நேற்று, 28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் "இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்" (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் எனது உரையும் அதன் பின்னர் தொடர்ந்த கலந்துரையாடலும் ஒலிவடிவில் இங்கே கேட்கலாம்.
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

மாற்றங்களுடன் கூடிய மீள்பதிவு
இந்த தொடரின் முந்தைய இடுகைகள்
1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படி என்றால் இன்னும் புதிது புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பதால் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதிப்பு உண்டா?
இல்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை !!!
அப்படி பொருள்பட நான் எழுதவில்லை. இன்னும் அதிகம் மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ்) வேண்டும்
அதைவிட அதிகம் சிறப்பு மருத்துவர்கள் வேண்டும்.
எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் எம்.பி.பி.எஸ் இருக்கைகள் / இடங்கள் இருப்பதல்ல. அதற்கு காரணம் போதுமான அளவு பட்ட மேற்படிப்பு இடங்கள் இல்லாததால்
2. மேற்கண்ட காரணத்தால் புதிய கல்லூரிகள் திறப்பைத் தாமதப்படுத்தினால், அது ஓரிரு மதிப்பெண் குறைவினால் மருத்துவப் படிப்பைப் படிக்க இயலாமல் போகும் மாணவர்களுக்கு இழப்பு தானே? ஆர்வமும் நியாயமான தகுதியும் உள்ளவர்கள் படிக்கச் செய்ய வேண்டும் தானே? இல்லை, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துவது தவறா? வேலை கிடைக்குமா என்ற கண்ணோட்டத்தை அரசு வேலை, தமிழ்நாட்டுக்குள் வேலை என்பதற்குள் தான் அடக்க வேண்டுமா? பிற மாநில, நாட்டு வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?
நான் மேலே கூறியுள்ள பதில் படி, இன்னமும் அதிகம் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.
அதே போல் தற்பொழுது உள்ள மருத்துவக்கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகப்படுத்தப்படவேண்டும்.
பிற நாடுகளில் வேலைவாய்ப்பு இருந்தாலுல் நுழைவது சிரமம் என்று கேள்விப்பட்டேன்.
3. மென்பொருள் துறை வளர்ச்சி, பொறியியில் கல்வி நாட்டம் காரணமாக, ஆகச் சிறந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் நாட்டம் குறைந்து வருவதாகச் சொல்லப் படும் போக்கு பற்றி?
உண்மை
இப்படி ஆகச் சிறந்த மாணவர்கள் விடுத்துச் செல்வதால் பெரிய இழப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஆகச்சிறந்த மாணவர்கள் பொருளாதார காரணங்களினால் விடுத்துச்செல்வதால் இழப்புதான்
மருத்துவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள், வசதிகள் வரா நிலையில் வருங்காலத்தில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேரா நிலை வரக்கூடுமா?
நான் இந்த இடுகைத்தொடரின் முதல் பதிவில் கூறியபடி, இந்த நிலை நீடித்தால் முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மூன்றாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.
அதாவது கடந்த முப்பது வருடங்களாகத்தான் மூன்றாவது பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாறி மருத்துவம் என்பது மேட்டுக்குடியினரின் படிப்பு (விமான ஓட்டி படிப்பு போல்) ஆகி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது
இல்லை, தமிழ்நாட்டு மாணவர்கள் சேரா நிலையிலும் பிற மாநில மாணவர்களுக்கு அந்த இடங்களை ஒதுக்க இயலுமா?
தமிழ் நாட்டில் சேருவதற்கு முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்
பிற மாநிலங்களில் இன்னும் மருத்துவப் படிப்பு மோகம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..இல்லை, இந்தியா எங்கும் மோகம் குறைந்து வருகிறதா?
பிற மாநிலங்களில் (வட மாநிலங்களில்) மருத்துவப்படிப்பு என்பது இன்னமும் மேட்டுக்குடியினரின் படிப்பாகத்தான் இருக்கிறது.எனவே மோகம் இருக்கிறது. தமிழகத்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரிடம் தான் மோகம் குறைகிறதே தவிர மேட்டுக்குடியினரின் மோகம் குறையவில்லை
இந்த வருடம் (2009) நடுத்தர வர்க்கத்தில் இருந்து கூட மருத்துவகல்லூரிக்கு நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் !!
4. இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் எப்படி இருக்கிறது? இந்தியாவில் மருத்துவப் படிப்புக்குச் சிறந்த இடங்கள் எவை?
தமிழக மருத்துவக்கல்லூரிகளின் தரம் சிறப்பாகவே இருக்கிறது.
5. மேற்படிப்பு படித்த மாணவர்கள் தான் பற்றாக்குறை என்றால், ஏன் அந்த படிப்புக்கான இடங்களைக் கூட்டக் கூடாது? திரும்பவும் ஆசிரியர், வளங்கள் போதாமை தான் காரணமா?
ஆசிரியர் , வளங்கள் என்ற அளவில் நாம் போதுமான அளவு இருந்தாலும், உள்கட்டமைப்பில் சில சின்ன விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக நூலகங்களில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு சஞ்சிகைகள் போன்ற படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
இதற்கு காரணம் என்ன வென்றால் பட்ட மேற்படிப்பில் 5 இடங்கள் கூடியிருக்கிறது என்பது (புதிதாக மருத்துவக்கல்லூரி அமைப்பது போல்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இல்லாமல் இருப்பதுதான்
6. MBBS, மேற்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு, தனியார் இடையே ஊதிய விகிதங்கள் எவ்வாறு வேறுபடுகிறது?
எம்.பி.பி.எஸ் பொறுத்த வரை தனியாரை விட (சுமார் 8,000 முதல் 15,000 வரை) அரசில் அதிகம் சம்பளம்
ஆனால் மேற்படிப்பு படுத்தால் தமிழக அரசில் வெறும் 2 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும் தான் (அதாவது 275 x 2)
அதற்கு மேல் சிறப்பு படிப்பு படித்தாலும் எந்த ஊதிய உயர்வும் கிடையாது :( :(
உதாரணமாக
5 வருட அனுபவம் உள்ள எம்.பி.பி.எஸ் மருத்துவர்
தனியார் - சுமார் 15,000
மத்திய அரசு - சுமார் 35000
மாநில அரசு - சுமார் 22000
5 வருட அனுபவம் உள்ள எம்.டி மருத்துவர்
தனியார் - சுமார் 35,000
மத்திய அரசு - சுமார் 45000
மாநில அரசு - சுமார் 24000
5 வருட அனுபவம் உள்ள டி.எம் மருத்துவர்
தனியார் - சுமார் 1,00,000
மத்திய அரசு - சுமார் 50000
மாநில அரசு - சுமார் 24000
இப்பொழுது தெரிகிறதா, ஏன் தமிழக அரசு பணியில் சேர சிறப்பு மருத்துவர்கள் வருவதில்லை, ஆனால் தேவைக்கு அதிகமாக எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் வருகிறார்கள்
மிகச் சிறந்த நிபுணருக்கு தனியாரில் கூடுதல் ஊதியம் கிடைக்கலாமாக இருக்கும்.
பதில் மேலே
ஆனால், இன்று மேற்படிப்பு முடித்து வரும் ஒருவருக்குத் தனியார், அரசு இடையே வேலைவாய்ப்பு, ஊதிய விகித வேறுபாடு என்ன?
பதில் மேலே
தனியார் அளவு இல்லாவிட்டாலும் மத்திய அரசு அளவிற்காவது ஊதியம் உயர்த்தப்படவேண்டும்
அரசை விடுத்து தனியாரை நாடுவதற்கு ஊதியம் தவிர்த்த பிற காரணங்கள் உளவா?
கண்டிப்பாக
01. வரையறுக்கப்பட்ட பணி நேரம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு 99 முதல் 123 மணி வரை நேரம் (வேலை இல்லாத நேரம் என்பது வாரத்திற்கு 45 மணி நேரம் மட்டுமே)
02. தொடர்ந்து 33 மணி நேரம் பணி கிடையாது. (முந்தைய பதிவின் பின்னூட்டத்தை பார்க்கவும்)
03. ஞாயிறு விடுப்பு உண்டு
04. கடைநிலை ஊழியர் உங்களின் பெயரை சொல்லி லஞ்சம் வாங்க மாட்டார்
05. அதை நீங்கள் தட்டி கேட்டால் கொலை மிரட்டல் வராது
06. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை மிரட்ட மாட்டார்கள்
07. மாற்றல் இருக்காது
08. அதிகம் வேலை செய்தால் அதிகம் ஊதியம் கிடைக்கும்
09. நோயாளிக்கு மட்டும் வைத்தியம் பார்த்தால் போதும்
10. சட்டம் சார் வழக்குகளுக்காக (மெடிக்கோ லீகல் ) நீதிமன்றம் போக வேண்டாம் (எந்த ஊர் நீதிமன்றம் என்றாலும் கை காசை செலவழித்துதான் போக வேண்டும்)
11. பல்ஸ் போலியோ என்று 2 வாரம் தூக்கத்தை தொலைத்து அலைய வேண்டாம்
12. உட்காருவதற்கு நல்ல நாற்காலி இருக்கும்.
13. குடும்ப நல அறுவைசிகிச்சை, வருமுன் காப்போம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு போன்ற எந்த திட்டமும் கிடையாது
14. பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். அதன் பின் அதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.
அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்களை கேட்டால் இன்னும் நிறைய சொல்வார்கள்
7. BDS பல் மருத்துவம் முடித்த தோழிகள் சிலர் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு எல்லாம் வேலை பார்த்தார்கள் !! (பொறியியல் மாணவர்கள் சிலரும் இந்தச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதுண்டு) MBBS மாணவர்களை விட இவர்களின் நிலை கவலைக்கிடமோ என்று தோன்றியது.
கண்டிப்பாக. அதற்கு காரணம் இத்துறை குறித்து இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லாததே.
நேற்று எங்கள் வீட்டில் துணி துவைக்கும் பொறி பழுதடைந்து விட்டது. உத்தரவாதகாலம் (வார்த்தை புரியாவிட்டால் மட்டும் பின்னூட்டத்தில் கேட்கவும்) முடிந்துவிட்டது. வாங்கிய கடைக்கு தொலைபேசியதில் பழுது நீக்கும் பொறியாளர் வந்து சோதித்து விட்டு, பரிசோதனை கட்டணம் 350 ரூபாய் கேட்டார். அதன் பின் வடிகட்டி (பில்டர்) மாற்ற ரூபாய் 550 செலவானது. கணினி பழுது நீக்குபவர்கள் வீட்டிற்கு வந்தால் 250 ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. (இதனால் தான் பலரும் கணினியில் பிரச்சனை என்றால் கணினி அறிவு உள்ள நண்பர்களை அழைத்து ஒரு காப்பியுடன் முடித்து விடுவது வேறு விஷயம் :) :) )
MBBS அல்லா, BDS, physiotherapy படிப்புகள், இவற்றில் தனியார் கல்லூரிகளின் பெருக்கம், அவற்றின் தரம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து உங்கள் பார்வை என்ன?
உங்கள் இல்லத்தில் யாராவது பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலியக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தால் 350 ரூபாய் கேட்டால் தருவீர்களா ??
அல்லது பேச்சு குறைபாடு உள்ள குழந்தைக்கு பேச்சு பிறழ்வு சிகிச்சை நிபுனர் (ஸ்பீச் தெரபிஸ்ட்) ஒரு முறை வைத்தியம் பார்க்க 350 வாங்கினால் அடுத்த முறை கூப்பிடுவீர்களா.
இன்று எங்கள் வீட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஒருவன் இருந்தால் அவன் எந்த துறையை தேர்ந்தெடுப்பான்.
இந்த தொடரின் அடுத்த இடுகைகள்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
இந்த தொடரின் முந்தைய இடுகைகள்
- கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்
- ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,
- தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை : செய்தி வெளியீடு எண்.237 நாள்.14.5.2009
பத்திரிக்கை செய்தி
இதய நோய் உள்ளவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் "லெனாக்ஸின்" என்ற மாத்திரைக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக சில நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த மருந்து "டிஜாக்ஸின்" என்ற மூல மருந்துப் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தாகும். ஒரு தயாரிப்பாளர் இந்த மருந்தினை "டிக்ஸின்" என்ற பெயரில் விற்பனை செய்கிறார்.
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் இந்த "லெனாக்ஸின்" மற்றும் "டிக்ஸின்" மாத்திரைகள் தேவையான அளவு மருந்து தயாரிப்பாளர்களின் மொத்த விற்பனையாளர்களிடம் கையிருப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் அனைத்து மருந்து கிடங்குகளிலும் டிஜாக்ஸின் மாத்திரை போதிய அளவில் கையிருப்பு உள்ளது. இந்த மருந்து, மருத்துவ சேவை கழகத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதய நோய் உள்ளவர்கள் இந்த மருந்து தேவையெனில், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் மருந்துக் கடைகளில் இம்மருந்தினை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இம்மருந்து இருப்பு குறித்து அவ்வப்போது தகவல் பெற விரும்புவோர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்குநர், சென்னை-6 அலுவலகத்தை தொலைபேசி எண் 044-24321830-ஐ தொடர்பு கொண்டும் அல்லது மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருந்து தகவல் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை (Drug Information and PharmacoVigilance Center) தொலைபேசி எண் 044-24338421-ஐ தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம்.
செய்தித் தாள்களில் வெளிவந்துள்ள செய்திகளின்படி, தமிழ்நாட்டில் "லெனாக்ஸின்" மற்றும் "டிக்ஸின்" மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் தற்போது இல்லை.
ஒம்/..
திரு வி. கே. சுப்புராஜ் இ.ஆ.ப.,
முதன்மைச் செயலர்,
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை.
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் குறித்த தொடர் பதிவுகளில் இது மூன்றாவது பதிவு. முதல் பதிவை இங்கும் மற்றும் இரண்டாவது பதிவை இங்கும் மற்றும் மூன்றாவது பதிவை (விடுமுறைகள் மாற்றம்) இங்கும் காணலாம்
என்னவோ அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து உள்ளது போலவும் இதனால் அரசே திவாலாகும் என்பது போலவும் சில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.
சரி சம்பளம் எவ்வளவு கூடியுள்ளது என்று தான் பார்ப்போமே
ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கையில் 43 மற்றும் 44ஆம் பக்கங்களில் உள்ள அட்டவனை இது
மேலே உள்ள அட்டவை உங்கள் உலாவியில் ஒழுங்காக தெரியவில்லை என்றால் நீங்கள் இங்கு காணலாம்
இப்பொழுது இதிலிருந்து அடிப்படை சம்பளத்தை மட்டும் பார்ப்போம்
ஊதியக்குழுவின் அறிக்கையின் பக்கம் 54 முதல் 70 வரை விளக்கமாகவே கூறியுள்ளார்கள். அந்த விபரத்தை இந்த அட்டவனையில் பார்க்கலாம்
அடுத்ததாக ஒருவர் 01.01.206 அன்று பெற்ற சம்பளம் எவ்வளவு என்று இந்த அட்டவனையில் பார்க்கலாம்
இதில்
அ - தற்பொழுதுள்ள சம்பள ஏற்ற முறை
ஆ - தற்பொழுதுள்ள அடிப்படை சம்பளம் (பேசிக் பே)
இ - தற்பொழுதுள்ள அகவிலைச்சம்பளம் (டியர்னெஸ் பே)
ஈ - 01.01.2006 தமிழக அரசு ஊழியர் பெற்ற அகவிலைப்படி
உ - 01.01.2006 அன்று பெற்ற சம்பளம் (வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை நீங்களாக)
ஊ - ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அவர் பெறப்போகும் சம்பளம்
எ - எவ்வளவு அதிகரித்துள்ளது
ஏ - எத்தனை சதவிகிதம் அதிகரித்துள்ளது
இதிலிள்ள கடைசி வரிசையை மட்டும் பாருங்கள்
இப்பொழுது எத்தனை பேருக்கு 20 சதவிகிதம் உயர்வு என்றும் எத்தனை பேருக்கு 40 சதவிதம் ஊதிய உயர்வு என்றும் நீங்களே பார்க்கலாம் :) :) :)
ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்த இந்த இடுகை தொடரின் அடுத்த இடுகைகள்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
என்னவோ அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து உள்ளது போலவும் இதனால் அரசே திவாலாகும் என்பது போலவும் சில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.
சரி சம்பளம் எவ்வளவு கூடியுள்ளது என்று தான் பார்ப்போமே
ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கையில் 43 மற்றும் 44ஆம் பக்கங்களில் உள்ள அட்டவனை இது
தற்பொழுது நடைமுறையில் உள்ளது | ஆறாவது ஊதிய குழு பரிந்துரை | |||
சம்பள ஏற்றமுறை | சம்பள ஏற்றமுறை | சம்பள பட்டை | சம்பள பட்டை | தரச்சம்பளம் |
S-1* | 2550-55-2660-60-3200 | -1S | 4440-7440 | 1300 |
S-2* | 2610-60-3150-65-3540 | -1S | 4440-7440 | 1400 |
S-2A* | 2610-60-2910-65-3300-70-4000 | -1S | 4440-7400 | 1600 |
S-3* | 2650-65-3300-70-4000 | -1S | 4440-7440 | 1650 |
S-4 | 2750-70-3800-75-4400 | PB-1 | 4860-20200 | 1800 |
S-5 | 3050-75-3950-80-4590 | PB-1 | 4860-20200 | 1900 |
S-6 | 3200-85-4900 | PB-1 | 4860-20200 | 2000 |
S-7 | 4000-100-6000 | PB-1 | 4860-20200 | 2400 |
S-8 | 4500-125-7000 | PB-1 | 4860-20200 | 2800 |
S-9 | 5000-150-8000 | PB-2 | 8700-34800 | 4200 |
S-10 | 5500-175-9000 | PB-2 | 8700-34800 | 4200 |
S-11 | 6500-200-6900 | PB-2 | 8700-34800 | 4200 |
S-12 | 6500-200-10500 | PB-2 | 8700-34800 | 4200 |
S-13 | 7450-225-11500 | PB-2 | 8700-34800 | 4600 |
S-14 | 7500-250-1200 | PB-2 | 8700-34800 | 4800 |
S-15 | 8000-275-13500 | PB-2 | 8700-34800 | 5400 |
S- | 8000-275-13550 | PB-3 | 15600-39100 | 5400 |
S-16 | 9000 | PB-3 | 15600-39100 | 5400 |
S-17 | 9000-275-9550 | PB-3 | 15600-39100 | 5400 |
S-18 | 10325-325-10975 | PB-3 | 15600-39100 | 6100 |
S-19 | 10000-325-15200 | PB-3 | 15600-39100 | 6100 |
S-20 | 10650-325-15850 | PB-3 | 15600-39100 | 6500 |
S-21 | 12000-375-16500 | PB-3 | 15600-39100 | 6600 |
S-22 | 12750-375-16500 | PB-3 | 15600-39100 | 7500 |
S-23 | 12000-375-1800 | PB-3 | 15600-39100 | 7600 |
S-24 | 14300-400-18300 | PB-3 | 15600-39100 | 7600 |
S-25 | 15100-400-18300 | PB-3 | 15600-39100 | 8300 |
S-26 | 16400-450-20000 | PB-3 | 15600-39100 | 8400 |
S-27 | 16400-450-20900 | PB-3 | 15600-39100 | 8400 |
S-28 | 14300-450-22400 | PB-4 | 39200-67000 | 9000 |
S-29 | 18400-500-22400 | PB-4 | 39200-67000 | 9000 |
S-30 | 22400-525-24500 | PB-4 | 39200-67000 | 11000 |
S-31 | 22400-600-26000 | PB-4 | 39200-67000 | 13000 |
S-32 | 24050-650-26000 | PB-4 | 39200-67000 | 13000 |
S-33 | 26000 (fixed) | Apex Scale | 80000 (fixed) | Nil |
S-34 | 3000 (fixed) | Cab.Sec./Equ. | 90000 (fixed) | Nil |
மேலே உள்ள அட்டவை உங்கள் உலாவியில் ஒழுங்காக தெரியவில்லை என்றால் நீங்கள் இங்கு காணலாம்
இப்பொழுது இதிலிருந்து அடிப்படை சம்பளத்தை மட்டும் பார்ப்போம்
ஊதியக்குழுவின் அறிக்கையின் பக்கம் 54 முதல் 70 வரை விளக்கமாகவே கூறியுள்ளார்கள். அந்த விபரத்தை இந்த அட்டவனையில் பார்க்கலாம்
அடுத்ததாக ஒருவர் 01.01.206 அன்று பெற்ற சம்பளம் எவ்வளவு என்று இந்த அட்டவனையில் பார்க்கலாம்
இதில்
அ - தற்பொழுதுள்ள சம்பள ஏற்ற முறை
ஆ - தற்பொழுதுள்ள அடிப்படை சம்பளம் (பேசிக் பே)
இ - தற்பொழுதுள்ள அகவிலைச்சம்பளம் (டியர்னெஸ் பே)
ஈ - 01.01.2006 தமிழக அரசு ஊழியர் பெற்ற அகவிலைப்படி
உ - 01.01.2006 அன்று பெற்ற சம்பளம் (வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை நீங்களாக)
ஊ - ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அவர் பெறப்போகும் சம்பளம்
எ - எவ்வளவு அதிகரித்துள்ளது
ஏ - எத்தனை சதவிகிதம் அதிகரித்துள்ளது
இதிலிள்ள கடைசி வரிசையை மட்டும் பாருங்கள்
எத்தனை சதவிகிதம் அதிகரித்து உள்ளது | |
S-1* | 17.37 |
S-2* | 18.41 |
S-2A* | 21.06 |
S-3* | 21.39 |
S-4 | 24.67 |
S-5 | 21.32 |
S-6 | 21.37 |
S-7 | 20.51 |
S-8 | 21.26 |
S-9 | 27.91 |
S-10 | 25.71 |
S-11 | 22.05 |
S-12 | 22.05 |
S-13 | 21.13 |
S-14 | 21.85 |
S-15 | 22.98 |
S- | 29.14 |
S-16 | 21.74 |
S-17 | 21.74 |
S-18 | 20.21 |
S-19 | 20.85 |
S-20 | 20.89 |
S-21 | 18.78 |
S-22 | 20.12 |
S-23 | 21.63 |
S-24 | 18.13 |
S-25 | 18.78 |
S-26 | 17.42 |
S-27 | 17.42 |
S-28 | 44.82 |
S-29 | 34.54 |
S-30 | 30.55 |
S-31 | 32.79 |
S-32 | 31.99 |
S-33 | 39.55 |
S-34 | 38.00 |
இப்பொழுது எத்தனை பேருக்கு 20 சதவிகிதம் உயர்வு என்றும் எத்தனை பேருக்கு 40 சதவிதம் ஊதிய உயர்வு என்றும் நீங்களே பார்க்கலாம் :) :) :)
ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்த இந்த இடுகை தொடரின் அடுத்த இடுகைகள்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
21ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் கோலிவுட் பல பிரச்சனைகளால் சிறிது தடுமாற்றத்துடன் தான் சென்று கொண்டிருந்தது. முக்கியமாக திருட்டு விசிடி மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளினால் திரையரங்குகள் மூடப்படுவது தினசரி நிகழ்வாக இருந்தது. பல துறைகளிலும் ஒரு தேக்க நிலை இருந்தது.
சென்ற தலைமுறையின் நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அனைவரும் தங்களின் பழைய கலைப்படைப்புகளை முந்த முடியாத நிலையில் அவர்களது பணித்தடத்தின் இறங்குமுகத்தில் இருந்தனர்.
இசையமைப்பாளர்கள்
கிட்ட தட்ட 10 வருடங்களாக இந்தியாவையே கட்டி போட்டிருந்த ரஹ்மான் பாம்பே ட்ரீம்ஸ் நாடகத்திற்கு இசையமைக்க இங்கிலாந்து சென்றதும். அங்கிருந்தே பாபா இசையமைத்ததும் பாபா பாடலை கேட்ட பலரும் இளையராஜாவிற்கு பின்னர் ரஹ்மான். அதற்கு பின்னர் யார் என்று பார்த்துக்கொண்டிருக்கையில் "எனக்கும் ராஜா / ரஹ்மான் அளவு பாடல்கள் மற்றும் பிண்ணனி இசையில்" கலக்கத்தெரியும் என்று நான்கு இசையமைப்பாளர்கள் தங்களின் திறனை வெளிக்காட்டியது 2003ல் தான். (அந்த நான்கு பேரில் மூவரால் அதன் பின்னர் அந்த படங்களை விட சிறந்த படங்கள் அளிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்). அதில் ஒருவர் மற்ற மூவரையும் ஒரே பாடலில் மிரட்டி விட்டார். மீதி மூவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஒலிபரப்பானது / ஒளிப்பரப்பானதை விட நான்காவது இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடல் பண்பலை வானொலியிலும், தொலைகாட்சிகளிலும் அதிகம் முறை வந்தது.
இந்த வருடம் தான் சன் குழுமம் தனது பண்பலை ஒலிபரப்பை ஆரம்பித்தது. எனவே பாடல்கள் பிரபலம் அடைய மற்றொரு வழி திறந்தது. அதுவும் கூட இசையமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்
வித்யாசாகர்
கானடா ராகத்தில் மட்டும் தான் மெலடி பாடல்களை தருவார் என்று கூறப்பட்ட வித்யாசாகர் தன்னால் திரையிசையின் அனைத்து பரிமாணங்களையும் ஆள முடியும் என்று காட்டிய படம் அன்பே சிவம். இந்த படத்தில் இவரின் பாடல்களும் பிண்ணனி இசையும் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.
இளையராஜாவோ ரஹ்மானோ செய்திருந்தால் கூட இவ்வளவு தான் செய்திருக்க முடியும் என்ற வகையில் காட்சியமைப்புகளுக்கு ஏற்ற பிண்ணனி இசையும், அனைத்து வகையான பாடல்களும் என்று ராஜாவும் ரஹ்மானும் தங்களின் படைப்புத்திறனின் உச்சத்தில் இருந்த போது தந்த படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் அன்பே சிவம் படத்தின் இசை இருந்தது.
தான் ஒரு "ஒரு திரைப்பட மாயை" அல்ல என்பதை இயற்கை மூலம் மறுபடியும் அதே வருடம் நிருபித்தார். அதன் பின்னர் இந்த அளவு முழுமையான இசையை அவர் வேறு எந்த ப்டத்திலும் அளித்ததாக தெரியவில்லை (ரா ரா ஒரே பாடல் மட்டும் விதிவிலக்கு). தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் வரிசையில் அன்பே சிவம் மற்றும் இயற்கை இரு படங்களுக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து
ஹேரிஸ் ஜெயராஜ் (ஆரிசு செயராசு)
மின்னலே படத்தில் அறிமுகமாகி "வசீகரா" அனைவராலும் முனுமுனுக்கப்பட்ட பாடலானும் "பாடல் மட்டும் பரவாயில்லை, பிண்ணனி இசை சரியில்லை" என்ற விமர்சணம் இவர் மீது இருந்து கொண்டிருந்தது.
லேசா லேசாவில் அனைத்து பாடல்களும் அருமை. பிண்ணனி இசையும் அருமை. அதே போல் பாடல்கள் மற்றும் இசைக்காக காக்க காக்க படமும் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு வந்த படங்களில் கூட இவர் பாடல்களுடன் தனது கவனத்தை நிறுத்துவது போல் தான் உள்ளது. (கஜினியின் பிண்ணனி இசை கேட்டிருக்கிறீர்களா – ஒரு மாலை இளவெயில் நேரம் பாடலையும் அந்த படத்தின் பிண்ணனி இசையையும் அமைத்தது ஒரே கலைஞர் என்றால் நம்புவது சிரமம்).
யுவன் சங்கர் ராஜா
தனது பதினெட்டாவது வயதில் அரவிந்தனில் ஆரம்பித்த இவரின் இசைப்பயணத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் (ஜோதிகா கதாநாயகியாக நடித்த முதல் படம் - கதாநாயகன் - வேறு யார் - சூர்யா தான் !!), ரிஷி, தீனா, நந்தா, மௌனம் பேசியதே, துள்ளுவதோ இளமை போன்ற பல படங்களின் பாடல்கள் பேசப்பட்டாலும், பிண்ணனி இசையிலும் இவர் மிரட்ட ஆரம்பித்தது இந்த வருடம் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து தான்
தீனா
2000 முதல் 2002ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பெறும்பாலனவர்கள் "ஹம்" செய்த பாடல் "கண்ணின் மணி" தான். கல்லூரிகளுக்கு இடையில் நடக்கும் பல மெல்லிசை போட்டிகளில் / பாட்டு போட்டிகளில் கூட அந்த பாடல் அந்த நேரம் பரவலாக இடம்பெற்றது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஏற்பட்ட வைரமுத்து ரஹ்மான் ஊடலால் ரஹ்மான் பிற பாடலாசிரியர்களுடன் இணைந்து தெனாலி போன்ற படங்களை அளிக்க ஆரம்பித்த நேரத்தில் மணிரத்னத்தின் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு தீனாவிற்கு வந்ததாக கூறுவார்கள் (திரைகளஞ்சியம் முரளிகண்ணன் இது உண்மையா என்று கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்).
ஆனால் மீண்டும் வைரமுத்துவையும் ரஹ்மானையும் சேர்த்து மணிரத்னம் வேலை வாங்கி "வெள்ளைப்பூக்களையும்", "விடை கொடு எங்கள் நாடேயையும்", "ஒரு தெய்வம் தந்த பூவேயையும்" தந்து விட்டார். தீனா காத்திருக்க வேண்டி வந்தது. அதே நேரம் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை.
மிடில் கிளாஸ் மாதவன், கிங் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். "மன்மத ராசா" என்ற ஒரே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். ஆனால் அதற்கு பின்னர் அந்த அளவு அவரால் கவனத்தை தக்க வைக்க முடியவில்லை
நடிகர்கள்
2002 ஆகஸ்டில் வெளிவந்த பாபா படத்தை அடுத்து (இசையமைப்பாளர்களுக்கு இடத்தை அளித்தது போல் :) !!) கதாநாயகர்களுக்கும் ஒரு வெற்றிடம் இருந்தது.
விக்ரம்
எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின்னர் ரஜினி – கமல். அடுத்த தலைமுறையில் யார் என்ற கேள்வி வந்த நிலையில், நானே வசூல் ராஜா என்று சாமி படத்திலும், நானே நடிப்பிலும் ராஜா என்று பிதாமகன் படத்திலும் விக்ரம் அசத்தினார்.
தில் - தூள் என்ற இருபடங்களின் வெற்றிக்கு அடுத்தாக வந்த சாமியின் இமாலய வெற்றியை பார்த்து (அதற்கு முந்திய வருடம் – 2002ல் பாபா வழங்கிய) ரஜினியே மிரண்டது நிஜம். 2003 மே மாதத்தில் தமிழகத்தில் வாலிபர்கள் அந்த படத்தை குறைந்தது மூன்று முறையாவது பார்த்திருப்பார்கள். தில், தூள், சாமி என்று விக்ரம் காட்டில் பெய்த மழை பிதாமகனிலும் தொடர்ந்தது.
மாதவன்
"நகர மேல் தட்டு இளைஞன்" என்ற பிம்பத்திலிருந்து (city guy image) மாதவன் வெளிவர மற்றும் இவருக்கு நடிக்க தெரியும் என்று அனைவரும் அறிய உதவிய அன்பே சிவம் மற்றும் நளதமயந்தி ஆகிய படங்கள் 2003ல் வெளிவந்தவை தான்.
சூர்யா
மிடுக்கான காவல்துறை அதிகாரியாக (காக்க காக்க) நடிக்கவும் முடியும், லேகியம் விற்பவனாக (பிதாமகன்) நடிக்கவும் முடியும் என்று சூர்யா காண்பித்ததும் இந்த வருடம் தான். காக்க காக்க படத்தின் வெற்றியை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளை கதாநாயகனாக சித்திரித்து பல படங்களை வந்தது.
தமிழ் ரசிகர்களின் நல்ல நேரம், பிதாமகனின் வெற்றியை தொடர்ந்து அது போல் படங்கள் வராததால் தப்பித்தார்கள் :)
தனுஷ்
முதல் படம் 2002ல் வந்திருந்தாலும் அவரது இரண்டாவது படமான காதல் கொண்டேனும், மூன்றாவது படமான திருடா திருடியும் வெளிவந்தது 2003ல் தான். தில், தூள், சாமி என்று விக்ரம் கலக்கிய கலக்கலுக்கு தனுஷின் "ஹாட்டிரிக்" சற்றும் குறையவில்லை
2003ல் வெளிவந்த தமிழ் படங்கள் குறித்த பிற விஷயங்களை அடுத்த இடுகையில் பார்ப்போம்

அண்ணனை தேடி சென்னை வரும் நாயகன், ரெண்டு ரவுடி க்ரூப் நடுவே மாற்றிக் கொண்டு வெற்றியோடு ஊருக்கு திரும்புகிறானா இல்லையா என்பதை ஜில்ஜில் ஸ்ரேயாவுடன் சொல்லும் படம். ஆச்சரியம் ஆனால் உண்மை, படத்தின் இன்டெர்வெல் வரை ஃபைட்டே இல்லை, இது விஷால் படமா இல்லை மாற்றி வந்துட்டோமா என்று யோசிக்கும்போது ஃபைட் ப்ளஸ் ட்விஸ்ட்டுடன் இன்டெர்வெல்.
அதற்கு முன்வரை படத்திற்கு வந்தவர்களை "ஏன்டா வந்தோம், திரும்பிப் போயிடலாம்" என்று பயந்து யோசிக்கவிடாமல் உட்கார வைத்த பெருமை சந்தானத்தை மட்டும் சேரும். ஆறு அடிக்கும் மேலே, லேம்ப் போஸ்ட் மாதிரி இருந்து கொண்டு, வாயை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு விஷால் காமெடி பண்ணும்போதும் வயிறு எரிகிறது. அதுவும் இல்லாமல் எப்பவும் ஒரு வாரம் குளிக்காதவன் மாதிரி அழுக்காகவும், ச்சே கொடுமைடா சாமி. நல்ல ட்ரெஸ்ஸா போடுங்க சார்.. சிம்பு பட வரிசையில் இனிமேல் இவர் படத்தையும் தாராளமாக சேர்க்கலாம்.
ஸ்ரேயாவின் தமிழ் சினிமா வரலாற்றில், இதுவரை சேலை கட்டிக் கொண்டு பாடல் காட்சிகளில் நடித்த முதல் படம். ரெண்டு நிமிஷம்தான் வந்திருப்பார், ரெண்டு பாட்டிலும் சேர்த்து. கேமராமேன், ஸ்ரேயா ஃபேன் போல, கன்னாபின்னா ஆங்கிளில் எடுத்து ஆசையை தீர்த்துள்ளார். அது சரி நடிப்பு, "அடப்போங்க சார்.. ரொம்ப குறும்பு நீங்க" என்று கேட்பார். ப்ரகாஷ்ராஜ், ஒரு ரவுடி க்ரூப்பின் தலைவர். படம் பார்க்கும் நமக்கே இதே போல் எத்தனை படத்தில் தான் நடிப்பார் என்று தோன்றுகிறது. அவருக்கு தோணாதா? புருவத்தில் மட்டும் வெள்ளை முடி டை அடித்து கெட்டப் மாத்தி இருக்கிறார். க்ளைமேக்சில் விஷாலிடம் கேவலமாக அடி வாங்கி செத்துப் போகிறார், கொடுமை நம்பர் ஒன். என்ன ப்ரகாஷ்ராஜ் ஸார், "அபியும் நானும்" ஃப்ளாப் ஆனதுனால ரொம்ப நஷ்டம் ஆகிப்போச்சா?????
இன்னொரு ரவுடியாக, "பொல்லாதவன்" கிஷோர். ரொம்ப அடக்கியே வாசித்து இருக்கிறார். இவர்கள் தவிர மலையாள லால், ஷாயாஜி ஷிண்டே, லிவிங்ஸ்டன், பாஸ்கர், பாண்டியராஜன் என பெரிய லிஸ்ட் உண்டு. ரெண்டு பாடல்கள் ஓ.கே. ஸ்ரேயா இருப்பதால் அதில் கான்சென்ட்ரேட் பண்ண முடியவில்லை. இடைவேளைக்கு அப்புறம் விஷால் பேசுவது எல்லாமே பஞ்ச் டையலாக். கொடுமை நம்பர் டூ. பிரகாஷ்ராஜ் கூட வரும் பாஸ்கர் அடிக்கும் "டைமிங் கமெண்ட்ஸ்" நல்ல காமெடி.
படத்தின் பெயரை "தோரணை" என வைத்துக் கொண்டு பாடல், பஞ்ச் டையலாக், வில்லன் என எல்லாரும் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டிருப்பது போரடிக்கிறது. பை தி வே, தோரணை னா என்னன்னு என் ஃப்ரெண்ட்கிட்ட கேட்டேன். அவனுக்கும் தெரியலன்னு சொல்லிட்டான், கொடுமை நம்பர் த்ரீ. இடைவேளைக்கு பிறகு புத்திசாலத்தனமான காட்சி அமைப்புகளால், ஜஸ்ட் எஸ்கேப் ஆகி இருக்கிறது ஸ்கிரீன்ப்ளே ப்ளஸ் மூவி. நல்லவேளை, விஷாலின் அண்ணன் தப்பித்தார்.
தோரணை -- கரணம் தப்பினால் மரணம். தப்பவில்லை.
************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக