ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

தயவு செய்து இந்த தளத்துக்கு  

www.ippadikkusakthi.blogspot.com   

செல்லவும். நன்றி 
குழந்தைகள் 1 1/2 வயதுக்கு மேல் கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் வந்துவிடுகிறது. அந்த நேரங்களில் பெற்றோற்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கனும்.

சாப்பிடும் பொழுது:
நீங்கள் சாப்பிடும் பொழுது குழந்தையும் ஒன்றாக உட்கார வைத்து அவங்களுக்கு ஒரு தட்டு வைத்து கையால் சாப்பிட சொல்லிக்கொடுங்க.
சாப்பிடும் முன்பு கைகளை கழுவனும் என்று கைகளை கழுவி விடுங்க.
இந்த உணவுகளை தந்த இறைவனை நினைக்க சொல்லுங்க. பின்பு சாப்பிட சொல்லுங்க.
அப்பா இந்த உணவுக்காக தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க நீ கீழே சிந்தாமல் சாப்பிடுமா என்று சொல்லுங்க.
(முதலில் சிந்தி தான் சாப்பிடும் போக போக பழகிவிடுவாங்க)
காய்கறிகள், கூட்டு சேர்த்து சாப்பிடுமா என்று சொல்லுங்கள்.
சாப்பிட்டு முடிந்த பின்பு கைகளை அலசி விட்டு கை துடைக்கும் துண்டில் துடைக்க பழகி கொடுங்க. (சில குழந்தைகள் அவங்க டிரெஸில் துடைத்துக்கொள்கிறார்கள்)
அவங்களையே பல் துலக்க சொல்லிக்கொடுங்க। 3 வயதுக்கு மேல் தனியாக குளிக்க சொல்லிக்கொடுங்க.

டி.வீ பார்க்கும் பொழுது:
சின்ன குழந்தைகள் டீ.வீயில் கார்ட்டூன் சேனல்கள் மட்டுமே தான் பார்ப்பாங்க. நாம் ரிமோட் கேட்டால் தரமாட்டாங்க. அப்படியே விடாமல் அவர்களிடம் செல்லமே இவ்வளவு நேரம் நீ டீ.வீ பார்த்த இப்ப அம்மாவுக்கு பிடித்த ப்ரோகிரம் வருது கொஞ்ச நேரம் பார்க்கிறேன் என்று அன்பாய் சொல்லி வாங்குங்கள்.
வீண்ணாக லைட் ,ஃபேன், டீ.வீ ஓடுவைதை ஆஃப் பண்ணச்சொல்லுங்க.

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் உறவு முறைகளை சொல்லிக் கொடுங்க.
விருந்தினர் வரும் பொழுது வாங்க, எப்படியிருக்கிங்க என்று கேட்க்க சொல்லிக் கொடுங்க.
சில குழந்தைகள் கூச்ச சுகபாவமாக இருப்பாங்க அவங்களை சகஜமாக மற்றவர்கள் முன்பு பேச பழக வைக்கவும்.
உறவுமுறைகள் சொல்லி அழைக்க சொல்லுங்க.

உங்கள் செல்ல குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள், ரைமிஸ் ராகத்துடன் சொல்லிக்கொடுங்க.. நல்ல விசயங்களை வீட்டில் இருக்கும் நாம் தான் ஆசிரியராக இருந்துச் சொல்லிக் கொடுக்கனும். அப்பறம் தான் பள்ளி படிப்பு

என் இன்னொரு பாவரிட் ஐட்டம்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு : 2 கப்
வர மிளகாய் - 7
பீன்ஸ் அல்லது
கொத்தவரங்காய் - 1 1/2 கப் ( வேக veiththathu)

பொடி பண்ண:
கறிவேப்பில்லை - சிறிது
சீரகம் - ஒரு ஸ்பூன்

தாளிக்க
ஆயில் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
பெருங்காயம் தூள் - கொஞ்சம்

செய்முறை :
பருப்பை இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்,
அத்துடன் மிளகாய் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும் கரகரப்பாக அரைக்கவும்.
எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அரைத்த விழுதை 15 நிமிடம் வேக விடவும்.
வெந்த பருப்பை உதிர்த்து விடவும்.

அடி கனமான பாத்திரத்தை ( இரும்பு வடசட்டி பெஸ்ட்) வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பருப்பையும் போடவும்.
சிறிது நேரம் உடைத்து விட்டு கிளறவும்,
வெந்த காய், பொடி செய்த கறிவேப்பில்லை, பெருங்காயம், உப்பு போட்டு மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது குறைந்த தணலில் வேகனும்.
சிறிது பிரவுன் கலர் வந்து நல்ல வாசம் வந்ததும், பருப்பு உசிலி ரெடி.

வேறு முறை உள்ளது, ஆனால் அது நெறைய எண்ணெய் செலவாகும். இது எளிய முறை. மோர் குழம்புக்கு பெஸ்ட் துணை இந்த உசிலிதான்.

காரட், கோஸ், வாழைப்பூ, குடமிளகாய், என்று உங்களுக்கு பிடித்த எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து செய்யுங்கள்.

இந்த பதிவு என் மனக்கூடு பதிவின் எதிர்வினை...

//ஒரு வீட்டுக்கே இப்படி இருக்கே, ஒரு நாட்டை விட்டு வருபவர்கள் மனநிலை ...... //
என் வீட்டை பற்றி நான் எழுதியது சிலரை நெகிழ வைத்ததால் இந்த முயற்சி.

இலங்கை தமிழ் மக்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்க்கில்லை, என்னால் முடிந்தது, 5 இலங்கை அகதிகளில் பெண் குழந்தைகளுக்கு புத்தகம், உடைகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லி சிறு உதவிகள் மட்டுமே செய்கிறேன். ஒரு சமூக அமைப்பிடம் சில உதவிகள் கேட்டுள்ளேன், கிடைப்பதற்க்கான சத்திய கூறுகள் உள்ளது, கிடைத்தால், மேலும் சில நண்பர்கள் உதவியுடன் ஒரு அமைப்பாக பதிவு செய்து அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் செய்ய திட்டம். யாரோ ஒருவர் அல்லது ஒரு அமைப்பு அனைத்து உதவிகளும் செய்ய முடியாது, ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இது தேவலை என்பதால் இந்த முயற்சி... எங்கோ கண் கண்காணாமல் இருக்கும் மக்களுக்கு இங்கிருந்து துறைமுகத்தில் பொருட்களுடன் புகைப்படத்திற்கு சிரிப்பதை விட, இங்கிருக்கும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்வோம்.

நல்ல உடை ( பழைய கிழிந்ததை தயவு செய்து பாத்திரக்கரருக்கு போடவும்) போடும் நிலையில் உள்ள உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மருந்துகள், புத்தகங்கள் மற்றும் என்ன உபயோகப்படும் என்று நினைக்கறீங்களோ அதை கொடுங்கள். தயவு செய்து பணம் கொடுக்காதீர்கள், அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. முடிந்தால் எதாவது வேலை கொடுங்கள், அல்லது வேலை கற்று அவர்கள் வாழ்நாள் முழுதும் பிழைக்க வழி சொல்லுங்கள்.நம்மால் ஆனது. முடிந்தால் யாராவது அரசாங்க அதிகாரத்தில் இருந்தால் இலங்கை அகதிகளுக்கு ஏதேனும் அரசு உதவித்திட்டம் இருந்தால் கூறுங்கள், முயற்சி செய்வோம். ஊடகங்கள், சமூக அமைப்புகள், தனி நபர்கள் ஒன்று சேரலாம்.

ஏன் அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களே இதை சேகரித்து அல்லது அந்த முகாமிற்கு சென்று என்ன தேவை என்று பார்த்து முடிந்ததை செய்யலாம். யார் மறுத்து கூறினாலும் இலங்கை என்றால் ஒரு பயம் இருப்பது உண்மை. ஆகவே உதவி செய்யப்போய் உபத்திரவம் ஆக வேண்டாம். இது மட்டுமே செய்கிறோம் என்று தெளிவாக சொல்லிட்டு ஒரு பிரபல பக்கபலத்துடன் செய்யலாம். fm ரேடியோ, உள்ளூர் பெரிய மனிதர்கள், பத்திரிகை, லோக்கல் டிவி சேனல் என்று எதாவது ஒன்றை துணைக்கு அழைப்பது உத்தமம். இது என் கருத்து மட்டுமே. அணிலாக ஆரம்பிக்கலாம் ,ராமர் வரும் வரை....

கருத்துகள் இல்லை: