04.07.2009: கனடாவில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: பெங்களூரில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: கனடா, கல்கரி எட்மன்ரன் நகரில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: ஜேர்மனியில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: சுவிசில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: அவுஸ்திரேலியா சிட்னியில் " உயிர்தெழுவோம்"
05.07.2009: நெதர்லாந்தில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: டென்மார்க்கில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: இத்தாலி பொலோனாவில் "உயிர்த்தெழுவோம்"
05.07.2009: இத்தாலி பியாட்சாவில் "உயிர்த்தெழுவோம்
05.07.2009: நியூசிலாந்தில் "உயிர்த்தெழுவோம்"
06.07.2009: ஒஸ்லொவில் "உயிர்த்தெழுவோம்"
நேற்று வெளியிடபட்ட அமெரிக்க வேலையிழப்பு (Jobloss Data) விவர அறிக்கை கடந்த 23 வருடங்களில் இல்லாத அளவிற்கு மோசமாக உயர்ந்ததினால் அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள் சுமார் 3 சதம் அளவிற்கு சரிந்து முடிவடைந்தது.இதன் தாக்கம் ஆசிய சந்தைகளிலும் காணபடுகிறது.பெரும்பாலான ஆசிய நாடுகளில் சந்தை சுமார் 1-3 சதம் சரிந்து காணபடுகிறது.
இந்திய சந்தைகளின் துவக்கமும் சர்வதேச சந்தைகளின் பிரதிபலிப்பாக தாழ்நிலையில் துவங்கவே வாய்ப்பிருக்கிறது.மேலும் இந்திய பொருளாதார ஆய்வரிக்கை பங்குஆதாய தொகை மீதாண வரி விகிதத்தில் சீர்திருத்தம் பரிந்துரைத்திருப்பது சந்தையை அதிருப்தி அடைய செய்துள்ளது.இந்நிலையில் இன்ரு ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யபடைருக்கிறது. எனவே சந்தையில் ஏற்ற இறக்கம் மிகுதியாகவே இருக்கும்.
என்றாலும் சந்தை 4300 க்கு கீழ் துவங்கும் பட்சத்தில் ஆதீத விற்பணை காணப்படும்.சந்தை 4200-4170 வரை இன்று சரிய வாய்ப்புள்ளது. கடந்த பதிவிலேயே தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம் சந்தை 4380 வரை உயர்ந்தாலும் அது நீடிக்க வாய்ப்பில்லை என.அதுதாண இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
நமது அவதாணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில்,இந்திய சந்தைகள் இன்று முதல் சரிவின் பிடியில் சிக்கும்.இந்த சரிவானது 3950-3850 வரை நீடிக்கும்.
எனவே சந்தையில் சற்று நிதானமாக இருப்பதுவே நல்லது.
சந்தையின் இன்றைய முக்கிய நிலைகள்
Nifty : Support : 4242 & 4170
Nifty : Resistant: 4370 & 4415
Trade : Ngative Bias.
நன்றி!
Editor:-
Moneybharati.M.Saran

சங்கப் புலவர்களில் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வரிசையில் இதுவரை ஒன்பது புலவர்களின் பெயர்களுக்கான காரணங்களை பார்த்துள்ளோம். அந்த வரிசையில் பத்தாவதாக இன்று காண இருப்பது மீனெறி தூண்டிலார்....
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நானொடு ஆண்டு ஒழிந்தன்றே.
குறுந்தொகை – 54.
( மீனெறி தூண்டில் – மீனை எறிந்த தூண்டில், மீனால் எறியப்பட்ட தூண்டில்)
(வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.)
தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல்க் காலம் தாழ்த்தி வருகிறான். அதனால் தலைவி அத்துயரை ஆற்றாமல்த் தவிக்கிறாள். இந்நிலையில் தோழிக்குத் தன் மன உணர்வுகளைத் தெரிவிப்பது போல இப்பாடல் அமைந்துள்ளது.
நான் மட்டும் இங்கு உள்ளேன். தினைப் புனத்தில் தினையைக் காவல் புரிபவர் விடுகின்ற கவண் ஒலிக்கு அஞ்சி காட்டு யானையானது உண்டு கொண்டிருந்த பசிய மூங்கிலைக் கைவிட்டது. அது மீனைக் கவர்ந்து கொண்ட தூண்டிலைப் போல விரைவாக மேலே சென்றது. அத்தகைய நாட்டின் தலைவன் என்னை நீங்கிய போது என் நலமும் என்னை விட்டு நீங்கிச் சென்றது என்கிறாள் தலைவி..
தலைவனின் பிரிவினைத் தலைவியால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனை இவ்வாறு கூறுகிறாள்.
யானை வளைக்கும் போது வளைந்து, அது கைவிடத் தானும் நிமிரும் மூங்கில். அது மீனெறியும் தூண்டில் நிமிர்வது போல இருக்கும்.
தலைவன் தன் நெஞ்சத்து அன்பு வந்தபோது நெகிழ்ந்தும், அன்பற்ற காலத்தில் மறந்தும் வாழ்கிறான் என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துவதாக உள்ளது.
இதில் யானை மூங்கிலை உண்பதற்கு விரும்பி வளைத்து தினைப் புனங்க காப்பவர் எழுப்பிய கவண் ஒலி கேட்டு அஞ்சி அதனைக் கைவிட்டது. மீன் பிடிப்பவன் மீன் அகப்பட்டவுடன் விரைவாகத் தூண்டிலை மேலே தூக்குவான். அந்த தூண்டில் நிமிர்வது போல யானை கைவிட்ட மூங்கிலும் நிமிர்ந்தது என்று மீனெறி தூண்டிலோடு ஒப்பிட்டு உரைத்தமையாலும். அந்த ஒப்புமை மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும், பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாகவும் அமைந்து விட்டதாலும் இப்புலவர் மீனெறி தூண்டிலார் என்று அழைக்கப்படலானார்.
இதனை மீனை எறிந்த தூண்டில் என்னாமல், மீனால் எறியப்பட்ட தூண்டில் என எறிதலை மீனின் வினையாக்கி ரா.இராகவையங்கார் உரை வகுத்துள்ளார். தூண்டிலில் இரையை மீன் விழுங்கி அகப்படுதலும் உண்டு. அகப்படாது இரையை எறிந்து தப்பிப் போதலும் உண்டு . மீனெறி தூண்டில் என்ற தொடரில் எறிதல் மீனின் வினையே அன்றி தூண்டில் வினையாகாது. மீன் இரையைக் கொள்ளாதவரை தூண்டில் வளைந்து தான் கிடக்கும். இரையைக் கொண்டவுடன் தான் வளைந்து கிடக்கும் தூண்டில் நிமிரும். அது போல யானை விட்டவுடன் தான் மூங்கில் நிமிர்கிறது. இவ்வுவமை இப்பாடலுக்கு மிகவும் பொருத்தமானதாகவுள்ளது.
மீனெறி தூண்டில் என்பது யானையின் செயலையும் தலைவியின் நிலையையும் ஒரு சேரக் குறிப்பது பாடலின் சிறப்பாவுள்ளது.
மீனை எறிந்த தூண்டில் மீனால் நிமிர்வது போல, தலைவனுக்காக வைத்திருந்த தம் அழகுநலம் அவனாலேயே அழிந்து போகிறது என்ற நிலையிலும் இவ்வுவைமை சிறப்புப் பெறுகிறது.

முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.
அழகான பொண்ணுதான் என்று டைட்டில் வைத்ததுக்குப் பதில் நமிதாவின் காதல் கதை என்றே பெயர் வைத்திருக்கலாம். படத்தின் கதை என்ன என்று நாம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களிலிருந்து எழுந்த எண்ணம் இது.கே சினிமா சார்பில் கே.கேசவன் தயாரிக்கும் படம் அழகான பொண்ணுதான். நமிதா ஹீரோயின். ஹீரோ பதினெட்டு வயசே நிரம்பிய ராஜா கார்த்திக். காதல்தான் படத்தின் மையக்கரு.பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிந்து கிராமத்துக்கு விடுமுறைக்காக வருகிறார் ராஜா கார்த்திக். அங்கு அழகான நமிதாவைப் பார்த்ததும் அவருள் காதல் பீரிடுகிறது. இந்த வடலை காதலை நமிதா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் கதை.ஆதிவாசி பெண்ணான நமிதாவின் அழகை வர்ணிக்கும் ஒரு பாடலை உருக வைக்கும் மெட்டில் இசையமைத்திருக்கிறார் சுந்தர் சி.பாபு. பாடல் இப்படி தொடங்குகிறது. வானத்தின் நிலவுக்கு கறை அழகு... கன்னத்தில் விழுந்த குழி அழகு... ஆள் தின்னும் வளைவுகள் உனதழகு... நீ அழகான பொண்ணுதான்... சென்சாரின் கத்திரிக்கு தப்பி வந்தால் நமிதாவின் மாஸ்டர் பீஸ் கவர்ச்சியை இதில் தரிசிக்கலாம். இந்த மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், பின்னோக்கித் தள்ளவும் தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : "ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது" என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார்.அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.அது மட்டுமல்ல, "தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல.சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்" என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்."கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது.எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக"வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.
பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை.பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது.தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள்.எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது.இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள். தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை.இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.உலகத்தின் பல நாடுகள் ராஜபக்ச அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும்.இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை.அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
எதிர்பார்க்கவேயில்லை
இந்த காலையில்
சற்றுமுன் மலர்ந்த
என் பூ
பறிக்கபடுமென்று
இந்த காலையில்
சற்றுமுன் மலர்ந்த
என் பூ
பறிக்கபடுமென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக