
பிராமணர்களைப் பார்த்த மக்கள் எல்லாரும் பிராமணர்களாகப் பார்க்கிறார்கள். பிராமணர்கள் என்றால் மற்றவனைத் தாழ்ந்தவன் என்றும் தொடக்கூடாதவன் முதலியவன் என்று எண்ணுவதுதான் என நினைக்கிறார்கள்.
உதாரணமாக ஒரு தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவரும் ஒரு பிராமண ஸ்திரீ குடத்தில் கொஞ்சம் தண்ணீரும் கையில் கொஞ்சம் புளியும் கொண்டு வருவதோடு முகத்தையும கோணிக்கொண்டு வருகிறாள். குழாயண்டை வரும்போதே நிலத்திலெல்லாம் தண்ணீர் தெளித்துக்கொண்டு குழாயின் மேலும் தண்ணீரைக் கொண்டு புளியால் குழாயை தேய்த்து கழுவியபிறகு தண்ணீர் பிடிக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிராமணரல்லாத இந்து ஸ்திரி தானும் அரைக்குடம் தண்ணீரும் கையில் ஒரு புளி உருண்டையும் கொண்டு முகத்தை இழுத்துக்-கொண்டு ஷ பிராமணிஸ்திரி செய்தது செய்தது போலவே செய்துவிட்டு தண்ணீர் பிடித்துக்கொண்டு போகிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு மகமதிய ஸ்திரீயும், கிருஸ்தவ ஸ்திரீயும் அதுபோலவே வரும்பொழுதே முக்கால் குடம் தண்ணீரையும் முன்னையதிலும் பெரிய புளி உருண்டையையும் கொண்டு முகம் கோணிக்கொண்டு வருவதோடல்லாமல் வாயில் முணுமுணுத்துக்கொண்டே வந்து தெருவெல்லாம் தண்ணீர் தெளித்து குழாயையும் தேயத்தேய கழுவித் தண்ணீர்பிடித்துப் போகிறாள். பஞ்சம ஸ்திரீ அந்த வீதியில் இல்லாததால் அவர்கள் இதைப்பழக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இப்படி ஒருவரைப் பார்த்து ஒருவர் பழகியே தீண்டாமையென்னும் தொத்துநோய் தேசம் முழுவதும் பரவிவருகிறது.
தீண்டாமை ஒழிய வேண்டும் என்று மகாத்மா காந்தியும் மற்றும் பல ஜீவகாருண்-ணிய முள்ளவர்களும் ஒரு பக்கம் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் போது பாலக்காடு முனிசிபல் பொது வீதியில் ஈழுவ சகோதரர்கள் நடக்கக்கூடாது என்று 144 உத்திரவு போட்டதும், (ஈழுவர்கள் என்பது சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ் ஸ்ரீமான். சி.கிருஷ்ணன் அவர்களுடைய ஜாதியார்தான்) எவ்வளவு அக்கிரமமாகும். இதை நாம் யார் பேரில் சொல்லுவது. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் எந்த விதத்தில் காரணமாவாகள்? பிராமண அரசாங்கத்தார் தானே இவ்வக்கிரமங்களுக்கும், கொடுமைக்கும், பாத்திரமாக வேண்டும். இந்த பிராமண அரசாங்கம் தொலைய வேண்டும். இந்த பிராமண தர்மம் தொலையவேண்டும் என்று பாடுபடுவதை விட மக்களுக்கு வேறு என்ன தேச சேவையிருக்கிறது? இதைவிட வேறு ஜீவகாருண்யம் என்ன இருக்கிறது? இதைவிட வேறு தர்மம் என்ன இருக்கிறது? இதை அறிந்துதான் தேசபந்து தாசர் என்னுடைய சுயராஜ்யம் பிராமண ஸ்திரீகளைப் பிடித்து தீண்டாதாருக்கு கொடுப்பதுதான் என்றார் போலும்! இதை அறிந்துதான் சர்.பி.சி.ரெ. அவர்கள் பிராமணர்களை எல்லாம் சாக்கில் போட்டுக்கட்டி வங்காளக்குடாக் கடலில் போடவேண்டும் என்று சொன்னார்கள் போலும்! சுவாமி விவேகாநந்தர் பிராமண மதம் இருக்கும்வரை இந்தியா அடிமைத்தனத்திலிருந்து மீளாது என்று சொன்னார் போலும்! மகாத்மா காந்தி - இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிட பிராமணர்கள் செய்த கெடுதி குறைந்ததல்ல வென்று சொன்னார் போலும்! சுவாமி சிரத்தானந்தர் இந்த மதத்திற்கு நாசத்தை விளைவித்தவர்கள் பிராமணர்தான் என்று சொன்னார் போலும்! - இனி யார் இவர்களுக்கு நற்சாஷிப் பத்திரம் கொடுக்க வேண்டுமோ? தெரியவில்லை! இவர்கள் தான் சட்டசபைக்கும், மந்திரிவேலைக்கும், தாலுக்கா போர்டு, முனிசிபாலிட்டிக்கும், சர்க்கார் உத்தியோகங்-களுக்கும் போய் நமக்கு நன்மை செய்பவர்களாம்!
------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 22-11-1925
இரண்டாம் நாளான இன்று, முதல் நாள் நிகழ்ச்சியின் சிறப்புகளைக் கேள்விபட்டு கூடுதலான நோக்கர்கள் வருவார்கள் என நினைக்கிறேன். ஆனால் நேற்றே அரங்கம் நிறைந்து காணப்பட்டது. விழாக் குழுவினர் எப்படி ஒழுங்கு செய்யப் போகிறார்கள் எனக் காண்பதற்கு மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.
நான் இன்றைக்கும் ஓரிரு மேடை நிகழ்ச்சியில் இடம் பெற வேண்டி இருப்பதால், வேறு யாராவது பதிவரொருவர் பிற்பகலில் பதிவர் கூடலுக்கு ஏற்பாடு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். பதிவர்கள், தமிழுக்கான செய்தியாளர்களாய் மாறுவதற்கு இது மிகவும் உதவிகரமாய் இருக்கக் கூடும். எனது அலைபேசி எண்: 980 322 7370.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அரங்கத்திலிருந்து இடுகைகள் தொடரும். ஆதரவும் ஊக்கமும் அளித்துவரும் அனைவருக்கும் நன்றி பாராட்டி, விழா வளாகத்தை நோக்கி!!
பழமைபேசி.
வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): முதலநாள் பற்றிய கண்ணோட்டம்!
நாட்டு மக்கள், அவர்களது பிரதிநிதித்துவ சபையாகிய நாடாளுமன்றம் இரண்டையும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அவமதித்துள்ளது. இரவோடு இரவாக பெட்ரோல் - டீசல் விலையை ஏற்றியிருக்கிற நடவடிக்கையை இப்படித்தான் வர்ணிக்க முடியும்.
பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா மூன்று நடவடிக்கைகளை மேற் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஒன்று - பெட்ரோலிய பொருள்களின் விலைகள் உயர்த்தப் படும்; இரண்டு - பெட்ரோலிய எண்ணெய் நிறு வனங்களின் இழப்பை ஈடு கட்டும் வகையில் அரசு கடன் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கப் படும்; மூன்று - கச்சா எண்ணெய் இறக்குமதி வரி குறைக்கப்படும். ஆனால் மற்ற இரண்டு அறிவிப்புகளை, திறந்துவைத்த பெட்ரோல் போல் ஆவியா கும்படி விட்டுவிட்டு, விலை உயர்வு நடவடிக்கையை மட்டும் அவசர அவசர மாக எடுத்திருக்கிறார். வழக்கமான அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெற விருந்த நிலையில், ஒரே ஒருநாள் கூட காத்தி ருக்கத் தயாராக இல்லாமல் புதன்கிழமை மாலையே இந்த முடிவை எடுக்கச் செய்திருக் கிறார் பிரதமர்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலே, அதுவும் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் இந்த முடிவை எடுத்ததன் மூலம், இந்த நாடாளு மன்றத்தைத் தேர்ந்தெடுத்த மக்களை எள்ளி நகையாடியிருக்கிறது அமைச்சரவை. இந்த லட்சணத்தில், மண்ணெண்ணெய், சமையல் எரி வாயு ஆகியவற்றின் விலையையும் உயர்த்தலாம் என்று சில அமைச்சர்கள் ஆலோசனை கூறி னார்களாம். கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கி ரஸ் தலைவர் சோனியாகாந்தி அதை ஏற்க மறுத்துவிட்டாராம். இதன் அர்த்தம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வோடு சேர்க்காமல், பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் இவற்றின் விலையை யும் உயர்த்துவார்கள் என்பதுதான்.
உடனடியாக மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப் படாததால் மக்க ளுக்கு நன்மை எதுவும் இல்லை - ஏனென்றால், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக, போக்குவரத்தையும் டீசல் ஜெனரேட்டர்களை யும் சார்ந்திருக்கும் பொருள்களின் விலைகள் சங்கிலித் தொட ராய் எகிறிவிடும். இன்று போலவே உலகச்சந்தை நிலவரத்தைக் காரணம் காட்டி ஏற் கெனவேபெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த் தப்பட்டபோது மேலே ஏறிய விலைகள் அந்த உயரத்திலேயே நின்றுவிட்டன. இப்போது, கிட்டத்தட்ட அதே அளவுக்கு மறு படியும் பெட் ரோல் - டீசல் விலைகள் உயர்த் தப்பட்டுள்ளன. போக்குவரத்து நிறுவனங்களின் சங்கங்கள், சரக்குக்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித் துள்ளது ஒரு அபாய மணிதான்.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்குச் சிவப்புக்கொடி காட்டி தடுக்கக்கூடிய இடதுசாரி கட்சிகளின் ஆதரவைச் சார்ந்து இந்த அரசு இல்லை என்ற துணிச்சலும், தேர்தல் தீர்ப்பை இப்படிப்பட்ட அநீதியான நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டியிருக்கிற பச்சைக் கொடி என்று எடுத்துக் கொள்ளும் ஆணவமுமே இதன் பின்ன ணியில் இருக்கிறது. இதை மக்கள் அனுமதித் துக் கொண்டிருக்கமாட்டார்கள். உடனடியாக வெடித்துள்ள போராட்டங்கள் அதன் வெளிப் பாடே.
![[Meenakshi-hot-sexy-01.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitsbIjp3pWbP9Eoe04vvohd2o-SZvO5lw0d7tR8ehfulkCzPJhEj9V99ORGlaEhuEOx3xvG0OLRTijOWXXjzSSNkKD6PZjpvnx3bUaHHd5TkjFvYPGPa373SjereHGM-Af4kc28eQRMAk/s1600/Meenakshi-hot-sexy-01.jpg)
![[Meenakshi-hot-sexy-03.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-mHCDFDgNXOw0QHnHFZwiICqmG5UFCzeUqQy0XQzJ4kNFHs0sagVI_hHJ5r7kXh_abXFXaRTmwM2kWPHaOqYbSW86kgcYVD9IcU-Ps2zibjCXwhQty6_JvkN8bZsqhdzxTuW25WjDgME/s1600/Meenakshi-hot-sexy-03.jpg)






![[Meenakshi-hot-sexy-02.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzdl88Ucqc708-zL-sV8RIldMlR0BN3j1CXlr48itO2oOBK3-w9AjMOr5IqK3uvHDJs7AZs0WUTl4SpRR6B-KMnz09UWxlucog2Ml5QshNCYED-deK05QTlxXLdhCF4Tp63j3rmCCLq7U/s1600/Meenakshi-hot-sexy-02.jpg)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக