வியாழன், 28 மே, 2009

2009-05-28




குன்னக்குடி வைத்தியநாதன் காற்றோடு கலந்தார். :(
சென்னை ராமச்சந்திரா மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று இரவு ஒன்பது மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!!
ரம்பகாலங்களில் லக்கி லுக்-ஐ எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. படித்த சில நண்பர்கள் சொன்ன போதும் அவர் பக்கம் திரும்பிப் பார்த்ததில்லை. எல்லாவற்றிலுமே ஒருவித கோமாளித் தனத்தை வெளிப்படுத்தியபடி இருக்கும் அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. யாராவது லக்கி லுக் பற்றிப் பேசத்தொடங்கினாலே அந்த இடத்தை விட்டுப் போய் விடுவேன்.



என்னை டெக்ஸ்வில்லர்,ஆர்ச்சி,ஸ்பைடர், பாண்ட்007, மாயாவி, மார்ட்டின் போன்ற சாகச கதாபாத்திரங்களே பெரிதும் கவர்ந்து இருக்கின்றன. படக்கதைகளுக்காக நான் செலவு செய்த தொகையினைக் கணக்கிட்டால்.. இலக்கிய நூற்களுக்கு செய்த செலவுகளில் பாதியைத் தொடும். எந்த பேருந்து நிலையமாக இருந்தாலும் நான் தேடும் இரண்டு இடங்களில் புத்தகக் கடையும் ஒன்று. பெரும்பாலும் அங்கு தான் இது மாதிரியான காமிக்ஸ்-கள் கிடைக்கும்.

தமிழில் பல காமிக்ஸ் புத்தகங்கள் வந்திருந்தாலும் முதலில் நான் படித்து ரசித்தது என்றால் தினத்தந்தியின் சிந்துபாத் படக்கதையைத்தான். பின் ராணி வார இதழில் அப்போது வந்து கொண்டிருந்த 'குரங்கு'குசலா. கணவன் மனைவி இருவரும் குரங்கு போல முக அமைப்பு கொண்டவர்கள். நிறைய உள்/வெளி/மைய/சைடு= குத்துக்கள் நிறைந்தவை அது. அதிகம் புரியாவிட்டாலும் படங்களுக்காக பார்த்து வந்திருக்கிறேன். அதன் பின் பூந்தளிர்(வாண்டுமாமா-வை ஆசிரியராக கொண்டு தமிழில் வந்த சிறுவர் இதழ்), கோகுலம், அதன் பின் தினமலர் நாளிதழின் இலவச இணைப்பாக வந்த சிறுவர்மலர் ஆகியவை என் காமிக்ஸ் ஆவர்வத்திற்கு தீனி போட்டு வந்தன. ராணி காமிக்ஸ் மட்டும் ஏனோ எனக்கு அதிகம் பிடிக்காமல் போய் விட்டது. (அதன் மட்டமான அச்சு முறை காரணமாக இருக்கலாம்!)

அப்புறம்.. படிப்படியாக உரைநடைக்கு திரும்பிய போதும் தேவியின்-கண்மணி போன்ற மாத நாவல்களில் கூட இடையே இட நிறைப்புக்கென போடப்பட்டு வந்த சித்திரக்கதைகள் மேல் அதிக ஆர்வம் இருந்தது. உறக்கம் தொலைக்கவைத்த சித்திரக் கதைகள் படிக்காமல், படிக்காமல் ( படிப்படியாகன்னு சொல்ல முடியாதே..!) என்னிடமிருந்து விலகிப் போய் விட்டன. ஆனாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனே வாசித்துவிடக்கூடிய ஆர்வத்தை மட்டும் விட முடியவில்லை. என்னிடமிருந்த நூற்றுக்கும் அதிகமான காமிக்ஸ் புத்தகங்கள் நண்பர்களுக்கு இரவலாக கொடுத்து காணமல் போன வருத்தம் இன்றும் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தி வருகிறது.



இரண்டு தினங்களுக்குமுன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது, நம்ம பொன்ஸ், அங்கே காமிக்ஸ் கிடைக்கூடிய ஒரு கடை இருப்பதாக சொன்னது நினைவுக்கு வர.. அந்த புத்தகக் கடையைத் தேடி அலைந்தேன். வழித்தடம் 4ல் இருந்தது அந்தக் கடை.

லயன் காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன. எனக்கு மிகவும் பிடித்துப்போன பல காமிக் ஹீரோ அறிமுகப்படுத்தியது லயன்/முத்து காமிக்ஸ் தான். அதனால் தேடாமல் அங்கு இருந்த மூன்று காமிக் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். அதில் ஒன்று லக்கிலுக்(படிக்க.. இப்பதிவின் முதல் பத்தி)கின் "சூ-மந்திரகாளி..!" யும் அடக்கம்.

வண்ணத்தில் இருந்தது. விருப்பம் இல்லாமல் தான் வாசிக்கத் தொடங்கினேன். கதியில் இருந்த இழையோடும் நகைச்சுவை என்னை உள்ளே இழுத்தது. முழுக்கதையையும் வாசித்தபின் தான் உறங்கவே போனேன். பல முறை தவர விட்ட பழைய லக்கி-ன் நூல்களைத் தேடும் பணியை துவங்கியும் விட்டேன்.


இனி என்னை கவர்ந்த காமிக் ஹீரோக்களில் லக்கிலுக் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
---
காமிக்ஸ் பற்றிய இன்னொரு பதிவு இங்கே!
-------
இது பழைய பதிவு தலைப்பை மாற்றி போட்டிருக்கிறேன்.
தினமலர் நாளிதழும் கலைஞர் கருணாநிதியும் கை கோர்த்துக்கொண்டதாக குமுதம் வம்பானந்தாவில் வந்துள்ளது.

தினமலர் நாளிதழை படித்துவருபவர்களுக்கு இது ஓரளவு உணர்ந்திருக்க முடியும்.

அரசியலில் எல்லாம் சகஜம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. நாளையே இந்த காட்சி மாறலாம்.

சுமார் இரு வாரங்களுக்கு முன் தினமலர் லட்சுமிபதி அவர்கள் கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இது போன்ற அரசியல் கிசுகிசுக்கள் உலா வருவது யாருக்கு உபயோகமோ இல்லையோ அரசியல் செய்திகளை வாசிப்பவர்களுக்கு நல்ல தீனி. அதை செவ்வனே செய்யும் நம்ம "வீராதிவீரனுக்கு" ஒரு "ஓ"


இனி குமுததில் வந்த துணுக்கு கீழே..

===================================================================================

'''தினகரன்' நாளிதழ் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்த போது, தினகரனை வளர்ப்பதற்காக ஒரு நாளிதழை தி.மு.க.வினர் யாரும் வாங்க வேண்டாம் என்று கலைஞரே சொல்லியிருந்தார் அல்லவா?''

''ஆமாம் சுவாமி, ஞாபகம் இருக்கிறது. அந்த நாளிதழைத் தாக்கி முரசொலியிலும் எழுதியிருக்கிறார்களே.''

''அந்த நாளிதழைத்தான் இப்போது தனது ஆதரவுப் பத்திரிகையாக மாற்றியுள்ளாராம் கலைஞர்.''

''என்ன சுவாமி, ஆச்சரியமாக இருக்கிறதே!''

''இதுவும் எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலாதான். தினகரனுக்கும் அந்த நாளிதழுக்கும் ஏற்கெனவே தொழில்போட்டி நடந்து வருகிறது. இப்போது தினகரன் நாளிதழை ஒழிக்க அந்த நாளிதழுக்குத் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளார் கலைஞர். அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். அதுமட்டுமின்றி அந்த நாளிதழ் அதிபர் கைது செய்யப்படுவார் என்று பேசப்பட்ட நேரத்தில், கொஞ்சம் சாதகமாக நடந்து கொண்ட நன்றியையும் கருத்தில் கொண்டு, அந்த நாளிதழும் இப்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடத் தொடங்கியுள்ளதாம்.''

''இனிமேல் தி.மு.க.வினர் அந்த நாளிதழைத்தான் வாங்குவார்கள் என்று சொல்கிறார்களா சுவாமி?'

''அப்படித்தான்.


=================================================================================

நன்றி: .(குமுதம் ரிப்போர்டர் 30-09-2007)


More than a Blog Aggregator

by சிவபாலன்
கீழே இருக்கும் செய்தியைப் பாருங்க.. சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. இது போன்று "இந்து" மத அமைப்பின் தலைவர் ஒருவரும் சொன்ன மாதிரி நியாபகம்.

சீனாக்காரன் என்னடான்னா எகப்பட்ட கெடுபிடி செய்து மக்கள் தொகையை குறைத்துக்கொண்டு இருக்கிறான். அங்கே மதங்களுக்கு இது போன்று மக்களைக் குழப்பும் வேலை இல்லை. அதனால் ஒரு வேலை இந்த விடயம் சீன அரசுக்கு எளிதாகிறது.

பிறப்பவன் அனைவரும் இந்தியன் தான். 130 கோடிக்கு மேல் இருக்கிறோமே.. அது பத்தாதா?

மத வாதிகளே கொஞ்சம் யோசியுங்க.. ப்ளீஸ்.. (இதனால் தான் மதங்களே வேணாம் என சொல்லறது..ம்ம்ம்ம்)


===============================================================
அதிக குழந்தை பெறுங்கள்' கிறிஸ்தவர்களுக்கு கடிதம்

திருச்சூர் : "அதிக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்; குழந்தைப் பேறு, இறைவன் நமக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு கேடயம்' என்று, கிறிஸ்தவர்களுக்கு ஆர்ச் பிஷப் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1950ம் ஆண்டில், 24 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர், இப்போது 19 சதவீதமாக குறைந்துவிட்டனர். இதனால், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய துணை கண்டத்தில், முதலில் செயின்ட் தாமஸ் காலடி வைத்தது திருச்சூர் தான். அதனால், இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரவ, கேரளா முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதனால், அங்கு, கிறிஸ்தவர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்று மதத்தலைவர்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர்.


செய்தி: தினமலர்.
நன்றி!
இந்த புகைப் படங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் சிகாகோ இயற்கை அருகாட்சியகத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் எனும் காட்சியகத்தில் பகல் நேர வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது.

இந்த "இனையதளத்திற்கு" சென்றால் அந்த அருகாட்சியகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.





=======================================================================



=======================================================================



=======================================================================



=======================================================================



=======================================================================

கருத்துகள் இல்லை: