வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

"அப்பா !இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்...."

"நான்தான் இன்னைக்கு மேட்சில் ஓபனிங் பேட்ஸ்மேன்....."

"9 மணிக்கு கிரவுண்டில் எல்லோரும் நிக்கணும்...."

"இந்த சான்ஸ் போனா இனிமே அடுத்த வருஷம்தான் நான் ஆட முடியும்."

"எதுக்கு இத்தனை ஃப்ளை ஓவர்.....?..

கோச் என்னை ரொம்ப திட்டப் போறார்....

அப்பா சொல்லுங்கப்பா..... இந்த ட்ராஃபிக் ஜாம் எப்போ சரியாகும் ....

தினேஷை எனக்கு பதிலா போட்டு ,மேட்ச் தொடங்கிடும்....

இந்த ஃப்ளை ஓவர் வேலை எப்பதான் முடியும்...."

தீபு கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தான்.

மேற்சொன்னகேள்விகள் அத்தனையும் ,வார்த்தைகளையும் ,கவலை தொனிக்கும் முக பாவஙகளையும் மாற்றி மாற்றி,கேட்டவாறு ,காரின் இருக்கையில் அமர்ந்திருந்தான் .அவனுக்கு அந்த சாஃப்ட் லெதர் குஷன் முள் இருக்கையாகத் தெரிந்தது.

அவனின் எல்லா கேள்விக்கும் பதிலாக,
"இதோ ரெடியாயிடும்,"...
"இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்பட்டுவிடலாம்,"...
"ரிலாக்ஸ் ரிலாக்ஸ்..."
என்று பையனுக்குப் பொறுமையாக கூறிக்கொண்டே ஸ்டீரிங்கில் தாளம் போட்டவாறு மகனை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தான் சரவணன்.
10-15 நிமிடங்களில் போக்குவரத்து ஒழுங்காகி, கார் புறப்பட்டது.
கார் ஜெமினி ஃப்ளை ஓவர் மேல் சர்ரென்று விரைந்தது.
அதுவரை எதுவும் பேசாமல் வந்த சரவணன்,மெதுவாக மகனை அழைத்தான்
"தீபு !நாம இப்போ ஏறி வந்தோமே அது என்ன ஃப்ளை ஓவர்?"
என்னப்பா இது கூடவா எனக்குத் தெரியாது...ஜெமினி ஃப்ளை ஓவர்ப்பா"
"ஓகே!இந்த பாலம் கட்ட உன்னோட காண்ட்ரிபுயூஷன் என்ன ?"
இந்த பாலம் கட்டும் போது நான் பிறக்கவே இல்லையே... அப்போ நான் எப்படி காண்ட்ரிப்யூட் பண்ண முடியும்?

யோசிச்சு பாரு உன்னோட ஈடுபாடு எதுவும் இல்லாம நீ எத்தனையோ மேம்பாலத்தை உபயோகிச்சுட்டு வரே...அந்தகாலத்தை யோசிச்சு பாரு , அந்த காலத்திலே எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாங்க?..உன் கையில் செல்ஃபோன் இருக்கு ஸ்கூலுக்கு நிலைமையைத் தெரிவிக்க முடியுது..அப்பல்லாம் ஏது ஃபோன்?யாரோ கஷ்டப்பட்டு வந்த பலனை நீ அனுபவிச்சுட்டு வரே ...இன் ரிடர்ன் இப்போ நீ ஏதாவது செய்யலாமில்லையா?"
"...நான் என்னப்பா செய்யமுடியும்?"

"நீ ஒண்ணும் செய்ய முடியாதுதான்...நாம வெய்ட் பண்றப்பநீ உன்னைப் பத்தியே நினைச்சுட்டு இருந்தே ..பக்கத்து கார்லே ஒரு பிரக்னெண்ட் லேடி வலியாலே துடிச்சிட்டு இருந்தாங்க அதை நீ கவனிக்கலை...ஒரு டாக்சி ஏர்போர்ட்டுக்கு லக்கேஜோட காத்திருக்கு இது போல எத்தனையோ பேர் கவலையோட காத்திட்டு இருந்தாங்க.
அந்த நெரிசலில் ,இண்டெர்வ்யூக்குப் போறவங்க ,சொந்தக் காரங்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவங்களைப் பார்க்கற அவசரத்தில்ன்னு இருந்திருக்கலாம். அதையெல்லாம் பார்த்தால் உன்னோட அவசரம் ஒண்ணுமே இல்லாம போயிருக்கலாம் .இந்த மேட்ச் இல்லைன்னா அடுத்த மேட்ச் நீ ஆடலாமே.
இந்த பாலம் கட்ட நான் என்ன செய்ய முடியும்ன்னு கேட்டியே ,நீயும் செய்ய முடியும் ஊருக்கு ஒரு நல்லதுன்னா நாம நேரடியாதான் செய்யணும்னு இல்லை பொறுமையா நின்னா அதுவே பெரிய ஈடுபாடுதான்.ஒரு சின்ன அணில் நம்மாலே என்ன முடியும்ன்னு நினைக்காம ராமருக்கு கல் எடுத்துத் தரலையா அதுமாதிரி உன் பொறுமைதான் இந்த பாலத்துக்கு ஒரு செங்கல்...
இதுவே முடியலேன்னா,நாளைக்கு நாட்டுக்கு உன்னாலே என்ன செய்ய முடியும்?....

தீபு யோசிக்க ஆரம்பித்தான்.அந்த யோசனை அவனை அமைதியாக இருக்கையில் அமர்த்தியது.

[நாடத்தில் ஒரு காட்சி]

[ இந்த கதை ,நாடக வடிவில் கலிஃபோர்னியா தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாவில் [2007 மே ]என் உறவினர் குழந்தைகள் மேடை ஏற்றினார்கள்]
------------------------------------------------------------------------------------------------
இது இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (பெங்களூர் பதிப்பு) வெளிவந்த ஒரு பக்க விளம்பரம்.

ஒரு கட்டிட நிறுவனம் தவறாக வெளியிட்ட விளம்பரத்தை சுட்டி காட்டி பெங்களூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு. நிறுவனம் ஒன்றும் டூபாக்கூர் கம்பெனி அல்ல. இந்தியாவின் முன்னணி நிறுவனம். டி.எல்.எஃப்.

அனுமதியே வாங்காமல் எவ்வளவு தைரியமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். எப்படியும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். இருந்தாலும், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது குற்றம் தானே?

பெரிய கம்பெனி என்றால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தான் நம்பி வாங்குவார்கள். அதிலும் மண் அள்ளி போட இப்படி சில நிறுவனங்கள்.

இந்த மேட்டரில் வாரி சுருட்ட வாய்ப்பிருந்தும், அந்த நிறுவனத்தின் தவறை அம்பலப்படுத்தியதற்காக பெங்களூர் மாநகராட்சியை பாராட்டலாம். ஆனால், அவர்களாலும் இப்படி எத்தனை நிறுவனங்களை கவனித்து கொண்டு இருக்க முடியும். புதியதாக வீடு வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த விளம்பரத்தில் கொடுத்துள்ளார்கள். கவனிக்கவும்.

இந்த அறிவிப்பு கொடுத்த எரிச்சல், இதில் உள்ள கடைசி வரியால் தான் ஒரளவுக்கு குறைந்தது.

This advertisement has been issued in the public interest and the cost of this advertisement will be recovered from the promoter/developer.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.
பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்
பதிவுலக நண்பர்களுக்கு,

கோபி கிருஷ்ணனின் நேர்காணலைத் தொடர்ந்து அவரது 'டேபிள் டென்னிஸ்', 'தூயோன்' தொகுப்புகளை இலவசமாக அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். பதிவுலக நண்பர்கள் இதற்குத் தந்த ஆதரவு உண்மையில் எங்களை மலைக்க வைத்துவிட்டது.

நேற்று மாலை 6 மணி வரையில் 254 நண்பர்கள் தங்களது முகவரிகளை கொடுத்திருக்கிறார்கள். இதில் 26 நண்பர்கள்தான் வலைத்தளத்தில் எழுதுபவர்கள். மற்ற அனைவருமே பதிவுலகை தொடர்ந்து படிப்பவர்கள். குறிப்பாக பின்னூட்டம் கூட போடாதவர்கள்தான் அதிகம். இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகப் புரிகிறது. அதாவது பதிவுலகை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பின்னூட்டங்களை மட்டுமே கொண்டு படிப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது.

இந்த 254 நண்பர்களில் 68 பேர், 'மொழி விளையாட்டு' மூலமாக வந்தவர்கள். 12 நண்பர்கள், நண்பர் லக்கிலுக், 'டேபிள் டென்னிஸ்' குறித்து எழுதிய பதிவை வாசித்துவிட்டு முகவரி கொடுத்தவர்கள். மீதமுள்ள 174 நண்பர்களும் சாருவின் இணையதளம் வழியாக பதிவு செய்தவர்கள்.

கோபி கிருஷ்ணனின் படைப்புகள் பரவலாகப் போய்ச் சேர வேண்டும் என தங்களால் இயன்ற அளவுக்கு உதவிய நண்பர்கள் சாரு, லக்கிலுக் ஆகியோருக்கு நன்றி.

பதிவில் குறிப்பிடாமல், ஆனால் நூல்களை பெறுபவர்கள் ஆச்சர்யமடைய வேண்டும் என்பதற்காக 'தமிழினி' வசந்தகுமாருடன் இணைந்து ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது கோபி கிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', 'தூயோன்' நூல்களைத் தவிர, அவரது 'இடாங்கினிப் பேய்கள்...' நூலையும் நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் இந்தளவுக்கு நாங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே மிகுந்த தயக்கத்துடன் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது.

நேற்று மாலை 6 மணி வரை - அதாவது மே 6ம் தேதி வரை - முகவரி கொடுத்த நண்பர்களுக்கு மட்டுமே நூல்களை அனுப்ப முடியும் என்ற இக்கட்டான நிலையில் நாங்கள் இருக்கிறோம். காரணம், பிரதிகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. இதிலும் ஒரு சிக்கல். நேற்று வரை பதிவு செய்தவர்களில் 7 நண்பர்களுக்கு 'டேபிள் டென்னிஸ்' தவிர மற்ற இரு நூல்கள் மட்டுமே அனுப்ப இயலும். தவிர்க்க இயலாமல் நிகழ்ந்துவிட்ட இந்த ஏமாற்றத்துக்காக நண்பர்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.

இன்று முதல் மெயில் மூலமாக முகவரியை கொடுக்க ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கு தனிப்பட்ட மடல் அனுப்பி வருகிறோம். கோபி கிருஷ்ணனின் மேலே குறிப்பிட்டுள்ள 3 நூல்களின் பிரதிகளுமே தற்சமயம் கைவசமில்லை. எனவே இனி யாரும் பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

நேற்று வரை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கு அதிகபட்சம் இன்னும் ஒரு வார காலத்துக்குள் கோபியின் 3 நூல்களும் கிடைத்துவிடும். தபால் துறையினரின் சுறுசுறுப்பை பொறுத்து ஒரு வாரம் என்பது 10 நாட்களாகவும் உயரலாம்.

பதிவுலக நண்பர்களுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கிய 'தமிழினி' வசந்தகுமாருக்கு ஸ்பெஷல் நன்றி.

கோபி கிருஷ்ணனுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவு, எங்களை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. இதுபோல் தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

பார்ப்போம்.

தோழமையுடன்,
பைத்தியக்காரன் / ஜ்யோவ்ராம் சுந்தர்

ஈழ்த்தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று காலை அண்ணா நினைவிடத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தமிழர்தலைவர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா நினைவிடத்துக்கு விரைந்தனர்.

இதையொட்டி தி.மு.க.வினர் தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
நாளை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தத இழுத்து மூடும் போராட்டத்தை திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் நாளை நடத்தும் எனெ கி.வீரமணி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: