அந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை. 1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.
ஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா..? அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..? என்பது தான் கதை.
ரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், 'எட்ரா.. வண்டிய.." "அவனை போட்டு தள்ளுங்கடா" என்கிற வசனங்களிஅ தவிர ஏதும் பேசியதாய் நினைவில்லை. கிஷோருக்கு அது கூட இல்லை ஆக்ரோஷமாய் பார்த்தபடி இவர் சுமோவிலும், பிரகாஷ் கருப்பு ஸ்கார்பியோவிலும் சுற்றுகிறார்.
சந்தானம், மயில்சாமி, குண்டு அர்சனா, பரவை முனியம்மாவுடன் விஷாலும் காமெடி பண்ணுகிறார். ராமர், அனுமார் வேஷம் போட்டு கொண்டு அலையும் காட்சியிலும் மற்றா சில காட்சிகளிலும் ஏதோ அவ்வப்போது புன்முறுவல் வருவதோடு சரி.. இவர்களைவிட எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் நக்கல் அருமை.
விஷால் படம் முழுக்க அழுக்காய் படு கேவல்மாய் இருக்கிறார். விஜய் போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார், நன்றாக சண்டை போடுகிறார், காதலிக்கிறார். "ள' 'ழ"வை யாராவது அவரின் நாக்கில் வசம்பை தேய்த்தாவது வரவையுங்களேன். கேட்க சகிக்கலை. ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஆனா ஊன்னா சட்டை காலரையும், இன்னொரு பக்க சட்டையை கீழேயும் இழுத்து கொண்டு தோரணையாய் நிற்கிறேன் பேர்விழி என்று நிற்பது ஏதோ வலிப்பு வந்து நிற்கிறார் போல் இருக்கிறது.
ஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….
பிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. நீட் ஒர்க்.. அதே போல் எடிட்டிங்கும்.. மணிசர்மாவின் இசையில் ஒன்று கேட்க விளஙக்வில்லை. தெலுங்கு பட பாடல் போலவே இருக்கிறது. இரண்டு மொழிகளில் ரிலீஸாவதால் கூட இருக்கலாம்.
இயக்குனர் சபா ஐயப்பனின் கதை திரைக்கதை அரத பழசாய் இருப்பதால் வழக்கமாய் இம்மாதிரியான் மாஸ் படங்களில் இருக்கும் அடிப்படை ஆர்வம் கூட குறைவாகவே இருக்கிறது. அதிலும், வில்லனை மடக்கும் காட்சிகளில் பயங்கர கற்பனை வரட்சி, தெலுங்கு படங்களிலேயே நல்ல பண்றாங்க பாஸூ.. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கேங்குகளில் ஏற்படும் குழப்பங்கள் மட்டும் ஓகே. படம் பூராவும் த்லைப்பை அவ்வப்போது யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டேயிருப்பது படு காமெடி.
தோரணை - வெறும் தோரணை மட்டுமே..
The mother answered: God made Adam and Eve and they had children and so was
all mankind made.
Two days later she asks her father the same question. The father answered:
Many years ago there were monkeys from which the human race was developed.
The confused girl returns to her mother and says: Mom how is it possible that you told me that the human race was created by God and Papa says they were developed from monkeys.
The mother answers: Well dear, it is very simple. I told you about the origin of my side of the family, while your father told you about his side...
lead to a nice story? Here's an example:
Oh John please don't touch me at all...!
Oh John please don't touch me...!
Oh John please don't touch...!
Oh John please don't...!
Oh John please...!
Oh John..!
Ohhh......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக