ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

More than a Blog Aggregator

by அது ஒரு கனாக் காலம்
திருஅனந்த புரத்தின் அருகில் இன்னும் ஒரு சுற்றுலா வாசஸ்தலம்

பூவார் ... நெயயாற்றங்கரையிலே, (நெய்யாறு ஆற்றங் கரையினிலே) ஒரு அருமையான தீவு (..தீபகற்பம் சரியான பதம்) ... அதில் உள்ளது மகேந்த்ரா நிறுவனத்தின் பூவார் ரிசார்ட்ஸ்... காரிலோ / டாக்ஸ்யிலோ போனவுடன் , ரிசார்ட் போகவேண்டுமேன்றல், போட்டில் தான் போகவேண்டும், போகின்ற பாதையே மனதை கொள்ளை கொள்ளும்...( ஒரு பத்து நிமிட போட் பயணம் ) இரு பக்கமும் தென்னை மரங்கள், சிறய சிறிய கட்டிடங்கள், ... ஆறு சென்று கடலில் கலக்கும் மிக அருகில், பூவார் ரிசார்ட்ஸ்.

அங்கு போனவுடன் நல்ல வரவேற்ப்பு, விமானத்தில் கொடுப்பது போல் சுட வைத்த கை குட்டை, ஜூஸ் , சிரித்த முகத்துடன் வரவேற்கும் பனி பெண்கள் ( கேரளா உடை முண்டு உடுத்தி ) ... நம்முடைய பெட்டிகள், பைகள் எல்லாவற்றையும் கொண்டு வர தனி ஆள், ... இப்படி சில விஷயங்கள் என்னுடேன் கூட வந்தவர்களுக்கு மிகவும் புதிது, அங்கிருந்து எங்களின் யூனிட்டுக்கு போனோம் , ஒரு அறை, பால்கனி, கட்டில், டி.வி ..எல்லா வசதிகளும் உண்டு...

அங்கு உள்ள உணவகத்தில் விலை சற்று அதிகம் ...( ரொம்பவே ஜாஸ்தி சார், துபாய் ஆளுக்கு கூட ) . வெளியில் எங்கும் போக முடியாது, போட்ல தான் போகணும், இது தெரியாமல அல்லது தெரிந்தே வருபவர்கள் - ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆயரம் ருபாய் கூட ஆகலாம், ( கணவன், மனைவி, குழந்தை உள்ள சிறிய குடும்பத்துக்கு ) ..என்னோட குரூப் கொஞ்சம் நிறய பேர், அதுவும் அவர்களுக்கு இந்த ஸ்டார் ஹோட்டல் டிஷ் எல்லாம் அவ்வளவாக பிடிக்காது, முதல் நாளைக்கு உணவு கொண்டு போயிருந்தோம், ரெண்டாவது நாளைக்கு அண்ணாவும் , மாமாவும் வெளியில் போய வாங்கி கொண்டு வந்தார்கள், மூன்றாவது நாளைக்கு , உள்ளூரில் உள்ள, மனைவியின் அக்காவை உணவு வாங்கிக்கொண்டு வரச்சொன்னோம் ..

திருஅனந்த புரத்தில், கோவிலை சுற்றிய தெருக்களில் எப்பொழுதும் எல்லா பதார்த்தங்களும் கிடைக்கும் அதுவும், காரா வடை ( அடை மாவில் வடை, ரொம்பவும் நல்லா இருக்கும் ... வந்தால், பாலாஜி கடையின் காரா வடையை மிஸ் செய்யாதீர்கள் ) , சேவை, வரைட்டி ரைஸ், தட்டை, முறுக்கு, அடை, தோசை எல்லாம் கிடைக்கும்.... இது தான் எங்களுக்கு பூவார் ரிசார்ட்டிலும் .கிடைத்தது

பார்கின்ற தூரத்தில் கடல், அங்கு மீனவர்கள் பெரிய வலையை கடலில் இருந்து இழுக்கும் காட்சி , சுற்றிலும் தென்னை மரங்கள், மிகவும் ரம்யமான இடம் என்று சொன்னால் போதாது அனுபிவிக்க வேண்டும்

நிறைய எழுத வேண்டாம், படங்களே நிறய பேசும் என நினைக்கிறன்

Posted by Picasa

இது தான் அந்த மிதக்கும் வீடுகள், (கிழே) ஒரு பத்துக்கு பத்து சைசில், சிமெண்ட் காங்கரீட் மூலம், ஒரு மிதக்கும் அடித்தளத்தை அமைக்கிறார்கள் ( ஒரு பெரிய ஹாலோ ப்ளோக்ன்னு சொல்லல்லாம்... ) அதன் மேல், நிறய தூண்களை நிறுத்தி , கூரை வேய்ந்து ..மிதக்கும் அறை ரெடி

கடலுக்கு போன பொழுது, அங்கு வந்த ஒரு பள்ளியின் குழைந்தைகள்

Posted by Picasa

ரிசார்ட்டின் ஸ்விம்மிங் பூல்
 
அந்த உழைப்பாளியின் இடது கையும், முதுகும் பார்த்தீர்களா

ரொம்பவும் சின்ன கை துடுப்பு படகில் தனியாக படகோட்டியுடன் போன பொழுது எடுத்த படங்கள்

Posted by Picasa

இது தான் கடலும் , ஆறும் கலக்கும் இடம்

Posted by Picasa

எங்களோட பெரிய டீம் , அண்ணா ( என்னை விட ஸ்டயிலா - வரி போட்ட பனியன் ) , மன்னி , மாமியார், மணி மாமா & மாமி, மனைவியின் அக்கா, என்னுடைய மகள் யசோதா

Posted by Picasa

சில கறுப்பு வெள்ளை படங்கள்

Posted by Picasa

For more photos :-

பூவார் போட்டோக்கள்

துளசி டீச்சரின் பதிவுக்கு

உயிர்களைக் கொன்று விட்டு குதூகலமாக கொண்டாடுவது புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய செயலல்ல. ஐக்கிய தேசிய கட்சி காலி மாவட்ட உறுப்பினர் வஜிர அபேவர்தன நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.  

இந் நாட்டில் ஜெ.வி.பி தலைவர் ரோகண விஜேவீர கொல்லப்பட்டபோது சிலர் பாற்சோறு உண்டு கொண்டாடினர், அதே போல் ஜனாதிபதி பிரமதாசா கொல்லப்பட்டபோது சிலர் பாற்சோறு உண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.  

ஆனால் இந்த இரண்டு மரணங்களின் போதும் சிறுபான்மையான தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இந்த பாற்சோறு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.  

ஒருவரின் மரணத்தில் இன்பம் காணுவது மனிதத்தை மதிக்கும் ஒரு சமூகத்திற்கு அழகல்ல என்றும் அவர் கூறினார்.  

கொழும்பு மத்தி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள் சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. எதிர் கட்சித் தலைவர் திரு ரணில் விக்ரமசிங்க அவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்

இலங்கையின் பெளத்த இனவாத கட்சியான "ஜாதிக ஹெல உறுமய" இலங்கை யுத்தத்தில் ரஷ்யா செய்த பங்களிப்பிற்கு நன்றியை தெரிவிக்கும் முகமாக "சுதந்திர சதுக்கத்தில்" இருந்து ரஷ்ய தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகசென்றது.

கருத்துகள் இல்லை: