கறுப்புவெள்ளை
கட்டைகளுக்குப் பின்னே
பலநூறு பாடல்கள்
வெüவால்களாய்த் தொங்கிக்கொண்டிருந்தன
பிடித்தவொரு பாடலைத் தேர்ந்து
அவன் இசைக்கத் தொடங்க
மற்ற பாடல்கள்
வெளியேறி
பறந்து போயின
மற்ற கீபோர்டுகளுக்கு.
நன்றி: உயிரோசை
கட்டைகளுக்குப் பின்னே
பலநூறு பாடல்கள்
வெüவால்களாய்த் தொங்கிக்கொண்டிருந்தன
பிடித்தவொரு பாடலைத் தேர்ந்து
அவன் இசைக்கத் தொடங்க
மற்ற பாடல்கள்
வெளியேறி
பறந்து போயின
மற்ற கீபோர்டுகளுக்கு.
நன்றி: உயிரோசை
தமிழ்மணம் திரட்டி உண்மைகளுக்கு எதிராக இயங்குகிறது?
பதிவுகளை விலத்திவிடுவதில் ஒரு எதேச்சதிகாரத்தைக் கடைப்பிடிக்கும் தமிழ்மணம்;நேற்றுத்தான் ஒரு நண்பர் உதவியோடு எனது எழுத்தைப் பதிந்தேன்.
தமிழ்மணத்தில் (http://www.tamilmanam.net/)
ஒரு நிமிடம்வரை தெரிந்த அப்பதிவு பின்பு முற்றாக விலத்தப்பட்டது.
எதற்காக?
கேள்விக்குப் பதில்:பிரபாகரன் குறித்த இப்பதிவுதான் காரணம். http://oolam.blogspot.com/2009/05/blog-post_29.html
அறிவும்,தேடலுமுடைய ஒரு சமுதாயத்துக்குத் திரைபோடுவதில் எல்லோருமே தத்தம் அறிவுக்கு எட்டியபடி செயற்படுகிறார்கள்.
வரலாறுகளை மூடிவிடுவதால் உண்மைகள் மறைக்கப்பட முடியாது.
கொல்லப்பட்ட பிரபாகரன் குறித்த விமர்சனம் உண்மைகளையும்,ஆய்வையும் ஊக்கப்படுத்தும் கட்டுரை.
வரலாற்றை அதன் நிசத்துடன் பேச விரும்பாதவர்கள்,மேலும் தவறுகளைச் செய்வதற்குத் துணைபோகிறார்கள்.
நாங்கள் உண்மைகளை,தவறுகளைப் பேசுவது அவசியம்.
கடந்தகாலத்தில் மனிதவரலாற்றில் நடந்த போர்கள் குறித்து இப்போதும் பேசப்படுகிறது.ஆனால், நேற்றுக் கொல்லப்பட்ட பிரபாகரன் குறித்துப் பேசுவதற்குத் தமிழ் மனது தடையாக இருக்கிறது.
தமிழ் மணம் பதிவை விலத்துவது அறிவை முடக்குவதென்று அர்த்தப்படும்.

இந்தியா என்ன நினைக்கிறது என்பதை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை.நான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் இந்தியாவின் போராட்டமே. எமது இராணுவ வெற்றிக்காக தமிழ்நாட் டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட் டியுள்ளனர்.இந்தியாவில் இருந்து வெளிவரும் "தவீக் " சஞ் சிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட வாறு கூறினார்.
இந்திய இலங்கை உடன்படிக்கை மூல மாக அரசமைப்புக்கான 13 ஆவது திருத் தம் உருவானது.இதன் அடிப்படையில் உள்நாட்டில் தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறை இந்தியாவின் நிலைப்பாட்டையும் கவனத்தில் எடுக்கின்றது; கருத்தில் கொள்கின்றது.இலங்கையின் ஒவ்வொரு நபரினதும் கருத்தையும் ஆராய்ந்த பின்னரே இம்முறை அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்.
அரசியல் தீர்வின் உள்ளடக்கத்தை நாங்களே தீர்மானிப்போம்சமாதானம் என்பது இலங்கையின் நன்மை குறித்த விடயம் என்பதால் அரசியல் தீர்வின் உள்ளடக்கம் குறித்து நாங்களே ஆராய்ந்து தீர்மானிப்போம்.தென்னாசியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு பகுதியையே நான் முன்னெடுத்துள்ளேன்.விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நான் இந்தியாவின் சார்பில் யுத்தத்தை முன்னெடுத்துள்ளேன்.
என்னுடைய வெற்றியும் சோனியாவின் வெற்றியும் ஒரே தருணத்தில்....இந்தியா என்ன நினைக்கின்றது என்பதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை.என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் வெற்றியும் ஒரே தருணத்தில் நிகழ்ந்தன.அவர் தேர்தலில் வெற்றிபெற்றதைப் பாராட்டி அவருக்கு நான் எழுதியுள்ளேன். இந்த யுத்தத்தில் இந்தியாவின் தார்மீக ஆதரவு முக்கியம்.
யுத்த வெற்றிக்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட்டினார்கள்.தமிழ்நாட்டுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்குத் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர் என்றார்.
கடந்த 300 ஆண்டுகளாக பெரும் வல்லுனர்களால் கூடக் கண்டறிய முடியாத ஒரு கணிதப் புதிருக்கான விடையை ஸ்வீடனுக்கு அகதியாய்ச் சென்று குடியேறிய ஒரு 16 வயது ஈராக் மாணவன் அறிந்துள்ளான்.
17ம் நூற்றாண்டில் ஸ்வீஸ் கணிதவியல் அறிஞரான ஜேகப் பெர்னௌலி என்பவரால் அறிவிக்கப்பட்ட அவரது பெயரிலேயே உள்ள ஒரு தொடர் எண்கள் கணக்கீட்டை நான்கு மாதங்களில் மொஹமது அல்தூடைமி என்ற அந்த மாணவன் ஓர் விளக்கத்தை அளித்து எளிதாகப் புரியும்படி செய்துள்ளான்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் ஸ்வீடன் வந்து சேர்ந்த அல்தூடைமியின் கண்டுபிடிப்பை அவரது பள்ளி ஆசிரியர்கள் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர் ஸ்வீடனின் உயர் கல்வி நிலையமான உப்சாலா பல்கலைக் கழகப் பேராசிரியர்களிடம் அதனைத் தெரிவித்து விடையைச் சொன்னார்.
இந்த விடை மிகச் சரியானது என்று கூறிய பேராசிரியர்கள் உப்சாலா பல்கலைக் கழகத்தில் ஓர் பணியும் அளித்தனர். ஆனால் அல்துடைமி தனது பள்ளிப் படிப்பை முடித்து உயர் கணிதம் மற்றும் இயற்பியலில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக