வியாழன், 28 மே, 2009

2009-05-28

இரகசியங்களடங்கிய
இப்பின்னிரவின்முடிவில்
வந்திறங்குகிறது உன் நினைவுகள்
மலரின் மீதமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல்.
வண்ணங்கள் உதிர்ந்த இருட்சுவரிலிருந்து
பிரதியெடுத்த ஓவியமென
வந்திருக்கிறாய் நீயும்.
என் நிலைக்கண்ணாடியில் விழும்
உங்கள் பிம்பங்கள் பொருந்தாதுகண்டு
அதிர்ந்து நிற்கிறேன் நான்.
வெகுசிரத்தையோடு கவனிக்கிறது
காலம்
அவனும் கடவுளும் நண்பர்கள்
அவருடைய ஒய்வுநேரங்களிலும்
அவனுடைய தனிமையிலும்
உரையாடுவதாய்ச் சொல்லிருக்கிறார்

அவனிடம்

இன்றைய தேநீர்நேரத்தில் வருவதாய்
ஒத்துக்கொண்டிருக்கிறார்
அவனுடைய கேள்விகளை எப்படி
எதிர்கொள்வதென்ற கவலையோடு.
அவரிடம் ஒரு கேள்வி கேட்டான்
கடவுளிடம் ஒரு மலர்ந்த புன்னகை
வேறுவழியற்று நான்கு விடைகளைச்சொல்லி
சரியான பதில் கேட்டான்
இன்னும் பெரிய புன்னகை.
நான்கில் ஒன்றைச்சொல்லி
இது சரிதானாவென்றான்
அதே புன்னகை
மிஞ்சிய தேநீரை அவருக்குக் கொடுத்தான்
நாளைவரச்சொல்லி கதவை மூடினான்

*நண்பன் பாரதிக்கு..



More than a Blog Aggregator

by அபிமன்யு
வெட்டவெளியில்
ஒற்றைமரத்தின் நிழலில்
நான்
யார் நிழலுக்காய் மரம்?


More than a Blog Aggregator

by இந்தியன்

அனைவருக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்!!

இன்று சனிக்கிழ்மை. ஆனி 30.

என் மனதில் அவ்வப்போது எழும் சில கேள்விகள்,
நான் எதற்காகப் படைக்கப்பட்டேன்.

நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்.

நான் செய்யவந்த கடமை என்ன.

ஏன் பிறப்பு. ஏன் இறப்பு.

ஏன் நினைக்கிறோம். ஏன் மறக்கிறோம்.

ஏன் சிரிக்கிறோம். ஏன் அழுகிறோம்.

கடைசியில் யார் வெல்கிறார்கள். அனைவரும் கடைசியில் வென்றால், தோற்றது யார்.

ஏன் ரகசியம்.

ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது...
இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண் தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்கு...
தொடர்ச்சி...
இலங்கையில் இன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவத்தீர்வு அணுகுமுறையால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சொந்தமண்ணிலேயே அகதிகளாக அல்லலுற்று வாழ்ந்து வருகின்றார்கள். பல தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர்; காணாமல் போயுள்ளனர், கடததப் பட்டு கொலை செய்துள்ளனர்...
தொடர்ச்சி...

கருத்துகள் இல்லை: