வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03

புதுவையில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புதுவையில் முக்கிய பகுதிகளில் சிலர் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையொட்டி கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கவும், அதனை புழக்கத்தில் விட்டவர்களை கைது செய்யவும் டிஜிபி வர்மா உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.அதில், 2 ஏகியூ. 8 ஏகியூ, 8 ஏசி ஆகிய வரிசை எண்ணுள்ள ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை யாராவது புழக்கத்தில் விட்டது தெரியவந்தால் அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியோர் பகுதிகளையும் போலீசார் உஷார்படுத்தி உள்ளனர்
புதுவை பாண்டெக்சில் பணியாற்றிய பெண்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள பாண்டெக்சில் சுமார் 25க்கும் மேற்பட்ட பெண்கள் முதல்வர் ரங்கசாமி ஆட்சியின்போது பணியமர்த்தப்பட்டனர். அவர்களை தற்போதுள்ள நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று காலை பாண்டெக்ஸ் அலுவலக வாயிலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக சொற்ப சம்பளம் வாங்கி குடும்பம் நடத்தி வந்த தங்களை தற்போது ஆட்சியினர் வெளியே அனுப்பி நிர்கதியாகி விட்டதாக குற்றம்சாட்டினர். தங்கள் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு மீண்டும் வேலை வழங்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சென்ற மாதம் என்னை சிறந்த பதிவர் எனத் தேர்ந்தெடுத்து, என்னையும் மதித்து, விழாவிற்கு அழைத்த தமிழிஸ் ஸ்டுடியோ.காம் அருணுக்கு மிக்க நன்றி.

இது போன்ற ஊக்கங்கள் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

அன்றைய தினம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் விழாவிற்கு சென்று விருதை வாங்கிக் கொள்ளமுடியவில்லை. குறுஞ்செய்தியில் திரு அருணுக்கு தெரிவித்திருந்தாலும் அதன் பிறகு அவரிடம் பேசி இருக்க வேண்டும். இன்று தான் பேச முடிந்தது. அருண் மன்னிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து நீங்கள் பதிவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.

விருதுக்கு நன்றி தமிழிஸ் ஸ்டுடியோ.கம்.

..
ஜொ்மனியைச் சேர்ந்த ஹெம்ஹொட்ஸ் மருத்துவ ஆராய்ச்சி (Helmholtz Zentrum Munchen) நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்களின் உள் உறுப்புகளை படம் எடுக்கும் நவீன எக்ஸ்-ரே முறையை கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் வாசிலிஸ் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த முறை கண்டறியப்பட்டுள்ளது.

துணி முதலியவற்றிற்கு நிறமூட்டப் பயன்படுத்துவதைப் போன்ற வேதியியல் கலவையை (டை) உடலில் ஊசி போட்டு செலுத்திய பிறகு அப்பகுதியில் லேசர் கதிர்களை செலுத்தி உள் உறுப்புகளின் தெளிவான படங்களை எடுக்கும் வகையில் இந்த நவீன முறை அமைந்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படு்த்தும் நுண்ணோக்கிகள் திசுக்கள் பற்றிய ஆராய்ச்சித் துறையிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்தவிருக்கின்றன.

தேமேயென்று புல்லை நக்கிக் கொண்டிருந்த
மேஷத்தின் புட்டத்தில் கொம்பைத்
தேய்த்தது பின்னாலிருந்த ரிஷபம்.
கீழே விழுந்த சில காய்ந்த புழுக்கைகளை
அள்ள வந்த இரு மிதுனப்பெண்களில்
ஒருத்தியின் காலைக் கொட்டியது
கொடுக்கு விறைத்த கடகமொன்று.
பிடரியுதறிக் கிளம்பிய சிம்மத்திற்கு
கன்னியின் முலையில்
பாலருந்தும் பசியிருக்கையில்
ஒய்யாரித்து வந்த கன்னி ஏந்தியிருந்த
அலங்காரத் துலாமின் ஒரு தட்டினடியில்
பின்னால் வால்நீண்டெழுந்த
பொன்மஞ்சள் விருச்சிகம் ஒட்டியிருந்ததால்
குறியெய்ய வேண்டியது
சிம்மத்திற்கா, விருச்சிகத்திற்கா என்று
தனுசு குழம்பியது.
மேஷத்திற்காகப் பழிவாங்க
ரிஷபத்தின் உறுப்பில் தேய்க்க
தனக்கும் கொம்பிருக்கிறதென்று
மகரம் வீறு கொள்ள,
கும்பத்தினுள் சுவரொட்டி நீந்திக் கொண்டிருந்த
மீனம் ஒரு குதி போட்டு
இன்று யார்யாருக்கென்ன பலனென்று கேட்டதில்
போட்டது போட்டபடி போட்டுவிட்டு
போய் நின்றனவாம் எல்லாமும்
தினசரி கேலண்டரின் முன்.

கருத்துகள் இல்லை: