நகைச்சுவை: இதுதாண்டா இந்தியா!
டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்த நகைச்சுவைப் படங்கள்
ஒன்பதை உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்
பார்த்து ரசியுங்கள்
இறக்குமதிச் சரக்கு; மின்னஞ்சலில் வந்தது!
டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்த நகைச்சுவைப் படங்கள்
ஒன்பதை உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்
பார்த்து ரசியுங்கள்
இறக்குமதிச் சரக்கு; மின்னஞ்சலில் வந்தது!
9
இந்த ஒன்பது படங்களில் எது அசத்தலாக உள்ளது?
============================================================
இந்த ஒன்பது படங்களில் எது அசத்தலாக உள்ளது?
============================================================
வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH
இரு தமிழ் எம்.பிக்கள் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை தொடர்பாக முழுமையான விசா ரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்கம் (ஐ.பி.யூ) அழைப்பு விடுத்துள்ளது. 29 நாடுகளில் சுமார் 300 எம்.பி.க்களுக்கு இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சம்பவங்களை பரிசீலனை செய்திருக்கும் ஐ.பி.யூ.வின் மனித உரிமைகள் குழுவானது தனது பிந்திய அமர்வின் இறுதியிலேயே இந்த அழைப்பை விடுத்திருக்கிறது. இலங்கையின் நீண்ட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தாமல் விடுவதற்கு [...]
எல்லோருக்கும் நல்ல தமிழைய்யா வாய்த்தால் நல்ல தமிழ் படிக்கலாம். மேலும் படிக்க ஆர்வம் வரும். எனக்கு ஒரு நல்ல தமிழைய்யா கிடைத்தார் 9,10 படிக்கும்போது. அவர் வகுப்பு என்றாலே எல்லோரும் ஆர்வமாக இருப்போம். லீவு எடுப்பதென்றால் அவரது வகுப்பு இல்லாத நாளாக இருக்க வேண்டுமே என நினைப்போம்.
புத்தகமேதும் எடுத்து வரமாட்டார். உள்ளே நுழைந்ததும் இன்று என்ன பாடம் என்பதையும் சொல்ல மாட்டார். புத்தகத்தில் உள்ளதுபோல் வரிசைக்கிரமமாக நடத்தவும் மாட்டார். பெரும்பாலும் கதைகள் மூலமே பாடம் நடத்திச் செல்வார்.
ஒரு கணவனும் மனைவியும் துணிக்கடைக்குப் போகிறார்கள். சில சேலைகளைப் பார்த்தும் பிடிக்காமல் ஒரு குறிப்பிட்ட சேலையை எடுத்துக் காட்டச் சொல்கிறார் மனைவி. அதற்குக் கடைக்காரர் , "அது சீமாட்டியும் வாங்க முடியாத சேலை" என்கிறார். காரணம் அதன விலை. கணவன் கையிலிருக்கும் காசுக்கான சேலை வாங்கித்தருகிறார். மனைவிக்குத் திருப்தியில்லை. ஏதேதோ புலம்பியவாறே வருகிறார். இதனால் கணவன் எரிச்சலடைகிறார்.
வீட்டிற்கு வந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சாப்பாடு சுவையாக இல்லை. எரிச்சலுடன் "நாயும் தின்னாத சோறு" எனச்சொலியவாறே வெளியேறுகிறான்.
"சீமாட்டியும், நாயும் இந்த இரண்டு வார்த்தையிலும் என்னடா புரிந்தது? " என்பார்.
"அய்யா இரண்டிலும் உம் வருகிறது"
"சரி. என்ன வித்தியாசம்"
"தெரியலை அய்யா"
"ஒண்ணு உயர்வைச் சொல்லுது . மற்றது இழிவைச் சொல்லுது. ஒரே "உம் " இரு அர்த்தங்கள் தருகிறதில்லையா? ஒன்று உயர்வு சிறப்பு உம்மை. மற்றது இழிவு சிறப்பு உம்மை"
ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை.
ராமச்சந்திரன் அய்யா உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.
ஆனால் இப்பொழுது தமிழய்யாக்கள் அதிகம் இல்லை எல்லொரும் தமிழ் ஆசிரியர்கள் அல்லது தமிழ் டீச்சர். அவர்களிடம் பேசினால் தமிழில் பாரதிதாசனுக்குப் பின் புலவர்கள் யாருமில்லை என்பார்கள். அல்லது திரைப்படப் பாடலாசிரியர்கள்தான் கவிஞர்கள்.
உங்களுக்குத் தெரிந்த தமிழாசிரியர் யாருமிருந்தால் அவரிடம் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், அசோகமித்திரன் ஆகியோரின் எழுத்துக்களை விவாதியுங்கள். உண்மை புரியும்.
பார்க்கும் வேலை வேறு வாழும் வாழ்க்கை வேறென்பதாக ஆகிவிட்டது அவர்களுக்கு.
பின் குறிப்பு : எல்லா தமிழாசிரியர்களுமே அப்படியல்ல; ஆனால் பெரும்பான்மையினர்.
Picture courtesy : fotosearch.com
நீண்ட இடைவெளியின் பின் உங்களை சந்திக்கின்றேன் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது.
மக்கள் இனி சுதந்திரமாக வாழ்வார்கள்.. வாழ்கின்றனர் என்ற பசப்பு வார்த்தையை நானும் நம்பி ஒரு தடவை யாழ்ப்பாணம் சென்று வந்தேன்.. சென்று வந்தேன் என்பதை விட நொந்து வந்தேன் என்று தான் சொல்ல முடியும்.
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாம்? அப்படி என்றால் ஏன் அங்கிருந்து விமானத்தில் வரும் பொழுது பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகமாகவே காணப்படுகின்றது.
மக்கள் நடமாட்டம் இல்லாதஇராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் கட்டுவன் பகுதியில் முதலில் பயணிகள் பொதிகள் அனைத்தும் இராணுத்தினரால் பரிசோதனை செய்யப்பட்டு பின் மொப்ப நாயின் மூலம் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகின்றது.
பின் பயணப் பொதிகளை பயணிகளே தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்ற வேண்டும். சரி அவ்வளவுதான் சோதனை என்று பெரு மூச்சு விட்டுவிட்டு இருந்தேன்.
பெருமூச்சு விட்டு சில நிமிடங்களில் வேறு வாகனங்களில் ஏற்றப்பட்ட பயணிகள் பலாலி விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இன்னொரு சோதனை நடவடிக்கை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கும் மொப்ப நாய்களிடம் மீண்டும் எமது பயண பொதிகள் சோதனை செய்யப்படுகின்றது. பின் பயண பொதிகளை இராணுவத்தினர் அக்குவேறு ஆணி வேறாக சோதனை செய்கின்றனர்.
சோதனை செய்த பின் வாகனத்தில் மீண்டும் பயணப் பொதிகளை வாகனத்தில் ஏற்ற வேண்டும்.. இத்தனைக்கு ஒரு வழி போக்குவரத்திற்கு 11 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது..
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு வருவது என்றால் விமானத்தில் வருவது என்ற பெயர் ஒழிய ஆனால் அங்கிருந்து கொழும்பு வருவதென்றால் எவ்வுளவு கஷ்டங்கள்.
இத்தனைக்கும் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாம்?
என்ன கொடுமை சரவணா ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக