தாளாமல் தலையை குனிந்து கொண்டான். இனி அவன் தலை நிமிரவே முடியாது.

வாழும் போது தாயின் அருமை பெருமை தெரிய மாட்டாமல் வளர்ந்த தங்கள் விதியை நொந்து கொண்டு குமுறி அழ ஆரம்பித்தார்கள். தேற்ற வந்த தந்தையை வெறுப்போடு உதறித் தள்ளினார்கள்.

இனி ஜெயாவின் அறை ஸ்ரீனிவாசனுக்குத்தான்.



உடலால் புழுதியில் கிடந்த தாயின் நினைவுகளை தூசிதட்டி எடுத்து கோபுரத்தில் ஏற்றி வைத்து கும்பாபிஷேகமும் நடத்தி கண்களில் கண்ணீர் வழிய அம்மாவின் ஆத்மாவுக்கு அமைதியையும் தந்து அஞ்சலி செய்தார்கள்.
கடந்து விடுவார்கள் என்ற அவன் நினைப்பு தொடர்ச்சியாக ஒலிப்பான் ஒலித்து கொண்டே வந்த வண்டி
கொஞ்சம் கூட வேகம் குறையவில்லை .

சைக்கிள் ஓட்டி சென்ற பெண்மணிக்கு சாலையைக் கடக்க நேரம் போதவில்லை. சென்று விடுவார்கள் என்பது அவன் அனுமானிப்பு பொய்த்து போனது நினைக்கவில்லை நடந்துவிட்டது.

இருசக்கர வாகனம் சைக்கிள் மீது மோதியது பிள்ளையுடன் தரையில் விழுந்தாள் பெண்மணி ஏம்மா.. நான்தான் ஹாரன் அடிச்சிகிட்டே வாறேன் நீ பாட்டுக்கு வர்ற... என் தன் பக்க நியாத்தை சொல்லியவாறே தன்னுடைய வண்டியை நிமிர்த்தினான்.

பெண்மணி ஓடிப்போய் பிள்ளையை தூக்கினாள் மண்டை உடைந்து ரத்தம் வந்தது. காபி தூள் வாங்கி வாங்க என்று பக்கதில் உள்ளவர்களிடம் சொன்னாள். காபி தூள் வாங்க ஓடினார்கள்.

திருப்பமுன்னு தெரியுதுல்ல நீ மெதுவா வரவேண்டியதானே என்று வண்டி ஓட்டியவனை திட்டினார்கள் பொது ஆண்கள்.

வண்டியை ஸ்டார்ட் செய்ய முனைந்தான் . பொதுமக்களில் ஒருவர் அடிப்பட்ட பிள்ளையை டாக்டரிம் காண்பித்துவிட்டு போ என்று சொல்ல..

என்கிட்ட காசு இல்லீங்க .. என்றவாறு போக முனைந்தான். எலா நாங்க சொல்லிகிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு போறேன் சொல்ற இன்னொருவர்.

நான் போவனுங்க விடுங்க..

யோவ் இவன் சொன்னா கேக்கமாட்டான் வண்டிய புடுங்கி வெச்சுறு போலீச கூப்பிடு என்று கூடிய ஆண்கள் பேச ..

இல்லீங்க ..நான் போறேன் என்று சொல்லியவாறே டாக்டரிம் அழைத்து சென்றான் பிள்ளையை..

கருத்துகள் இல்லை: