சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

சாதியை எதிர்க்க வாழலாமென்றேன் வேண்டாமென்றாய்.. நம் மரணத்தில் வாழ்கிறது சாதி...கரையொதுங்கும் தமிழக மீனவனின் பிணத்தில் தமிழக இறையான்மை.... சிரிக்கும் சிங்களவனின் முகத்தில் இந்திய இறையான்மை...

காற்றைக் கிழித்துக் கடிவிரைந்த தோட்டாவால்
நேற்றென் கணவர் நிலம்வீழ்ந்தார் –ஆற்றொனாத்
துன்பம் தொலையுமுன் தோள்சுமந்த என்மகனும்
இன்றுநிலம் வீழ்ந்தான் இறந்து.

அகரம் அமுதா


More than a Blog Aggregator

by ஸ்ரீ....
அட்டகாசமான ஆரம்பம் கிடைத்துள்ளது Microsoft Bing. தேடுபொறிக்கு. (நான் எழுதலாம் என நினைப்பதற்குள் ஏகப்பட்ட பதிவுகள்!) Google , நம்வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. இவற்றைப் பற்றிய எனது பார்வை. (இன்னும் Bing பழகவில்லை எனக்கு.)

Microsoft Bing:

கலர்ஃபுல்லான பக்கம். பின்னணியில் தினம் ஒரு படம். Shopping, Travel, Health மற்றும் Local Business இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படங்களின் அளவை மாற்றிக் கொள்ளும் வசதி சிறப்பாக உள்ளது. தேடிய விடையிலேயே கூடுதல் தகவல்கள் கிடைக்கிறது. லிங்க்கைத் திறக்காமல். (தேடியவர்களுக்குப் புரியும்.)

ஆபாசத் தளங்களை அனைத்து வயதினரும் எளிதில் அணுகமுடிவது பலவீனம். (விரைவில் சரிசெய்யப்படலாம்.) மைக்ரோசாஃப்ட் பிங் 12.1 % மக்களைக் கவர்ந்திருக்கிறது. நல்ல வளர்ச்சி. சேவை தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் பட்சத்தில் Google க்குப் போட்டியாக அமையும்.



Google:

எளிமையே இவர்கள் தனித்துவம். மிகப்பெரிய தேடுபொறியின் முதல்பக்கம் சாதரணமாக இருக்கும். தகவல்கள் மின்னல் வேகத்தில் கிடைக்கும். சிறிது சிறிதாக Gmail, Orkut எனப் பல சேவைகளை கூகிள் பக்கத்திலிருந்து கிடைக்குமாறு செய்தது சிறப்பு. இந்திய மொழிகள் பலவற்றில் தேடமுடிவது பலம்.

ஆபாசத்தளங்களைப் பொறுத்தவரை கூகிளும் பெரிதாகத் தடை செய்யவில்லை. இணையத் தேடலில் 65 % மக்களின் விருப்பம் கூகிள். கடந்த பத்து வருடங்களாக நம்வாழ்வோடு இணைந்துவிட்ட ஒன்று. வருங்காலத்தில் பிங் பிரபலமடைந்தாலும் நாம் முழுமையாக கூகிளிலிருந்து விலகமாட்டோம் என்பதே உண்மை.

தேடுபொறியின் தொழில்நுட்பம் குறித்து படித்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும். எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.இன்னும் நிறைய செய்திகள் பிற பதிவுகளிலிருந்து பெறலாம்.


நாகர்கோயில் என்ற பெயர்வரக் காரணமான ஆலயம். முழுதும் காண நேரம் அனுமதிக்கவில்லை. இயன்றவரை எடுத்த படங்களும், தகவல்களும் உங்களுக்காக. நகரத்தின் மையத்தில் பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தொலைவில் உள்ளது. ஆலயமெங்கும் பாம்பின் பல்வேறு தடங்கள். நாகராஜா சிலை தவிர, அனந்தகிருஷ்ணன், சிவன், மகாவீரர் உள்ளிட்ட பல அற்புதங்கள் காணக் கிடைக்கின்றன. கோயிலின் முன்வாயில் சீனக் கட்டிடக் கலையை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

மூலவர் கருவரையின் மேல் கூரைமட்டும் வேயப்பட்டுள்ளது. விமானம், பீடம் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை கூரை புதிதாக வேயப்படுகிறது. (அப்போது நிறைய நாகங்களைக் காணலாம் என்கிறார்கள்.) மூலவர் அமர்ந்திருக்கும் இடம் எப்போதும் ஈரமாகக் காணப்படுகிறது. இங்குள்ள ஓடவள்ளி மரத்தின் இலைகளைச் சாப்பிட்டால் தொழுநோய் தீரும். ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவை.

வரலாறு:


புல் அறுக்கும் பெண்ணின் அரிவாள் ஐந்துதலை நாகத்தில்பட்டு ரத்தப்பெருக்கு. ஊராரை அழைத்து வர அவர்கள் அங்கு சிறிய கோயிலை நிர்மாணித்தனர். காலப்போக்கில் மிகவும் பிரபலமடைந்தது. நாகர் வழிபாட்டுக்கென்றே உள்ள தலம்.


ஆவணிமாதத் திருவிழாக்கள் மிகவும் பிரபலம். தேவர்களின் தலைவன் இந்திரன் தினமும் இங்கு வழிபடுவதாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுசீந்திரம் குறிப்பிடத்தக்க ஆலயம்.


இதனால் அகில உலகப் பதிவர்களுக்கு அறிவிப்பது ; மற்றுமோர் பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.


பதிவர்களும், பதிவர்களின் தோழிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மெருகேற்ற வேண்டும். (தோழர்களும் வரலாம்!)


கலந்து கொள்ளும் வாசகர்கள், புதிய பதிவர்கள் தங்களது சந்தேகங்களை என்னைத்தவிர பிறபதிவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள அற்புதமான சந்தர்ப்பம்.


இடம் : தி.நகர் நடேசன் பூங்கா.

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை.

நாள் : 28- 06 -2009. ஞாயிற்றுக்கிழமை.



இதனால் அகில உலகப் பதிவர்களுக்கு அறிவிப்பது ; மற்றுமோர் பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.


பதிவர்களும், பதிவர்களின் தோழிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மெருகேற்ற வேண்டும். (தோழர்களும் வரலாம்!)


கலந்து கொள்ளும் வாசகர்கள், புதிய பதிவர்கள் தங்களது சந்தேகங்களை என்னைத்தவிர பிறபதிவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள அற்புதமான சந்தர்ப்பம்.


இடம் : தி.நகர் நடேசன் பூங்கா.

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை.

நாள் : 28- 06 -2009. ஞாயிற்றுக்கிழமை.



கருத்துகள் இல்லை: