சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

taiwan.jpgதைவான் சென்று வந்தேன்!

தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

பழைய தமிழ்ப்படம் ஒன்றில் ஒரு பாடல் வரும்.

“அவளா சொன்னாள்?
இருக்காது அப்படி எதுவும் நடக்காது!
நடக்கவும் கூடாது!
நம்பமுடியவில்லை இல்லை இல்லை!”

என்பன அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள்.

ஷான்யான் குடும்பம் ஒய்.எம்.சி.ஏ.வை விட்டு என்னிடம் சொல்லாமல் காலி செய்து கொண்டு போவதா?

இருக்காது? அப்படி எதுவும் நடக்காது! நடக்கவும் கூடாது நம்ம முடியவில்லை என்று அந்தப் பாடலின் வரிகளுள் ‘அவளா சொன்னாள்?’ என்கிற வரியை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால் மற்றவை எனக்கு அப்படியே பொருந்தின.

என் ஊகங்கள் விதவிதமான திசைகளில் புறப்பட எத்தனித்தன.

ஏதும் எதிர்பாராத அவசர அழைப்பு வந்திருக்குமா? ஏதும் விபரீதம் நடந்திருக்குமா?

வரவேற்பாளரின் வாயைக் கிளறினேன். கேட்ட கேள்விக்கெல்லாம் நான் ஏதோ தைவான் நாட்டு இராணுவ இரகசியத்தைக் கேட்டவனைப்போல் நடந்துகொண்டார்.

எனக்கு இது அவமானமாகப் பட்டது.

“நான் அவர்களின் குடும்ப நண்பன். நானும் அவர்களுமாகப் பல தினங்கள் இந்தத் தைப்பே நகரையே வலம் வந்தோம். அவர்களின் திடீர்ப் புறப்பாடு எனக்கு மிகுந்த அச்சத்தைத் தருகிறது. என்னவோ ஏதோ என்று அஞ்சுகிறேன். அதற்காகத்தான் கேட்கிறேன்.”

“சாரி எனக்கு எதுவும் தெரியாது” என்றார் சற்றும் கனிவு இல்லாமல். நான் கடுப்பாகிவிட்டேன். ஆனாலும் இவரிடம் கோபப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. இவர் நமக்கு ஏதும் சொல்லக் கடமைப்பட்டவருமில்லை. நம் கோபம் இவரிடம் செல்லாது.

“புறப்படும்போது ஏதும் பதற்றம், அவசரம் காட்டினார்களா என்பதை மட்டும் சொல்ல முடியுமா?”

சற்றே பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

“ஆமாம்!”

நான் நினைத்து சரி. ஏதோ விரும்பத்தகாதது நடந்திருக்கிறது. என் ஊகம் சரி. அதனால்தான் இப்படி அவசர அவசரமாகக் கிளம்பியிருக்கிறார்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை.

ஆனால், என் அக்கறையெல்லாம் என் மூலம் இக்குடும்பத்திற்கு அறிமுகமான பாவி மனுஷன் ஸ்டீவன்சனால் ஏதும் நிகழந்திருக்கக் கூடாது. பாவம் ரொம்பவும் அப்பாவிக் குடும்பம், இந்த ஷான்யான் குடும்பம்.

இந்த ஸ்டீவன்சன் ஏதும் கெடுதல் செய்திருப்பாரா?

வரவேற்பாளரிடமிருந்து மேற்கொண்டு எந்தப் பதிலும் பெறமுடியாது என்பது விளங்கிவிட்டது. இந்தப் பாறை முகத்தானோடு பேசிப் பயனில்லை.

என்ன செய்யலாம்?

ஊம்! ஷான்யானும் ஸ்டீவன்சனும் தங்களது விசிட்டிங் கார்டுகளைத் தந்தார்களே, அவற்றை வைத்து அவர்களுடன் பேசினால் விவரம் தெரியவரும்.

இவையெல்லாம் தேவையில்லை. உனக்கு வேலையற்ற வேலையும்கூட. தைவான் வந்தாயா? சுற்றிப் பார்த்தாயா! கிளம்பிப் போய்க்கொண்டே இரு! என்று என் உள்ளுணர்வு தலைதூக்கிப் பேச ஆரம்பித்தது. அப்படியில்லை. நம்மிடம் நகமும் சதையுமாகப் (?) பழகிய ஒரு குடும்பம் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டலைக் காலி செய்துகொண்டு போயிருக்கும்போது, என்ன ஏது என்று கேட்பதுதான் மனிதாபிமானம் என அந்த உள்ளுணர்வை அடக்கினேன்.

மாடிக்கு விரைந்தேன். என் இதயம் இயல்புக்கு மாறாகப் படபடத்ததை உணர்ந்தேன். என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டால்தான் படபடப்பு அடங்கும்போல் இருந்தது.

மேலும் படபடக்கும்படி ஏதும் அவர்கள் சொன்னால் என்ன செய்வாயாம்?

என் உடமைகளுக்குள் ஒளிந்துகொண்டு அந்த இரு விசிட்டிங் கார்டுகளும் கிடைப்பேனா என்றன.

திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் தங்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை எடுக்கும்வரை வீட்டை ஒரு கலை கலைத்துப் போடுவார்களே, அப்படி என் உடமைகளை நானே கலைந்துப் போட்டேன்.

‘எதையும் ஒரு முறையாக வைத்துக்கொண்டால்தானே சட்டென்று எடுக்கலாம்!’ என்னை நானே கடிந்து கொண்டேன்.

ஸ்டீவன்சன் கார்டுதான் முதலில் கிடைத்தது. முதலில் இவருடன் பேசலாமா? அது சரியான முடிவா? தெரிந்தால் கூடச் சொல்வானா அந்த ஆள்?

‘முதலில் ஷான்யான்.’ மேலும் தேட ஆரம்பித்தேன். என் பெட்டியில் உடமைகள் அதிகம். சிறிய கோடவுன் என்றே சொல்லலாம். போகிற இடங்களிலும் செளகரியத்தைக் குறைத்துக் கொள்ளாமல் எல்லாமும் எல்லா இடத்திலும் வேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில் ஏகப்பட்ட சுமைகளை எடுத்து வந்து இப்படி அடிக்கடி அவதிப்படுவேன்.

கடைசியாக ஒரு பாண்ட் பாக்கெட்டில் இருந்தது. வரவேற்பறையிலிருக்கும் பொதுத் தொலைபேசியிலிருந்து பேசினால் காசு குறைவு, அறையிலிருக்கும் போனில் பேசினால் கட்டணம் அதிகம்.

எவ்வளவாயிருந்தால் என்ன? உடன் பேசியே தீருவேன்!

தொடர்பு கிடைத்து மணி அடித்ததே தவிர, அடித்தபடியே இருந்தது. எடுத்துக் தொலைய்யா!

மூனும் டினுவும் என்னதான் செய்கிறார்கள்? கார்டில் இன்னொரு தொலைபேசி எண்ணும் இருந்தது. ஆனால் அது அவர்களது இல்லத்து எண். இல்லத்தில் யார் இருக்கப்போகிறார்கள்? இவர்களும் இல்லத்தை இன்னமும் அடைந்திருக்கமாட்டார்கள்.

மறுபடி மறுபடி… ஊகும் என் முயற்சியில் தோல்விதான்.

முயன்றால் முடியும்; முயற்சியோ வெற்றி தரும் என்பனவெல்லாம் பொருந்தாத கணங்கள் இவை. வேறு வழியில்லை. ஸ்டீவன்சனுடன்தான் பேசவேண்டும். அந்த ஆள் என்ன குண்டைப் போடப்போகிறானோ தெரியலையே!

மணி அடித்ததுமே ஸ்டீவன்சன் எடுக்க “மிஸ்டர் ஸ்டீவன்சன்! லேனா ஹியர்.”

“யெஸ் லேனா! எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்.”

“உங்களுடன் பேசணும். பேசலாமா?”

“சாரி லேனா! ஒரு சேல்ஸ் பிரமோஷன் மீட்டிங்க இருக்கேன். அப்புறம் பேசறேன்.”

தாட்சண்யமே இல்லாமல் தொடர்பை உடனே கத்தரித்துவிட்டார் ஸ்டீவன்சன். இது என்ன பதில்? அப்புறம் பேசறேன் என்று பொத்தாம் பொதுவாக? பத்து நிமிஷம், அரை மணி நேரம் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லாமல் இப்படியா தவிர்ப்பது? இந்தத் தவிர்ப்பு ஏதும் பொருள் பொதிந்த ஒன்றா? அல்லது ஏதும் உண்மையை மூடி மறைக்கும் செயலா? ஒன்றும் பிடிபடவில்லை. என் மனதிற்குள் ஏற்பட்ட வெற்றிடம் என்னை என்னவோ செய்தது!

‘சே! ஏன் இந்த ஷான்யான் குடும்பம் என்னிடம் இவ்வளவு பாசம் காட்டியது? பிறகு ஏன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியது?’

விடிந்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே! விடிகாலையில் தொடர்பு கொண்டு பேசுவது என் தூக்கத்திற்குத் தொந்தரவு என்று நினைத்திருந்தால் இந்நேரமாவது அழைத்திருக்கலாமே!

அல்லது என் அழைப்பையாவது ஏற்றுப் பதில் சொல்லியிருக்கலாமே! நான் தவிர்க்கப்படுமளவு என்ன தவறு செய்தேன்!

ஏன் இப்படிக் சிறு குழந்தையிடம் பொம்மையைக் காட்டி ஆவலை ஏற்படுத்திவிட்டுப் பிறகு, அதைத் தராமல் தூக்கி எறிந்த கதையாய் என் அன்பைப் பாதியிலேயே வெட்டி எறிந்தீர்கள்? ஏன் இந்தக் குறுகிய நாளில் என் இதயத்தில் பேரிடத்தைப் பிடித்தீர்கள். பின்னர் ஏன் ஒரே நாளில் அந்த அன்புக் கதவை அடைத்தீர்கள்?

கலைத்துப் போட்ட பொருள்களை எடுத்து வைத்தபடி என் கலைந்துபோன இதயச் சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்த முயன்றேன். முடியவில்லை.

என் நினைவுகளில் திரும்பத் திரும்ப ஷான்யான் குடும்ப உறுப்பினர்களின் முகங்கள்; பேச்சுகள்; நடையுடை பாவனைகள்!

பசி நேரம் கடந்தும் சாப்பிடப் போகவில்லை. சாப்பிடப் பிடிக்கவும் இல்லை.

தொலைக்காட்சியைத் தட்டிவிட்டேனே தவிர உள்ளுக்குள் வேறு காட்சிகள் ஓடிக்கொண்டிருந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சி எதுவும் பதியவில்லை.

சட்டென்று இந்த உலகிற்குத் திரும்ப உதவியது தொலைபேசி. சிணுங்கிச் சிணுங்கி அழைத்தது.

“மிஸ்டர் லேனா! ஸ்டீவன்சன் ஹியர்!”.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 "பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது"

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் பணிக்காக, இந்தியா முழுவதும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கண்காணித்து, ஆதை மேம்படுத்த ஆலோசனை சொல்ல,மற்றும் திட்டங்கள் தீட்ட, ஒரு நிபுணர் குழு அமைக்கப் படுகிறது. அந்த குழு, இந்தியாவின் டெலிகாம் துறையில் புரட்சியை ஏற்படுத்திய சாம் பிட்ரோடாவை தலைவராக கொண்டு செயல்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். இந்த குழு, ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்றும், இதன் மூலம் நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் தகவல் தொழில் நுட்பத்தை எப்படி கொண்டு செல்லலாம் என்றும் ஆராய்ந்து ஆலோசனை சொல்லும் என்று மம்தா தெரிவித்தார். ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் அமைக்கும் பணியை ஏற்கனவே ரெயில்நெட் என்ற நிறுவனம் ஏற்று செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் இந்திய டெலிகாம் துறையில் இருந்து அதற்கு தேவையான உரிமத்தை பெற்றிருக் கிறது. ஏற்கனவே ரயில் பாதைகளில் சுமார் 30,000 கி.மீ.தூரத்திற்கு அது ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளை அமைத்தும் இருக்கிறது. அதனை விரையில் 40,000 கி.மீ.தூரத்திற்கு விரிவு படுத்தவும் அது முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்
இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் பணிக்காக, இந்தியா முழுவதும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கண்காணித்து, ஆதை மேம்படுத்த ஆலோசனை சொல்ல,மற்றும் திட்டங்கள் தீட்ட, ஒரு நிபுணர் குழு அமைக்கப் படுகிறது. அந்த குழு, இந்தியாவின் டெலிகாம் துறையில் புரட்சியை ஏற்படுத்திய சாம் பிட்ரோடாவை தலைவராக கொண்டு செயல்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். இந்த குழு, ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்றும், இதன் மூலம் நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் தகவல் தொழில் நுட்பத்தை எப்படி கொண்டு செல்லலாம் என்றும் ஆராய்ந்து ஆலோசனை சொல்லும் என்று மம்தா தெரிவித்தார். ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் அமைக்கும் பணியை ஏற்கனவே ரெயில்நெட் என்ற நிறுவனம் ஏற்று செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் இந்திய டெலிகாம் துறையில் இருந்து அதற்கு தேவையான உரிமத்தை பெற்றிருக் கிறது. ஏற்கனவே ரயில் பாதைகளில் சுமார் 30,000 கி.மீ.தூரத்திற்கு அது ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளை அமைத்தும் இருக்கிறது. அதனை விரையில் 40,000 கி.மீ.தூரத்திற்கு விரிவு படுத்தவும் அது முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்

ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

பயணிகள், சரக்கு கட்டண உயர்வு இல்லை
* “தத்கல்’ முறையில் சலுகை
* 57 புதிய ரயில்கள், லேடீஸ் ஸ்பெஷலும் உண்டு
* பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
* தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும். * தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு, ஐந்து நாட்களில் இருந்து இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
* தத்கல் திட்டத்தில் முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகக் குறைக்கப்படும்.
* அமைப்பு சாரா தொழிலில் மாதம் 1,500 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வசதிக்காக, “இசாத்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, இவர்களுக்கு 25 ரூபாயில் மாதாந்திர பாஸ் வழங்கப்படும்; 100 கி.மீ., வரை பயணிப்பதற்கு இந்த பயணச் சீட்டை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சென்னை - டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 12 புதிய “இடைநில்லா ரயில்கள்’ இயக்கப்படும். இதற்கு “துரன்டோ’ ரயில்கள் என்று பெயர்.
* அரசு - தனியார் பங்களிப்புடன் சென்னை சென்ட்ரல், கொச்சி, திருவனந்தபுரம் சென்ட்ரல் உள்ளிட்ட 50 ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.
* 2008-09ம் ஆண்டில் ரயில்வே துறையின் நிகர வருவாய் 8,121 கோடி ரூபாய்.
* முக்கிய ரயில் நிலைய வளாகங்களில் வணிக வளாகங்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் உள்ள 250 நடுத்தர மற்றும் சிறிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்படும்.
* நீண்ட தூர ரயில்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு டாக்டர் பணியமர்த்தப்படுவார்.
* எஸ்.எம்.எஸ்., வசதியைப் பயன்படுத்தி, காத்திருப்போர் பட்டியலின் நிலவரத்தை பயணிகள் தெரிந்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
* முக்கிய நகரங்களுக்கு இடையே அதிக திறனுடைய குளிரூட்டப்பட்ட இரண்டு அடுக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* நடப்பாண்டில் 18 ஆயிரம் ரயில் பெட்டிகள் பெறப்படும்.
* டில்லி - சென்னை, டில்லி - மும்பை இடையே சூப்பர் பாஸ்ட் சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* பெருநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நீண்ட தூர ரயில்களில் தகவல் பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.
* 2009-10ம் ஆண்டில், 882 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*நெரிசல் மிகுந்த நேரங்களில் சென்னை, டில்லி, கோல்கட்டா ஆகிய நகரங்களில், “லேடீஸ் ஸ்பெஷல்’ புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.
* பட்ஜெட் மூலம் நடப்பாண்டில் ரயில்வேக்கு கூடுதலாக 5,000 கோடி ரூபாய் கிடைக்கும்.
* 2009-10ம் ஆண்டுக்கான திட்ட வரைவு 40 ஆயிரத்து 745 கோடி ரூபாய்.
* அழுகி போகக்கூடிய பண்ணை உற்பத்தி பொருட்களுக்கு சிறப்பு ரயில்கள்.
* ஊரக கைவினைப் பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழு புதிய வழித்தடங்கள் அமைக்கப்படும்.
* மீட்டர் கேஜ் ஆக உள்ள 17 வழித்தடங்கள், அகலப்பாதைகளாக மாற்றப்படும்.
* 13 இடங்களில் இரு வழித்தடங்களுக்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
* 5,000 தபால் அலுவலகங்களில் ரயில் டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.
* நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடமாடும் வேன்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
* கிராமப்புற பகுதிகளில் இருந்து மெட்ரோ நகரங்களுக்கு சலுகை கட்டணத்தில் செல்வதற்கு யுவ(இளைஞர்களுக்கான) ரயில்கள்   இயக்கப்படும்.
* 57 புதிய ரயில்கள் இயக்கப்படும். குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் 27 ரயில்கள், மற்ற நகரங்களுக்கு செல்லும்   வகையில் நீட்டிக்கப்படும்.
* 13 ரயில்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* வடகிழக்கு ரயில்வே வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* குவாசிகுண்ட் - அனந்த்நாக் ரயில் திட்டப் பணிகள் அடுத்த மாதம் முடிக்கப்படும்.
* ரயில்வே பணியாளர்களுக்காக 6,650 குடியிருப்புகள் கட்டப்படும்.
* குரூப் டி பணியாளர்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி அளிக்கப்படும்.
* ரயில்வே நிதி நிலை மற்றும் 2020ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை குறித்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
* மேற்கு வங்க மாநிலம் கஞ்சரப்பாராவில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும்.
* ரயில்வே மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
* மாணவர்களுக்கான சலுகை கட்டணம், மதரசாவில் படிப்பவர்களுக்கும் பொருந்தும்.
* உடல் ஊனமுற்றோர், முதியவர்களுக்கு சிறப்பு பெட்டிகள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் உள்ள 375 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
* மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆயிரம் மெகா வாட் மின் நிலையம், ரயில்வே சார்பில் அமைக்கப்படும்.
* அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான சலுகை 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டும்   சலுகை பெற்று வந்த பத்திரிகையாளர்கள், இனி அனைத்து ரயில்களிலும் இந்த சலுகையைப் பெற முடியும்.

வெஸ்ட் இண்டிசுடன் 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி

செயின்ட் லூயியாவில் நடைபெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்குகிடையேயான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

டாஸ்வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். மழை அடிக்கடி குறுக்கிட்ட போதிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
அதிக ரன் எடுக்கத் தவறவில்லை. சர்வான் அரைசதம் கடந்தார்.

மழை காரணமாக போட்டி முதலில் 41 ஒவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கெய்ல் நல்ல துவக்கம் தந்தார். இஷாந்த் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். 3.3 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

பின்னர் 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. ஆட்டம் துவங்கியதும் நெஹ்ரா வீசிய முதல் பந்தில் கெய்ல்(27) அவுட்டானார். மீண்டும் மழை பெய்ய, போட்டி 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் மழை தொடர, ஆட்டம் தடைபட்டது. பின்னர் 27 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 27 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது.

27 ஓவரில் 187 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு  இந்திய அணி களமிறங்கிய போதும் மழை அவ்வப்போது குறுக்கிட்டதால் ஆட்டம் 22 ஓவராக குறைக்கப்பட்டு 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து  இந்தியா 21.5 ஓவரில் 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சார்பில் அதிகபட்ச ரன்னாக தினேஷ் கார்த்திக் 47 ரன்களும் கேப்டன் தோனி 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணியில் பிரவீண் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார்.ரவிந்திர ஜடேஜா நீக்கப்பட்டு, அபிஷேக் நாயர் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.

கருத்துகள் இல்லை: