இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் விபரங்களை சேகரிக்கும் தமிழக பொலிஸார் |
[ சனிக்கிழமை, 30 மே 2009, 08:29.16 AM GMT +05:30 ] |
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட போரினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கையரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கு இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது. இதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிப்படுத்தியிருந்தார். இதன் ஒரு கட்டமாகவே தற்போது இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் தொடர்பான விபரங்களைப் பொலிஸார் சேகரித்து வருகின்றனர். தமது உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பும் உத்தரவாதமும் இருக்கும் நிலையில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல தாம் விரும்புவதாக அகதிகள் கூறியதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். |
வடக்கு தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளத் திட்டம் |
[ சனிக்கிழமை, 30 மே 2009, 04:38.49 AM GMT +05:30 ] |
வடக்கில் உள்ள தமிழ் இஞைர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
வடக்கில் வசித்து வரும் தமிழ் இளைஞர்கள் அந்தப் பிரதேசம் குறித்து நன்றாக அறிந்து கொண்டிருப்பதனால் அவர்களை பணியில் அமர்த்துவது இலகுவானதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அந்தப் பிரதேச பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 800 தமிழ் இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இராணுவம் என்பது சகல இன மக்களும் பங்களிப்பு செய்ய வேண்டியதொன்றென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சகல மக்களும் தாயகத்தை பாதுகாப்பதனை முதன்மை நோக்காக கொண்டு செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். |
பிரான்சில் நடைபெற்ற "புதிதாய் பிறப்போம்" நிகழ்வு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு |
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2009, 02:26.45 AM GMT +05:30 ] |
சிங்கள அரசின் கொடிய வதை முகாம்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரியும், மனித நேய உதவிகளை பிரான்ஸ் அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கோரியும் நடைபெற்ற இம்மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் பங்கெடுத்திருந்ததுடன் சிறப்புரைகளும் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக எதிர்வரும் யூன் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் மதிப்புக்குரிய பேராசிரியர் யூலியா மாஸ்ரர் அவர்கள் தேர்தலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியிருந்தார். |

இலங்கையில் கனடிய தூதரகத்தின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து, நேற்று கனடாவில் இலங்கை தூதரகத்தின் முன்பாக போராட்டம் |
[ சனிக்கிழமை, 30 மே 2009, 03:47.56 PM GMT +05:30 ] |
நேற்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய இவ்வார்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இலங்கை பிரச்சினையில் கனடா தலையிடுவதை கண்டித்தும், படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக குரலெழுப்ப கனேடிய அரசிற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என வலியுறுத்தியும் சிங்கள வன்முறையாளர் வன்முறையைப் பிரயோகித்தனர். |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக