நேற்று, 28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் "இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்" (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் எனது உரையும் அதன் பின்னர் தொடர்ந்த கலந்துரையாடலும் ஒலிவடிவில் இங்கே கேட்கலாம்.
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

இலங்கையில் தலைநகர் கொழும்பில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஈழத்தமிழ் சிறுவர் -சிறுமியர்களுக்கான மறுவாழ்வு முகாம் உள்ளது.
அங்கு 17 முதல் 25 வயதுக்குட்பட்ட 54 தமிழ் இளைஞர்களும், 40 இளம் பெண்களும் டெய்லரிங், வெல்டிங், கார்பெண்டரி, மெக்கானிக் உள்பட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
அந்த முகாமில் உள்ள சிறுவர்களில் கணேசலிங்கம் தயாளன் என்ற சிறுவன் மற்ற சிறுவர்- சிறுமியரிடம் இருந்து வித்தியாசப்பட்டு காணப்படுகிறான். விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை பிரிவான கரும்புலிகள் அமைப்பில் இவன் உறுப்பினராக இருந்துள்ளான். புலிகள் அளித்த பயிற்சி பற்றி அவன் கூறியதாவது:-
வவுனியா அருகில் உள்ள பண்டரிக்குளம் என் சொந்த ஊர். சிங்களராணுவ தாக்குதலில் என் தாய், தந்தை இருவரும் செத்துப்போனார்கள். ஆதரவற்ற என்னை ஒரு பாட்டி வளர்த்தார்.
10 வயதில் வன்னியில் உள்ள செஞ்சோலை ஆதரவற்றோர் இல்லத்தில் என்னை சேர்த்தனர். அங்கு படித்து வந்தபோது 12 வயதில் விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்டேன். மன்னாரில் உளவு பார்க்கும் பணிதான் எனக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை.
பிறகு ஆயுதங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் வேலை பார்த்தேன். 2007-ம் ஆண்டு நொச்சிக் கிடாவில் சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டேன். என் கால், கைகளில் காயம் அடைந்தேன்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் தாய்ப்பாசம் பற்றி எனக்குத் தெரியாமலே போய்விட்டது. இந்த நிலையில் அச்சுதன் மாஸ்டர் கொடுத்த பயிற்சியில் நான் ஈர்க்கப்பட்டேன். அவர் அறிவுரையின் பேரில் கரும்புலிகள் படையில் என்னை இணைத்துக்கொண்டேன்.
தற்கொலை தாக்குதல் நடந்த மனவலிமை வேண்டும். அதற்காக யோகா, தியானம் பயிற்சி கொடுத்தனர். கரும்புலிகள் படையில் சேர்ந்ததை பெருமையாக கருதினேன். ஈழத்துக்காக தற்கொலை தாக்குதல் நடத்த தயாரானேன்.
கரும்புலிகளாக இருப்பவர்களுக்கும், உளவுப்படையில் இருப்பவர்களுக்கும் "ஓ" தரப் பரீட்சை வைப்பார்கள். மொத்தம் 10 பாடம் கொண்ட அந்த தேர்வில் 6 பாடங்களில் நான் "ஏ" கிரேடு பெற்றேன். 2008 ஜூன் மாதம் என் பயிற்சி முடிந்தது.
பிறகு தற்கொலை தாக்குதலுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும்வரை காத்திருக்கும்படி கூறினார்கள். கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு நல்ல ஆர்வம் உண்டு. பள்ளி அணியில், இன்னொரு மாணவன் பெயரில் வெளியிடங்களுக்கு சென்று விளையாடினேன்.
என்னைப் பற்றி யாரோ சிங்கள போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டனர். கடந்த நவம்பர் மாதம் நான் பள்ளி நண்பர்களுடன் வெளியூருக்கு கிரிக்கெட் விளையாட சென்றபோது உளவுத்துறையினர் பிடித்துவிட்டனர்.
என் கழுத்தில் இருந்த சயனைடு குப்பியும், மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியும் காட்டிக் கொடுத்து விட்டது. கொழும்பில் சில மாதம் வைத்திருந்த என்னை தற்போது இந்த முகாமுக்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்த முகாம்களில் ஓராண்டு இருக்க வேண்டும் என் மனம் மாறிவிட்டது தொடர்ந்து மேல்படிப்பு படிக்க விரும்புகிறேன் என்ஜினீயர் ஆக ஆசைப்படுகிறேன்.
இந்த முகாமில் உள்ள எல்லாரும் பயிற்சி முடிந்ததும் அவரவர் பெற்றோரிடம் திரும்பிச் சென்று விடுவார்கள். எனக்கு என்று யாரும் இல்லை. எனக்கு யார் அரவணைப்பு கொடுப்பார்கள்?
இவ்வாறு கணேசலிங்கம் கூறினார்.
நன்றி மாலைமலர்

COLOMBO, May 29 (Xinhua) -- At least 400 children and 1,200 females are among the near 10,000 Tamil Tiger rebels surrendered to the government recently, the Sri Lankan military said Friday.
Defense Officials who did not want to be named said the surrendered rebels are now being housed in different rehabilitation centers around the country.
The former members of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) were among around 270,000 civilians displaced by the battles between the government troops and the LTTE in the north.
The displaced Tamil civilians are now housed in welfare camps in the northern Jaffna and Vavuniya districts.
The government troops concluded its three-year military campaign against the LTTE by eliminating the rebels and recapturing all of the 15,000-sq-km territory formerly held by the LTTE.
The LTTE during the height of their separatist campaign received international condemnation for their continued recruitment of child combatants.
Several of the LTTE's hardcore members have been traced at IDP centers so far, the military said.
Meanwhile, the military said search operations conducted in the former rebel territory of Karaimullivaikkal in the northeastern Mullaittivu district have led to the discovery of missiles, other military hardware and ammunition belonging to the rebels.
More than 100,000 people died in the LTTE's campaign spanning about three decades for a separate Tamil homeland in the north and east.

கொழும்பிலுள்ள பல சிங்கள ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதமாகச் செயற்பட்டுவந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண கூறினார்.
"தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதால் விபரங்களை வெளியிடமுடியாது. எனினும், புலிகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கும். விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்த பணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியுதவி எற்பவற்றுக்காக செய்திகளைப் பிழையாக வழங்கியிருப்பதுடன், இலங்கைக்கு எதிரான தகவல்களை வெளியிட்டுள்ளனர்" என அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு செயற்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததுடன், சாட்சியங்களும் கிடைத்ததாகப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
இவர்களில் பலர் சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்புவைத்திருப்பதுடன், இவர்கள் ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் போன்றவற்றுக்காகக் குரல்கொடுத்துவந்தனர் என்றும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
"இவ்வாறு செயற்பட்டுவந்த ஊடகவியலாளர்கள் சிலர் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நாட்டைவிட்டுவெளியேறியுள்ளனர். ஆனால், குற்றம் செய்துவிட்டோம் என்பதற்காகவே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். விடுதலைப் புலிகள் மோதலில் தோல்வியடைந்துவிட்டனர் என்ற காரணத்துக்காகவே அவர்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்டனர்" என அவர் கூறினார்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறியபோது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியபோது அதனைக் கூறாமல் இராணுவத்தினர் ஷெல் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியானது பயங்கரவாதத்துக்கு எதிராகத் தெற்காசிய நாடுகள் முன்னெடுத்த பிரசாரத்தின் ஒருபகுதியென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
"இந்தியாவின் யுத்தத்தை நான் முன்னெடுத்தேன்" என த வீக் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியா என்ன நினைக்கின்றதோ அதைத்தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமல்ல" எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இலங்கைக்கு உதவிய இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றிதெரிவித்துள்ளார்.
"சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்தே எனது வெற்றியமைந்தது. தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து நான் அவருக்குக் கடிதமொன்று அனுப்பியிருந்தேன். மோதல்கள் நடைபெற்ற சமயம் இந்தியா வழங்கிய ஆதரவு முக்கியமானது" என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல்கள் முடிவடைந்த பின்னர் தமிழகத்திலுள்ள பல அரசியல் தலைவர்கள் தனக்கு வாழ்த்துத் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.
மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே அரசாங்கப் படைகளின் அடுத்த குறிக்கோளாகவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்ளூரில் தயாரிக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டமே இறுதித் திட்டமாக முன்வைக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்ற பின்னரே இம்முறை இறுதித் தீர்வு முன்வைக்கப்படும் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக