சென்ற மதுரை பதிவர் சந்திப்பில் நண்பர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார், 'மதுரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியடையாமலும், இன்னும் இது ஒரு பெரிய கிராமமாகவே இருக்கிறதே, ஏன்?' தெரிந்தவர்கள் சொல்லுங்கள், ப்ளீஸ்.
இம்முறை திருச்சி விமான நிலைத்திலிருந்து மதுரை செல்வது இந்த அளவுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. முன்பொரு முறை திருச்சியில் இருந்து மதுரைக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் ஆனது. இம்முறை வெறும் 2 மணி நேரங்கள் தான். நான்கு வழிச்சாலை கட்டுமான பணி மேலூர் வரை அனேகமாக அனைத்து இடங்களிலும் முடிந்துவிட்டிருந்தது. ஊர்களுக்கு வெளியேயே சாலையை கொண்டுபோயிருப்பதும் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்களுக்கான அழகான நிழற்குடைகள் நிருவியிருப்பதும் இதன் சிறப்பு எனலாம். இடைப்பட்ட சிறிய பணிகள், மீதமிருக்கும் பாலம் கட்டுமானம் மற்றும் மேலூர் – மதுரை சாலையும் நிறைவடைந்துவிட்டால் 1 1/2 மணியில் திருச்சி – மதுரை யை கடக்கலாம் என நினைக்கிறேன். நகருக்கு வெளியே கட்டப்பட்டு வரும் சுங்க வாயில்கள்தான் வயிற்றில் சுண்ணாம்பைக் கறைக்கிறது.
மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச நிலையமாக்கும் பணிகள் நடப்பதாக அதுவும் அண்ணன் அமைச்சரான பிறகு விரைந்து நடப்பதாக வரும் தகவல்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் எம்போன்றோருக்கு மகிழ்ச்சி தருகிறது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயனடைவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி இருக்கும் சித்திரை வீதி நான்கிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என முன்னமே அறிந்திருந்தாலும், தடைக்குப்பறகு அந்தப்பகுதிக்கு இதுவரை சென்றதில்லை. ஒரு முக்கிய பிரமுகரைக்காண நேரம் கேட்கையில் , 'கோயிலைச் சுற்றி தான் காலையில் நடப்பதாகவும் நீயும் வந்தால் நடந்துகொண்டே பேசலாமே' என்றதால், அவரைக் காண அதிகாலை ஆறு மணிக்கே அங்கு செல்லவேண்டி வந்தது. தட்டோடு போன்ற கற்கல் பதிக்கப்பட்டு சுற்றப்பாதை நன்றாகவே பராமறிக்கப்பட்டு வருகிறது. மாடுகள் குறுக்கே வராமலும் இன்னும் சற்று துப்புரவிலும் கவனம் செலுத்தினால், காலையில் வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.
பெரியார் பேருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் அகலமாக கட்டியிருந்தாலும், பேருந்து நிலையத்தை சுற்றிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மாவட்ட போக்குவரத்து ஆணையரும் அடிக்கடி போக்குவரத்தில் எத்தனையோ மாற்றம் கொண்டுவருகிறார். ஒன்றும் மாறியதாக இல்லை. மாநகராட்சி பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி அதாவது ஜெயராம் பேக்கரி பகுதியில் தான் அதிகமான வாகன நெரிசலை காண முடிந்தது. அந்த பகுதியை கடப்பதுதான் எனக்கும் சிரமமாக இருந்தது. எனவே அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்தமும் அதை ஒட்டியுள்ள சிறு கடைகளும் மற்றும் மாநகராட்சி கட்டிடமும் சற்றே ஒதுக்கப்பட்டு அந்த சாலை விரிவு படுத்தப்படாத வரை வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என நினைக்கிறேன்.
கூட்ட நெரிசல் இல்லாது இருந்த மேலமாசி வீதி தெற்கு பகுதியில் ஆலுகாஸ், பீமா நகைக்கடைகளும் தற்போது போத்தீஸூம் வந்த பிறகு நடக்க கூட இடமில்லை. போத்தீஸ் திறப்பு தினத்தன்று அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பைபாஸ் ரோடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. காளவாசல் ஜோத்தீஸில் இருந்து நாயுடுஹால், அழகப்பச்செட்டி அசைவ உணவகம் மற்றும் பல கடைகள் புதிது புதிகாக முளைத்துள்ளது நகர் விரிவடைவதையும் நுகர்வோர் தேவை அதிகரிப்பதையும் காட்டுகிறது.
மதுரையில் நகர்புறச் சாலைகள் மேம்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் உள்கட்டுமானம், அந்நாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாதது. ஆக இனி மெல்ல மதுரை வளர்ச்சியடையும் என நம்பலாம்.
நன்றி.
விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம் தற்படர்நதமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினள் என்ப நம் மாண் நலம் நயந்தே.
குறுந்தொகை – 74.
தலைமக்கள் இருவரும் பிரிவில் வாடும் நிலையில் தோழி தலைவனின் குறையைத் தலைவி மறுக்காமல் ஏற்கும் வகையில் கூறுகிறாள்...
தலைவன் தலைவி மீது அருளின்றி இருந்தாலும் தோழி தலைவனைக் குறை கூறுவதைத் தலைவி விரும்புவதில்லை. அந்நிலையில் தலைவனின் சிறப்பினைத் தலைவி எடுத்துரைப்பாள்.
ஆனால் இங்கு தலைவனின் குறையைத் தோழி கூறுகிறாள். அதுவும் அதனைத் தலைவி மறுக்கமுடியாதவாறு கூறுகிறாள்..
சென்ற இடுகையில் மீனெறி தூண்டிலார் பற்றிப் பார்த்தோம். அதில் யானை வளைத்த மூங்கில், கவண்ஒலி கேட்டு யானை அஞ்சிக் கைவிட்டவுடன் நிமிரும். அது மீனெறி தூண்டில் போல இருக்கும் எனவும் உரைக்கப்பட்டது.
அது போலவே, இப்பாடலிலும்........
நெடுநாள் பிணித்த கட்டு அவிழ்த்துவிடப்பட்ட குதிரையானது துள்ளி எழும் எழுச்சியைப் போல வளைத்துப் பின் விட்டமையால் மூங்கில் மேலேழுந்து மேகத்தைத் தீண்டும். தன்மையுடைய மலைநாட்டின் தலைவன்,
யாம் தன்னை நினைத்து மெலிதலை அறியாதவனாகவும், தானும் பசுவினால் விரும்பப்பட்ட ஏறு போல நமது அழகினை எண்ணி மெலிந்தனன் என்றாள் தோழி..
தலைமக்கள் இருவரும் ஒருவரை எண்ணி ஒருவர் என இருவரும் உடல் மெலிந்தனர். தலைவன் தலைவியை வரைந்து கொண்டு இந்நிலையை மாற்றலாம் என்பது தோழியின் எண்ணமாகும்.
மூங்கில் இரவில் தானே வளையும். பகலில் வளைத்தாலும் நிமிரும் அதுபோல தலைவன் இரவுக்குறியில் தடையின்றி சந்திக்கிறான். ஆனால் பகற்குறியில் கிடைத்தற்கு அரியனாகிறான்.
நெடுநாள் கட்டப்பட்ட குதிரை கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு விரைவாகச் செல்லுமோ, அதுபோல மூங்கிலின் நிமிர்தல் இருந்தது என்று மூங்கிலின் விசைத்து எழுதலுக்கு குதிரையின் துள்ளிச் செல்லுதல் உரைக்கப்பட்டது. இவ்வுவமை மிகவும் பொருத்தமாக அமைந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.
விட்ட குதிரை என்ற தொடரின் சிறப்பு கருதியே இப்பாடலைப் பாடிய புலவருக்கு " விட்ட குதிரையார் " எனப் பெயரிட்டனர்.
இப்பாடலில் விட்ட குதிரை என்பது தலைவனின் பண்புநலனையும் குறிப்பதாக அமைகிறது.
விட்ட – என்ற சொல் பொருளுக்கும் கூட்டி உரைக்கப்படுகிறது. இயல்பாகவே தலைவன் நிமிர்ந்து நிற்கும் தலைமைப் பண்பு உடையவன்.ள ஆயினும் நலம் நயந்து தலைவிக்காக வந்தனன் எனப் பொருளுடனும் இயைபுற வந்துள்ளது.
இப்பாடல் வழி தலைமக்களின் பிரிவால் இருவரும் உடல் மெலிந்தமையும், தலைவியை விரைந்து வரைந்து கொள்ளாதது தலைவனின் குறையென்றும் தோழியால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விட்ட குதிரை என்னும் உவமையால் இப்பாடலின் ஆசிரியர் பெயர் பெற்றமையும் அறியமுடிகிறது.
வன்னிச் சமரிற்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டுத் தளங்களில் தளம்பல் நிலை காணப்பட்டிருந்தது. இதன் போது பல செய்திகள் பல்வேறு ஊகங்களினடிப்படையில்ட எழுந்துமிருந்தன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமது அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகம், தனது அதிகாரபூர்வமான இணையத்தளம் ஒன்றினை இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தொடர்ந்து வாசிக்க









Priyamani latest Photo gallery Wallpapers stills pics, Priyamani pictures, Priyamani latest movie Puthiya Mugam, Puthiya Mukham movie gallery, Puthiya Mukham priyamani, prithiviraj stills, Puthiya Mukham priyamani sexy photo gallery, Puthiya Mugam movie review, Puthiya Mukham movie details,
![[Sexy-Item-Girl-Sonia+Hot-Photos-15.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2fJRmDOkbSBnoBXJOfIy4eHK7sB45pE5N6G5GdV4Q83LPh1kQquYiqgc2QHKEM07hNqTqLCZJgTZG1WbnqgsRgaZfP9Bu8e0fk8wYW_FAF6pcAAAonGS-4zy9SOPocuCGfz3FHEf6_dAF/s1600/Sexy-Item-Girl-Sonia+Hot-Photos-15.jpg)






![[Sexy-Item-Girl-Sonia+Hot-Photos-19.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0R9B5FXMg_Uu9mnIcdCuH4ClQdEwM02X1LZbHCxwl8go0YXb7eA7pPmix5ikEVNwsttU8N98bfpj3wFZUs8_LUZMN2pNphGwl00_TX0qerQFb3-dmMvDzdDkjsVQoSiAWzRMr5jMU41yZ/s1600/Sexy-Item-Girl-Sonia+Hot-Photos-19.jpg)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக