வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03

தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்


அ(ணை)னைப்பு …


கற்புக்கு பெயர் போன
கண்ணகியின் சிலைக்குப் பின்
காதலர்களின் சில்மிஷம்
திருமணத்திற்கு முன்பே…

காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?

அதனால் தான்…
மதுரையை எரித்த
கண்ணகியின் சிலை
கடற்கரைக்கு அருகில்
சென்னையில்…
அ(ணை)னைக்க
வசதியாக இருப்பதால்…

http://englishkaran.blogspot.com/ என்ற தளத்தில், இங்கிலீஷ்காரன் என்ற நண்பர் எழுதிய இந்தக் கவிதை எனக்குப் பிடித்துப் போய் விட்டது. அதைப் போல இல்லாவிட்டாலும் , ஏனோ தெரியாது , என்றோ நான் எழுதிய இந்தக் கிறுக்கலும் சும்மா ஞாபகம் வந்தது....

இன்று

பஸ்ஸின்
பின்னிருக்கை
தியேட்டரின்
ஒதுக்கிருக்கை
கடற்கரையோர
கல்லிருக்கை
எல்லாவற்றிலும்
அசிங்கப்பட்டுப்
போய்க்
கிடக்கிறது..
காதல்
வா
இருவரும்
சேர்ந்து...
புனிதமாக்குவோம்!




பாவம் மைக்கல் ஜாக்சன்.. இறந்த பிறகும் சர்ச்சைகளும் மர்மங்களும் பிரச்சினைகளும் அவரைத் துரத்தியபடியே....

அவரது மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் முற்றாக விலகவில்லை..
மரண விசாரணைகளுக்கு மேல் மரண விசாரணைகள் நடந்தாலும் இன்னமும் ஜாக்சனின் இறப்பு தொடர்பான சந்தேக மேகங்கள் அகன்றதாக இல்லை.

ஜாக்சன் விட்டு சென்ற சொத்துக்கள், கடன்களை, அவரது பிள்ளைகளை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற சர்ச்சைகளும் பெரிதாகி ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளன.

எனினும் பிரபலங்களின் மரணங்கள் தான் பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் பல இடங்களிலும், புகழாரங்களை சில இடங்களிலும் தோற்றுவிப்பது வழமை தானே...

இன்னும் சில பிரபலங்களுக்கோ உயிருடன் இருக்கும் போது கிடைக்காத அங்கீகாரங்கள் இறந்த பிறகே தேடி வந்து கிடைக்கும்..
பொதுவாக தமிழரில் இது மிக சகஜம்..

அண்மையில் காலமான பொப் இசை சக்கரவர்த்திக்கோ இறக்கு முன் இருந்து வந்த கறையும் இழிவான குற்றச் சாட்டும் இப்போது அவர் இறந்த பிறகு துடைத்தெறியப்படும் போல தெரிகிறது.

1993ஆம் ஆண்டு மைக்கல் ஜாக்சன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றும், தானும் ஜாக்சனும் நீண்ட காலமாக பாலியல் நடத்தைகளிலும் அதிலும் சிலவேளை வாய் வழியான பாலியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டதாகவும் ஜோர்டான் சாண்ட்லர் என்ற சிறுவன் போலீசாருக்கும் ஒரு மனோநல மருத்துவருக்கும் தெரிவித்ததை அடுத்து மிகப்பெரும் பரபரப்பு எழுந்தது.

ஜாக்சன் இதை மறுத்திருந்தாலும் கூட பெறும் பரபரப்பும் ஜாக்சனுக்கு எதிரான கருத்துக்களும் எழுந்ததை அடுத்து 22 மில்லியன் டாலர்கள் என்ற மிகப்பெரும் தொகை கைமாறியதை அடுத்து ஜோர்டானின் தந்தையார் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே ஜாக்சன் போதை மருந்துகளின் பக்கமும், வலி நிவாரணிகள் பக்கம் திரும்பவும் காரணமாக அமைந்தன என்கின்றனர் ஜாக்சனின் குடும்பத்தினர்,நண்பர்கள்.

இப்போது என்னடா என்றால் முன்பு பகிரங்கமாக ஜாக்சன் மீது பழிபோட்ட பையன் தான் சொன்னது முற்று முழுதாய் பொய் என்றும் ஜாக்சன் நல்லவர் என்றும் தன் மீது அவர் எந்தவித பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொள்ளவில்லை என்றும் சத்தியம் செய்கிறான்.

தனது அப்பா பணத்துக்காக தன்னை அவ்வாறு பொய் சொல்லச் சொன்னதாகவும் ஜாக்சனின் ரசிகரிடமும் மறைந்து போன ஜக்சனிடமும் அவரது ஆன்மாவிடமும் தான் மன்னிப்புக் கோருவதாகவும் சொல்கிறான் இந்த ஜோர்டான்.


இனியென்ன மன்னிப்பும் மண்ணாங்கட்டியும்..

அந்த மாபெரும் கலைஞனின் மாசுபடுத்தப்பட்ட புகழும் இதனால் ஜாக்சன் அடைந்த மனப் புழுக்கமும்,அவமானமும் மறுபடி துடைத்தேறியப்படுமா?

இழந்து போன சொத்தை விடுங்கள் புகழ், நற்பெயர், ஜாக்சன் இதனால் இழந்த நிம்மதியும், ஜாக்சன் இறந்ததினால் இசையுலகமும், கோடிக்கணக்கான ரசிகர் அடைந்த இழப்பும் ஈடு செய்யக் கூடியதா?

போங்கடா பணத்தாசை பிடித்த பிசாசுகளா..
இவர்களுக்கெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களா?

மறைந்த MJ இன் ஆத்மா சாந்தியடைவதாக...


புதுவையில் வன வாரத்தினை முன்னிட்டு பிக் 92.7 எப். எம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நேயர்களுக்கு மரக்கன்றுகளை வன அதிகாரி தேவராஜ் நாளை வழங்க உள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பசுமை புரட்சியை உருவாக்க வேண்டுமென்ற கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் வன வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி காடுகளை பராமரிப்போம், மரங்களை வளர்ப்போம் என்ற தாரக மந்திரத்துடன் புதுவை நம்பர் ஒன் மியூசிக் ஸ்டேஷனான பிக் 92.7 எப்.எம் மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து பச்சை நிறமே பச்சை நிறமே என்ற தலைப்பில் வன வாரத்தை கொண்டாடியது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை புதுவை பிக் 92.7 எப்.எம்மில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின்போது பசுமை தொடர்பாக நேயர்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நேயர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பதிலளித்தனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா புதுவை வனத்துறை அலுவலகத்தில் நாளை காலை நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு வனத்துறை அதிகாரி தேவராஜ் தலைமை தாங்க, புதுவை பிக் எப்.எம்மின் நிகழ்ச்சி பொறுப்பாளர் நட்ராஜ் முன்னிலை வகிக்கிறார்.

புதுவை பிக் 92.7 எப்.எம்மின் சின்ன சின்ன ஆசை லீனா தொகுப்புரையாற்ற , வன வாரத்தையொட்டி, பச்சை நிறமே பச்சை நிறமே என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெற்ற நேயர்களுக்கு வனத்துறை அதிகாரி தேவராஜ் மரக்கன்றுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை புதுவை பிக் 92.7 எப். எம் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
புதுவையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவை பெரியகடை போலீசார் நேற்றிரவில் அண்ணா சாலை மற்றும் 45 அடி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் நெய்வேலியை சேர்ந்த பிரபாகரன், செந்தில், ராஜசேகர் என்பதும், இவர்களில் செந்தில், ராஜசேகர் ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் என்பது தெரியவந்தது.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு மறுபடியும் மது குடிக்க வந்தபோது போலீசில் சிக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: