சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பா திடீரென இறந்து போனதால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. இதனால் நான் இரவுகலாக உழைத்தேன். என்னோடு சேர்ந்து அம்மாவும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார். இதனால் தான் என்னால் எப்போதும் இன்ப-துன்பங்களை சமமாக பார்க்க முடிகிறது.
எங்கள் வீட்டில் வறுமை தாண்டவமாடிய சமயத்தில் என் அப்பா பயன்படுத்திய இசை கருவிகளை விற்று விடும்படி சிலர் கூறினார்கள். ஆனால் என் அம்மா, இந்த கருவிகள் என் மகனுக்கு பயன்படும் என்று கூறி விற்க மறுத்து விட்டார். என் அம்மாவின் விருப்பப்படி நான் இசை அமைப்பாளராக மாறினேன். ரசிகர்களுக்கு புதுமையான பாடல்களை வழங்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.
இடையில் எனக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த பிறகு பாராட்டு விழாக்கள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இதனால் எனது இசை அமைக்கும் நேரமும் வீணாகி வருகிறது. இதுதான் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.
இதனால்தான் தற்போது நான் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறேன்.
எனக்கு சமீபகாலமாக இந்தி-தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. சில டைரக்டர்கள் சிம்பிளான கேரக்டர்தான். சும்மா முகத்தை காட்டிவிட்டு சென்றால் போதும் என்று கேட்கிறார்கள். அவர்களிடம் எனக்கு சினிமாவில் நடிக்க தெரியாது. தயவு செய்து ஆளை விடுங்கள் என்று கூறி மறுத்து விட்டேன்.
எனக்கு சுத்தமாக நடிக்கத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. மியூசிக் ரிக்கார்டிங் தியேட்டரில் ஓரளவு நடிப்பேன். அதாவது ஊழியர்களிடம் கோபப்படுவது போல் நடிப்பேன். அப்போதுதான் அவர்கள் வேலையை சீக்கிரம் முடிப்பார்கள். உண்மையில் எனக்கு கோபமே வராது. அந்த அளவுக்கு மனம் பக்குவப்பட்டிருக்கிறது. இந்த பக்குவத்தை வரமாக அளித்ததும் இசைதான் என்கிறார் ஏ.ஆர். ரகுமான்.


More than a Blog Aggregator

by சத்ரியன்

திருப்பித் தந்துவிடு
என்
எல்லாவற்றையும்.

உன்னை
நினைத்த கணங்களை,
உன்னோடு
பேசிய வார்த்தைகளை,
உனக்கென
எழுதிய எழுத்துக்களை.

நாம்
தனிமையில் சந்தித்தபோது
நம்மருகில் அமர்ந்து
நம்மை ரசித்த
குருவிகளின்
குறும்புப் பார்வையை.

அருகருகே
கலந்துப் பிரிந்த
பிரிந்துக் கலந்த
மூச்சுக் காற்றை.

நாள்தோறும்
பிரிந்துச் செல்கையில்
அசைந்த
கை அசைவுகளை.

நான் உனக்கெனவும்
நீ எனக்கெனவும்
எண்ணிய எண்ணங்களை...

...இனி
எதுவும்
உன்னிடம் வேண்டாம்.

என்
எல்லாவற்றையும்
திருப்பித் தந்துவிடு.


tamilvanan-kelvi-pathil.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

மு.எத்திராஜ், சென்னை-15.

மாவோயிஸ்டுகள் பிரச்னை?

சிறுகாயம் பட்டதுமே மருத்துவம் பார்க்காமல் புண்ணாகி, சீழ்வடியும் வரை இதைக் கவனிக்காத பாமரன் செய்கிற தவறை மன்மோகன் சிங் அரசும் செய்வது புரியாத புதிராக உள்ளது.


எஸ்.கமால் பாட்ஷா, திருநெல்வேலி.

ஓட்டுப்போடும் போது கை விரலில் மை வைப்பதேன்? உட்பொருள் என்ன?

பெரிய அளவில் விரைவில் கரிபூசப் போகிறோம் என்று சொல்லாமல் சொல்லும் விதம் இது!


எம்.சொர்ணவேல், சிங்காநல்லூர்.

உங்களை மந்திரியாக்கி, அதுவும் நிதி மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டுமென்று ஆசை. என்ன சொல்லுகிறீர்கள்?

மந்திரியாக்கினாலே போதும்! அதிலே நிதி மந்திரியெல்லாம் வேண்டாம்! மந்திரியானாலே ‘நிதி’தானே?


என்.பூங்காவனம், கொடுங்கையூர்.

உடல் நல மருத்துவர், இலக்கிய மருத்துவர் மீண்டும் இணைவார்களா?

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மருத்துவரின் வரிசைக்கிரமப்படி அடுத்த தேர்தலுக்கு இலக்கிய மருத்துவருடன்தான்! தேர்தலுக்குத் தேர்தல் சொல்லி வைத்தாற்போல் மாறுகிறவர் யார்?


ஏ.அப்துல்ஹரீம், வேலூர்.

பாகிஸ்தான் உலக சேம்பியன் என்பதை ஜீரணிக்க முடிகிறதா?

கிரிக்கெட் ஓர் அதிசய ஆட்டம். இதன் அதிர்ஷ்டக் காற்று எந்தப் பக்கம் வீசுமென்றே தெரியாது. உலகத் தர வரிசையில் பல காலமாய்ப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த பாகிஸ்தானுக்குப் புது வாழ்வு வந்திருக்கிறது. பயிற்சி ஆட்டத்தின்போது இந்தியாவிடமும் சுமாரான அணியான இங்கிலாந்திடமும் அடி வாங்கிய பாகிஸ்தான் உலக சாம்பியனா? இந்தப் பெருமையை இன்னும் இரு ஆண்டுகள் காப்பாற்றிக் கொள்வதைப் பொருத்து பின்னர் இன்னும் கமெண்ட் அடிப்போம்!


டி.ஐயப்பன், ஹைதராபாத்.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறதே?

மிரட்சி வேண்டாம். பன்றிக் காய்ச்சலெல்லாம் நமக்கு ஜுஜுபி. இயல்பிலேயே நமக்கு எதிர்ப்புச் சக்தியும் தாங்கும் திறனும் அதிகம். கூவத்தில் குளித்தாலும் நம்மவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. மினரல் வாட்டர் குடித்தாலும் அமெரிக்காவிலிருந்து வந்து தங்குபவர்களுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது. பாதுகாப்பற்ற, ஆரோக்கியமற்ற சூழலுக்கு நம்மவர்கள் பழகிப்போனார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறக்குமதி ஆனவர்களே.


சி.ராமதாஸ், முகப்பேர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு?

நியாயம். மத்தியில் வலுவான அரசு. எதிர்க்க முடியாதபடி கம்யூனிஸ்டுகளின் கைகளில் கட்டுகள். தி.மு.க. போன்ற கட்சிகளின் வாய்களிலோ பிளாஸ்திரிகள். காங்கிரஸ் அரசு நினைத்ததை முடிக்கும். எண்ணெய் நிறுவனங்களும் ஏராளமான நஷ்டங்களைத் தாங்கி வருகின்றன. இதை வெகுகாலம் தாக்குப் பிடிக்க முடியாது.


எஸ்.பத்ரி, ஆடுதுறை.

வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விலைவாசி அதிகரித்துள்ளது என்கிறாரே தமிழக அமைச்சர் வேலு?

பொருளாதாரத்தை நன்கு படித்திருப்பதற்காகப் பாராட்டலாம். நல்ல உருப்படியான வழிமுறைகளால் கட்டுப்படுத்தினால்தான் படித்த படிப்பிற்கும் வகிக்கும் பதவிக்கும் மதிப்பு.


ச. மெய்யநாதன், இராமனாதபுரம்.

கூஜாக் குண்டுகள் பற்றிய மர்மம் இன்னும் விலகாதிருக்கிறதே?

குற்றவாளிகளைக் காவல்துறை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதுபோல்தான் தெரிகிறது. ஆனால் ஒன்று சொல்லவா? கூஜாக்களே ஆபத்தான குண்டுகள்தாம்! நமக்குக் கூஜா தூக்குகிற வேலையைச் செய்கிறார்களே, அவர்களைச் சொல்கிறேன்.


ராம. பழனியப்பன், காரைக்குடி.

விஜய் அரசியலுக்கு வந்தால் என்னாகும்?

இருக்கிற பணத்தை இழந்து புகழைத் தோற்று; ஒரு சில இடங்களை மட்டும் வென்று; ஏண்டா அரசியலில் இறங்கினோம் என்று வருந்துகிற பத்துத் திரைக் கலைஞர்களுள் இவரும் ஒருவராக ஆகிவிடுவார்!


எல்.பி.மகேந்திரன், கல்பாக்கம்.

தமிழில் அர்ச்சனை எப்போது சாத்தியம்?

அர்ச்சனைச் சீட்டுகள் மட்டும் தமிழில்! ஆனால் அர்ச்சனைகள் எல்லம் வடமொழியில். ஆண்டவனுக்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறது. நீங்களும் நானும் வேண்டுமானால் அறநிலையைத் துறையைத் தமிழில் அர்ச்சனை செய்யலாம்.


ஆர். செங்குட்டுவன், சென்னை.

விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால், நீதிமன்றத்தில் அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நிறுத்தப்படுவது தொடர்கிறதே?

போகிற போக்கைப் பார்த்தால், நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விரைவில் ஒரு பணிமனை ஆரம்பித்துவிடுவார்கள் போல இருக்கிறதே?


ஏ.ரஹ்மான், விழுப்புரம்.

இன்றைய சென்னை மக்களுக்கு எதில் அதிக ஆர்வம்?

ஃபுட் கோர்ட்டுகள். இதிலும் வம்பு வழக்குகள் வரத்தான் செய்கின்றன. விரைவு உணவு; விரைவில் நோய்!


ஏ. அற்புதராஜ், பாளையங்கோட்டை.

அரசாங்க ஊழியர்கள் பத்திரிகைக்கு எழுதலாமா?

துறையின் அனுமதி பெற்று, பகல் நேரக் கனவுகளைப் பத்திரிகைக்கு அனுப்பலாமே?


‘வரலாறு’ சந்திரா, கரூர்.

இன்னும் வரதட்சணை வேண்டாம் என்பவர்கள் இருக்கிறார்களே?

சில ஆண்டுகளுக்குப் பிறகு நீ என்னடி கொண்டு வந்தே என்று கேட்காதவர்களே உண்மையான வரதட்சணை எதிர்ப்புவாதிகள்!


எஸ்.விமல், காங்கேயம்.

சிலர் தங்கள் நாயை வளர்க்கிற அளவுகூட தங்கள் குழந்தைகளை வளர்க்க மாட்டேன் என்கிறார்களே!

இது கூடப் பரவாயில்லை. நாய் வாலாட்டினால் மகிழ்கிறார்கள். குழந்தை வாலாட்டினால் அடித்து நொறுக்குகிறார்கள்.


சி.எஸ்.மணி, காஞ்சிபுரம்.

உங்களுக்குப் பிடித்தது விபூதியா, நாமமா?

இம்மாதிரி கேள்விகளால் உடனே எனக்குத் தேவைப்படுவது தைலம்தான்!


பி.சுகுமார், திண்டுக்கல்.

கடிதம் எழுதுவதே குறைந்து போனதே?

‘ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம்’ என்கிற அந்த (பஞ்சாங்க) வார்த்தைகளை இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எனக்குத் தெரிந்தவரை மாப்பிள்ளை வீட்டார்தான்!


ஆர்.பொன்ராஜ், மணலி.

உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதுண்டா?

பள்ளி, கல்லூரி அட்மிஷன் நேரங்களில் வரும் பல கடிதங்கள் மிரட்டல் கடிதங்களே.

26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்


More than a Blog Aggregator

by admin

chef.jpgதாளிதம் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பாசிப் பருப்பு - 1 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
பச்சரிசி - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
மல்லிவிதை - 4 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 6 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறியக்கட்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பருப்புகள், மிளகாய் வற்றல், மல்லிவிதை மூன்றையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும். அரிசி, எள்ளு, தேங்காய் மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து எல்லாவற்றையும் பொடி செய்யவும். கிழங்கு, காய்கள் வெந்ததும் உப்பு, மஞ்சள்பொடி போட்டு புளியைக் கரைத்து விட்டு வெல்லம் போட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் பொடியைக் கலந்து கிளறி கடுகு தாளித்து கறிவேப்பிலை போடவும். ஏழுகறிக் கூட்டுக்கு சேர்க்கும் காய்கறிகளை இதற்கும் சேர்க்கலாம்.

Chettinadu Samayal

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்



More than a Blog Aggregator

by admin

orange.jpgஆரஞ்சு - விஜயகுமாரி பாஸ்கரன்

எலுமிச்சை போன்றே முட்களுடன் கூடிய மரம். சிட்ரஸ் எனும் வேதிப் பொருள் நிறைந்த பழங்களுக்கிடையில், ஆரஞ்சு மிகக் குறைந்த அமிலத்தன்மையும், நிறைந்த மணமும், சுவையும் கொண்டது.

ஆரஞ்சு, சாத்துக்குடி எனப் பல பிரிவுகள் இருந்தாலும் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரஞ்சு சுளைகளின் மேலே போர்த்திருக்கும் வெள்ளை நிறத்திசுக்கள் போன்றே தோல்களில் கால்சியக் சத்து மிகுந்து காணப்படுகிறது.

பழங்களும், பூக்களும் மருத்துவ குணம் கொண்டவை. ஆரஞ்சு பூக்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகுந்த அரோமா குணம் கொண்டவை. ஆரஞ்சு பூக்களால் வடித்தெடுக்கப்படும் வடிநீர் முகத்திற்கான லோசன்களாக உபயோகிக்கப்படுகிறது. இந்நீர் சருமத்திற்கு நீர்ச்சத்தினை அளித்து சருமத்தை சமனப்படுத்துகிறது. வைட்டமின் ‘சி’ சத்து மிகுந்திருப்பதால் சருமத்திற்கு பளபளப்பையும் இளமைப்பொலிவையும் கொடுக்கிறது.

இம்மரம் வளர எளிதில் நீர்வடியும் ஈரப்பதமுள்ள நிலம் தேவை. மித வெப்ப நாடுகளில் இது அதிகமாக வளர்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இது பயிரிடப்படுகிறது.

நிறம் வேண்டுவோர் ஆரஞ்சுப் பழங்களை உட்கொள்வதுடன் ஆரஞ்சு சாறு கலந்த பொருட்களை உபயோகிக்கலாம். இதன் தோல் சிறந்த அழுக்கு நீக்கி. எனவே பழங்களின் தோல்களும் சோப் மற்றும் க்ரீம்களின் மூலப் பொருளாகின்றன.

இந்த வகைப் பழங்களில் சிட்ரிக் அமிலமும், சர்க்கரையும் உள்ளன. சிட்ரிக் அமிலம் அதிகமாக இருந்தால் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும். சர்க்கரை அதிகமாக இருந்தால் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆரஞ்சில் பல வகைகள் உள்ளன. விதை, பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களுக்கும் சிலவகை குடிபானங்களுக்கு நறுமணமூட்டவும் பயன்படுகிறது.

கமலாபழம், ஆரஞ்சுபழம் என்று சொல்லப்படுகிறது. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் தான் இப்பழம் கிடைக்கும். ஆரஞ்சு பழம் நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பு, புளிப்பாகவும் மற்றும் சில வகை வெறும் புளிப்பு ருசியுடனுமிருக்கும். ஆரஞ்சு பழத்தை, ஆரஞ்சுப் பழங்களில் சாத்துக்குடி வகைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் டி, பி1, பி2, சி என உயிரிச்சத்துகள் நிறைய இருப்பதால் இது உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. நீண்டநாள் வியாதியினால் பாதிக்கப்பட்டுத் தேறி எழுந்தவர்கள் தொடர்ந்து ஆரஞ்சப்பழம் சாப்பிட்டு வர அவர்கள் நல்ல பலம் பெறுவார்கள். பலம் பெற இது ஒரு இயற்கை டானிக்காகவே இருந்து வருகிறது.

அரை கப் பழச்சாற்றில் 1 தேக்கரண்டி சுத்தமான தேனைக் கலக்கி படுக்கைக்குப் போகும் அரைமணி முன் சாப்பிட சுகமான நித்திரை தழுவும். ஆனந்தமான தூக்கம் வரும். தொற்றுநோய் பரவும் காலத்தில் அடிக்கடி ஆரஞ்சப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் தாக்காது.

அழகுக்கூடும்…

அழகுக் குறிப்புகள்

2009/06/26 எலுமிச்சை

2009/06/19 ஸ்ட்ராபெரி

2009/06/12 நெல்லிக்காய்

2009/06/05 கடுக்காய்

2009/05/29 மாசிக்காய்

2009/05/22 சோம்பு

2009/05/15 ஓட்ஸ்

2009/05/08 வெந்தயம்

2009/05/01 பாதாம் பருப்பு

2009/04/24 அதிமதுரம்

2009/04/17 அமுக்கிராங்கிழங்கு (அஸ்வகந்தி)

2009/04/10 சந்தனம்

2009/04/03 அகில்

2009/03/27 கஸ்தூரி மஞ்சள்

2009/03/20 மஞ்சள்

2009/03/13 கடற்பாசி (ஸ்பைருலினா)

2009/03/06 செம்பருத்தி

2009/02/27 லெட்டூஸ்

2009/02/20 பார்ஸ்லி

2009/02/13 அவுரி

2009/02/06 தைம்

2009/01/30 ஆவாரை

2009/01/23 அறுகம்புல்

2009/01/16 அரைக்கீரை

2009/01/09 வல்லாரை

2009/01/02 பொடுதலை

2008/12/26 குப்பைமேனி, பொன்னாங்கண்ணி

2008/12/19 கரிசலாங்கண்ணி

2008/12/12 சாம்பிராணி இலை

2008/12/05 கொத்துமல்லி

2008/11/28 புதினா

2008/11/07 கறிவேப்பிலை

2008/10/31 வேப்பிலை (மார்கோசா, வேம்பு)

2008/10/24 மருதோன்றி

2008/10/17 கற்பூரவல்லி, ஓமவல்லி - விஜயகுமாரி பாஸ்கரன்

2008/10/10 திருநீற்றுப் பச்சை

2008/10/03 துளசி

2008/09/26 சோற்றுக் கற்றாழை

2008/09/19 தண்ணீர்

2008/09/12 அழகுக் குறிப்புகள் - புவனா

2008/09/05 அஜீரணத்தைத் தவிர்க்கலாமே!

2008/08/29 அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

2008/08/22 அழகுக் குறிப்புகள்

2008/08/15 புகைப்பிடிப்பவர்களுக்கு

2008/08/08 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்

2008/08/01 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்

2008/07/25 நடையா, இது நடையா?

2008/07/18 ஆரோக்கியமாக வாழ…

2008/07/11 அழகுக் குறிப்புகள்

2008/07/04 அழகுக் குறிப்புகள்

2008/06/27 அழகுக் குறிப்புகள்

2008/06/20 'சண்டே' ஸ்பெஷல்

2008/06/13 உடற்பயிற்சி கூடங்கள்

2008/06/06 ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!

2008/05/30 'சண்டே' ஸ்பெஷல்

2008/05/23 புருவ அழகு

2008/05/16 தலைமுடிக்குச் சாயமிடுதல் (டை)

2008/05/09 மணப்பெண் ஆவதற்கு முன்

2008/05/02 தலைமுடிப் பாதுகாப்பு

2008/04/25 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 4

2008/04/18 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 3

2008/04/11 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 2

2008/04/04 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 1

2008/03/28 அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்

கருத்துகள் இல்லை: