வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலி சந்தேக நபர்களான 3 இளைஞர்கள் தமது ஆயுதங்களுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளனர்.

அந்தப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ள இராணுவத்தினரிடம் இம்மூவரும் ஆயுதங்களுடன் சரணடைந்ததாக பாதுகாப்புத் தரப்புத் தகவல் மூலம் அறிய முடிகின்றது.

கொண்டையன்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அமரசிங்கம் (புகழேந்தி) வாகனேரியைச் சேர்ந்த பரமக்குட்டி சாமுவேல் (சரண்) முள்ளிவெட்டுவானைச் சேர்ந்த செல்லப்பா சிவானந்தன் (ராகுலன்) ஆகியோரே நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்த நபர்கள் என பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

இவர்கள் ரி - 56 ரக துப்பாக்கிகள் - 03,கைக்குண்டுகள் - 03,கிளேமோர் -01 வெடிக்க வைக்கும் கருவிகள் - 03,டோர்ச் லைட் - 01 உட்பட ஆயுதங்களையும் பல்வேறு பொருட்களையும் கையளித்ததாகவும் கூறப்படுகின்றது.

புலித் தலைமை தண்டிக்கப்பட வேண்டியதே. அது இன்று தண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அப்பாவிப் பெற்றோர்களது பிள்ளைகள். ஆகவே, அவர்கள் மன்னிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாள ரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.வவுனியாவில் வைத்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர் கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு

1971 மற்றும் 1989 கால கட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கு
மன்னிப்பு வழங்கப்பட்டதுபோல் மேற்படி புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், தற்போது தற்காலிக நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் 6 மாத காலத்திற்குள் மீள் குடியேற்றப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த நிலையில், வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு வர்த்தகப் பெருமக்களுடன் இணைந்து வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலமும், மகேஸ்வரி நிதியதின் மூலமும், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், சமய மற்றும் பொது அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் மூலமும் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இம்மக்கள் மத்தியில் கையளிக்கப்படவுள்ளன.

யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தற்போது கட்சிக்குள் ஆராயப்பட்டு வருகிறது. இதற்கு முன் எமக்கான நிலைமைகளை நாம் சரிவரப் பயன்படுத்தாமையினால் எமது மக்கள் இன்று இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த நிலையில் பல கோணங்களில் நன்றாக ஆராய்ந்து பார்த்தே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அத்துடன், இதுவரை காலமும் தமிழ் மக்கள் முன் வன்முறை சார்ந்த வழி என்றும் ஜனநாயக வழி என்றும் இரு வழிமுறைகள் வந்தன. ஆனால், இப்போது வன்முறை வழி அழிந்து ஜனநாயக வழிமுறை மட்டுமே மக்கள் முன் இருக்கிறது என்றார்.

More than a Blog Aggregator

by sankarfilms

மணிரத்னத்தின் ராவணா அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம்.. ஆனால், என்ன காரணத்தினாலோ படம் வருடக்கணக்கில் இழுத்து கொண்டே போகிறது.மணிரத்னத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு, ஒளிப்பதிவாளர் மணிகண்டன் படத்தில் இருந்து விலகியதால் தற்போது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் .

எடுத்தவரை போட்டுப்பார்த்ததில் சில காட்சிகள் திருப்தி இல்லாததால் மீண்டும் ரீஷூட் செய்கிறார்களாம்.

எது எப்படியோ மணியான படமாக இருந்தால் சரி..

கருத்துகள் இல்லை: