வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03

காலையில் சன் மியூசிக் இசையருவி சேனல்களை ரிமோட் துணையோடு பொறுமையோடு மாற்றி மாற்றி பார்த்ததில் புரிந்தவை..

சன் மியூசிகில் அயன் பாடல் வந்தால் அங்கே உடனே வாரணம் ஆயிரம்

இப்படியே வேட்டையாடு விளையாடு Vs தசவாதாரம் , சிவாஜி vs குசேலன் , போக்கிரி Vs வில்லு என தமிழ் பேசும் உலகுக்கு நல்ல கலை சேவை செய்கிறார்கள். வாழ்க வாழ்க
-*-

விஜய் டிவியில் விருது கொடுக்கும் நிகழ்ச்சி நல்ல விஷயம் தானே , கமல் சாருக்கு ஏகப்பட்ட விருதுகள் சும்மா அள்ளி கொடுத்தாங்க. எனக்கே டவுட்டு பார்பது கலைஞர் டிவியா இல்லை விஜய் டிவியா கனவா நிஜமா..!!??

எல்லாம் சரிதான் கமல் சாருக்கு தசாவதாரம் சிறந்த கதையாசிரியர் விருது கொடுத்தாங்க.. கமல் சார் பக்கா ஜெண்டில்மேன் ..அந்த விருதை மறக்காம Angles and demon's எழுதிய Dan Brownக்கு அனுப்பி வைச்சுடுவாரு.. உலக நாயகன்னா சும்மாவா....

-*-
சென்ற வாரம் திருச்சிக்கு ஒரு நாள் அவசர பயணம்.. திரும்பி வர KPN travelsல் திருச்சி -> பெங்களூர் மதிய நேர வோல்வோ பஸ்ஸில் புக செய்து திரும்பினேன்..

எல்லாம் நல்லா தான் இருந்தது. நாமக்கலை தாண்டுவதற்க்குள் 10 தடவை பஸ்ஸை நிறுத்தி ஏதோ செஞ்சாங்க. அப்பவே புத்திக்கு உரைச்சு இருக்கனும்.. இல்லையே .

.
பஸ்ஸுல ஏசியே வேலை செய்யலே ..மதிய நேர கொடுமையான வெயில் வேற.. டிரைவர்கிட்ட சொன்னா சார் சேலம் போனவுடன் பஸ்ஸை மாத்திடலாம் சார்ன்னாரு..

மோசமான பயணம். மூட்டைபூச்சி கூட்டணி இன்னக்கு சம்ம வேட்டைன்னு புகுந்து விளையாடுது..

சேலம்த்திலும் பஸ் மாற்றபடவில்லை..புகார் கொடுக்க போன் செய்தால் அதேல்லாம் அப்படி தான் சார் என்று பதில்.. பொறுத்து பார்த்து முடியாமல் எல்லா பயணிகளும் சேலம் தாண்டியவுடன் தொப்பூர் காட்டில் வண்டியை நிறுத்தி வேற வண்டியை கொண்டு வர சொன்னோம்.. இதோ அனுப்பறேன்னு சொன்னாங்க..

வரும் ஆனா வராது கதை தான்..8 மணி ஆச்சு.. பெங்களூருக்கு 9 மணிக்கு போய் சேர வண்டி ...தர்மபுரியை கூட இன்னும் தாண்டலை..

அதே வண்டியில் பயணம் தொடர்ந்தது..
நடு ராத்திரியில் பெங்களூர் வந்து சேர்ந்து அல்லாடியது தனி கதை..

சில வருடங்கள் முன் வரை KPN travels நிறுவனத்தின் சேவை அற்புதமாக இருந்தது. என்ன ஆச்சுன்னு தெரியலை ,இப்பவேல்லாம் அவங்க வண்டியல போவதற்க்கு பதில் பேசாம TVS50யை வாடகைக்கு வைச்சு ஊர் போய் சேரலாம்ன்னு தான் தோணுது. கே பின் என் பேருந்துகளில் அவஸ்தை படுவது இது எனக்கு முதல் முறை இல்லை..

மரியாதையே என்ன வென்று தெரியாமல் பேசும் டிரைவர் க்ளீனர்கள், மூட்டை பூச்சி பண்ணையாக இருக்கு பஸ் ஸீட்டுகள் , பராமரிப்பே இல்லாத பேருந்துகள்..

விகடனில் சில வருடங்கள் முன்னர் கே பி என் உரிமையாளர் , தமிழ் நாட்டில் ப்ளைட் சர்வீஸ் விரைவில் ஆரம்பிப்போம் என்று சொல்லி இருந்தார்.. இதே ரேஞ்சில் போனால் ப்ளைட் என்ன ராக்கேட் சர்வீஸ் கூட ஆரம்பிக்கல்லாம்...
-*-

குடும்பத்தார் பட காமேடி சீன் களை பார்த்து கொண்டு இருந்தேன்.
.சிங்கம் புலி என்ற இயக்குநர் கலக்கி இருந்தார்.
. அவர் தொடர்பாக இணையத்தை நோண்டிய போது கிடைத்த லிங்க்.. ஒரிஜினல் சிங்கம் புலி.. Liger
http://www.liger.org/

நீங்களும் பாருங்க interesting ஆக இருக்கும்

இன்னைக்கு கொஞ்சம் ஆணி அதிகமாயிடுச்சு. ஓய்வுக்கு கொஞ்சம் யூடுயூப் பக்கம் போயி லாரல் அன் ஹார்டி பாத்துகிட்டு இருந்தேன். சின்ன வயசுல நான் அடிக்கடி பார்க்குற கேசட் லாரல் அன் ஹார்டி, சார்லி சாப்ளின். அவ்வளவா சிரிப்பு வரலியா, சார்லி சாப்ளின தேடி பார்த்தேன்.  கீழ இருக்கும் வீடியோ மாட்டுச்சு. பாக்க ஆரம்பிச்சேங்க.. என்னவோ தெரியல சிரிப்பு பொத்துகிட்டு வந்துருச்சு நானும் அடக்கி அடக்கி பாத்தேன். ம்ஹூம்

ஹாப்பி பர்த்டே விஜய்.

நான் விஜய் ரசிகன் இல்லை என்றாலும். வலை பதிவர்களில் 90 சதவீதமானவர்கள் விஜய் என்னும் நடிகனை தரம் தாழ்த்தி எழுதுவதை கண்டு தான் நானும் கொஞ்சம் விஜய் பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். ஒரு விஷயம் சொல்ல வேண்டும், எல்லாரும் விஜய் என்னும் நடிகனை தூற்றுவதால் நானும் அவரை தூற்றினால் புகழ் பெறலாம் என தான் எல்லாரும் விமர்சிக்கிறார்கள். எதோ நான் விஜய்க்கு வக்காலத்து வாங்குகிறேன் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் எல்லாம் எந்த அளவு கோலை வைத்து விஜய் படங்களை எல்லாம் மொக்கை என விமர்சிக்கிறீர்கள் என தெரியாது

ஏனெனின் விஜய் படம் என்றால் மொக்கை, ஆனால் கிட்ட தட்ட அதே மாதிரி கதை நடிப்புடன் வரும் அஜித், சூர்யா, விக்ரம் படங்கள் என்றால் மிக சிறந்த கருத்தாளம் மிக்க படங்களாக தான் நம்ம பதிவர்கள் அநேகமானவர்கள் நினைத்து இருக்கிறார்கள். இதற்கு சிறந்த ஒரு உதாரணம் வில்லு படத்தில் விஜய் யும், அயனில் சூர்யாவும் ஒரே மாதிரி தான் சண்டை காட்சியில் நடித்திருக்கிறார்கள், ஆனால் இரண்டு படத்தையும் விமர்சிக்கும் நம்ம பதிவர்கள் அது குப்பை அனால் அயன் மிக சிறந்த என கூறுகிறார்கள். என்னை பொறுத்த வரையில் இரண்டு படங்களுமே நல்ல பொழுது போக்கு படங்கள் அவ்வளவுதான் .

2 நாளைக்கு முன்னாலே "ஹமாம்" சோப்பு விளம்பரத்தை விஜய் பட DVD உடன் ஒப்பிட்டு எழுதி "நல்ல வேலை அஜித் நடித்த வரலாறு படம் வாங்கி வைத்ததாக" கூறி ஒரு பதிவு படித்தேன். இது என்னமோ அஜித் நடித்த வரலாறு கல்வி சம்பதமாக மிக முக்கிய தகவல்களை கூறும் படம் என்ற ரீதியில் எழுத பட்டு இருக்கின்றது. உங்கள் மொக்கை என வரையறுத்திருக்கும் வரையறையில் வரலாறு படம் இல்லையா? என்னை பொறுத்த வரையில் அதுவும் ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம் அவளவு தான். ஆனால் நீங்கள் மொக்கை என வரையறுத்து இருக்கும் வரையறையில் அந்த "வரலாறு" படம் ஏன் இடம் பெற வில்லை?

மேலும் சொல்லுகிறேன் நான் விஜய் ரசிகனோ அல்லது அஜித் விரோதியோ இல்லை. நீங்கள் மொக்கை என வரையறை செய்தால் நடு நிலைமையோடு செய்யுங்கள், எல்லாவற்றையும் விமர்சியுங்கள். தனி ஒருத்தனை மட்டும் விமர்சிக்க வேண்டாம். அசிங்கமாக இருக்கின்றது. எந்த நாளும் எதாவது ஒரு பதிவர் விஜய் என்னும் நடிகனை கேவலமாக எழுதி இருப்பார். இதை பார்த்து பார்த்தே வெறுத்து போய் தான் இந்த பதிவை எழுதுகிறேன். என்னை பொறுத்த வரையில் எல்லா நடிகர்களும் ஒன்னு தான். ஒரே விஷத்தை ஒருத்தர் செய்தால் நல்லது மற்றவர் அதே விசயத்தை செய்தால் எதோ உள்குத்து என்கிற ரீதியில் எல்லா விசயத்தையும் பார்காதீர்கள்.

நான் இங்கு எழுதியது யாரையாவது பாதித்திருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்

courier

ஒரு பெரிய தொழிலதிபர் சாகும் தருவாயில் இருந்தார்.குழந்தைப் பருவத்தில் பசி,பட்டினியை அனுபவித்து, முட்டி மோதி,மேடு பள்ளங்களைப் பார்த்து வாழ்க்கையில் முன்னேறியவர். இன்று கோடிகளுக்குச் சொந்தக்காரர்.

அந்த வேளையில் எல்லோரும் போல தன் மகனை அழைத்து தொழிலதிபர் அறிவுரைக் கூறத் தொடங்கினார்.

"மை..டியர் சன்...நான் சொல்வதை கவனமாகக் கேள்.என் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நேர்மை. இரண்டு சமயோசித புத்தி."

மூச்சு விட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.

"நான் யாருக்காவது கரெக்ட் டைம்ல சரக்க டெலிவரி பண்றேண்ணு வாக்குறுதி கொடுத்துட்ட ,இடி, மின்னல், காற்று, புயல் வந்தாலும் அல்லது கம்பெனியே திவால் ஆனாலும் அல்லது வேறு எது வந்தாலும் கஸ்டம்ர்தான் முக்கியம். நான் சொன்ன டைம்ல சரக்க டெலிவரி பண்ணிடுவேன் அதான் நேர்மை. வாக்குறுதிய காப்பத்துவேன்."

"புரிஞ்சிடுச்சு அப்பா.. அப்படியே செய்கிறேன்...சரி..சமயோசித புத்திஎன்றால் என்ன?

"அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே"

http://raviaditya.blogspot.com/feeds/posts/default

கருத்துகள் இல்லை: