சனி, 30 மே, 2009

2009-05-30

More than a Blog Aggregator

by கருவாயன்
மார்தட்டி கொள்வோம்
எங்கள் குலதெய்வம் நீ யென்று!
யார் சொல்லியும் உண்மையாகுமோ
ஆதவன் இல்லையென்று!

நாளை அவர் போல் புகழ்கொள்வாயென்று
உன் பேர் சொல்லி
வளர்த்தாள் அன்னை என்னை அன்று!

வீரம் கொண்ட வரலாறு எமதென்று
நாவினில் வாள் சுழற்றும்
கோமகன்கள் வாழும் காலமொன்றில்

கங்கைகொண்டான், கடாரம் வென்றான்
அவன் மீண்டும் வந்து நின்றான் எம்முன்
யாழ்தீபம் தரித்த அனல் பிழம்பென்று!

வேல்தாங்கி நிற்க்குமிந்த
அக்கினிக் குன்றுள்ளவரை
எதிரிக்கு தெரியும்
வெற்றி என்பது கனவென்று!

அவனைக் கொன்று விட்டால் யார்கேட்பார்
இந்த நாதியற்ற மக்களை தீண்டிணாலென்று
கொக்கரிக்கும் குருடர் கூட்டம் தெரிந்து கொள்ளும்
"விடுதலை தேசம்" எமதென்று!

அவர்கள் ரத்தம் கொண்டு
வெற்றித் திலகமிடும் நாள் சொல்லும்
எமது வீரம் எதுவென்று!

வெறி கொண்ட யானை வென்று
அதன்மேல் எம்மன்னன் ஊர்வலம் வரும்ப்போது
புத்தனும் இவன்மேல் ஆசைகொள்வான்
வெற்றி வீரன் இவனென்று!

அதுவரை சொல்லமாட்டோம்
உலகிற்கு நாம் தமிழனென்று,
மறக்கமாட்டோம்
"அகதி" என்பதே எமது இனமென்று!

- "அகதி" திரு
எல்லோராலும் எதிர்பார்த்ததாக தேர்தல் முடிவுகள் இல்லாவிடினும், கொடுத்தவர் எதிர்பார்த்த முடிவுவாகவே இருக்கிறது. எத்தனை ஊடகங்கள், எத்தனை ஆர்வளர்கள், எத்தனை பரப்புரைகள்?... எல்லாம் மண்ணாய் போனது பணத்தாலே. ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை பணம் மட்டும் வென்று விட்டது என்று சொல்லி இந்த தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட முடியாது. அது ஆளுங்கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகள் பெற்ற தோல்விக்கு நிச்சயம் அது மட்டும் காரணமல்ல.
சந்தர்பவாத அரசியல், அரசியல் வியாபரமயமாகிப்போனமை, கொள்கை இல்லாக் கூட்டணி மற்றும் தலைவர்களின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவை மறுக்க முடியாத காரணிகள்.

பணம் கொடுத்து வாக்குப் பெற்று வெற்றிகளை குவிக்க முடியும் என்று தமிழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை காட்டி நின்றும், எதிர்காலத்தில் சன நாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதைக்கொண்டு பின்னப்பட்ட அரசியலமைப்பும் அதை தாங்கி நிற்கின்ற அடிப்படை கோட்பாடுகளும் அதன் நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.

அதே நேரம் பணத்துக்கு வாக்களிக்கும் வாக்காளன் தான் அதைச் செய்யாமல் தவிர்த்த வாக்காளனுடைய தலைவிதியையும் தீர்மானிப்பவன் என்றால் அதற்க்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்பை, சிறுபான்மை சிந்தித்து வாக்களிப்பவர்களின் கோபம், அதன் விழைவால் உருவாகப்போகும் அணுகுமுறையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம் எங்களுக்கு ஒரு விடிவு தாருங்கள்" என்று அழுத ஓரு இனத்தின் அங்கத்திற்க்கு இன்னொரு அங்கம் செவிசாய்க்காத போது, நிச்சயம் அவர்கள் உதாசினப் படுத்தப் பட்டார்கள் அல்லது அவர்களின் குரல் இன்னும் இந்த பாமர மக்களிடம் போய்ச்சேர வில்லையோ என்ற கருத்தோட்டங்களை ஏற்படுத்துகிறது. இதில் உண்மை இரண்டாவது காரணமாக இருக்குமானால், அது சரி செய்யப்படலாம். ஆனால் அது முதல் காரணமாக இருப்பின் அந்த இனம் அதன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது உறுதி.

அவர்ளுக்கான விடிவை அவர்களே தேடிக்கொள்வார்கள், அல்லது காலம் அவர்களுக்கு அதை கொடுக்கும். அந்த நேரத்தில், அழிவின் தொடக்கத்தை அந்த இனத்தின் இன்னொரு அங்கம் அடைந்திருக்கும். கலாச்சாரம், பண்பு, மொழி என அனைத்திலும் கலப்பை ஏற்படுத்தி தன் இனத்தை தானே அழித்து மாயையான தேசிய கோட்பாடுகளை தலைமேல் தூக்கிவைத்து தன் அடையாளத்தை இழந்து நிற்க்கும் இன்றைய தமிழக தமிழர்களின் நிலைக்கு அவர்களின் தலைவிதியைவிட தலைவர்களே முதல் காரணம்.

காகம் கூட தன் உறவு இறந்தால் கூடி அழும், ஆனால் இந்த இனம் மட்டும் தன் அங்கத்தையே தின்று பசிதீர்க்கும் குணம் கொண்டது என்பது மறுக்க முடியாத சோகம்.

ஈழத்தில் நடப்பவைகளை தினமும் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்னால் ஒரு வேளை உணவு கூட அருந்துவது கடினமாய் இருக்கிறது என்றார் கவிஞர் தாமரை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நிம்மதியாக உண்பவன் உண்மையான தமிழனாக இருக்கமுடியாது என்றார் அவர். உண்மைதான். ஈழத்தில் நம் சொந்தங்கள் படும் இன்னல்களை பார்க்கும்போது நம்மால் இயல்பாக செயல்படவே முடியவில்லை. எந்நேரம் எந்த செய்தி வருமோ என்று மனம் கலங்கி நிற்கிறது.

ஈழத்திலிருந்து தமிழர் புணர்வாழ்வு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ள செய்தியை பாருங்கள். படிப்போரின் இதயத்தை உருக்கும் காட்சிகளில் இது சிறு துளிதான்!

சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் தாய் இறந்து கிடப்பதை அறியாத குழந்தை அவரின் பால் குடித்துக்கொண்டிருக்கும் பரிதாபநிலையை என் கண்ணால் கண்டேன் என தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர் தெய்வேந்திரன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களில் காயமடையும் மக்களை மருத்துவமனையில் பராமரிப்பில் ஈடுபடும் இவர் தெரிவிக்கையில் :
நாளாந்தம் எறிகணைத்தாக்குதல்களில் காயமடையும் மக்களை வாகனங்களில் இருந்து இறக்குவது முதற்கொண்டு பராமரிப்பது போன்ற பணிகளிலும் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்வது போன்ற பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன்.
நான் பணிசெய்த நாட்களில் சிறிலங்கா அரசுப்படைகளின் கொடூரமான செயல்களை நேரி பார்த்து பேரதிர்ச்சியடைந்துவிட்டேன்.
என் பணிநாளில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க தாய், கணவன், பிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். உடனே நாங்கள் அவர்களை இறக்கியவுடன் மருத்துவர்களால் அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இருந்த போதிலும் அந்த தாய்க்கு பலத்த காயமாதலால் இரத்தம் போய்க்கொண்டிருந்தது. அந்நேரத்தில் குழந்தை அழவே குழந்தைக்கு அவர் பாலூட்டினார். பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே அத்தாய் இறந்துவிட்டார். இச்சம்பவம் இவரின் கணவருக்குத்தெரியாது. ஆனால் குழந்தை தொடர்ந்தும் பால் குடித்துக்கொண்டிருந்தது. இந்த பரிதாப சம்பவம் தன் மனதை உருகச்செய்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தான் உயிர்போகும் நேரத்திலும் தன் சேயின் பசிபோக்க போராடும் நம் சகோதரியை பாருங்கள் தமிழக மக்களே! இவர்களின் இந்த நிலைக்கு காரணம் நாம் கொடுத்த வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்கள்தான் மக்களே!

ஐயகோ! நாம் வாழும் சமகாலத்திலா இந்த கொடுமை நடக்கவேண்டும்! நம் கண்ணெதிரே நடக்கும் இந்த கொடுமையை தடுத்து நிறுத்த கையாலாகமல் நாம் வாழும் வாழ்க்கை தேவையா? எம்மக்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பேய் மனது படைத்த அரசியல்வாதிகளே! உங்களை காலம் மன்னிக்காது! இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே தீரவேண்டும்.

--------------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.

by மானமுள்ள சுயமரியாதைக்காரன்

More than a Blog Aggregator

by மானமுள்ள சுயமரியாதைக்காரன்

கருத்துகள் இல்லை: