வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03

 
"புலிகளின் குரல்" வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை, புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என, இந்த வானொலியின் பணியாளர் ஒருவர் பதிவு இணையத்திற்குத் தெரிவித்தார்.

1990 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "புலிகளின் குரல்" வானொலிச் சேவை, உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும், துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.

"புலிகளின் குரல்" வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. இருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியில் மிக மோசமான இன அழிப்புத் தாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி, பல்லாயிரக் கணக்கான மக்களின் மூச்சு நிறுத்தப்பட்ட, கடந்த மே மாதம் 16ஆம் நாள், தனது ஒலிபரப்;பை நிறுத்திக்கொண்டது.

தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, புலிகளின் குரல்" வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்


இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களை விட நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் அதிகம் என்று கனடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பரினாம வளர்ச்சியில் இயற்கை பெண்ணுக்கு அளித்துள்ள முக்கிய பொறுப்பான வளமான சந்தJustify Fullதியை உருவாக்குதல் என்ற நோக்கத்தை திறம்பட நிவர்த்தி செய்ய பெண்களை நோய்களின் தாக்கத்திலின்றும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகிறது.

அதற்காகவே அமைந்தது போல பெண்களின் பெண்மைக்கு முக்கிய காரணமான ஈஸ்ரோஜன் (Oestrogen) எனும் ஓமோன் (female sex hormone) அவர்களில் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியையும் அதிகரிக்கச் செய்வது இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓமோன், Caspase-12 எனும் நோய் எதிர்ப்புத் தாக்கத்தை குறைக்கும் நொதியத்தை (enzyme) உருவாக்கும் Caspase-12 மரபணு அலகின் தொழிற்பாட்டை தடுப்பதன் மூலம் பெண்களில் குறித்த நொதியத்தின் உருவாக்கத்தை நிறுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ஆனால் ஆண்களில் மேற்குறிப்பிட்ட ஓமோன் இல்லாத காரணத்தால் அவர்கள் தடிமன் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் நோய்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும், பக்ரீரிய நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும் பெண்களை விட கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

இயற்கையில் மட்டுமன்றி சுகாதார வாழ்விலும் ஆண்களை விட பெண்களுக்கே அநேக மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகவும் முன்கூட்டியும் கிரமமாகவும் வழங்கப்படுகின்றன. பல நோய்கள் ஆண்களைப் அதிக அளவில் பீடிக்க அவர்கள் மீது கட்டாய கிரமமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையும் ஒரு காரணமாகும்.

இதன் காரணமாகவோ என்னவோ இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


More than a Blog Aggregator

by அன்பு ★ பிரபாகரன் ★


ண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால் அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி என் ஏ (DNA) மூலக்கூறுகள் சிதைவடைய அல்லது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேவேளை தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிய விந்தணுக்கள் உருவாக அதிக சந்தர்ப்பம் அமைவதோடு டி என் ஏ யில் ஏற்படும் பாதிப்பும் சுமார் 12% குறைவடைவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் ஆண்களைப் போன்று வயதான ஆண்கள் அதிகம் உடலுறவில் நாட்டம் காட்டுவதில்லை என்றும் இதுவும் பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றதாகவும் மேற்படி ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தினமும் உடலுறவு கொள்வது என்பது எல்லோராலும் சாத்தியப்படக் கூடிய விடயம் இல்லை என்றும் அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக (உதாரணத்துக்கு 14 நாட்கள்) உடலுறவு கொண்டால் இயற்கையாகவே ஆணணுக்களின் எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி காண்பிக்கப்படும் என்பதாலும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தினங்கள் உடலுறவு வைத்துக் கொள்வது வளமான விந்துருவாக்கத்துக்கும் குழந்தைகள் உருவாக்கத்துக்கும் அதிக வாய்ப்பளிக்கும் எங்கின்றனர் ஆய்வாளர்கள்.

தினமும் உடலுறவு வைக்கப் பரிந்துரைப்பதிலும் குறிப்பாக பெண்களில் மாதவிடாயின் பின்னர் 12 தொடக்கம் 14ம் நாளில் முட்டை வெளியேற்றம் நிகழ்வதால் அந்த நாட்களில் தினமும் உடலுறவு வைப்பது வளமான விந்தணு முட்டையோடு சேர அதிக வாய்ப்பை அளிக்கும் என்கின்றார்கள் இவ்வாய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிற ஆய்வாளர்கள்.

பொதுவாக விந்தணுக்கள் விரைவில் பாதிப்படையக் கூடிய இயல்பைக் கொண்ட உயிரணுக்களாக விளங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவை அதிக உடல் வெப்பநிலையைக் கூட தாங்கக் கூடியவை அல்ல. அதுமட்டுமன்றி விந்தணுக்களை உடலுக்கு வெளியில் விந்தணு வங்கிகளில் சேமிக்கும் போது கூட அவை பிற இரசாயனக் கூறுகளால் விரைந்து பழுதடையச் செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

இந்தச் செய்தியை படித்துவிட்டு வீட்டில் ஆத்துக்காரிக்கு தொந்தரவு கொடுப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில் இந்த ஆய்வு பொதுமக்களுக்கு பரிந்துரைகளை வழங்க முன் இன்னும் பல நிலைகளூடு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது எங்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமன்றி ஒரு பெண்ணின் இயற்கையான நிலைக்கு மாறாக அவளை உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவது குற்றச் செயலாகும். அதேபோல் பெண்களும் ஆண்களை கட்டாயப்படுத்துதல் தவறாகும்.

மிழ் சினிமாவின் தகவல்களை ஆண்டு தோறும் தரும் பிரபல "மக்கள் தொடர்பாளர்" "கலைமாமணி" பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு செய்தி ஒன்றை கொடுத்தார்.

அந்த செய்தி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை விழா கொண்டாடிய படங்கள் என்ற தலைப்பில் இருந்தது. அதை படித்தவர்கள் உண்மையிலேயே அசந்து தான் போனார்கள். இந்த ஆண்டு தமிழ்சினிமா ஆரோக்கியமாகவும்,
சரியான பாதையிலும் ச்செல்கிறதா? என்று சினிமா தியரி தெரிந்தவர்கள் இந்த பட்டியை பார்த்து ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

2009 - ஜனவரி முதல் ஜூன் வரை விழா கொண்டாடிய படங்கள் :

150 நாட்கள் :

நாயகன் - (ஜெ.கே .ரித்தீஸ் நடித்தது)

100 நாட்கள் :

சிவா மனசுல சக்தி

சற்று முன் கிடைத்த தகவல்

எல்லாம் அவன் செயல்

யாவரும் நலம்

திருவண்ணாமலை

சிலம்பாட்டம்

க (இந்த படத்துல யார் ஹீரோன்னு உங்களால
உடனே சொல்ல முடியுமா?)


வில்லு


மேகம் (யாருங்க ஹீரோ?)

சக்கரகட்டி

படிக்காதவன்

என்ன எப்படி இருக்கு பட்டியல்.இந்த பட்டியலில் உள்ள படங்கள் எல்லாமே செய்தித்தாள்களில் வெற்றிகரமான 100 வது நாள் மற்றும் 150 நாள் என்று காசு கொடுத்து விளம்பரம் செய்யப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு கூடுதல் தகவல் :

ஜனவரி
முதல் ஜூன் வரை வெளியான மொத்த
தமிழ்படங்களின் விவரங்கள் :


நேரடித் தமிழ் படங்கள் :53

டப்பிங் செய்யப்பட்டு (ஆங்கிலப்படமும் சேர்த்து) வெளியான படங்கள் : 20

மொத்தம் : 73

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 29 படங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008 - ஆண்டு இதே கால கட்டத்தில் வெளியான படங்களின்
எண்ணிக்கை :102

என்ன பட்டியலை படித்தீர்களா? இப்போது உங்களின் கருத்துக்களையும்

சொல்லுங்கள்.
இடது முலை மேல் அமர்ந்து
இடைவளைவில் எச்சமிட்டு மின்சாரமணியோசைக்கு
அதிர்ந்து பறக்கும் பறவை
மின்மயானத்தில் பசியாறுகிறது

யாருமற்ற வெளியின் குரல்கள்
கடல் மிச்சமிருக்கும் சங்கினை
சுற்றி வரும் குளவியை துரத்தியபடி

யானையின் எலும்புகூடாய்
சூழத் துவங்குகிறது தனிமை

மல்பெரி இலைகளை தின்று கொண்டிருக்கிறாள்
சிறகு முளைக்கும் கனவுகளுடன்
2009-10ஆம் நிதியாண்டிற்கான இரயில்வே நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்த இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, தற்பொழுதுள்ள பயண, சரக்குக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று இரயில்வே நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மம்தா பானர்ஜி, இஸ்ஸாட் என்ற திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.1,500க்கும் குறைவாக வருவாய் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 100 கி.மீ. வரையிலான இரயில் பயணம் செய்து திரும்புவதற்கான மாதாந்திர பயணச் சீட்டு ரூ.25க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.12 நிற்காமல் செல்லும் இரயில்கள் அறிமுகம்!
சென்னையில் இருந்து டெல்லிக்கும், கொல்கட்டாவின் ஹெளராவில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கும், மும்பையிலிருந்து டெல்லிக்கும் என நாட்டின் 12 நீண்ட தூர பயணத் தடங்களில் நிற்காமல் செல்லும் 12 இரயில்கள் விடப்படும் என்று மம்தா அறிவித்தார்.
புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை நிற்காமல் செல்லும் நீண்ட தூர இரயில்கள் விடப்படுவது இரயில்வே வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதிலும் உள்ள குறுகிய இரயில் பாதைகளை அகண்ட இரயில் பாதையாக்கும் திட்டத்திற்கு ரூ.1,700 கோடியும், புதிய இரயில் பாதைகளை அமைக்க ரூ.2,921 கோடியும் (இதற்காக இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைய சமூதாயத்தினருக்கும் ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 1,500 கி.மீ. தூரம் வரையிலான பயணத்திற்கு ரூ.299க்கு சலுகையில் பயணச் சீட்டு வழங்கப்படும். இதற்குமேல் புதிய இரயில்வே திட்டங்கள் அனைத்தும் இரயில்வே - தனியார் கூட்டாண்மையுடன்தான் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த மம்தா பானர்ஜி, இரயில்வேயின் சரக்கு கையாளல் இலக்கு இந்த நிதியாண்டிற்கு 882 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்தி நிர்ணயிக்கப்படுவதாக கூறினார்.

கருத்துகள் இல்லை: